எங்கள் பகுதி சாலை ஒன்று எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று கடந்த அக்டோபரில் புகைப்படங்கள் எடுத்து போட்டிருந்தேன். அந்த பதிவில் இருந்து சில சாம்பிள்கள் கீழே.
மார்ச் மாதத்தில் ஜல்லி, மணல் எல்லாம் கொட்டி ஆரம்பக் கட்டப் பணிகள் நடந்தும் அம்போவென்று விட்டுவிட்டு போய் விட்டார்கள் என்று இந்தாண்டு மே மாதத்தில் இன்னொரு பதிவும் எழுதியிருந்தேன்.
ஒரு வழியாக, இறுதியாக நான்கு நாட்கள் முன்பாக சாலை போட்டு விட்டார்கள். ஒரு குறையை சுட்டிக்காட்டும் போது அது சரி செய்யப் படுவதையும் பகிர்ந்து கொள்வதுதானே முறையாக இருக்கும். புதிதாகப் போடப்பட்ட சாலை இங்கே. ஓரிரு ஆண்டுகளாவது தாக்குப்பிடித்தால் நல்லது.
குறையைச் சுட்டுவதைப் போல்
ReplyDeleteநிறைவையும் சுட்டம் தங்களின்
மனம் போற்றுதலுக்கு உரியது
//ஒரு குறையை சுட்டிக்காட்டும் போது அது சரி செய்யப் படுவதையும் பகிர்ந்து கொள்வதுதானே முறையாக இருக்கும்.//
ReplyDeleteஇது எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு.
Good Attitude
ReplyDeleteY Anna
சாலை:எப்டி இருந்த நான் இப்டி ஆய்ட்டேன்.
ReplyDeleteyou get no matter? not needed for us
ReplyDeleteIf it is not needed, you need not see. who compels you?
Delete"இரண்டு மாதங்களாவது" என்று போடுவதற்குப் பதிலாக, 'இரண்டு ஆண்டுகளாவது' என்று போட்டிருக்கிறீர்களே. என்ன பேராசை. கமிஷன் % கூடக் கூட, சாலையின் தடிமன் குறைந்துகொண்டே வரும். இப்போ மழை வேற.... சனவரியில் மீண்டும் சாலையின் படம் போடவும்.
ReplyDelete