Sunday, August 23, 2015

"புலி" விஜய் சொன்னது "அம்மா" ஆட்சியையா?

https://upload.wikimedia.org/wikipedia/en/f/f9/Puli_vijay.jpg
நேற்றுதான் "பாகுபலி" படத்திற்குப் போனேன். அப்படம் பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன்.

இந்த பதிவு ஒரு சின்ன சந்தேகத்தை தீர்த்து வைக்க யாராவது உள்ளார்களா என்று அறிந்து கொள்ளத்தான்.

இடைவேளையில் "புலி" பட முன்னோட்டத்தை  காட்டினார்கள். நீங்களும் கூட பாருங்கள்

அதிலே ஒரு ஆங்கில வாசகம்

In  a land ruled by Darkness,
there is only one ray of hope 

என்று வருகிறது.

"இருளால் ஆளப்படும் ஒரு மண்ணில்"

என்று வாசகத்தைக் காண்பித்து விட்டு உடனே ஸ்ரீதேவி அரசியாக இருப்பதைக் காண்பிக்கிறார்கள்.

நம்பிக்கை ரேகை விஜய் என்பதை நான் விளக்க வேண்டிய அவசியம் இல்லை.

இருளால் ஆளப்படும் என்று மண் எனச் சொல்லி அதன் பின்னே ஒரு பெண்ணை காண்பித்திருப்பது ஏதோ ஜெ மீது வைக்கப்படும் விமர்சனம் என எனக்கு தோன்றியது.

உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

 

4 comments:

  1. அப்ப படம் அடுத்த ஆட்சியிலேதான் வெளிவருமோ

    ReplyDelete
  2. // இருளால் ஆளப்படும் என்று மண் எனச் சொல்லி அதன் பின்னே ஒரு பெண்ணை காண்பித்திருப்பது ஏதோ ஜெ மீது வைக்கப்படும் விமர்சனம் என எனக்கு தோன்றியது.//

    நீங்க உண்மை நிலைமையின் அடிப்படையில் பார்த்ததினால் அப்படி தோன்றியுள்ளது. சரியே.

    ReplyDelete
  3. சார்... உங்களுக்கு ஏன் விஜய் மீது கோபம். இதுமாதிரிக் காண்பிக்கிறார்கள் என்றாலே, விஜய் படத்துக்கு ஆபத்துதான். ஆனால் பாவம் சிம்புதேவன். அவருக்கு இம்சைக்கு அப்புறம் வந்த மூன்று படங்களும் டப்பா. அதில் அறை எண் கொஞ்சம் பரவாயில்லை. இதிலாவது அவருக்கு ஒரு வாழ்வு வரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. ட்ரெய்லர் பார்க்கும் போது என்ன தோன்றியதோ, அதை அப்படியே எழுதினேன். மற்றபடி விஜய் மீது எனக்கு எந்த கோபமும் கிடையாது.

      Delete