Monday, August 17, 2015

"வாலு" பாத்தாச்சு

 
 
ஆகஸ்ட் 15, 16 தேதிகளில் எங்களின் கோட்டச்சங்கத்தின் இருபத்தி எட்டாவது பொது மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மாநாட்டுப் பணிகள் காரணமாக வலையுலகத்திற்கு அதிகமாக வர முடியவில்லை. மீண்டும் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். 
 
நேற்று மதியம் மாநாடு முடிவடைந்தது. இன்று தமிழகத்தில் உள்ள கோட்டப் பொதுச்செயலாளர்களின் கூட்டமும்  மாலை மாநாட்டு முடிவுகளை விளக்குவதற்கான ஒரு ஊழியர் கூட்டமும் நடைபெற்றது. அதனால் எங்கள் தென் மண்டலப் பொதுச்செயலாளரும் துணைத் தலைவரும் வேலூரிலேயே தங்கி விட்டனர். 
 
அபூர்வமாக அவருக்கு நேரம் கிடைத்ததால் நேற்று இரவு "வாலு" திரைப்படம் சென்றோம். வேறு உருப்படியான படமும் எதுவும் இல்லை.
 
அதைப் பற்றி ஏதாவது எழுதலாம் என்று யோசித்தால் தியேட்டரை விட்டு வெளியே வரும் போதே அந்த படம் பற்றிய நினைவும் அகன்று விட்டது என்று இப்போதுதான் தோன்றுகிறது.
 
முகனூலிலும் வாட்ஸப்பிலும் வலம் வந்த ஜோக்குகளே நகைச்சுவைக் காட்சிகளாக வந்ததால் அந்த நிமிடத்தில் வந்த சிரிப்பு அந்த நிமிடத்திலேயே மறந்து போய் விட்ட்து. 
 
பாடல்கள் வரும் போது அந்த இரைச்சலைக் கேட்கும் போது எரிச்சல் வருவது ஒருவேளை எனக்கு வயதாகி விட்டதன் அடையாளமோ?
 
மது விலக்கு கோரி போராட்டம் நடைபெறும் சூழலில் அவ்வப்போது சரக்கடிக்கும் காட்சிகள், ஒரு அடியில் ஒரு கிலோ மீட்டர் தள்ளி அடியாட்கள் போய் விழுவது  போன்ற காட்சிகளும் ஏனோ ஒட்டவில்லை. 
 
ஆபாசக் காட்சிகளும் இரட்டை அர்த்த வசனங்களும் இல்லாதது ஒரு ஆறுதல். 
 
வில்லனோடு கடைசியில் ஒரு ஆக்ரோஷ சண்டை இல்லாமல் விட்டுக் கொடுத்துப் போவது மட்டும் ஒரு சின்ன வித்தியாசம்.
 
வாலு - அழுத்தமில்லாத ஒரு சாதாரண படம்
 
 

1 comment:

  1. பொதுச்செயலாளராக மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டதிற்கு வாழ்த்துக்கள்.
    //வாலு திரைப்படம் சென்றோம்.// சகிப்பு தன்மை உங்களுக்கு கூடிவருகிறது :)
    //மது விலக்கு கோரி போராட்டம் நடைபெறும் சூழலில் அவ்வப்போது சரக்கடிக்கும் காட்சிகள்//

    தமிழ்படங்களில் ஒரே குடிக்கும் காட்சிகள் அதிகம் என்பதை வேறு சிலரும் சொல்ல கேட்டிருக்கேன்.
    ஊருக்கு சென்று வந்த நண்பர் சென்னார் அங்கே ஒரு படம் பார்க்க நேர்ந்ததாம். படத்தில் கதாநாயகனுக்கும் அவன் நண்பனுக்கும் குடிப்பதும், காதலிப்பதும் தான் வேலை, போததிற்கு கதாநாயகனின் தாத்தா வெளிநாடு சென்று திரும்பி வரும்போது வெளிநாட்டு மது போத்தல் வாங்கி கொண்டுவந்து ஹீரோவுக்கு கொடுக்கிறாராம்.
    இப்படியெல்லாம் நடக்குமா என்று நாம் குழம்பினோம்.

    ReplyDelete