Saturday, September 8, 2012

பகுத்தறிவு பாசறை திமுகவின் பக்திமான்கள்




வினாயகர் சதுர்த்தி சீஸன் தொடங்கி விட்டது. பெரிய பெரிய சிலைகள் வைக்க, அதற்கு பணம் வசூலிக்க மும்முரமாய் பணிகளும் தொடங்கி விட்டது.

வசூல் செய்பவர்கள் படையெடுப்பு எங்கள் பகுதியில் ஒரு வாரம் முன்பே தொடங்கி விட்டது. பெரியவர்கள் வந்தால் நம்பிக்கை கிடையாது என்று சொல்லி அனுப்பி விடுவேன். சிறுவர்கள் வந்தால் பத்து ரூபாய் கொடுத்து அனுப்பி விடுவேன்.

அப்படி வசூலுக்கு வந்தவர்கள் கொடுத்த ஒரு நோட்டீஸை பார்க்க சிரிப்புதான் வந்தது. இதோ அந்த நோட்டீஸ் உங்களுக்காக படம் எடுத்து கீழே போட்டுள்ளேன்.



எங்கள் பகுதி வினாயகர் சதுர்த்தி விழாவிற்கு தலைமை சத்துவாச்சாரி நகர திமுக துணைச் செயலாளர்.

முன்னிலை வகிப்பதோ சத்துவாச்சாரி நகர முன்னாள் செயலாளர்.

சிறப்பு விருந்தினர்கள் திமுகவின் வேலூர் ஒன்றியச் செயலாளர்.

இன்னொரு சிறப்பு விருந்தினர் ஒன்றியச் செயலாளரின் மனைவியும் திமுக சார்பில் சத்துவாச்சாரி நகராட்சியின் சேர்மனாக இருந்தவர்.

விழாவை நடத்துவது திமுக என்று போடவில்லையே தவிர எல்லோரும் திமுகவைச் சேர்ந்தவர்கள்.

திமுகவின் பகுத்தறிவுக் கொள்கைகளை அதன் உடன்பிறப்புக்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதற்கு வேறு சான்று வேண்டுமா என்ன?

ஆனால் உடன்பிறப்புக்களை குறை சொல்வதும் நியாயமில்லை. குங்குமம் அணிந்து வந்த ஆதி சங்கரை இது என்ன ரத்தமா என்று கேட்டு நையாண்டி செய்த தமிழினத் தலைவரால் மஞ்சள் துண்டிற்கு விளக்கம் அளிக்க முடியவில்லையே?

சத்ய சாய் பாபா காற்றிலிருந்து வரவழைத்த மோதிரங்களை பெற்றுக் கொள்ள அவர் முன்னே கோபாலபுரம் வீட்டில் நடந்த போட்டியை அவரும் ரசித்துக் கொண்டுதானே இருந்தார்!

மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் அஞ்சா நெஞ்சன் தேர்தல் பிரச்சாரத்திற்கு அடிதடி, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கட்டுக்கள் ஆகியவற்றை மட்டும் நம்பாமல் நரசிம்மர் ஆலயத்தில் சிறப்புப் பூஜை செய்த பின்புதானே புறப்பட்டார்!

எத்தனையோ கொள்கைகளில் நீர்த்துப் போனது போல பகுத்தறிவு என்பதிலும் திமுக நீர்த்துப் போய் விட்டது.

இனியாவது பழம் பெருமை டயலாக் பேசுவதை கலைஞர் நிறுத்தினால் கேலிப் பொருள் ஆவதிலிருந்து தப்பிக்கலாம்.

Friday, September 7, 2012

துக்க சம்பவத்திலும் கட்சிக்கு விளம்பரம் - கண்டிக்கத்தக்க செயல்

இறப்பிலும் ஆதாயம் தேடும் அற்ப புத்தி கொண்ட
ஆளும் கட்சியினரின் அரசியல் கண்டு கோபப் பட்ட
ஒரு நண்பர் முதலமைச்சருக்கு ஒரு கடிதம் அனுப்பி
அதன் நகலை எனக்கு அனுப்பியிருந்தார். அவரது
கோபம் எனக்கும் வருகின்றது. எனவே அக்கடிதத்தை
இங்கே பதிவு செய்கிறேன்.

ஆளும் கட்சியினர் அவருக்கு எந்த பிரச்சினையும்
அளிக்கக் கூடாது என்பதால் அவரது பெயர் மற்றும்
விலாசத்தை போடவில்லை, முதல்வருக்கான
கடிதத்தில் அவர் தைரியமாக எழுதியிருந்த போதிலும்.
--------------------------------------------------------------------------------------------------


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மாவுக்கு,
 
தமிழர் மரபுப்படி வணக்கம் செலுத்துகிறேன்.
 
இன்று தினமலரில் வந்த ஒரு செய்தி குறித்தும் அதன் புகைப்படமும் கண்டு வேதனைப்பட்டேன். சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் பலியான குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க சென்ற அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்களிடம் ஒரு சிறுமி எங்கள் அப்பா வேண்டும் என்று அழுததாக செய்தி வந்தது. அதே செய்தியில், அமைச்சர் ஒரு காசோலை போன்ற பத்திரம் வழங்குவதும், அதில் உங்கள் படம் நன்றாக தெரிய அமைச்சர் பன்னீர் செல்வம் போஸ் பெரும் சிரமப்பட்டு கொடுத்துள்ளார். துக்கம் விசாரிக்க வந்த இடத்தில் இப்படி ஒரு மூத்த அமைச்சர் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதிலே கண்ணும் கருத்துமாக இருக்கலாமா? உங்களுக்கு பின் வருங்காலத்தில் முதலமைச்சர் என்று வர்ணிக்கப்படும் ஒருவர் பொது இடத்தில், அதுவும் துக்கமான சம்பவத்தில் இங்கிதம் தெரியாமல் நடந்து கொள்வது கண்டிக்க தக்கது. 
 
பொதுவாக உங்கள் கட்சிகாரர்கள் போலி விசுவாசத்தை கட்சி சம்பந்த கூட்டங்களில் , சட்டசபையிலும் காட்டுவார்கள் என்று கடுமையான விமர்சனம் உண்டு. நான் எந்த கட்சியை சார்தவனும் இல்லை. ஆனால்,  துக்க வீட்டில் கட்சிக்கு விளம் பரம் தேடுவது அருவருக்க தக்கது. தகுந்த அறிவுரை வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.
 
நன்றி.
 

உண்மையுள்ள,

Wednesday, September 5, 2012

அழகுப் பொக்கிஷம் - தவற விடாதீர்கள்


எவ்வளவு அழகாக இருக்கிறது இந்த குழந்தை?
விதம் விதமான  உடை அலங்காரங்களில் பார்க்க
அற்புதமாக உள்ளதல்லவா?






















Tuesday, September 4, 2012

வண்ணக் கோலங்கள் - அவசியம் பாருங்கள், செய்தியை படியுங்கள்

எல்.ஐ.சி நிறுவனம் முதல் செப்டம்பர் அன்று உருவானதை ஒட்டி
இன்சூரன்ஸ் வார விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாடு
முழுவதும் அனைத்து தரப்பு ஊழியர்களாலும் முகவர்களாலும்
உற்சாகமாக கொண்டாடப்படுவது  இதன் சிறப்பு. எல்.ஐ.சி 
நிறுவனத்தின் சிறப்பே அதன் அர்ப்பணிப்பு உணர்வு மிக்க
ஊழியர்கள், அதிகாரிகள், முகவர்கள்தானே.

இன்சூரன்ஸ் வார விழாவை ஒட்டி எங்கள் வேலூர் கோட்ட
அலுவலகத்தில் ஊழியர்களுக்காக நடைபெற்ற ரங்கோலி
போட்டியில் ஊழியர்கள் வரைந்த ரங்கோலி வண்ணக்
கோலங்களை கீழே பாருங்கள்.



















 கோலங்கள் மிக அழகாக உள்ளனவா?

இவ்வளவு கலைநயத்தோடு எங்கள் ஊழியர்கள் வரைந்துள்ளனர்
என்ற பெருமிதத்தோடு இவற்றை இங்கே பதிவிட்டுள்ளேன். 

அது மட்டுமல்ல, கோலங்களை உன்னிப்பாக பாருங்கள்.
இவை வெறும் அழகுப் படைப்புக்கள் மட்டுமல்ல, 
ஊழியர்கள் நிறுவனத்தின் மீது வைத்துள்ள நேசத்தையும்
வெளிப்படுத்துகின்றது அல்லவா?

எல்.ஐ.சி யின் பெருமைகளை ஒவ்வொரு ஓவியமும்
மிக அழகாய் உணர்த்துகின்றது அல்லவா?

ஆம் என்பதை நிச்சயம் நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்
என்று எனக்கு தெரியும்.

இன்னொரு முக்கியமான விஷயம் தெரியுமா?

ஒவ்வொரு கோலத்தையும் இருவர் கொண்ட அணி
உருவாக்கியது. கலந்து கொண்ட பத்து பேரில் 
ஐவர் பெண் ஊழியர்கள், ஐவர் ஆண் ஊழியர்கள்.

கோலம் என்றால் அது பெண்களுக்கானது என்று
இல்லாமல் ஆண்களும் கலந்து கொண்டது 
எவ்வளவு சிறப்பானது.

இரண்டு அணிகளில் முழுமையாக பெண்கள்.
இரண்டு அணிகளில் முழுமையாக ஆண்கள்.
ஒரு அணியில் ஆண் ஒருவர், பெண் ஒருவர்.

மேலே கொடுக்கப்பட்ட கோலங்களில் 
இரண்டாவது மற்றும் மூன்றாவது கோலங்கள்
முழுமையாக ஆண்களால் உருவாக்கப்பட்டது.

இந்த சிறப்பும் எல்.ஐ.சி க்கு மட்டுமே உரியது.

 

Monday, September 3, 2012

கலைஞரை புரட்டியெடுத்த கண்ணதாசன்

முக நூலில் நான் பார்த்து ரசித்தது. உங்களுக்காக
சுட்டு இங்கே பதிவிட்டுள்ளேன். கலைஞர் கருணாநிதியை
கணணதாசன் போல வேறு யாரும் அம்பலப்படுத்தியதில்லை.
கண்ணதாசன் மறைவிற்காக கருணாநிதி நிச்சயம்
உள்ளூர மகிழ்ந்திருப்பார்.
 

கருணாநிதிக்கு கண்ணதாசனின் கவிதைப் பதில்...

30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசனின் கவிதையை பாருங்கள்...

அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி தன்குடும்பம் தான்வாழ‌ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.

பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய‌ கதையுரைத்து
வகுத்துண‌ரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை

Sunday, September 2, 2012

அமைச்சரைக் க்ண்டேன், அதிர்ந்தே போனேன்....



எங்கள் சங்கப் பொறுப்பாளர் ஒரு தோழரின் மகனின்
திருமணத்திற்காக நேற்று சென்னைக்கு காரில்
சென்றோம். வழியில் ராணிப்பேட்டையில் ஒரு
கடையில் டீ சாப்பிட்டு விட்டு புறப்படத் தயாரான போது
தமிழகத்தின்  இன்றைய (நாளை அமைச்சராய் இருப்பாரா
என்பது அவருக்கும் தெரியாது, அம்மாவ்விற்கும் தெரியாது)
அமைச்சர் திரு முகமது ஜான் அதே கடைக்கு காரில் வந்தார். 

அந்த காரின் உள்ளே பார்த்தால் மிகப் பெரிய அதிர்ச்சி.
உள்ளே புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் மட்டும் சிரித்துக்
கொண்டிருந்தார். என்ன தைரியம் அந்த மனிதருக்கு!
அம்மா படம் இல்லாமல் அமைச்சரின் காரா? என்று
பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் ஒரு நிமிடம்தான்.

உள்பக்கம் எம்.ஜி.ஆர் படம் என்றால் வெளிப்பக்கம்
ஜெ இருந்தார். பிறகு பேசிக்கொண்டோம். இப்படி
அதிமுக ஆட்களைப் பற்றி தவறாக நினைத்து விட்டோமே
என்று  சொல்லிக் கொண்டிருந்த போதே அடுத்த கேள்வி
வந்தது.

ஜெ படத்தை ஏன் உள் பக்கம் வைக்காமல் வெளிப்பக்கம்
வைத்துள்ளார்?

நேரிலோ அல்லது புகைப்படத்திலோ அம்மா எதிரில்
இருந்தால் அதிமுக அமைச்சர்களால்  சீட்டில் உட்கார
முடியுமா? ஏசி காராக இருந்தாலும் வியர்த்துப் போகாதா?
பி.பி எகிறாதா?

ஆகவே அமைச்சரிடம் எந்த தவறும் கிடையாது.
எனவே இதற்காக அவர் பதவியை நீக்க வேண்டாம் என்று
ஜெ வைக் கேட்டுக் கொள்கிறேன்.

வாவ்! சூப்பர் அழகு

கீழே உள்ள படங்களைப் பாருங்கள்.
பார்க்க மிக மிக அழகாக உள்ள
இந்த நீர்வீழ்ச்சி, ரொமானியாவில் 
உள்ளது.

ரொமானியாவின் அனினா மலைக்காடுகளில்
உள்ள பிகார் காஸ்கேட் நீர்வீழ்ச்சி இது.

உடனடியாக சென்று நேரில் பார்க்க
வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும்
இயற்கையின் அற்புதப் படைப்பு இது.