"மோடி ஒன்றும் சாதாரண மனிதர் கிடையாது. அவர் கடவுள் அளித்த பரிசு"
என்று சொல்லி வெங்கைய நாயுடு கடவுளை சர்ச்சைக்கு இழுத்துள்ளார்.
மோடியை கடவுள் யாருக்கு பரிசாக அளித்துள்ளார்?
அவரது ஓராண்டு ஆட்சியைப் பார்க்கிற போது எனக்கு தோன்றியவை.
அதானி, அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட பரிசு.
வியாபம், லலித் மோடி, ரேஷன் அரிசி, கடலை மிட்டாய் ஊழல்களில் சிக்கியுள்ள சிவராஜ் சுவுஹான், சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜீ, ரமன்சிங், பங்கஜ் முண்டே ஆகியோரை பாதுகாப்பதால் அவர்களுக்காக அளிக்கப்பட்ட பரிசு.
சாத்வி நிரஞ்சன் ஜோதி, சாத்வி பிராச்சி, ஸ்வாமி அவைத்யநாத் போன்ற விஷம் கக்கும் பேச்சாளர்களுக்கு முன்னுதாரணாமாய் இருந்ததால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பரிசு.
இந்தியாவை கொள்ளையடிக்க விரும்பும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்காக அளிக்கப்பட்ட பரிசு.
இந்தியாவின் இறையாண்மையை கட்டுப்படுத்த விழையும் ஒபாமா போன்றவர்களுக்கான பரிசு.
தங்களின் மதவெறி செயல்திட்டத்தை அமலாக்க ஆசி தருவதால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கான பரிசு.
பாவம் கடவுள், அவருடைய பெயரை வெங்கையா நாயுடு இப்படி நாசம் செய்வார் என்று அவர் நினைத்திருக்க மாட்டார். அவர் ஏதாவது உடனடியாக செய்து விட வேண்டும். இல்லையென்றால் நம்ம வெங்காய நாயுடு அடுத்து "மோடிதான் கடவுள்" என்று சொல்லி விடுவார்.
கடவுள் யாருக்கும் ஒரு பைசா கூட பரிசு கொடுக்க மாட்டார்.
ReplyDeleteசொன்னாலும் சொல்லுவார்கள்
ReplyDeleteஅடிக்கடி வெங்கையா தமிழகத்திற்கு வந்துள்ளதால், தமிழக வியாதி அவருக்கும் பிடித்துக்கொண்டுவிட்டது. யாராவது இப்படி ஓவராகப் புகழ்ந்தால், நமக்கு, அவர், காக்காய் பிடிக்கிறார், அல்லக்கை என்று அவர்மீது தாழ்ந்த எண்ணம் வருவதுபோல், இந்த அரசியல்வாதிகளுக்கு வராதா? 'க'வை இந்திரன் சந்திரன் என்று புகழ்வதும், ஜெ. காலில் வயது வித்தியாசம் இன்றி விழுவதும், அவர்களுக்கு ('க' வுக்கும் 'ஜெ' வுக்கும்) அவமானமாகத் தோன்றாதா?
ReplyDelete