01.09.1956 ல் உருவான எல்.ஐ.சி நிறுவனத்துக்கு இன்று உதய தினம். மக்களின் சேவையில் 67 ஆண்டுகளை நிறைவு செய்து கம்பீரமாக நடை போடுகிறது.
எல்.ஐ.சி நிறுவனத்தை சிதைக்க, சீர் குலைக்க எத்தனையோ முயற்சிகளை இக்காலக்கட்டத்தில் அதன் உடமையாளர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிற அரசு(உண்மையான உடமையாளர்கள் பாலிசிதாரர்களே)ம், சில சமயங்களில் நிர்வாகமுமே கூட எடுத்தாலும் எல்.ஐ.சி யின் வெற்றிப் பயணம் நிற்கவில்லை.
தனியார் கம்பெனிகள் எத்தனையோ பேர் வந்தாலும் தன் முதன்மை இடத்தை தக்க வைத்துக் கொண்டு முன்னேறுகிறது எல்.ஐ.சி.
எல்.ஐ.சி நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாப்பது என்பது எங்கள் தத்துவார்த்தக் கடமை என்ற புரிதலோடு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், எல்.ஐ.சி யின் காவல் அரணாக என்றென்றும் திகழும்.
அனைவருக்கும் எல்.ஐ.சி உதய தின வாழ்த்துக்கள் . . ..
No comments:
Post a Comment