Sunday, May 6, 2012

ஹிட்லராகும் மம்தா பானர்ஜி - அறிவிஜீவிகள் என்ன் செய்யப் போகின்றனர் ?



 மேற்கு வங்கத்தின் செய்திகள் சொல்லும் செய்தி!
எஸ்.கண்ணன்


 

செய்தி 1 : மேற்கு வங்க நூலகங்களில், வங்க மொழிப் பத்திரிகைகளில் சில மட்டுமே வாங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதில் இரண்டு, திரிணா முல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு உரியது. மற்றவை நேரடி யாக திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மம் தாவை வானளாவ புகழ்கிற பத்திரிகை கள். தடை செய்யப்பட்டவற்றில் அனைத்து ஆங்கிலப் பத்திரிகைகளுடன் சேர்ந்து கணசக்தி, ஆனந்த பஜார் ஆகிய வங்க மொழிப் பத்திரிக்கைகளும் அடங்கும். விமர்சனங்களை சகிக்க முடியாத ஆணவ மனப்பான்மையில் இருந்து வெளியிடப் பட்ட உத்தரவு.


செய்தி 2 : ஏப்ரல் 21 அன்று, மேற்கு வங்க மாநில அரசே நேரடியாக தொலைக்காட்சி சேனல் ஒன்றினையும், அச்சு ஊடகம் ஒன்றினையும், வெளியிட உள்ளது. நல்ல வேளையாக “இனி மேற்கு வங்க மக்கள் இவைகளை மட்டுமே படிக்கவும், பார்க்கவும் வேண்டும்” என்ற உத்தரவு மேற்படிச் செய்தியுடன் இல் லை. மற்ற பத்திரிகைகளைத் தடை செய் கிறோம் என்ற செய்தி இனி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 


செய்தி 3 : திரிணாமுல் காங்கிரஸைச் சார்ந்த ஜோதிப் பிரியா முல்லிக் என்ற மேற்குவங்க மாநில அமைச்சர், இனி மேற்குவங்கத்தில் யாரும் மார்க்சிஸ்ட் கட்சியினர் குடும்பத்தில் திருமண உறவு கொள்ள வேண்டாம் என அறிவித்தார். இது ஆரிய இனத் தூய்மை குறித்தும், அதற்காக இனக்கலப்பு இல்லாத திருமண உறவு குறித்தும் கவலை கொண்ட நாஜிக் கட்சியின் பாசிச ‘ஹிட் லர் மற்றும் கிராமத்து பண்ணையார் களின் கொள் கையை முன் நிறுத்தும் அணுகுமுறை.


செய்தி 4 : நுண் உயிரியல் விஞ்ஞானி பார்த்தோ சாரதி ராய், கொல்கத்தா நகரத் தில் நானோதுங்கா பகுதியில் இருந்த குடிசைப் பகுதிகளை அகற்றியதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார். இதை உலக அளவில் புகழ் பெற்ற நோம்சோம்ஸ்கி உள்ளிட்ட பலர் கண்டித்துள்ளனர். இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங்கிற்கும் கடிதம் எழுதியுள் ளனர். 


செய்தி 5 : ஓய்வுபெற்ற விஞ்ஞானி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். அவருடைய மகள், தந்தை தாக்கப்படும் போது தடுத்த காரணத்திற்காக, பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளார். இது ஏப்ரல் 17 அன்று ‘கொல்கத்தா செய்தி’ எனும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினரிடம் விசா ரித்த பத்திரிகையாளர்களிடம், தாக்கி யவர்கள் குறித்து புலனாய்வு நடத்திக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.


செய்தி 6 : மேற்கு வங்க தொழில் துறை அமைச்சர் பார்த்தோ சட்டர்ஜி, பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்திற்கு தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார். மத்திய அரசின் சட்டத்தின்படி லாபம் ஈட்டும் துறை ஒன்றிற்கு தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதி தலைவராக இருக்க முடியாது. ஆனால் மாநில மம்தா அரசு இந்த நியமனத்திற்காக சட்டத் திருத்தம் செய்திருப்பதாக தெரிவித்துள் ளார். இப்போது பொது மக்களின் கேள்வி, மத்திய அரசின் சட்டத்தை மாநில அரசு எப்படி திருத்தம் செய்ய முடியும் என்ப தாகும். 


செய்தி 7 : முகமூடி அணிந்து செயல் படும் மாவோயிஸ்டுகளுக்கு பொதுமக் கள் துணைபோக வேண்டாம் என்ற மம்தாவின் வேண்டுகோள், கடந்த ஆண்டு இடது முன்னணி ஆட்சியை அகற்ற மாவோயிஸ்டுகளுடன் கரம் கோர்த்திருந்த மம்தாவின் வேண்டு கோள், இது. மாவோயிஸ்டுகளின் தலைவர்கள் தில்லியிலும், கொல்கத்தா விலும், மம்தாவுடன் பயணித்ததை மார்க்சிஸ்ட் கட்சி பலமுறை அம்பலப் படுத்தியுள்ளது. ஆனால் இப்போது ஞானோதயம் கொண்டு நடிப்பதை மக்கள் எப்படி சகித்துக்கொள்வார்கள்.


செய்தி 8 : மாவோயிஸ்டு ஆதர வாளரான திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கபிர் சுமன், மம்தாவின் இத்தகைய செயல்களை விமர்சனம் செய்து, பாடல் இயற்றியுள்ளார். மேலும் தான் உள்ளிட்டு கடந்த காலத்தில் மம்தாவை ஆதரித்தது பெரும் தவறு என்பதை ஒப்புக் கொண் டுள்ளார். இது செய்தி 7ன் படி இல்லாமல், மம்தாவிற்கும் மாவோயிஸ்டுகளுக்கு மான அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.


செய்தி 9 : மாநில முதல்வர் மம்தாவை விமர்சிக்கும் கார்ட்டூனை ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா வெளியிட்டார் என்ற காரணத் திற்காக கைது செய்யப்பட்டார். மேற்படி 8 செய்திகளில் தன்னை அக்கால துக் ளக் தர்பாருக்கு இணையாக சித்தரிக்கிற போது, அம்பிகேஷ் மகாபத்ரா வரைந்த கார்ட்டூன் வெளி வந்தது. இந்த செய்தி களின் பின்னணியில் தான் மம்தா அர சினை பலரும் விமர்சித்து வருகின்றனர். “பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்”, என்ற பாரதியின் கூற்று மேற்கு வங்க மாநிலத்தில் மெய்யாகிக் கொண்டிருக்கிறது. கேலிச் சித்திரங்கள் கூடாது, என்று சட்டங்கள் இயற்றி னாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. 

எளிமையானவர், பதவி ஏற்ற பின், ரைட் டர்ஸ் பில்டிங் என்ற மேற்கு வங்க தலை மைச் செயலகத்திற்கு நடந்தே சென்றார், என அதிசயிக்கத்தக்கப் பிறவி போல் மம்தா இந்திய ஊடகங்களால் சித்தரிக் கப்பட்டார். ஆனால் இன்று திரும்பும் திசையெல்லாம் ஊடகங்களாலும், அறிவு ஜீவிகளாலும் விமர்சிக்கப்படு கிறார். மேலும் அறிவு ஜீவிகள் தாங்கள் தவறிழைத்து விட்டதாக வருந்தும் அள விற்கு, ஜனநாயகத்தை அமலாக்கிக் கொண்டிருக்கிறார்.இந்திய ஊடகங்கள் இடது முன்ன ணிக்கு எதிராக, மம்தாவிற்கு பச்சைக் கொடி காட்டியது, முழுக்க முழுக்க தனது ஆளும் வர்க்கப் பாசத்தை வெளிப் படுத்துவதற்கான தன்மையில் ஊடகங் கள் செயல்பட்டது. 


ஆனால் அறிவு ஜீவிகள் ஏன் மம்தாவை ஆதரித்தனர். குறிப்பாக திரை உலகத்தைச் சேர்ந்தோர், கவிஞர்கள், எழுத்தாளர்கள் மேற்கு வங்க இடது முன்னணிக்கு எதிராக, மம்தா விற்கு ஆதரவாக வரிந்து கட்டி செயலாற் றியது அறிவாளித்தனத்தின் வெளிப்பாடு அல்ல. மாறாக அறிவாளிகள் ஆளும் வர்க் கத்திற்கு துணை போனதன் வெளிப்பாடு. மேற்கு வங்க இடது முன்னணிக்கு எதி ரான பிரச்சாரத்தில் மகாஸ்வேதா தேவி போன்ற எழுத்தாளர்கள், மம்தாவின் குணநலன்கள் தெரியாததனால் ஈடுபட வில்லை, தெரிந்தே ஈடுபட்டார் என்பதே உண்மை. 

 திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியின் கர்ப்பப் பையில் இருந்து உரு வானது என்பதை மறுக்க முடியாது. 1975 கால கட்டத்தில், அவசரகால சட்டங்கள் மூலம் ஜனநாயகத்தை புதைக்க முயற்சி செய்ததை அறிவார்கள். மேற்குவங்கத் தில் சித்தார்த்த சங்கர் ரேயின் ஆட்சி அன்று அமலில் இருந்தது. அக்காலத் தில் இடது முன்னணி ஊழியர்களைக் குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர் களைக் குறி வைத்து கொலை செய்தனர். 2000க்கும் அதிகமான ஊழியர்களைக் களப்பலி கொண்ட வெறி அன்றைய காங் கிரஸ் தலைமையிலான ஆட்சியிடம் இருந்தது. இந்த இழிவான கொலைச் செயலுக்கு அன்று மார்க்சிய அதிதீவிரம் பேசியவர்களும் உடந்தையாக இருந்தனர். அன்றைய அரைப்பாசிச ஆட்சியை, மகா ஸ்வேதா தேவி மற்றும் சில இடது அதிதீவிர சிந்தனையாளர்கள், பார்த்தவர் கள்தான். கடந்த கால வரலாற்றை அறிந்த இந்த இடது அதிதீவிர அறிவுஜீவி கள் தவறிழைத்து விட்டதாக புலம்புவது, ஏற்புடையதாக இல்லை. அன்று, காங் கிரஸ் ஆட்சியில் ஜனநாயகத்தைப் பறித் தார்கள். இன்று ஜனநாயக ஆட்சியை கீழிறக்க மம்தாவுடன் கூட்டுசேர்ந்தனர். 


இத்தகைய அறிவு ஜீவிகள் செய்திருப்பது, சாதாரண மனிதர்கள் செய்ததைப் போன்ற சாதாரணத் தவறல்ல. ஐந் நூறுக்கும் அதிகமான மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள், மம்தா ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடனேயே கொல்லப் பட்டனர். ஜனநாயக ரீதியில் செயல் பட்டு வந்த அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. அப் போது இந்த அறிவாளிகளின் கண் களுக்கு, புதைக்கப் படும் ஜனநாயகம் மற்றும் மனித உயிர்கள் தெரியவில்லை.எப்படி இருந்தாலும் மம்தா தான் ஒரு ஜனநாயக விரோதி என்பதை அம்பலப் படுத்தியுள்ளார். கூடவே மாவோயிஸ்டுகள் எனத் தங்களைக் கூறிக் கொண்டவர்களும், தாங்கள் மார்க் சிய விரோதிகள் என்பதை அம்பலமாகி இருக்கிறார்கள். இப்போதாவது ஜனநாயக சக்திகள், மக்கள் சக்தியை அராஜகவாதி களுக்கு எதிராகத் திரட்டுவதும், மேற்கு வங்க இடது சாரிகளுக்கு நேசக்கரம் நீட்டுவதும் அவசியம். இல்லையென் றால் பாஸ்டர் நீல் மார்ட்டின் கவிதையின் இறுதி வரிகளான “ இறுதியில் என்னைத் தேடி வந்தார்கள், யாருமே இல்லை ஏன் என்று கேட்பதற்கு” என்பது உண்மை யாகி விடும்.

 நன்றி 

தீக்கதிர்  நாளிதழ் 

Saturday, May 5, 2012

தேரோடும் வீதியிலே .... தீய்ந்து போன பக்தர்கள்



அடுத்தடுத்த நாட்களில் நிகழ்ந்த இரு விபத்துக்கள்,
கோயில் தேர் திருவிழாக்களில் நடந்த விபத்துக்கள்
அதிர்ச்சியை அளிக்கிறது. இப்படி ஒரு அலட்சியமா
என்று ஆத்திரமும் வருகிறது.


நான்கு நாட்கள் முன்பாக ஆரணியில் நடைபெற்ற
கோயில் தேர் திருவிழாவில் சக்கரம் உடைந்து போய்
தேர் கவிழ்ந்து ஐந்து பக்தர்கள் அங்கேயே இறந்து
போனார்கள்.

வெயிலிலும் மழையிலும் பராமரிப்பு இல்லாமல்
தேரின் மரங்கள் உளுத்துப் போனதும் மோசமான
சாலையில் அந்த தேர் பவனி போனதும்தான்
விபத்திற்குக் காரணம்.

ஆரணி விபத்து நடந்த மறுநாளே குடியாத்தம் தேர்
திருவிழா விபத்து. உயர் மின் அழுத்த கம்பியில்
தேரின் கோபுரக்கலசம்  உரச மின்சாரம் தாக்கி
ஐவர் அங்கேயே பலி. பலரும் சிகிச்சையில் 
உள்ளனர். 

தேர் செல்லும் பாதையில் மின் கம்பி உள்ளதா
என்பதைப் பற்றி யோசிக்காமல் அதை விட
உயரமாக தேரை வடிவமைத்ததும்  தேரை
இழுத்துச் செல்ல இரும்புச் சங்கிலிகளை 
பயன் படுத்தியதும்தான் இங்கே விபத்திற்குக் 
காரணம். 

இரண்டு விபத்துக்களுமே தவிர்க்கப் பட்டிருக்கலாம்,
அலட்சியம் தவிர்க்கப்பட்டிருந்தால் .....

திருவிழா நடத்துபவர்களில் பெரும்பாலானவர்கள்
இன்று எவ்வளவு வசூல் செய்து எவ்வளவு 
சுருட்டுவது என்பதில் காண்பிக்கும் கவனம் மற்ற
விஷயங்களில் காண்பிப்பதில்லை.

அது சில சந்தர்ப்பங்களில் மோசமான விபத்தாக
உயிர்களைக் குடித்து விடுகின்றது.

Thursday, May 3, 2012

கலைஞர் ஐயா, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ?



புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டி போடப் போவதில்லை
என்று சொல்லி விட்டீர்கள். புத்திசாலித்தனமான முடிவு. ஆளும்
கட்சி வாரியிறைக்கப் போகும் பணத்திற்கு முன்பாக எப்படியும்
டெபாசிட் கிடைக்கப் போவதில்லை. திருமங்கலம் பார்முலா
திருப்பித் தாக்கும் என்று எதிர்பார்க்கவேயில்லை அல்லவா?

ஆனால் நீங்கள் சொல்லியுள்ள காரணம் உண்மையா?

தேர்தல் கமிஷனிடம் நியாயம் கிடைக்காது என்று சொல்லி
உள்ளீர்கள். 

அதுதான் காரணமா ?

தோல்வி பயத்தை விட முக்கியமான காரணம் ஒன்று 
உண்டல்லவா?

சகோதர யுத்தம் உக்கிரமாக  நடந்து கொண்டு இருக்கிறது.

அழகிரி சொல்பவரா இல்லை ஸ்டாலினின் பரிந்துரையா,
யார் சொல்பவரை வேட்பாளராக நிறுத்துவது என்பதுதானே
உங்களின் முக்கியப் பிரச்சினை.

தயவு செய்து உண்மையை பேசுங்க ஐயா....

Wednesday, May 2, 2012

தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களின் கவனத்திற்கு, எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் கூட படிக்கலாம், தைரியமாக

எங்கள் சங்கத்தின் சுற்றறிக்கைதான். ஆனால் அனைவருக்கும் செல்ல
வேண்டிய செய்தி. ஆகவே எனது பதிவாக கீழே.



காப்பீட்டுக்  கழக  ஊழியர்  சங்கம்
வேலூர் கோட்டம், பதிவு எண் 640/என்.ஏ.டி
சுற்றறிக்கை எண் 23 /2012                             02.05.2012                         
அனைத்து  உறுப்பினர்களுக்கும்,
அன்பார்ந்த தோழர்களே,

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் பாராட்டத்தக்க செயல்பாடு

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் மிகச்சிறப்பான செயல்பாடு  குறித்த அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க சுற்றறிக்கையின் தமிழாக்கத்தை கீழே தந்துள்ளோம். கடுமையான பொருளாதார சூழலிலும் எல்.ஐ.சி மற்றும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பட்டுள்ளது என்ற தகவலை நாம் மக்களிடமும் எடுத்துச்செல்ல வேண்டும்.
வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள
ஒப்பம் எஸ்.ராமன்
பொதுச்செயலாளர்

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் இன்னுமொரு சிறப்பான செயல்பாட்டுடன் 2011-12  நிதியாண்டு நிறைவடைந்துள்ளது. 81,514.99 கோடி ரூபாய் முதல் வருட பிரிமிய வருமானத்துடன் ஆயுள் காப்பீட்டுத் துறை சந்தையில் எல்.ஐ.சி தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளது. 3.57 கோடி புதிய பாலிசிகளை எல்.ஐ.சி இந்த ஆண்டு விற்றுள்ளது. நான்கு பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களும் ஒட்டு மொத்தமாக ரூபாய் 30,531.61 கோடி பிரிமிய வருமானம் ஈட்டி கடந்தாண்டை விட 21.39 % வளர்ச்சியை அடைந்துள்ளது.

எல்.ஐ.சி தனக்குத் தானே நிர்ணயம் செய்து கொண்ட இலக்கை அடைய முடியவில்லையே என்ற ஏமாற்றம் கூட உள்ளது. மிகவும் கடினமான சூழலில் எல்.ஐ.சி புரிந்துள்ள இந்த பாராட்டத்தக்க செயல்பாட்டை இதனால் நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஏமாற்றத்தின் நிழல் இந்த மகத்தான சாதனையை மறைத்து விட அனுமதிக்கக்கூடாது.

தேசத்தின் பொருளாதாரத் தன்மைக்கு மாறாக இன்சூரன்ஸ்துறையின் செயல்பாடு மட்டும் தனித்து இருக்க முடியாது. இந்த இரண்டிற்குமான வலுவான தொடர்பு நிரூபிக்கப்பட்ட ஒன்று. சமீப காலங்களிலேயே 2011-12 நிதியாண்டுதான் இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகவும் மோசமான ஆண்டு. சர்வதேச நிதி நெருக்கடியினாலும் நவீன தாராளமயமாக்கல் பாதையை தொடர்ந்து பின்பற்றியதாலும் இந்தியப் பொருளாதாரம் தடம் புரண்டது.


பொருளாதார வளர்ச்சி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 8.5 % க்கு பதிலாக 6.9 % வளர்ச்சியையே எட்ட முடிந்தது. உள் நாட்டு சேமிப்பு சரிந்தது. தனிநபர் சேமிப்பு தொடர்ந்து எதிர்மறைப் போக்கிலேயே உள்ளது. கடந்த இரண்டாண்டுகளாக நீடிக்கும் இதுவரை காணப்படாத மோசமான பண வீக்கத்தினாலேயே தனிநபர் சேமிப்பு மிகவும் பாதிக்கப்பட்டது என்று ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டுள்ளது. கடுமையான பண வீக்கம் தனிநபர் நிகர வருமானத்தில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு இன்சூரன்ஸ் மற்றும் வங்கித்துறையை கடுமையாக தாக்கியுள்ளது.

வங்கி வைப்புத் தொகை திரட்டலுக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 17 % இடைவெளி ஏற்பட்டுள்ளது என்பது பற்றி ரிசர்வ் வங்கி கவலை கொண்டுள்ளது. தொழில் உற்பத்தி மற்றும் விவசாய உற்பத்தி ஆகியவற்றில் எதிர்மறை வளர்ச்சியைக் கொண்டுள்ள பொருளாதாரத்தில் புதிய வேலைகளை உருவாக்க முடியவில்லை. இந்தியப் பொருளாதாரத்தில் நிலவும் மந்த நிலைமையின் பின்னணியில்தான் நாம் எல்.ஐ.சி யின் செயல்பாட்டை நாம் பார்க்க வேண்டும்.

தனியார்துறையை  விட எல்.ஐ.சியின்  செயல்பாடு மிக மிகச் சிறப்பானது.மிகவும் முன்னேறியது. கடந்தாண்டு இன்சூரன்ஸ் சந்தையில்  பிரிமிய வருமானத்தின் அடிப்படையில் 68.7 % என்றிருந்த எல்.ஐ.சி யின் பங்கு இப்போது 71.35 % ஆக உயர்ந்துள்ளது. அதே போல பாலிசிகள் அடிப்படையில் 76.91 % என்றிருந்த எல்.ஐ.சி யின் பங்கு இப்போது 80.89  % ஆக உயர்ந்துள்ளது.

2011- 12 ம் ஆண்டில் எஸ்.பி.ஐ லைப், பிரிமிய வருமானத்தில் 5.71 % மும் பாலிசிகள் எண்ணிக்கையில் 1.99 % மும்  பெற்று ஐ.சி.ஐ.சி புருடென்ஷியலை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி  இரண்டாவது இடத்திற்கு வந்தாலும் எல்.ஐ.சி யை ஒப்பிடுகையில்  எங்கோ வெகு தூரத்தில் உள்ளது. எல்.ஐ.சி பிரிமிய வருமானத்தில் 5.7 % எதிர்மறை  வளர்ச்சியும் பாலிசிகள் எண்ணிக்கையில் 3.47 % எதிர்மறை வளர்ச்சியும் பெற்றுள்ளது என்பது உண்மைதான். இருப்பினும் தனியார் நிறுவனங்களை ஒப்பிடுகையில் எல்.ஐ.சி யின் செயல்பாடு எவ்வளவோ உயர்வானது. தனியார் நிறுவங்களின் பிரிமிய வருமானத்தில் 16.91 % வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பாலிசிகள் எண்ணிக்கையில் 24.05 % சரிவு நிகழ்ந்துள்ளது. மிகப் பெரிய தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் பிரிமிய வருவாயில் 35.39 % மும் பாலிசிகள் எண்ணிக்கையில் 23.81 % மும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஒட்டு மொத்தமாக அனைத்து தனியார் கம்பெனிகளும் சேர்ந்து பிரிமிய வருவாயில் 28.64 % சந்தைப் பங்கும் பாலிசிகள் எண்ணிக்கையில் 19.1 % சந்தைப் பங்கும் வைத்துள்ளனர். இந்தப் புள்ளி விபரங்கள் சில சுவாரஸ்யமான உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. பிரிமிய வருவாயை விட  பாலிசிகள்

எண்ணிக்கையில்  எல்.ஐ.சி யின் பங்கு கூடுதலாக உள்ளது. ஆனால் தனியார் நிறுவனங்களிலோ இதற்கு முற்றிலும் மாறான நிலை உள்ளது. பிரிமிய வருவாயில் 28.64 % சதவிகித சந்தையை வைத்துள்ள தனியார் பாலிசிகள் எண்ணிக்கையில் வெறும் 19.1 % மட்டுமே வைத்துள்ளனர். தனியார் நிறுவனங்கள் செல்வந்தர்களையும் வசதி படைத்தவர்களையும் மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படுகின்றனர் என்பதை இது தெளிவாக எடுத்துரைக்கிறது. இதன் மூலம் இன்சூரன்ஸ்துறை தாராளமயக்கல், ஏன் பொருளாதாரத்தின் எந்தப் பகுதியின் சீர்திருத்தமும் ஏழைகளுக்காகவும் நலிவடைந்த மக்களுக்காகவுமே செய்யப்படுகின்றது என்ற வாதம் முற்றிலுமாக தகர்க்கப்பட்டு விட்டது.

மத்தியரசின் கொள்கைகளும் ஐ.ஆர்.டி.ஏ வின் தேவையற்ற தலையீடுகளும் கூட இன்சூரன்ஸ்துறையின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது. பொருளாதாரத்தில் முதலீடு செய்ய தேவைப்படுகின்ற நீண்ட கால சேமிப்புக்களை ஆயுள் இன்சூரன்ஸ் திரட்டுகின்றது. இந்த தனித்த ஒரு அம்சத்தினாலேயே வருமான வரி விதிப்பில் ஆயுள் காப்பீட்டிற்கு பிரத்யேக முன்னுரிமை தர வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் அரசின் வரிக் கொள்கை முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு நிச்சயமற்ற தனையை உருவாக்கி வணிகத்தை பாதித்து விட்டது.

பங்குச்சந்தைக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்குப் பதிலாக அரசு ஆயுள் காப்பீட்டில் சேமிப்பதை ஊக்கப்படுத்தலாம். சிங்கிள் பிரிமியம் பாலிசிகள் மீதான ஐ.ஆர்.டி.ஏ வின் நிலை, வணிகத்தை கடுமையாக பாதித்துள்ளது. புதிய பாலிசி திட்டங்களூக்கு ஒப்புதல் வழங்குவதில் நிலவும் கால தாமதமும் இன்சூரன்ஸ்துறையை பாதித்துள்ளது. கட்டுப்பாடுகள் என்பது துறையினை  முறைப்படுத்தி வளர்த்தெடுக்க பயன்பட வேண்டும். ஆனால் இங்கேயே வளர்ச்சியை முடக்கத்தான் அவை பயன்படுகின்றன.

நான்கு பொதுதுறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களும் ஒட்டு மொத்தமாக ரூபாய் 30,531.61 கோடி ரூபாய் பிரிமிய வருமானம் ஈட்டி மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளன. 2011-12 ம் ஆண்டில் 21.39 % வளர்ச்சி அடைந்துள்ளது இது நாள் வரை காணாத அற்புதம். பொருளாதாரம் மந்த கதியில் உள்ள போதும், வணிகம் மந்தமாக உள்ள போதும் பெற்றுள்ள இந்த வளர்ச்சி மகத்தானது.

58.46 % த்துடன் பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் சந்தையில் தனது மேலாதிக்கத்தை நிலை நாட்டியுள்ளது. இந்த அபாரமான செயல்பாடு துறை மேலும் வளர்ச்சி பெறுவதற்கான புதிய வாய்ப்புக்களை தோற்றுவித்துள்ளது.


அரசு இந்த உண்மையை உணர்ந்து கொண்டு, இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதா 2008 ன் மூலம் இந்த நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாற்றப் பட்டுள்ள நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சிகள் உடனடியாக கைவிடப் படவேண்டும். இந்நிறுவனங்கள் இந்தியப் பொருளாதாரத்திற்கும், தனது சமூகப் பொறுப்புக்களை நிறைவேற்றுவதுமான தனது கடமைகளை நிறைவேற்ற அனைத்து வழிகளிலும் உற்சாகப்படுத்த வேண்டும்.

பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களின் செயல்பாடு என்பது  மிகவும் கடினமான, சோதனைக் காலத்தில் நிகழ்ந்துள்ள ஒரு வெற்றி வரலாறு. எனவே சுணக்கமாகவோ, ஏமாற்றமாகவோ இருப்பதற்கான இடமே கிடையாது. அனைத்துத் தரப்பு ஊழியர்களின் அர்ப்பணிப்பு உணர்வால் இந்த வெற்றியை பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சாதித்துள்ளது. ஊழியர்கள் தங்கள் சேவைத்திறனை மட்டும் வளர்க்கவில்லை, வணிகத்திற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கவும் உதவி உள்ளனர்.

நவீன தாராளமயமாகலின் தாக்குதல்களிலிருந்து இந்த உன்னதமான நிறுவனங்களை பாதுகாக்கவும் அவற்றை மேலும் புதிய உயரங்களுக்கு எடுத்துச்செல்லவும் இந்த சிறப்பான பணி தொடர வேண்டும். தற்போதைய சூழலில் நம் முன் உள்ள மிக முக்கியமான கடமை இது.
வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள
ஒப்பம் ... கே.வேணுகோபால்
பொதுச்செயலாளர்

Tuesday, May 1, 2012

எச்சரிக்கையாய் இருந்திட வேண்டிய நேரம்




நிதித்துறை சீர்திருத்தங்களை அமுலாக்கிட வேண்டும் என மத்தியரசு துடித்துக் கொண்டிருப்பது நாம் அறிந்ததே. சர்வதேச பொருளாதார நெருக்கடி, பல நிதி நிறுவனங்களை அனலில் விழுந்த மெழுகாய், காணாமல் போக வைத்தது. தொழிலாளர்களின் சேமிப்புக்கள் காற்றில் மறைந்து போனது. அவர்களை நடுத்தெருவில் நிறுத்தியது.

இந்தியா அது போன்றதொரு மோசமான நிலைக்குப் போகாமல் பாதுகாத்தது இந்திய பொதுத்துறை வங்கிகளும், எல்.ஐ.சி, ஜி.ஐ.சி போன்ற பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களும்தான். பென்ஷன் நிதி பங்குச்சந்தைக்குள் புகாததால் பாதுகாக்கப்பட்டது. தங்களின் கொள்கைகள்தான் இந்தியாவை பாதுகாத்தது என்று மன்மோகன்சிங், சோனியா காந்தி, கலைஞர் என எல்லோருமே கூச்சமே இல்லாமல் தங்களுக்கே புகழ்மாலை சூடிக் கொண்டனர்.

ஆனால் நிதித்துறை சீர்திருத்தங்களை எப்படியாவது அமுலாக்குவது என்று மத்தியரசு துடித்துக் கொண்டிருப்பது நாம் நன்றாக அறிந்த செய்திதான். ஆனால் தற்போதைய அபாயம் எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சி மூலம் வந்துள்ளது.

நாங்கள் சொல்லும் திருத்தங்களை மத்தியரசு ஏற்றால் நிதித்துறை சீர்திருத்தங்களை அமுலாக்க வழி வகுக்கும் வங்கி, பென்ஷன் ஆணைய, இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாக்களை நிறைவேற்ற ஒத்துழைப்போம் என பாஜக கூறியுள்ளது. இந்த மசோதாக்களை நிறைவேற்ற அனுமதிக்க முடியாது என்ற நிலையிலிருந்து திருத்தங்கள் போதும் என்ற நிலைக்கு பாஜக இறங்கி வந்திருப்பது ஏதோ ஒரு பேரத்தின் துவக்கமாகத்தான் தெரிகின்றது.

காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரக் கொள்கையை அப்படியே கடைபிடிக்கும் பாஜக வும் தேசத்தைப் பற்றியோ, மக்களைப் பற்றி கவலைப் படுபவர்கள் அல்ல. ஆனால் இந்திய உழைப்பாளி மக்கள் அப்படி இருந்து விட முடியாது. அமெரிக்க, ஐரோப்பிய தொழிலாளர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இருக்கும் சொற்ப உரிமைகளை பாதுகாக்க இந்திய உழைப்பாளி மக்கள் விழிப்புணர்வோடும் எச்சரிக்கையோடும் இருக்க வேண்டிய நேரம் இது.

ஆட்சியில் தற்போது உள்ளவர்களும் முன்பு இருந்தவர்களும் மக்களுக்கு எதிராக கரம் கோர்க்கும் போது, ஒட்டு மொத்த உழைப்பாளிகளும் ஒன்றாக அணி திரள வேண்டிய நேரமும் இதுதான்.மே தினம் கொண்டாடும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி இது.

கலைஞர் ஐயா, ஸ்க்ரிப்ட் மாறிப் போச்சா?



கலைஞர் கருணாநிதி திடீரென தமிழ் ஈழ ஆதரவாளராக மாறி விட்டார். நாளுக்கு நாள் அவர் பேசும் வேகமான பேச்சுக்களைப் பார்க்கிற போது கூடிய சீக்கிரம் திமுக உறுப்பினர்கள் எல்லாம் கையில் ஏ.கே 47 துப்பாக்கி ஏந்தி படகேறி இலங்கை சென்று சண்டை போடப் போகின்றார்கள் என தோன்றுகின்றது.

ஈழம்தான் கனவு என்ற ஞானோதயம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. கோபாலபுரத்திலா அல்லது சி.ஐ.டி காலனியிலா, எங்கே போதி மரம் புதிதாய் முளைத்துள்ளது என்று யாராவது பார்த்துச் சொல்லுங்கள்.

கலைஞருக்கு எப்போதெல்லாம்  குடும்பத்தில் பிரச்சினை வருகிறதோ அல்லது மக்கள் மத்தியில் அதிருப்தி வருகின்றதோ அல்லது ஊடகங்கள் வறுத்தெடுத்தாலோ அவர் வழக்கமாக கையாளும் நாடகம் “ நான்  சூத்திரனாக இருப்பதால்தான் இப்படி நடக்கிறது ” என்ற வசனங்களைத்தான்  பேசி பிரச்சினையை திசை திருப்புவார்.

இப்போது  அந்த வசனத்திற்குப் பதிலாக ஈழம் வசனத்தை எடுத்துள்ளார்.

ஒரு வேளை அவர் உதவியாளர் சண்முகநாதனுக்கு வயதாகி விட்டதால் அந்த ஸ்கிரிப்டுக்குப் பதிலாக ஈழம் ஸ்கிரிப்டை எடுத்து கலைஞருக்கு கொடுத்து விட்டாரோ ?