Saturday, December 26, 2015

மோடி பாகிஸ்தான் போன மர்மம் என்னவோ?



மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணம் விவாதப் பொருளாகியுள்ளது.

பாகிஸ்தானோடு நல்லுறவை உருவாக்க மோடி எடுத்த நல்லெண்ண நடவடிக்கை என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிறது. கற்பனை செய்ய முடியாத ராஜீய நடவடிக்கை என்ற அளவிற்கு பேசப்படுகிறது.

இந்தியாவும் பாகிஸ்தானும் நல்லுறவை வளர்ப்பது இரு நாடுகளுக்கும் நல்லது. அதற்கான பொறுப்பு இரு நாட்டு அரசுகளுக்கும் உள்ளது. மோடியின் பயணத்திற்கு இதுதான் நோக்கம் என்றால் பரவாயில்லை. ஆனால் சோழியன் குடுமி சும்மா ஆடாது என்ற பழமொழி நினைவுக்கு வந்து தொலைக்கிறதே! அவரது பதவியேற்பிற்கு நவாஸ் ஷெரிப்பை அழைத்தது அதானிக்கு தரகு வேலை செய்வதற்குத்தான் என்பதும் நினைவுக்கு வருகிறதே!

நான் ஆட்சிக்கு வந்தால் நவாஸ் ஷெரிப்பையே பிரியாணி செய்து விடுவேன் என்று மனிதக் கறி சமையல்காரராக தன்னை அறிவித்துக் கொண்ட மோடி என்ன திடீரென்று நாகரீகமானவராக மாறி விட்டாரா என்ன? நவாஸ் ஷெரீபின் பெண் திருமணத்திற்கு போகிற அளவிற்கு பாசக்கார மனிதராகி விட்டாரா?

சரி சொல்லுங்க மிஸ்டர் மோடி.

உங்க பாகிஸ்தான் பயணத்தின் மர்மம் என்ன?

அதானியா இல்லை அம்பானியா ? இப்போ பாகிஸ்தானில் யாருக்கு வேலை ஆகனும்? யாருக்கு தரகராக மாறியுள்ளீர்களா?

இல்லை உங்கள் நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி மீதான ஊழல் புகாரை திசை திருப்பும் நாடகமா?

சொல்லுங்க சார், சொல்லுங்க

 

4 comments:

  1. No this time Jindal All for marvadi group benifit

    ReplyDelete
  2. ஆமாம்...தோழர்..சும்மா ஆடியிருக்காது...குடுமி...

    ReplyDelete
  3. விகடனின் கட்டுரை ஒரு வேளை உதவக்கூடும்

    http://www.vikatan.com/news/coverstory/56859-jindal-in-lahore-on-same-day-as-pm-modi.art

    ReplyDelete
  4. Modi-Jindal-Navas --- Trio business talk.....

    ReplyDelete