Tuesday, December 8, 2015

காவிகளின் கயவாளித்தனம்
சென்னை வரலாறு காணாத துயரத்தில் இன்னும் தவித்துக் கொண்டிருக்கிறது. மக்களின் பெரும் துயரம் நீடித்துக் கொண்டிருக்கிறது. இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என்று தெரியவில்லை.

மிகவும் நெருக்கடியான இந்த சூழல் மக்களின் மனதில் ஒளிந்து கொண்டிருந்த கருணையையும் கடமை உணர்வையும் வெளியே கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ளவர்களும் தமிழகத்தைத் தாண்டி உள்ளவர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுக, பிரதான எதிர்க்கட்சியான திமுக (உடன்பிறப்புக்களே சண்டைக்கு வர வேண்டாம். உங்கள் கைவசம் உள்ள நிதிக்கு நீங்கள் செய்கிற பணிகள் போதுமா என்பதை நீங்களே உங்கள் மனசாட்சியிடம் கேட்டுக் கொள்ளுங்கள்) ஆகியவை தவிர ஏனைய அரசியல் கட்சிகள், தொழிற்சங்க அமைப்புக்கள், வாலிபர், அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள், அமைப்பு சாரா பல தன்னார்வலர்கள், வணிக நிறுவனங்கள், கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் என பலரும் களத்தில் இறங்கி தங்களது சக்திக்கேற்ற உதவிகளை செய்து வருகிறார்கள்.

இயற்கை எப்படி ஜாதி மத வித்தியாசம் பார்க்காமல்   அனைவரையும் தாக்கியதோ, எப்படி ஏழை பணக்காரர் என்ற பேதம் பார்க்கவில்லையோ, அது போல நிவாரண உதவி செய்பவர்களும் எந்த பேதமும் பார்க்காமல் உதவிகளை செய்து வருகின்றார்கள். களத்தில் இறங்கி உதவி செய்பவர்கள் ஒரு புறம் என்றால் அவர்களுக்கு தேவையான நிதி, பொருட்களை சேகரித்து அனுப்பும் பணி மறு புறம் நடந்து வருகிறது.

இச்சூழலில் தங்கள் ஆட்சியின் தோல்வியை மறைக்க நிவாரணப் பொருட்களில் தங்களின் தலைவியின் படத்தை ஒட்ட வேண்டும் என்று அசிங்கமாக நடந்து கொண்டதும் பிரதமர் பார்வையிடும் படத்தில் வெள்ளக்காட்சி தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காக மத்திய அரசே போட்டோஷாப் செய்ததும் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் கடுமையாக கண்டிக்கப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் பெரிதும் பாராட்டப்பட்ட ஒரு விஷயம் இஸ்லாமிய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் செய்து வருகிற பணிகள். இஸ்லாமியர்களைப் பற்றி தவறாக நினைத்துக் கொண்டிருந்த சிலர், தங்களுக்கு சொல்லப்பட்டதும் யதார்த்ததில் காண்பதும் முரணாக இருக்கிறது என்பதை உணர்ந்ததாலேயே இஸ்லாமிய அமைப்புக்களின் பணிகளை நன்றியோடு பதிவு செய்ததாக நான் நினைக்கிறேன்.

இது நாள் வரை இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற சித்திரத்தை பொதுப்புத்தியில் உருவாக்க முயன்ற காவிக்கூட்டம் இது கண்டு பதறிப்போனது. அவர்களால் இடிக்கப்பட வேண்டும் என்று பிரச்சாரம் செய்யப்படுகிற மசூதிகள், பாதிக்கப்பட்ட மக்களின் புகலிடமானது கண்டு வெறுத்துப் போனது.   

அது காவிக் கூட்டத்திற்கு பொறுக்கவில்லை. இத்தனை நாள் நாம் கக்கிய நச்சு இனி பயனில்லாமல் போய் விடுமோ என்ற அச்சப்பட்டது. ஒரு கோயிலில் தங்கியிருந்த மக்களுக்கு உணவு வழங்கிய இஸ்லாமியர்களின் படத்தை எடுத்துப் போட்டு “கோயில்களில் தங்கியுள்ள முஸ்லீம்கள்” என்று உல்டா செய்து பார்த்தார்கள். அம்பலப்பட்டு அசிங்கப்பட்டார்கள். ஆனாலும் அடங்காதவர்கள், அவர்களின் வழக்கமான மோசடியை கட்டவிழ்த்து விட்டது. அமினா பிவி (ameena pivi) என்ற பெயரில் தவறான உச்சரிப்போடு ஒரு போலி முகநூல் ஐ.டி யை உருவாக்கி “இத்தனை நாள் வரை எங்களால் எதிர்க்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் ஆட்கள்தான் எங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்தார்கள். முஸ்லீம் அமைப்புக்கள் எல்லாம் காணாமல் போய் விட்டது” என்பதுதான் அந்த ஃபேக் ஐடி பகிர்ந்த பதிவின் செய்தி. 

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இஸ்லாமியர்களைப் பாராட்டி போடப்பட்ட ஒரு பதிவை அப்படியே காப்பியடித்து எழுதியதுதான். சொந்தமாய் மூளையும் கிடையாத மூடர்கள் என்பதையும் நிரூபித்து விட்டார்கள். 

இரண்டையும் கீழே பாருங்கள்


 

இது ஒரு ஏமாற்று வேலை என்பது அம்பலமானதுமே அந்த போலி முகநூல் கணக்கு காணாமலும் போய் விட்டது.

துயரமான ஒரு நேரத்திலும் கூட இவ்வளவு குயக்தியான வேலைகளை செய்வதுதான் காவிகளின் பாரம்பரியம்.

காந்தியை கொலை செய்த கோட்சே தன் கையில் “இஸ்மாயில்” என்று பச்சை குத்தி வந்தான். காந்தியை கொல்வது மட்டுமல்லாமல் அவரைக் கொன்றது முஸ்லீம்கள் என்ற தோற்றத்தை உருவாக்கி அதன் மூலம் ரத்த ஆறு ஓட வேண்டும் என்பதுதான் அன்று காவிக்கூட்டம் போட்ட திட்டம்.

அந்த கயவாளித்தனம் அறுபத்தி ஏழு ஆண்டுகளாக தொடர்கிறது. அந்த கூட்டத்திற்கு இந்தியர்கள் ஆட்சி செய்வதற்கான வாய்ப்பை கொடுத்துள்ளார்கள் என்பது வெட்கக்கேடு.இந்த போலி முகநூல் கணக்கோடு மட்டும் அவர்கள் நிற்கவில்லை.

அடுத்த கயவாளித்தனம் பற்றி நாளை பார்ப்போம்.

12 comments:

 1. இந்நாட்டின் மிகப்பெரிய தீவிரவாதப் புற்றுநோய் இந்த ஆர்.எஸ்.எஸ்.

  ReplyDelete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. வெறி கொண்ட காவி டவுசர் அனானியே, உனது கீழ்த்தரமான பின்னூட்டத்தை அப்படியே வெளியிட்டு உங்களின் யோக்கியதையை அப்படியே அம்பலப்படுத்தி இருக்க முடியும். ஆனால் எனது தளத்திற்கென்று ஒரு தரம் உள்ளது, நாகரீகம் உள்ளது. அதனால் நீக்கி விட்டேன். உண்மையை ஒப்புக்கொண்டமைக்கு நன்றி

   Delete
 3. தோழர் திரு.S.Raman அவர்கள் உண்மையை உரத்து கூறிய‌தற்கு மனமார்ந்த நன்றி பல்லாயிரம்.


  1.சொடுக்கி >>>> சென்னை வெள்ள பேரிடரில் தலைவிரித்தாடிய ஜிஹாதிகள். பகுதி 1. << < படிக்கவும்.

  2.சொடுக்கி >>>> தமிழகத்தில் கொட்டமடிக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகள். பகுதி 2. <<< படிக்கவும்.

  3. சொடுக்கி >>>> தமிழக பேரிடரில் தீவிரவாதிகளின் அநியாயங்கள். பகுதி 3. <<< படிக்கவும்.

  4. சொடுக்கி >>>> வெள்ளமே வெட்கப்பட்டிருக்கும் மனிதநேயத்தின் உச்சம் - தட்ஸ்தமிழ் THATSTAMIL. பகுதி 4. <<< படிக்கவும்.

  ReplyDelete
 4. வேதனை வேதனை. நாம் ஒற்றுமையாக இருக்கிறோம், தீய சக்திகள்தான் மக்கள் மனதில் மதவாதம் என்ற நஞ்சை விதைக்கின்றன.

  ReplyDelete
 5. ஆனால் தோழர் அவர்களின் சேவை மறக்க முடியாது,,தாடியும் தொப்பியும்
  அவர்களும் மனிதர்கள் தான் என்பதை புரிண்ட்துகொள்ள வைத்திருக்கிறது ...

  ReplyDelete
 6. நாம் அனைவரும் சகோதரர்கள் என்பதை உணர்த்தியது சென்னை மாமழை!


  இதில் காவிகளுக்கு ஏன் பொறாமை?

  ReplyDelete
 7. Thozhar... please look at this link.. http://www.dinamalar.com/news_detail.asp?id=1406844

  Please do something before it reaches to the common people

  ReplyDelete
  Replies
  1. தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என்று அந்த செய்தியில் எனது கருத்தை பதிவு செய்துள்ளேன். பிரசுரிக்கிறார்களா என்று பார்ப்போம்

   Delete
  2. nandri thozhar.

   Delete
  3. they dint publish your as well as my comment. a typical hindutva journalism.

   Delete