Thursday, December 19, 2019

எழுத்தாளருக்கு இரட்டை வாழ்த்துக்கள்



தனது "சூல்" நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள கரிசல் எழுத்தாளர் தோழர் சோ.தர்மன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கேரளா போல தமிழகத்திலும் குடியுரிமை மசோதாவை அமலாக்கக் கூடாது என்று எடப்பாடியை வலியுறுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் துவக்கியுள்ள கையெழுத்து இயக்கத்தில் முதல் கையெழுத்து இட்டு மக்களோடு இணைந்து நிற்பதே ஒரு படைப்பாளியின் அறம் என்பதை உணர்த்தியமைக்கு இன்னொரு முறை வாழ்த்துக்கள்.


Wednesday, December 18, 2019

மக்கள் பேச வேண்டும், தேசமும் கூட . . .



*ஜனவரி 8, 2020*-
*நாடு தழுவிய வேலை நிறுத்தம் ஏன்?*

உரையாடல் 4

*கார்ப்பரேட் விருந்து கணக்கு: விடுபட்ட பில்லே இவ்வளவா?*
**********************************

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள இறுதி இடர் மதிப்பீட்டு அறிக்கை 2019 ( Risk Assessment Report 2019) ஓர் பெரிய அதிர்ச்சியை ஸ்டேட் வங்கிக்கு மட்டுமின்றி மக்களுக்கும், வங்கியின் சேமிப்புதாரர்களுக்கும் தந்திருக்கிறது. 

மார்ச் 2019  முடிவடைந்த காலத்திற்கான கணக்கில் ஸ்டேட் வங்கி காட்டியுள்ள மொத்த செயல்படா சொத்துக்கள், நிகர செயல்படா சொத்துக்கள் ரூ 11932 கோடிகள் குறைவாக காட்டப்பட்டுள்ளன என்பதே அவ்வறிக்கையில் இருந்த குண்டு. அதாவது கணக்கில் காண்பித்த மொத்த செயல்படா சொத்துக்கள் ரூ 184682 கோடிகளும், நிகர செயல்படா சொத்துக்கள் ரூ 77827 கோடிகளும் தலா ரூ 11932 கோடிகள் அதிகரிப்பிற்கு ஆளாகும் என்று அர்த்தம். 

செயல்படா சொத்துக்கள் என்றால் வராக்கடனின் குழந்தைப் பருவம் என்று சொல்லலாம். ஏற்கெனவே வராக்கடன் மிகுந்ததால் வங்கிகள் தத்தளிப்பதும், அந்த சுழலுக்குள் வங்கிகளை தள்ளி விட்டது இந்திய கார்ப்பரேட்டுகளும், பெரும் பணக்காரர்களுமே  என்பதும் ஊரறிந்த ரகசியம். 

இந்த ஆண்டு (2018-19) ஸ்டேட் வங்கி ரூ 862 கோடிகளை நிகர லாபமாக காட்டியிருந்தது. அண்மைக் காலங்களில் வங்கிகள் லாபம் காண்பிக்கிறது என்றால் வயிற்றில் பால் வார்த்தது போல இருக்கிறது. ஆனால் ரிசர்வ் வங்கியின் இந்த அறிக்கையால் இப்போது கணக்கு தலை கீழாக மாறிவிட்டது. லாபக் கணக்கில் இருந்து நட்டக் கணக்கிற்கு சரிந்துள்ளது. 862 கோடி லாபம் என்பது ரூ 6968 கோடிகள் நட்டமாக மாறியுள்ளது. 

ஸ்டேட் வங்கி மட்டுமல்ல. இன்னும் சில வங்கிகளின் கணக்குகளும் மாறுகின்றன. பேங்க் ஆப் இந்தியா அறிவித்திருந்த ரூ 5547 கோடி நட்டம் என்பது இப்போது ரூ 6993 கோடி நட்டம் ஆக உயர்ந்துள்ளது. தனியார் வங்கிகளும் சரிவை சந்தித்துள்ளன. யெஸ் பேங்க் லாபம் ரூ 1720 கோடிகளில் இருந்து ரூ 1084 கோடிகளாக வீழ்ந்துள்ளது. 
 
கார்ப்பரேட்டுகளின் கடன்களை வசூலிக்கிற அரசியல் உறுதி இல்லாதவரை இப்படிப் பட்ட அதிர்ச்சிகள் வந்து கொண்டேதான் இருக்கும். 

விருந்து கணக்கில் ஏதோ பருப்பு பில், வத்தல் பில் விடுபட்டு போன மாதிரி அல்ல இது. கார்ப்பரேட் விருந்தல்லவா. அதுதான் ரூ 11932 கோடிகள். விடுபட்ட பில்லே இவ்வளவு. 

இதை யார் கேட்பது? கல்விக் கடன் ரத்து ஆகாது என்று நிதியமைச்சர் அறிவிக்கிறார். கார்ப்பரேட் கடன்கள் ஸ்வாஹா ஆவது பற்றிப் பேச வேண்டாமா!
************************************
*இதை மக்கள் பேச வேண்டும், தேசம் பேச வேண்டும். இதற்கே ஜனவரி 8 வேலை நிறுத்தம்.*

************************************

தோழர் கே.சுவாமிநாதன்,
துணைத் தலைவர்,
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு

அம்மையார் பயங்கர குஷியாம் . . .

நிஜம்தானே!


Tuesday, December 17, 2019

ஒத்தி வைக்கப்படவில்லை. வதந்தி

எல்.ஐ.சி நிறுவனத்தில் உதவியாளர் பணி நியமனத்திற்கான முதல் கட்ட நுழைவுத் தேர்வு அக்டோபர் இறுதியில் முடிந்தது.

அத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான இறுதிச் சுற்றுத் தேர்வு வரும் 22.12.2019 அன்று நடைபெறவுள்ளது.

இதற்கிடையில் இத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக எல்.ஐ.சி யின் செயல் இயக்குனரின் அறிக்கை போல ஒரு வதந்தியை சில விஷமிகள் வாட்ஸப்பில் சுற்றவிட்டுள்ளனர்.

ஆனால் அது தவறான தகவல். வதந்தி என்று எல்.ஐ.சி நிர்வாகம் தெளிவு படுத்தி விட்டது.

ஆகவே திட்டமிட்டபடி

22.12.2019 அன்று எல்.ஐ.சி இறுதிச்சுற்று நுழைவுத் தேர்வு கண்டிப்பாக நடக்கும்.



இத்தகவலை தயவுசெய்து பரப்புங்கள். 

பல்லாயிரக்கணக்கானவர்களின்  எதிர்காலம் தொடர்பான ஒரு விஷயத்தில் இப்படி வதந்திகளை பரப்புவது எவ்வளவு கேவலமான செயல்!

கோடிக்கணக்கான இந்தியர்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்த பொய்ப்பிரச்சாரமும் போட்டோஷாப் மோசடியும் செய்வதாக மத்திய அரசே இருக்கும் போது சில விஷமிகளை மட்டும் குறை சொல்லி என்ன பயன்?

எதுக்குய்யா தமிழில எழுதினே?

விளக்கம் தேவையில்லை. படமே போதும்


மோடியின் அழிவு சக்திப் பன்றிகள்

அழிவு சக்திகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று மோடி எனும் சாத்தான் உபதேசம் கூறியுள்ளது.

கலவரத்தை தூண்டும் அழிவு சக்திகள் யார்?

ஜமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் பல காவிப் பொறுக்கிகளையும் போலீஸ் தங்களோடு அழைத்துச் சென்றுள்ளது.

அதில் ஒரு பன்றியின் விபரம்தான் கீழே உள்ளது.



இது போன்ற பன்றிகள்தான் கலவரத்துக்கான காரணம்.

ஆனாலும் அர்ணாப் கோஸ்வாமியின் ரிபப்ளிகன் டிவி போன்ற கேடு கெட்ட ஊடகம் மற்றவர்கள் மீது பழி போட்டு திசை திருப்ப முயற்சிக்கும்.

அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை.

அதைப் பரப்பத்தான் ஒரு பெரும் மூடர் கூட்டமே சங்கிகளிடம் உள்ளதே. 

Sunday, December 15, 2019

அராஜக ஆட்சி அழியட்டும்


அன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒடுக்க அடிமை ஓ.பி.எஸ் ஆட்சியில் காவல்துறையே ஆட்டோக்களை கொளுத்தி விட்டு போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியது.

எடுபிடியும் தூத்துக்குடியில் செய்தது அதைத்தான்.

இன்று அதே கேடுகெட்ட வேலையை எஜமானர்களான "பில்லா, ரங்கா கிரிமினல்கள்" செய்து வருகிறார்கள்.

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக அமைதியாக போராடி வருகிற புதுடெல்லி ஜமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்கள் நடத்துவதற்காக போலீஸே ஒரு பேருந்தை கொளுத்தி விட்டு பல்கலைக் கழக நிர்வாகத்தின் அனுமதி இல்லாமலேயே வளாகத்தில் நுழைந்து வெறித்தனமாக தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நூலகக் கட்டிடத்தில் அடைக்கலம் புகுந்த மாணவர்களை தாக்க நூலகத்திற்குள் கண்ணீர் புகை ஏவியுள்ளார்கள். அடுத்து ஹிட்லர் போல விஷ வாயு செலுத்துவார்கள் போல.

நேற்று மோடி தடுக்கி விழுந்ததை சிலர் மகிழ்ச்சியோடு கொண்டாடியது அவசியமற்றது என்று நினைத்திருந்தேன்.

ஆனால் இன்றைய நிகழ்வுகளை பார்க்கும் போது அந்த கொண்டாட்டம் பெரும் வலியின் வெளிப்பாடு என்றே உணர்கிறேன்.

இந்த அராஜக ஆட்சி ஒழியட்டும்.

இவர்கள் பற்ற வைத்துள்ள நெருப்பில் இவர்களே விழுந்து வெந்து சாம்பலாகட்டும்.

மக்களை தாக்குகிற இந்த கிரிமினல் பேர்வழிகள் நாசமாகப் போகட்டும். 

பிகு : பில்லா, ரங்கா கிரிமினல்களை ஆதரிக்கிறவர்கள் ஒரு நிமிடம் யோசித்து பார்க்கட்டும். இனியாவது திருந்துங்கள். இல்லையென்றால் உங்களுக்கும் இந்த நிலை வர நீண்ட காலமாகாது.