Saturday, August 29, 2015

இரண்டுமே ஆபாசப் பேச்சுக்கள்தான். ஆனால்






 
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக அதிமுக்கார்ர்கள் பொங்கியெழக் காரணமாக இருந்த அவரது பேச்சின் காணொளியை இப்போதுதான் பார்த்தேன். சந்தேகத்திற்கே இடமில்லாத தரக்குறைவான பேச்சுதான். ஒரு கட்சியின் மாநிலத்தலைவர் இது போல கண்ணியக்குறைவாக பேசியது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. மோடியோ இல்லை ஜெயல்லிதாவோ, யாரைக் குறிப்பிடுவதாக இருந்தாலும் இது போல ஆபாசமாக பேசுவது ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த இருவரைப் பற்றியும் அரசியல்ரீதியாக விமர்சிக்க எவ்வளவோ விஷயம் இருக்கும் போது இளங்கோவனின் இந்த அணுகுமுறை கண்டனத்திற்குரியது. தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்வதற்குப் பதிலாக அவர் மன்னிப்பு கேட்பதுதான் சரியாக இருக்கும்.

இளங்கோவனுக்கு எதிராக அதிமுக்கார்ர்கள் கொந்தளித்தது நியாயம் என்ற போதிலும் இன்னொரு கேள்வி வந்து தொலைக்கிறது.

ஏனென்றால் இளங்கோவன் பேசிய காணொளியை பார்க்கும் போதே இன்னொரு காணொளியையும் காண நேரிட்டது.

அது பாமக தலைவர் காடுவெட்டி குரு பேசியது.

இளங்கோவன் பேசியதை விட அது இன்னும் மோசம், படு கேவலம். நேரடியான ஆபாசம்.

ஒரு படத்தில் வடிவேலு சொல்வாரே “டோட்டல் பேமிலி டேமேஜ் என்று அது போல எம்.ஜி.ஆர், ஜெ, அதிமுக அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் என அனைவரையும் அசிங்கப்படுத்தி இருப்பார்.

இளங்கோவனுக்கு எதிராக துடைப்பத்தை தூக்கி, கொடும்பாவி எரித்து, வீட்டை முற்றுகையிட்ட அதிமுகவினர் காடுவெட்டி குரு விஷயத்தில் அமைதியாக இருப்பதன் மௌனம் என்ன?

ரவுடித்தனத்தில் காடுவெட்டி குரு வகையறாக்களுக்கு ஈடு கொடுக்க முடியாது என்ற அச்சமா?

3 comments:

  1. சோனியா மீது கூட இப்படி சிலர் முன்பு பேசியுள்ளனர்

    ReplyDelete
  2. ரவுடித்தனத்தில் காடுவெட்டி குரு வகையறாக்களுக்கு ஈடு கொடுக்க முடியாது என்ற அச்சமா?- அதே

    ReplyDelete
  3. காடுவெட்டி குருக்கு எதிராகச் செய்வது, வன்னியர்களுக்கு எதிரானதாக மாறி, வரவிருக்கும் ஓட்டை டேமேஜ் செய்துவிடும். இளங்கோவன் ஒரு கைப்பிள்ளை.. அவரை எதிர்ப்பது, காங்கிரஸிலேயே இருக்கும் மற்ற தலைவர்களுக்கு அல்வா சாப்பிட்டதுபோல் இருக்கும். இதுகூடத் தெரியாமல் எழுதிவிட்டீர்களே... ரவுடித்தனம் இல்லை.... ஓட்டுதான்.

    ReplyDelete