Saturday, December 5, 2015

ஜெ பட சந்தேகம் - உறுதியானது





சென்னை மற்றும் கடலூர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை வழி மறித்து அவற்றிலே ஜெயலலிதா படம் போட்ட ஸ்டிக்கர்களை அதிமுககாரர்கள் ஒட்டி அனுப்புகிறார்கள் என்று செய்திகள் பரவிக் கொண்டிருந்தன.

அதிமுகவினர் அப்படி செய்யக் கூடியவர்கள்தான் என்றாலும் இவ்வளவு மோசமாகக் கூட நடந்து கொள்வார்களா என்ற சந்தேகமும் இருந்தது. அதனால் இது பற்றி எதுவும் எழுதவில்லை.



ஆனால் "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போல அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையே அதிமுகவினர் நடத்திய அராஜகத்திற்கான சான்று என்பது உறுதியானது.

கேவலமான,  இழிவான செயல் என்பதைத்தான் சொல்ல முடியும்.

ஆனாலும் கூட

அதிமுக ரத்தங்கள், கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் அனானி அவதாரம் எடுத்து பின்னூட்டம் போட வருவார்கள் பாருங்கள்.

 

6 comments:

  1. யாரோ கொடுத்த நிவாரணப் பொருட்களில் ஜெயலலிதா படம் போட்ட ஸ்டிக்கர்களை ஒட்டி கொடுக்கும் புரட்சிகர நடவடிக்கை.

    ReplyDelete
  2. vellathil paamabaiyum admk panniyaiyum parthaa admk panniyaa adi.

    ReplyDelete
  3. பெயரும், முகமும் தெரியாமல் விளம்பரங்கள் ஏதும் இன்றி சக மனிதனுக்கு உதவி செய்யும் மனித நேசிப்பாளர்களை பாராட்டும் வேளையில்,
    துயரில் தவிக்கும் மக்களுக்கு உதவுவதை தவிர்த்து மக்களின் வரிப்பணத்தில் பெயரெடுக்க முனையும் அம்மாவினதும், அம்மாவின் பிள்ளைகளாகிய ஆட்டுக்குட்டிளினதும் இந்த இழிசெயலைக் கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  4. பெயரும், முகமும் தெரியாமல் விளம்பரங்கள் ஏதும் இன்றி சக மனிதனுக்கு உதவி செய்யும் மனித நேசிப்பாளர்களை பாராட்டும் வேளையில்,
    துயரில் தவிக்கும் மக்களுக்கு உதவுவதை தவிர்த்து மக்களின் வரிப்பணத்தில் பெயரெடுக்க முனையும் அம்மாவினதும், அம்மாவின் பிள்ளைகளாகிய ஆட்டுக்குட்டிளினதும் இந்த இழிசெயலைக் கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  5. உங்களுக்கு ஒரு சலுட்.
    மற்றவர்கள் கொடுக்கும் உதவி பொருட்களில் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டிக் கொடுக்கலாம்,ஜெயலலிதா பதவியில் இருக்கலாம் ஆனால் கலைஞர் ராஜினாமா செய்து விட வேண்டும் :)

    ReplyDelete