ஃபாரூக் அப்துல்லா சொன்னதைக் கண்டித்து சங்கிகள் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 356 பிரிவை பயன்படுத்தி காஷ்மீர் அரசை கலைக்க வேண்டும் என்பதும் அக்கூச்சலில் ஒரு பகுதி.
அமரன் திரைப்படத்தைப் பார்த்து ராணுவ ஆதரவு மனோபாவம் பெருகி உள்ள சூழலில் நான் இதை எழுதுவது பொதுப்புத்திக்கு எதிரானது.
காஷ்மீர் பிரச்சினை தீவிரமானதற்கு ராணுவத்தின் அட்டூழியமும் ஒரு முக்கியக் காரணம். பதவி உயர்வுக்காக அப்பாவி வாலிபர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். AFPSA -சட்டத்தை கேடயமாக வைத்துக் கொண்டு நடந்த கொடுமைகள் பல.
அதனால் ஃபாரூக் அப்துல்லா சொன்னது நியாயமே. தாக்கியவர்களை கொல்லும் போது அது தொடர்பான உண்மைகளும் அல்லவா சேர்ந்து கொல்லப்படுகிறது!
No comments:
Post a Comment