வாட்ஸ்ப்பில் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒரு செய்தி.
தந்தை பெரியார் சமூக நீதி குறித்தும், இட ஒதுக்கீடு குறித்தும் நாடெங்கிலும் அலைந்து பேசுவது குறித்து தீவிரமாக
யோசிக்கிறார். எப்போது? புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் ஸ்ரீபிரகதாம்பாள்தாஸ் ராஜா ராஜகோபால
தொண்டைமான் பகதூர் தனது ஆளுகைக்கு உட்பட்ட புதுக்கோட்டை சமஸ்தான நாட்டில் ஜாதிவாரி
இடஒதுக்கீட்டை தனது அரசுப் பணிகளில் சட்டமாக்கியதைக் கண்டு.
தந்தை பெரியார் அனைத்து சாதியினரும் கோயிலினுள் நுழையும் போராட்டத்தைத்
துவங்க யோசிக்கிறார். எப்போது? புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் ஸ்ரீபிரகதாம்பாள்தாஸ் ராஜா ராஜகோபால
தொண்டைமான் பகதூர் தனது ஆளுகைக்கு உட்பட்ட புதுக்கோட்டை சமஸ்தான நாட்டில்
அனைவரையும் கோவிலுக்குள் அனுமதித்தாக வேண்டும் என்று சட்டம் இயற்றிய போது.
இன்றைக்கும் புதுக்கோட்டை மாவட்டக் கிராமங்களில் சிறு தெய்வ நாட்டார்
வழிபாட்டியல் கோவில்களில் பூசாரிகளாக தலித் மக்களே இருப்பார்கள். இது எங்கள்
மன்னர் ஸ்ரீபிரகதாம்பாள்தாஸ் ராஜா ராஜகோபால தொண்டைமான் பகதூர் அன்று நியமித்ததன்
தொடர்ச்சி.
அன்றைக்கு மாத்திரம் அல்ல... இன்றைக்கும் புதுக்கோட்டை மன்னர்
குடும்பத்தில் சமையல்காரர்களாக தலித் சகோதரர்களை மட்டுமே பணிக்கு
எடுக்கின்றார்கள். வீட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட மக்களுக்கு தனது
அரண்மனையின் அடுப்படியிலேயே இடம் அளித்து தனது நாட்டு மக்களுக்கு சமத்துவம்
போதித்தார் எங்கள் மன்னர் ஸ்ரீபிரகதாம்பாள்தாஸ் ராஜா ராஜகோபால தொண்டைமான் பகதூர்.
இன்றைய செய்தித்தாளில் ஒரு படம் பார்க்கிறேன். ஆளும் அரசி அம்மையார் ஒரு
தனி மேடையில் அமர்ந்து இருக்கிறார். அவரது காலுக்கும் கீழ் உள்ள மேடையில் பத்தோடு
பதினொன்றாக நவீன தீண்டாமையாக புதுக்கோட்டை
சட்டமன்ற அதிமுக வேட்பாளர் கார்த்திக் அமர்ந்து இருக்கிறார். அவர் வேறு
யாருமல்ல.... எங்கள் புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் ஸ்ரீபிரகதாம்பாள்தாஸ் ராஜா ராஜகோபால
தொண்டைமான் பகதூர் அவர்களின் நேரடி குடும்ப வாரிசு அவரது மகன்.
- கவிஞர் நிலா பாரதி
infront of Perarasi amma - king is small only.... now no more blood related king respect customs too. (you can get this respect in which temples are belongs to your control)
ReplyDeleteMoney matters. No one cares self respect.
ReplyDeleteஇதன்பின்னர் நேற்று மாலை, வேட்பாளர்களை மேடையிலேயே அமரவைத்த ஜெ.படமும் வந்தது, அதையும் எடுத்துப் போட்டிருக்கிறார் அந்தக் கோபக் கவிஞர் நிலாபாரதி.. கவிஞர் சொல் காதில் விழுந்ததோ? எப்படியோ நல்லது நடந்தால் சரிதான். வாழ்த்தும் நன்றியும்.
ReplyDeleteApa katchiyil seraamal suyetchaiyaga nirka vendiyathana ?
ReplyDelete