மேலே உள்ளது உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு.
கோரக்பூர் மருத்துவமனை துயரத்தினை தொடர்ந்து இங்கேயும் மிகப் பெரிய மோசமான நிகழ்வு நடந்தது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று அங்கே நடத்த தீ விபத்தில் புதிதாய் பிறந்த 11 குழந்தைகள் உட்பட 16 குழந்தைகள் இறந்து விட்டது. கிட்டத்தட்ட நாற்பது குழந்தைகள் தப்பித்து விட்டது. )இதில் ஒரு துயரக்கதை ஒன்றுண்டு. அது பற்றி தனியாக)
மருத்துவமனையின் பராமரிப்புப் பணிகள் நடந்து பல ஆண்டுகளாகி விட்டது விபத்துக்கு முக்கியக்காரணம். தீவிர சிகிச்சைப் பிரிவில் 16 குழந்தைகளுக்கு மட்டுமேயான வசதி உண்டு. ஆனால் அது போல நான்கு மடங்கு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் என்பதால் ஒரே இன்குபேட்டரில் மூன்று, நான்கு குழந்தைகள் இருக்குமாம்.
உத்திரப் பிரதேசத்தில் பல்வேறு மருத்துவமனைகளை இதே மோசமான தரத்தில் வைத்துள்ளதுதான் மொட்டைச்சாமியாரின் சாதனை.
இத்தனை குழந்தைகள் இறந்த பின்பு அவர் அங்கே போனாரா?
ஜார்கண்டிலும் மகாராஷ்டிராவிலும் தேர்தல் பிரச்சாரம் செய்வதை விடவா இதெல்லாம் முக்கியம்!
No comments:
Post a Comment