Monday, August 12, 2024

என்ன "தி இந்து" நக்கலா?

 


இன்றைய ஆங்கில இந்து நாளிதழின் முதல் பக்கத்தில் மேலே உள்ள செய்தி " அமன் செஹாவரத்" இந்தியாவின் நாற்பத்தி ஒன்றாவது பதக்கத்தை வென்றார்" என்று தொடங்குகிறது.

கிடைக்க வேண்டிய தங்கப் பதக்கத்தைக் கூட கேடு கெட்ட தெய்வக் குழந்தை வகையறாக்கள் சதி செய்து கெடுத்து விட்டார்களே, எப்படி ஒரே இரவில் இத்தனை பதக்கங்கள் வந்தது என்று ஆச்சர்யத்துடன் மேலே படித்தால்தான் தெரிகிறது. 1900 ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டியில் தொடங்கி 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டி வரை இந்தியா இதுவரை 41 பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது என்ற அவலத்தை சொல்லும் செய்தி அது என்று.

இப்படி ஒரு நக்கல் தேவையா "தி இந்து"விற்கு?

பிகு: மத வெறியை தூண்டும் விஷப் பேச்சுக்களுக்கு வயது வாரியா போட்டிகள் வையுங்கய்யா, அவதாரமும் அவதாரத்தின் அத்தனை அல்லக்கைகளும் அனைத்து பதக்கங்களையும் அள்ளி வருவார்கள் பாருங்கய்யா . . .


Friday, August 9, 2024

சதிகார சகுனிகளுக்கு ஆதரவாக . . .

வினீஷ் போகத்தின் பதக்கத்தை பறித்த சதி குறித்து நேற்று இதயங்களை வென்றாய் பெண்ணே  என்ற பதிவை எழுதி அதனை முகநூலிலும் பகிர்ந்து கொண்டேன்.

முகநூலின் சமூகத் தரத்திற்கு எதிராக இருப்பதாக என்று சொல்லி ஒரு பத்து நிமிடத்திற்குள் நீக்கி விட்டார்கள்.

சதிகார சகுனிகளுக்கு ஆதரவாக நிற்பதுதான் முகநூலின் சமூகத்தரம் போல . . .

240 சீட்டிற்கே இப்படியென்றால் மோடி சொன்னது போல சாக்கோபார் கிடைத்திருந்தால் ஆட்டம் எப்படி இருக்கும்!
 

Wednesday, August 7, 2024

இதயங்களை வென்றாய் பெண்ணே!

 


தகுதி இழப்பு என்பது ஒரு மோசடி. நாட்டின் பெருமையை விட காமுகனின் போலி கௌரவம்தான் முக்கியம் என்று நினைக்கிற கீழ்த்தரமான மனிதன் பிரதமராக உள்ள தேசத்தில் இதுவும் நடக்கும். இதை விட கேவலமாகவும் நடக்கும்.

பதக்கம் வெல்லும் வாய்ப்பு வந்த போது வாய் மூடிக் கிடந்த சங்கி நாய்கள் இப்போது ஊளையிடுவது ஒன்றே போதும் நடந்தது சதி என்பதற்கு.

பதக்கத்தை நீ இழந்திருக்கலாம். ஆனால் இந்தியாவை உண்மையாக நேசிக்கும் மக்கள் இதயங்களை வென்றுள்ளாய். எங்களுக்கு நீ தங்க மங்கைதான்.

கட்டபொம்மன் நினைவிலிருக்கும் நாள் வரை எட்டப்பனின் நினைவு இருக்கும், துரோகி என்று.

அது போலத்தான் உனது வலியும் நினைவில் இருக்கும், உனக்கு வேதனை கொடுத்தவர்களும் நினைவில் இருப்பார்கள், துரோகிகளாக, கயவர்களாக . . .

அருகதையற்ற மோடி, வாழ்த்தாதே

 


இந்திய மல்யுத்த வீராங்கனை வினீஷ் போகத், ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அவர் தங்கம் வெல்ல உண்மையான  இந்தியர்கள்  அனைவரும் வாழ்த்துவோம். தங்கமோ, வெள்ளியோ இந்தியாவுக்கு அவரால் ஒரு பதக்கம் உறுதி.

காமக் கொடூரன் மல்யுத்த வாரியத் தலைவன் பிரிஜ்பூஷன் சரன்சிங்கின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மற்றவர்களோடு இணைந்து போராடிய போது அப்போராட்டத்தை நசுக்கி அயோக்கியனுக்கு துணை நின்று அவன் மகனுக்கு சீட் கொடுத்து எம்.பி ஆக்கிய கேடு கெட்ட நரேந்திர மோடியே, வினீஷ் போகத் பதக்கம் வென்றதும் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து எல்லாம் சொல்லாதே. அதற்கான அருகதை உனக்கு கிடையாது.

மோடி மட்டுமல்ல, மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை ஆதரிக்காத எந்த காவிக்கயவ்னுக்கும் அருகதை கிடையாது.

Saturday, August 3, 2024

எரிச்சலூட்டும் காமெடி வேண்டாம் மோடி

 


எதிர்க்கட்சி மாநில அரசுகளின் செயல்பாட்டை முடக்கவே ஆரெஸெஸ் ரெவி எனும் ஜந்துவை தமிழ்நாட்டுக்கும் ஆரிப் முகமது கான் என்ற இன்னொரு ஜந்துவை கேரளாவுக்கும் அனுப்பி விட்டு மோடி பேசும் பேச்சை பாருங்கள்.


ஆட்டுத்தாடிகள் மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் நடுவே பாலமாக இருக்க வேண்டுமாம்.

எரிச்சலூட்டும் காமெடி வேண்டாம் மோடி

Friday, August 2, 2024

பேரழிவை விட பெருந்துயரம்

 


வயநாடு நிலச்சரிவினால் ஏற்பட்ட பேரழிவை விட பெருந்துயரத்தை அளிப்பதாக இந்த அழிவை வைத்து நடக்கும் அசிங்க அரசியல்...

நாங்கள் கொடுத்த எச்சரிக்கையை கேரள அரசு மதிக்கவில்லை என்ற பொய்ப் பிரச்சாரத்தை அமித் ஷா தொடங்கி வைத்தார். அது பொய் என்று தோழர் பினராயி விஜயன் தக்க பதிலடியை ஆதாரங்களுடன் கொடுத்த பின்பே அவர் அடங்கினார்.

நேரடி சங்கிகளும் நாம் தமிழர் வேடமிட்ட சங்கிகளும் அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள்.

சபரிமலை ஐயப்பனின் சாபம்,
ராகுல் காந்தியை ஜெயிக்க வைத்த பாவம்,
தண்ணீர் தராத கேரளா இப்படித்தான் அழிந்து போகும்,
மலப்புரம் மாவட்டத்தில் நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஒரே ஒரு மாதிரியை மட்டும் பாருங்கள்


இந்த பேரழிவு சக்திகளை என்ன செய்வது?
இயற்கைதான் மனது வைக்க வேண்டும்.

Thursday, August 1, 2024

30 லட்சம் - அளித்தோருக்கு நன்றி

 


நேற்று இரவு கணிணியை அணைப்பதற்கு முன்பாகத்தான் கவனித்தேன். 


ஆமாம்,

வலைப்பக்கத்தின் பார்வைகள் 9HITS) முப்பது லட்சம் என்ற மைல்கல்லைக் கடந்திருந்தது.

2009 ல் வலைப்பக்கம் தொடங்கியிருந்தாலும் தீவிரமாக எழுத ஆரம்பித்தது. 

இங்கே உள்ள சுதந்திரமே தொடர்ந்து எழுத வைக்கிறது. பார்வையாளர்களின் வருகை உற்சாகமூட்டுகிறது. அனாமதேயமாக எழுதும் சிலர் யாரென்று தெரிந்தவர்கள்தான். நேரடியாக மோத முடியாத கோழைகள் அவர்கள் என்பதால் இப்போதெல்லாம் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

தொடர்ந்து வலைப்பக்கத்திற்கு வந்து உற்சாகப்படுத்தி முப்பது லட்சம் பார்வைகள் கொடுத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி . . .