Wednesday, August 12, 2015

மோடி, எம்.ஏ ??????????????



http://www.thehindubusinessline.com/multimedia/dynamic/01749/BL10_MODI_1749694g.jpg

மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிர்தி இராணியின் கல்வித் தகுதி பற்றி சர்ச்சை வந்தது. அது இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளது.

டெல்லி சட்ட அமைச்சர் சிறைக்கே போய் விட்டார்.

மகாராஷ்டிர மாநில பாஜக அமைச்சர் ஒருவர் மீதும் புகார் இருக்கிறது.

இப்போது புதிதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அது பிரதமர் மீதே எழுந்துள்ளது.

நரேந்திர மோடி குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ (பொலிட்டகல் சைன்ஸ்) படித்ததாக அவரது இணைய தளத்தில் போட்டிருந்ததை உறுதி செய்து கொள்ள ஒருவர் தகவல் அறியும் சட்டத்தில் கேள்வி கேட்டுள்ளார். கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. ஆனால் இணையதளத்தில் அவர் எம்.ஏ படித்ததாக எழுதியிருந்ததை அகற்றி விட்டார்கள்.

அதனால்தான் அவர் நிஜமாகவே எம்.ஏ படித்தாரா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பான விரிவான ஒரு பதிவிற்கு இங்கே செல்லவும்.

அமைச்சராகவோ பிரதமராகவோ முதல்வராகவோ இருப்பவர்கள் கண்டிப்பாக கல்லூரியில் படித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று சட்டம் எங்கேயும் சொல்லவில்லை. படித்தவர்களால்தான் ஆட்சி செய்ய முடியும் என்பதும் கிடையாது. மன்மோகன் போன்ற மெத்தப்படித்த மேதாவிகள் என்ன கிழித்தார்கள் என்பதும் நமக்கு தெரியும்.

படித்தவர்கள்தான் திறமையாக ஆட்சி நடத்த முடியும் என்பதை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஆகவே மோடி எம்.ஏ படித்தாரா இல்லையா என்பது அவர் பிரதமராக இருப்பதற்கு அவசியமில்லை.

ஆனால்

தான் படிக்காத ஒரு படிப்பை, வாங்காத ஒரு பட்டத்தை ஒரு பந்தாவிற்காக பெற்றது போல் பொய் சொல்வது நேர்மையற்ற செயல். மோசடியும் கூட. அதுதான் அவர்களை ஆட்சி செய்ய தகுதியற்றவர்களாக மாற்றுகிறது.

இப்போது நமக்கு தெரிய வேண்டியது மோடி எம்.ஏ படித்தாரா இல்லையா என்பதல்ல. பொய் சொல்லியுள்ளாரா, இல்லையா என்பதுதான்.



1 comment: