Wednesday, April 6, 2016

புத்தி பேதலித்த நரியின் கதை





பழம் கிடைக்கும் என மரத்தின் அடியில் பால் கிண்ணத்தோடு காத்திருந்த ஒரு நரி ஒன்று பழம் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தது. சீ, சீ, இந்த பழம் புளிக்கும் என்று சொல்லவும் முடியவில்லை. புளிக்கிற பழத்திற்காகவா இத்தனை நாள் ஏங்கினாய் என்று கேட்டால் என்ன செய்வது என்று அஞ்சி, பழத்தைப் பறித்துப்போன விவசாயியை வசை பாடிக் கொண்டிருந்தது.

பழத்தின் மீதான அதன் ஆசை அகலவில்லை. மரத்தையே சுற்றி சுற்றி வந்தது. புழுதிக் காற்று அடித்த போது மரத்திலிருந்து சில சருகுகளும் வெம்பிப் போன பிஞ்சுகளும் கீழே விழுந்தது.

பழம் கிடைத்து விட்டது என நரிக்கு ஒரே கொண்டாட்டம். வெம்பிப் போனதையே பழம் எனக் கருதி உற்சாகமடைந்து விட்டது.

பழம் கிடைக்காத ஏக்கத்தில் கிடைத்தது தனக்கு பலனளிக்குமா என்பது கூட புரியாத அளவிற்கு புத்தி பேதலித்து விட்டது. பாவம் நரி.

(இது சத்தியமா கற்பனைக் கதைதான். நம்புங்கள்)

8 comments:

  1. யாராக இருக்கும்? வைகோவா, வாசனா, சந்திரகுமாரா?

    ReplyDelete
    Replies
    1. வேறு யார் ... கிழட்டு மரம் கட்டுமரம் தான்

      ரிஷபராஜ்

      Delete
    2. பதில் தந்து தெளிவுபடுத்தியவர்கள் ரிஷபராஜ், குமார்ருக்கு நன்றி.

      Delete
  2. சாரி! இது தமிழ் வசை.சரிதானே?

    ReplyDelete
  3. நான்தான் இது கற்பனைக்கதை என்று சொல்லி விட்டேனே!

    ReplyDelete
  4. farmer: vaiko, half baked fruit : chandrakumar ,
    fruit : captain, old fox : who else kattumaram ?

    ReplyDelete
  5. யாரைச் சொல்லுகிறீர்கள் என்று தெரிந்தாலும், தெரியாத மாதிரிப் பின்னூட்டம் இட்டுள்ளவர்களை என்னவென்று சொல்வது? சந்திரகுமார், பார்த்திபன் போன்றவர்களை சருகு, வெம்பிப்போனது என்று சந்தடி சாக்கில் சொல்லிவிட்டீர்கள்.

    ReplyDelete