பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி விதம் விதமாக ப்ளெக்ஸ் பேனர் வைப்பதில் பாண்டி முதல்வர் ரங்கசாமி ரசிகர் மன்றத்து ஆட்க்ளுக்கு (கட்சி என்று சொன்னால் அவர்களே நம்ப மாட்டார்கள்) ஈடு இணை யாருமே கிடையாது.
இந்த ஆண்டு வைக்கப்பட்ட பேனர்களில் சில. (எங்கள் தோழர் முகநூலில் பதிவு செய்ததிலிருந்து சுட்டது). அதிமுககாரர்கள் கூட இந்த ரேஞ்சிற்கு யோசித்தது கிடையாது.
முழுமையாக அனுபவிக்க ஒரு முறை பாண்டி செல்லுங்கள். இரண்டாண்டு முன்பாக நான் அனுபவித்துள்ளேன்.
ஆகா
ReplyDeleteரசித்தேன்
என்ன கொடுமை இது? நம் 'தலைவர்கள்' எல்லோரும் இவ்வளவு நார்சிஸ்ட்களா ?
ReplyDeleteஅதிமுககாரர்கள் கூட இந்த ரேஞ்சிற்கு யோசித்தது கிடையாது.
ReplyDeleteஉண்மைதாங்க. நம்பவே முடியல்ல!
அரசியல்னாலே, இந்த அல்லக்கைகள் தொல்லைதான். இதையெல்லாம் அவர்களா போடவேணும்னு சொல்வாங்க? முதல்ல இந்த அல்லக்கைகளை எல்லாம் அரசியல்லேர்ந்து தொறத்தணும்.
ReplyDeleteகவுண்டமணி சொன்னா, 'நாராயணா... இந்தக் கொசுத் தொல்லை தாங்கமுடியலேய்யா' தான் ஞாபகம் வருகிறது.
கட் அவுட் கலாச்சாரம் புதுச்சேரியில் ரொம்ப ரொம்ப அதிகம். அதிலும் இந்த மேற்படி ஆட்களுக்கு வானாளாவிய அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஊரில் யார் கட் அவுட் வைத்தாலும், முனிசிபாலிட்டி கழட்டி எறிந்துவிடும், இவருடைய கட் அவுட் தவிர. இன்னும் கொடுமையை ஆகஸ்ட் 4 வரையில் எதிர்பார்க்கலாம். இதைவிட முக்கியமான செய்தி என்னவென்றால், மேற்படி கட் அவுட்டில் உள்ள முதலமைச்சர், இரவு 1 மணியளவில் கட் அவுட் பகுதிகளுக்கு சென்று ரசித்து மகிழ்வதுதான். யூனியன் பிரதேசமாக இருக்கும்போதே இவ்வளவு எல்லை மீறல். தனி மாநிலமாக அறிவித்துவிட்டால், அரசு சின்னமாகக் கூட அவர் உருவம் பொறிக்கப்பட்டுவிடும். ஆளை விடுங்கடா சாமி.
ReplyDeleteYou are showing your photo in your blog. He is chief minister. His followers display his photo. you do your businees
ReplyDeleteயாரப்பா நீ? ப்ரொபைல் படம் வைப்பதும் இப்படி கன்னாபின்னாவென்று ப்ளெக்ஸ் வைப்பதும் ஒன்றா? ஏன் இப்படியெல்லாம் அபத்தமா உன் புத்தி போகுது?
Deleteஇப்படியெல்லாம் சிந்திக்க எப்படி முடியுதோ தெரில!
Delete