Thursday, November 21, 2024

பின் என்ன எழவுக்கய்யா நாராயணமூர்த்தி?

 


கடுமையாகத் திட்ட வேண்டுமென்றுதான் தோன்றுகிறது. கோடிகளில் புரளும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி உபதேசித்துள்ளதை படிக்கையில் அவரை கடுமையாகத் திட்ட வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.


 
வாரத்திற்கு நூறு மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்ற அவர் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால்

 வாரம் ஏழு நாளும் உழைப்பதென்றால் ஏழு நாளும் ஒரு நாளைக்கு  14 மணி நேரம் உழைக்க வேண்டும்.

 வாரத்திற்கு ஆறு நாட்கள் உழைப்பதென்றால் ஆறு  நாளும் ஒரு நாளைக்கு  பதினாறரை  மணி  நேரம் உழைக்க வேண்டும்.

 வாரத்திற்கு ஐந்து நாட்கள் உழைப்பதென்றால் ஐந்து நாளும் ஒரு நாளைக்கு  இருபது  மணி  நேரம் உழைக்க வேண்டும்.

 எட்டு மணி நேர உழைப்பு, எட்டு மணி நேர ஓய்வு, மற்றும் இதர பணிகள், எட்டு மணி நேர உறக்கம், என்று தொழிலாளர்கள் தடியடி வாங்கி, தோட்டாக்களால் துளைத்தெடுக்கப்பட்டு, தூக்கில் தொங்கி இடைத்த உரிமைகளை பறிக்க வேண்டும் என்பதுதான் நாராயணமூர்த்தியின் நாற்றமடிக்கும் லாப வெறி.

 இப்போதே பல பணியிடங்களில் பணி நேரம் என்பது கிட்டத்தட்ட பத்து மணி நேரம் என்றாகி விட்டது. அதை இன்னும் அதிகரிப்பது என்ன நியாயம்?

 சரி, அப்படி நேரம் பார்க்காமல் உழைத்தால் அந்த உழைப்பின் பலன் முழுமையாக அந்த உழைப்பாளிகளுக்கா  செல்லப் போகிறது? நாராயணமூர்த்தி போன்ற முதலாளிகளுக்கு செல்லப் போகிறது!  அப்படி அவர்களின் லாபம் அதிகரிக்க தொழிலாளி ஏன் ஓய்வையும் உறக்கத்தையும் துறக்க வேண்டும்?

 சரி, முதலாளி அதிக சம்பளம் தருவதாகவே வைத்துக் கொள்வோம், பதினாறரை மணி நேரமும் இருபது மணி நேரமும் பார்த்தால் அந்த சம்பளத்தை வைத்து என்ன வாழ்க்கை வாழ முடியும்? குடும்பத்தோடு எவ்வளவு நேரத்தை செலவழிக்க முடியும்? குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க முடியுமா?

 இதையெல்லாம் நாம் கேட்போம் என்று தெரிந்துதான் அவர் “உழைப்பு – வாழ்க்கை சம நிலை”   (Work Life Balance) என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்கிறார். அதாவது ஒரு உழைப்பாளி தன் குடும்பத்தை, குழந்தைகளை, வாழ்க்கையை புறந்தள்ளி, உழைப்பு உழைப்பு என்று முதலாளிக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

 அப்படி வாழ்க்கையை அனுபவிக்க முடியாத ஆளுங்களுக்கு என்ன எழவுக்கய்யா பணம் வேண்டும் நாராயணமூர்த்தி? அப்படி கோடி கோடியா சேர்த்து வச்சி என்ன கிழிக்கற?

 பிகு: மோடி வாரத்துக்கு 100 மணி நேரம் உழைப்பது பற்றி எதுவும் எழுதவில்லையே என்று கேட்கிறீர்கள் அல்லவா? அது தனி பதிவுக்கான கண்டென்ட்.  வரும், கண்டிப்பாக வரும்.

No comments:

Post a Comment