Saturday, May 26, 2012

பெட்ரோல் விலை உயர்வு முதுகில் தெரியும் வரிகள்

பொருளியல் அரங்கம்
 
                                                         க.சுவாமிநாதன்,

                                                         பொதுச்செயலாளர்,
                                                         தென் மண்டல இன்சூரன்ஸ்
                                                         ஊழியர் கூட்டமைப்பு
 
பெட்ரோல் விலை உயர்வு
முதுகில் தெரியும் வரிகள்

சென்னையில் ஒரு லிட்டர் பெட் ரோல் ரூ.77.54 ஐ தொட்டுவிட்டது. இதில் வரிகள் மட்டும் ரூ.34.97 ஆகும்.பெட்ரோலின் அடக்க விலை பங்க்கிற்கு வரும்போது ரூ.42.57 மட்டுமே ஆகும். இந்த வரிகளில் மத்திய அரசும், மாநில அரசும் ஆள்மாற்றி மாற்றி அடிக்கிற கஸ்டம்ஸ், எக்ஸைஸ், வாட் ஆகியன அடங்கும். தமிழக அரசின் விற்பனை வரி 27 சதவீதம் மூலம் நுகர்வோரிடமிருந்து கிடைப்பது ரூ.16.56 ஆகும். வரிகள் தவிர டீலர் கமிசன் ரூ.1.50ம் இதற்குள் இருக் கிறது.

என்னிடம் பிடுங்கிஎனக்கே தானமா

அரசு எண்ணெய் வணிக நிறுவ னங்களுக்கு 2010-11ல் குறை வசூ லாக (ருசூனுநுசு சுநுஊடீஏநுசுலு) ஆன தொகை ரூ.72000 கோடிகள். இது தான் அமைச்சர் ஜெயபால் ரெட்டி தொடுக்கிற வாதம் ஆகும். ஆனால் இன்னொரு தகவலை அவர் தருவ தில்லை. 2010-11 ல் பெட்ரோல் மீதான கஸ்டம்ஸ், எக்சைஸ் மூலம் மத் திய அரசுக்கு கிடைத்தது எவ்வளவு ? ரூ.92000 கோடிகள். அதே வருடம் மாநில அரசுக்கு பெட்ரோல் விற்பனை வரிகள் வாயிலாகக் கிடைத்தது எவ் வளவு? ரூ.78000 கோடிகள். நாய் எலும்பை எடுத்து நாய்க்கும் போட்டு மீதத்தை விருந்தும் வைக்கிறார்.


அரசாங்கமாஆலமர ஜோஸ்யமா

அடுத்த மாதம் விலை குறையலாம் என ஆலமரத்தடி ஜோசியர் போல ஆரூடம் சொல்கிறது மத்திய அரசு. சர்வதேசக் கச்சா எண்ணெய் விலை கள் குறைவதால் ரூ.1.50 லிருந்து ரூ.1.80 வரை குறையலாமாம். ஆனால் வணிக இதழ்கள் இன்னொரு குண் டைப் போடுகின்றன. ரூபாய் மதிப்பு சரிவது பெட்ரோல் விலை உயர்வதற் கான அழுத்தத்தைத் தரும் என்பதே. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 100 பைசா விழுந்தால் பெட்ரோல் ஒரு லிட்டர் 77 பைசா கூடுமாம். உலகச் சந் தையின் கருணைதான் என கை விரிக் கிறது மத்திய அரசு. ஆண்டவன் சொல் றான்…. அருணாச்சலம் செய்றான்கிற மாதிரி.


ஈரத் துணியும், சொகுசு காரும்


பெட்ரோல் விலை கூடினால் பல சரக்கு, காய்கறி விலையெல்லாம் கூடி விடுமே என வயிற்றில் கட்டுவதற்கு ஈரத் துணியைத் தேடிக் கொண்டிருக் கிறார்கள் சாமானிய மக்கள். ஆனால் பெட்ரோல் விலை கூடியதால் உடனடி யாக விலைக் குறைப்பிற்கு ஆளாகி யுள்ள சரக்கு எது தெரியுமா? மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் மோட்டார் ஆகியன ரூ.50000 வரை பெட்ரோல் மாடல் கார்களுக்கு தள் ளுபடி அறிவித்திருக்கின்றன. பொரு ளாதாரப் பாதையின் சூட்சுமம் பாருங் கள்.

மால்களுக்கும்’ மானியம்

அடுத்து டீசலைக் குறி வைக்கி றார்கள். இந்தியாவில் நுகரப்படும் 6.5 கோடி மெட்ரிக் டன் டீசலில் 65 சதவீதம் கார்கள் உள்ளிட்ட சொகுசு வாகனங் களால் நுகரப்படுவதேயாகும். பெரிய பெரிய மால்களில்- தொலைத் தொடர் பிற்கான கோபுரங்களில் பயன்படுத்தப் படும் டவர்களிலும் டீசல் பயன்படுத் தப்படுகிறது.இப்பயன்பாட்டிற்கும் ஒரு லிட் டருக்கு ரூ.15.35 மானியம் தரப்படு கிறது. பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ.922 கோடிகளுக்கு குவால்காம் ஏசியா பசிபிக் நிறுவனத்தின் 49 சதவீதப் பங்குகளை வாங்கி தில்லி, மும்பை, அரியானா, கேரளாவிற்கான 4ஜி தக வல் சேவையைக் கைப்பற்றியுள்ளது என்பது இன்றைய ’சூடான செய்தி’.


பற்றாக்குறைக்குஎங்கே போவது?

பெட்ரோல் விலையை உயர்த்தா விட்டால் நிதிப்பற்றாக்குறையைக் கட் டுப்படுத்த முடியாது என கண்ணீர் வடிக் கிறார்கள். ஆனால் 2012-13 ல் வரிச்சலுகைகளால் அரசுக்கு ஏற்படுகிற இழப்பு ரூ.5 லட்சம் கோடிகள் ஆகும். அதில் விலை மதிப்பற்ற ஆபரணங்கள், தங்கத்திற்கு தரப்பட்டுள்ள சலுகை மட் டுமே ரூ.57000 கோடிகள்.


கொசுறு


சிரிப்பதா? அழுவதா? தெரிய வில்லை. ஒரு ஆங்கில நாளிதழ் இரண்டு பத்திச் செய்தியொன்றை அரைக்கால் பக்கத்திற்குப் போட்டு ’இரக்கமற்ற ஆட்டோ டிரைவர்கள்’ என்று தலைப்பு போட்டுள்ளது. சென்னை நங்கநல்லுhரில் குறைந்த பட்சக் கட்டணத்தை ரூ.40லிருந்து 50 ஆக ஏற்றிவிட்டார்களாம்.


நன்றி - தீக்கதிர் நாளிதழ்

Friday, May 25, 2012

பேச்சே கிடையாது, செவிட்டில் அடி ........................ அடி

அயோக்கியத்தனமான பெட்ரோல்  விலை உயர்வைக்
கண்டித்து செவிட்டில் அடித்ததது போல, செருப்பால்
அடித்தது போல வெளி வந்துள்ள கேலிச்சித்திரங்கள்.

 

வெல்வெட் ஓவியங்கள் - இந்திய கலைஞர்களின் அற்புதப் படைப்புக்கள்

இந்தியக்  கலைஞர்கள் வெல்வெட் துணியில் படைத்துள்ள
அற்புத ஓவியங்கள், உங்களின் பார்வைக்காக












Thursday, May 24, 2012

நில அபகரிப்பு - திமுக செய்தால் ஜெயில், அதிமுக செய்தால் பாதுகாப்பு



அதிமுக ஆட்சிக் காலத்தில் ஓரளவாவது மக்களிடமிருந்து
பாராட்டு பெற்ற விஷயம் என்று ஏதாவது இருந்தால்  அது 
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நில அபகரிப்பு செய்யப்
பட்ட  திமுக காரர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்தான்.

நில அபகரிப்பாளர்கள் திமுகவினராக இருந்தால் மட்டும்தான்
ஜெ அரசு நடவடிக்கை எடுக்கும் போல. அதிமுக வைச் 
சேர்ந்த மாபியா கும்பல்கள் செய்தால்  அப்படிப்பட்ட 
ஆளும்கட்சி குண்டர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு
அளிக்கிறது. யார் புகார் தருகின்றார்கள் என்று குற்றவாளிகளுக்கு
தகவல் அளிக்கிறது. 

நில அபகரிப்பு செய்த அதிமுக வினருக்கு எதிராக புகார் செய்த
காரணத்தால் திருவண்ணாமலை மாவட்ட மார்க்சிஸ்ட் 
கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் வீரபத்ரன் மீது 
கொலை வெறித் தாக்குதல் நடந்துள்ளது. 

முழமையான தகவலை இதோ தீக்கதிர் நாளிதழில்
படியுங்கள்.

 சிபிஎம் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் வீரபத்திரனை கொலை செய்ய முயற்சி
 
ஜி.ராமகிருஷ்ணன் கடும் கண்டனம்


சென்னை, மே 23 -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு வண்ணாமலை மாவட்டச் செயலாளர் வீரபத் திரனை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. அவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் எம்.வீரபத்திரன் 22.5.2012 அன்று இரவு 9.15 மணியளவில் வீட் டிற்கு சென்றுகொண்டிருந்தபோது, திரு வண்ணாமலை நகர்மன்ற உறுப்பினர் வெங்க டேசன், அவரது சகோதரர் செல்வம், மைத்து னர் துரைமுருகன் ஆகியோர் வீரபத்திரனின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித் துள்ளனர். இந்த கொலைவெறிச் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. திருவண்ணாமலையில் வைரக்குன்று என்னும் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை நகர்மன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் அவரது சகோதரர் செல்வம் ஆகியோர் அபகரித்தது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் புகார் அடிப்படையில், அரசு நிர்வாகம் ஆக்கிர மிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டது. இத னால் வெங்கடேசன், செல்வம் ஆகியோர் விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலை வரும், கட்சியின் மாவட்டத்தலைவர்களில் ஒருவரான பலராமனை பிப்ரவரி 5, 2012 அன்று தாக்கியுள்ளனர். இது குறித்து அவர்கள் மீது காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால், காவல்துறை சட்டரீதி யாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெங்கடேசன் மீது 2 கொலை வழக்குகள் உள்ளிட்ட பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர் கள்ளச்சாராய வியாபாரத்தோடு தொடர் புடையவர். இத்தகைய சமூக விரோத குற்றச் செயல் பின்னணி கொண்ட வெங்கடேசனை கைது செய்து காவல்துறை சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. இதனைத் தொடர்ந்தே மேற்கண்ட நேற்றைய(22.5.2012) கொலைவெறிச் சம்பவம் நடந்துள்ளது. எனவே, கட்சியின் மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்டத் தலைவர்களில் ஒருவரான பலராமன் ஆகியோரைத் தாக்கி கொலைசெய்ய முயன்ற சமூக விரோதிகளான நகர்மன்ற உறுப் பினர் வெங்கடேசன் அவரது சகோதரர் செல் வம், மைத்துனர் துரைமுருகன் ஆகியோர் மீது கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்து, உடனடியாக அவர்களைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

கண்டன ஆர்ப்பாட்டம்

இத்தாக்குதலை கண்டித்து புதனன்று போளூர், கலசப்பாக்கம், செய்யாறு, ஆரணி, வந்தவாசி ஆகிய இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சியினர் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். கலசப்பாக்கத்தில் மாநிலக்குழு உறுப்பி னர் கே.சாமுவேல் ராஜ் பங்கேற்றார். முன்ன தாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள வீரபத்திரனை சந்தித்து நலம் விசா ரித்தார்.

நில அபகரிப்பை அனுமதிக்க மாட்டோம்  என்று வீர வசனம் பேசிய
ஜெயலலிதா என்ன செய்யப் போகிறார் ?

திமுகவினர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதும் என்று
இருந்து விடப் போகின்றாரா? இல்லை சட்டம் ஒழுங்கைப் 
பாதுகாக்கப் போகின்றாரா?
 

Tuesday, May 22, 2012

சபாஷ் முருகன், சபாஷ் பேரரறிவாளன், வாழ்த்துக்கள்



ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி தூக்கு தண்டனையை
எதிர் நோக்கும் முருகன் மற்றும் பேரரறிவாளன் ஆகியோர்
பனிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் மிகச் சிறப்பான 
மதிப்பெண்களோடு  தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முருகன் 983 மதிப்பெண்களும் பேரரறிவாளன் 1096 
மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இதிலே முருகன் காமர்ஸ்
பாடத்தில் இருநூறுக்கு இருநூறு. பேரரறிவாளன் எல்லா
பாடங்களிலும் தொன்னூறு சதவிகிதத்திற்கு மேலும்
பெற்றுள்ளார்.

பள்ளிகளின்  தொடர்  பயிற்சி, தொடர் தேர்வுகள்,
பெற்றோரின் கவனம், முழுமையான வசதிகள்,
நிம்மதியான சூழல், ட்யூஷன் வசதிகள் இதுவெல்லாம்
இருந்தும் கூட எல்லா மாணவர்களும் எதிர்பார்க்கும்
மதிப்பெண்கள் பெறுவதில்லை.

இருபது வருட சிறை வாசம், இறப்பை உறுதி செய்துள்ள
தூக்கு தண்டனை, முடிவு என்னாகுமோ என்று தெரியாத
மேல் முறையீடு, பெற்றோர், உறவினரின் கண்ணீர்,
இதற்கு மத்தியில் இவர்கள் இருவரும் பெற்றுள்ள
மதிப்பெண்கள், மாநிலத்தின்  முதல் மாணவராக
தேர்ச்சி பெற்றதற்கு சமமாகும். 

சபாஷ் முருகன், சபாஷ் பேரரறிவாளன். 

வாழ்த்துக்கள். இது உங்களுக்குக் கிடைத்த
முதல் வெற்றி.

மரண தண்டனைக்கு எதிரான உங்களது 
போராட்டமும் வெற்றி பெறட்டும்.

 

Monday, May 21, 2012

மாவோயிஸ்ட் என முத்திரை சுமத்தப்பட்ட மாணவி மம்தாவிற்கு திறந்த மடல்




கடந்த 18.05.2012 அன்று சி.என்.என் - ஐ.பி.என் தொலைக்காட்சி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஒரு பேட்டியை ஏற்பாடு செய்திருந்தது. பிரசிடென்ஸி மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் கேள்வி கேட்டனர். சீர்கெட்டு வரும் மேற்கு வங்க நிலை குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத மம்தா பானர்ஜி, இந்த மாணவர்களெல்லாம் சி.பி.ஐ(எம்) ஆட்கள், மாவோயிஸ்டுகள், நீங்களெல்லாம் காட்டுக்கே செல்லுங்கள் என்று வெடித்து பேட்டியையும் பாதியிலேயே முடித்துக் கொண்டார். கேள்வி கேட்டவர்களை புகைப்படம் எடுத்து நடவடிக்கை எடுங்கள் என்று காவல்துறைக்கும் உத்தரவிட்டார்.

சகிப்புத்தன்மையற்ற நிலைதான் பாசிஸத்தின் முதல் கட்டம். மேற்கு வங்கம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான ஒரு சோற்றுப்பதம் இது.

மம்தா பானர்ஜி கொந்தளிக்கும் வகையில் கேள்வி கேட்ட அந்த மாணவி டானியா பரத்வாஜ், மம்தா பானர்ஜிக்கு ஒரு திறந்த மடல் எழுதியுள்ளார். மாற்றம் என்ற முழக்கத்தை நம்பிய மேற்கு வங்க மக்களுக்கு கிடைத்த பரிசு என்ன என்பதை இக்கடிதம் உணர்த்துகின்றது.

அக்கடிதம் இங்கே கீழே.

அன்புள்ள “ எளிமையான ஆண்மகனே “

ஒரு சாதாரண வினா எழுப்பியதனால் தாங்கள் ஒரு சிக்கலான அவதாரம் மேற்கொண்டீர்கள். ஒரு காரசாரமான விவாதம் இருக்கும் என்று எதிர்பார்த்தே நாங்கள் நகர அரங்கில் நடைபெற்ற சிஎன்என் ஐ.பி.என்  கேள்வி பதில்  நிகழ்ச்சிக்கு  நாங்கள் அனைவரும் சென்றிருந்தோம். ஆனால் அது சமாளிக்க முடியாத அளவிற்கு சூடாகி விட்டது.

மேற்கு வங்கத்தின் மிக முக்கியமான நபரான தாங்கள் என்னையும் மற்ற அனைத்து பார்வையாளர்களையும் “ மாவோயிஸ்டுகள், சி.பி.எம் ஊழியர்கள் என முத்திரை குத்தினீர்கள். இந்த கௌரவத்தைப் பெற அப்படி நாங்கள் என்னதான் செய்து விட்டோம். உங்களை நாங்கள் கேள்வி கேட்டோம். அதிகாரத்தை கையில் வைத்துள்ள உங்கள் கட்சியின் அமைச்சர்கள் அதிலும் குறிப்பாக மதன் மித்ரா மற்றும் எம்.பி அரபுல் இஸ்லாம் ஆகியோர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் அல்லது இன்னும் கொஞ்சம் பொறுப்பாக நடந்து கொள்ளக்கூடாதா என்ற கேள்வியைத்தான் நான் கேட்டேன்.

பாலியல் வன்கொடுமைக்கு  உள்ளான ஒரு பெண்ணைப் பற்றி காவல்துறை விசாரணை தொடங்கும் முன்பே மதன் மித்ரா தனது சொந்த தீர்ப்பை உதிர்த்ததனால் ஏராளமானவர்களைப் போல நானும் மிகவும் எரிச்சலுற்றேன். நற்பெயர் களங்கப்படுத்தப்பட்ட அந்த பெண், சிறுபான்மை ஆங்கிலோ இந்திய இனத்தைச் சேர்ந்தவர். சற்றும் பொறுப்பற்ற அவரது இந்த நடத்தையை நாம் பொருட்படுத்த வேண்டாம் என்றாலும் அவர் நடவடிக்கை குறித்து அரசியல் ரீதியாக கேள்வி எழுப்பித்தான் ஆக வேண்டும்.  

சில மாதங்கள் முன்புதான் இதே மனிதன் கிழக்கு மெட்ரோபாலிடன் பைபாஸ் சாலையில் வழக்கமான சோதனைக்காக, இவரது காரை நிறுத்தியதால் காவலர்களோடு தகாத முறையில் நடந்து கொண்டார். அரபுல் இஸ்லாம் பிரச்சினையைப் பற்றி சொல்வதென்றால், அது இன்னமும் தலைப்புச்செய்திகளில் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

பரிபர்த்தன் (மாற்றம் ) வேண்டும் என வாக்களித்த, என்னைச் சுற்றியுள்ள ஏராளமானவர்களின் மனதில் அலை மோதிக் கொண்டிருந்த கேள்வியைத்தான் நான் கேட்டேன். மக்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும், அவர்கள் பின்பற்றுகின்ற நம்முடைய தலைவர்களிடமிருந்து இதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோமா? ஆனால் இறுதியில்  நான் அறிந்து கொண்டது என்னவோ “ மேற்கு வங்கத்தில் கேள்வி கேட்பது என்பது மாவோயிஸ்டாக இருப்பதற்கு இணையானது”  என்பதைத்தான்.

நான் ஒரு பெண்ணியவாதி அல்ல, எளிமையான ஆண் மகன் என்று தாங்கள் மேடையில் பெருமிதத்துடன் பிரகடனம் செய்து கொண்டீர்கள்.

தங்களின் இந்த பிரகடனம் எங்களுக்கு வியப்பளிக்கவில்லை. அதிலும் குறிப்பாக கட்வா மற்றும் பார்க் வீதி சம்பவங்களுக்குப் பிறகு நிச்சயம் வியப்பளிக்கவில்லை. ஜனநாயகம் குறித்தும் தாங்கள் பேசினீர்கள். என்னுடைய கேள்விக்கு முன்பு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களில் தாங்கள், ‘ மக்கள்’ ஜனநாயகம், வங்கம் ஆகிய வார்த்தைகளை அள்ளித் தெளித்திருந்தீர்கள்.

அரசியல் விஞ்ஞான மாணவியான நான் படித்தவரை உண்மையான ஜனநாயகத்தின் மிக முக்கியமான அடிப்படை அம்சம் என்பது கருத்து சொல்லும் சுதந்திரம் ஆகும். ஒரு தனி மனிதன் தான் சொல்ல விரும்புகிற கருத்துக்களை யாருடைய அதிகாரத்திற்கும் அஞ்சாமல் தெரிவிக்கும் உரிமையாகும். பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள முக்கியப் பிரமுகர்கள் பற்றிய கேலிச்சித்திரங்களை பார்த்து சிரிப்பது கூட அதில் அடங்கும்.

ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் இந்த ஜனநாயக அம்சம் தொடர்ச்சியாக பறி போய்க்கொண்டிருக்கிறது  என்பது மிகவும் வருத்தமானது. நீங்கள் என்னை  என்று அழைத்ததாலேயே நான்  மாவோயிஸ்ட் ஆகப் போவதில்லை. அனைத்து அம்சங்களிலும் உண்மை இல்லையென்றால் இந்த மாநிலத்தில் ஜனநாயகம் நிலவுகின்றதாக சொல்ல முடியாது. அவசர கதியில் நீங்கள் செய்தது என் மீது வெளிச்சம் பரவ வழி வகுத்து விட்டது. கோபத்துடன் வெளியேறியதால் நீங்கள்  இயல்பாகவே நாசகர சக்தி என்ற இடத்தை எடுத்துக் கொண்டு விட்டீர்கள்.

என்னுடைய கேள்விக்கு நீங்கள் எளிமையாக பதில் சொல்லியிருந்தாலோ அல்லது கருத்து கூற விரும்பவில்லை எனச் சொல்லி அடுத்த கேள்விக்கு சென்றிருந்தாலோ நிலைமையில் சிக்கல் ஏற்பட்டிருக்காது. நீங்கள் முக்கியமாக்க விரும்பியதால் இக்கேள்வி முக்கியத்துவம் பெற்று விட்டது.

அறிவு வெளியேற்றம் ( Brain Drain ) பற்றி நீங்கள் பலமுறை பேசியுள்ளீர்கள். லண்டன் பல்கலைக் கழகக் கல்லூரி, ஆப்பிரிக்க, ஓரியண்டல் கல்லூரி ஆகியவற்றில் வளர்ச்சி மற்றும் நிர்வாகம் பற்றி படிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. நானும் கூட வெளிநாட்டிற்கு புறப்பட்டு விடுவேன். அதற்கான காரணம் என்ன என்பது பற்றி இப்போது உங்களுக்குப் புரியும்.

நீங்கள் நிகழ்ச்சியில் தொடர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நியாயமான முறையிலேயே நீங்கள் “ வித்தியாசமான முதல்வராக “ இருந்திருப்பீர்கள். உங்களுடைய முதலமைச்சர் என்ற பொறுப்பின் தன்மைகளுக்கேற்பவாவது நீங்கள் நாங்கள் சொல்வதை எல்லாம் செவிமடுத்திருக்க வேண்டும்.

பொதுவாக எல்லா மனிதர்களும் நல்லவர்களாகத்தான் இருப்பார்கள், ஆனால் ஒரு மனிதனின் குணாதிசயத்தை சோதனை செய்ய வேண்டுமென்றால் அவனிடம் அதிகாரத்தை வழங்கு என்று ஆப்ரஹாம் லிங்கன் கூறியுள்ளார்.

அன்புடன்.
ஒரு எளிமையான பெண்மணி
டானியா பரத்வாஜ்

Sunday, May 20, 2012

வேலூரை வெயிலூர் என கிண்டலடிப்பவர்களே, இதைக் கொஞ்சம் கேளுங்கள் ....

எங்கள்  வேலூரை வெயிலூர் என கிண்டலடிப்பவர்களே,
இதைக் கொஞ்சம் கேளுங்கள்.

உச்சகட்ட வெயிலுக்கு புகழ் பெற்ற எங்கள் வேலூரில்
இன்று மாலை அரைமணி நேரம்  ஐஸ்கட்டி மழை
பெய்தது. அனலடிக்கும் வெப்ப நிலை மாறி 
ஊட்டிக்கு சவால் விடுக்கும் வண்ணம் மிகவும்
இனிமையாக நிலைமை மாறிவிட்டது.

நான்கு நாட்களாக குறைந்த பட்சம் 106 டிகிரிக்கு
மேல் வெப்பம்  நிலவி அவதிப்பட்ட வேலூர்
மக்களுக்கு இன்றைய ஐஸ்கட்டி  மழை 
ஒரு வரமாக வந்திருந்தது.

இன்று இப்படி ! நாளை எப்படியோ ?