Saturday, November 16, 2019

எருமைப்பாலில் என்ன இருக்கு?




பசுவின் பாலில் தங்கம் உள்ளது என்ற அரிய கண்டுபிடிப்பை உலகிறகு சொன்ன அறிவாளி பாஜகவின் மேற்கு வங்க மாநிலத் தலைவர் திலீப் கோஷ்.

பசுவின் பாலில் தங்கம் இருப்பது போல எருமைப்பாலில் வெள்ளி உள்ளதா என்று ஆராய்ச்சி செய்து சொன்னால் நல்லது. அதே ஆராய்ச்சியை விரிவு படுத்தி ஆட்டுப்பாலில் என்ன உலோகம் உள்ளது? ஒட்டகப் பாலில் என்ன உலோகம் உள்ளது என்பதையெல்லாம் கண்டறிந்து சொல்லுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

இந்திய வெள்ளைப் புரட்சியின் தந்தை என்று ஆனந்த் பால் கூட்டுறவு அமைப்பின் நிறுவனரான டாக்டர் வர்கீஸ் குரியனைச் சொல்வார்கள். இப்படிப்பட்ட கண்டுபிடிப்பைப் பற்றி ஏதும் அறியாத அவருக்கு ஏன் அந்த பட்டம்? அதை திலீப் கோஷிற்கே கொடுத்து விடலாம் . . .

பிகு

எழுதி சில நாட்களாகி விட்டது. ட்ராப்டில் இருந்ததற்கு பிரசுரமாகும் வேளை இப்போதுதான் கிடைத்தது.


Friday, November 15, 2019

காந்தி விபத்தில் இறந்தாராம்!


மேலே உள்ளது மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு ஒடிசா மாநில கல்வித்துறை அச்சிட்டு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய பிரசுரம்.

அதிலே எதிர்பாராத விபத்தாக மகாத்மா காந்தி இறந்து போனார் என்று அச்சிட்டுள்ளார்கள்.

இது என்னய்யா கொடுமை என்று கேட்டால் அந்த மாநில கல்வி அமைச்சர் "கொலை என்பதும் எதிர்பாராத விபத்துதானே!" என்றொரு வினோதமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

சங்கிகள் வரலாற்றை திசை திருப்பலாம்.

பிஜூ ஜனதா தள்ளுக்கு என்ன அவசியம்?

ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் அக்கட்சிக்குள்ளும் ஊடுறுவி உள்ளார்களோ?

சபரிமலை - நீதி தேவர்கள் மயக்கமா?


அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குச் சென்று ஐயப்பனை வழிபடலாம் என்பது கடந்த வருடம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு.

ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நாரிமன், சந்திரசூட், கான்வாலிகர் ஆகியோர் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்துக்கு முரணானது என்றும் நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டும் நம்பிக்கையே பிரதானம், பெண்கள் செல்லக்கூடாது என்றால் செல்லக் கூடாது என்றும் தீர்ப்பளித்தனர்.

இப்போது மறு ஆய்வுக்கான ஐந்து நீதிபதிகள் அமர்வில் தீபக் மிஸ்ராவிற்கு பதிலாக தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (நீதிமன்ற செயல்பாடுகள் வெளிப்படையாக இல்லை என்று பத்திரிக்கையாளர்களிடம் குறை சொன்ன நால்வரில் ஒருவர்) இருந்திருக்கிறார்.

ரஞ்சன் கோகாய், இந்து மல்கோத்ரா, கான்வாலிகர் ஆகிய மூன்று நீதிபதிகள் இந்த வழக்கை ஏழு பேர் கொண்ட அமர்விற்கு மாற்ற வேண்டும் என்று சொல்ல நாரிமன் மற்றும் சந்திரசூட் ஆகியோர் முந்தைய தீர்ப்பு தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளனர்.

வழக்கிற்கு அப்பாற்பட்ட விஷயங்களை கொண்டு தலைமை நீதிபதி குழப்புகிறார் என்று தீர்ப்பிலேயே வெளிப்படையாக விமர்சித்துள்ளார்கள். தீர்ப்பிற்கு எதிராக செய்யப்பட்ட கலவரங்களையும் கண்டித்துள்ளார்கள். 

கடந்த முறை அளித்த தீர்ப்பிலிருந்து ஒருவர் ஏன் இப்போது தடுமாறினார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். வழக்குக்கு தொடர்பில்லாத அம்சங்களைப் பற்றி தலைமை நீதிபதி ஏன் குழப்பினார் என்பதும் கூட அப்படி ஒரு ரகசியமே!

முந்தைய தீர்ப்பிற்கு எந்த தடையும் பிறப்பிக்கப்படவில்லை.

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்பதுதான் அதன் பொருள்.

ஆனால்

அதற்குள்ளாக

தடை இல்லை என்பதற்காக சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்தால் நடப்பதே வேறு 

என்ற மிரட்டலை விடுத்திருப்பது

காங்கிரஸ் கட்சியின் ரமேஷ் சென்னித்தலா.

எந்த காலத்திலும் அக்கட்சி உருப்படப் போவதில்லை...

Thursday, November 14, 2019

நேருவை நெருங்க முடியாததால் . . .




நேருவிடம் நமக்கும் சில முரண்பாடுகள் உண்டு.  ஆனாலும் இந்தியாவின் முக்கியமான பிரதமர் அவர், பாராட்டப்பட வேண்டிய தலைவர் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

சங்கிகள் அவரை ஏன் வெறுக்கிறார்கள்?

ஏனென்றால் அவர்களுக்கு, குறிப்பாக மோடிக்கு

நேருவின் அறிவாற்றல் கிடையாது.
நேருவின் தொலைநோக்குப் பார்வை கிடையாது.
நேருவின் பன்முகத்தன்மை கிடையாது.
நேருவின் ஆளுமைத் திறன் கிடையாது.
நேருவைப் போன்ற தியாக வரலாறு கிடையாது.
நேருவைப் போல சிறைவாசம் தேசத்திற்காக அனுபவித்தது கிடையாது.
நேருவைப் போன்ற வாசிப்பு கிடையாது.
நேருவைப் போல எழுத்தாற்றலோ, சுயமான பேச்சாற்றலோ கிடையாது. 
நேரு உருவாக்கியது போல எல்.ஐ.சி, பி.ஹெச்.இ.எல், ஐ.எஸ்.ஆர்.ஓ போன்ற சாதனை நிறுவனங்கள் எதையும் அவர்களால் உருவாக்க முடியவில்லை. 

நேருவின் மதச்சார்பின்மைக் கொள்கையோ அவர்களுக்கு எட்டிக்காயாய் கசக்கும். இந்தியாவை இன்னமும் அவர்கள் நினைத்தது போல மாற்ற முடியாததற்கு நேரு அமைத்த அடித்தளம் ஒரு காரணம் என்பதுதான் அவர்களுக்கு எரிச்சலாக இருக்கிறது.

என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் மோடியால் என்றைக்கும் நேருவின் அருகில் அல்ல, நேருவின் நிழல் அருகே கூட நெருங்க முடியாது.

அதனால்தான் நேருவை இழிவு படுத்து தங்கள் அரிப்பை தீர்த்துக் கொள்கிறார்கள்.

சங்கிகள் யாரையாவது இழிவு படுத்தினால் நாம் கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம்.

அவர் ஒரு சிறந்த மனிதர் என்று . . .

இனியொரு ஃபாத்திமா இறக்கக்கூடாது . . .

சென்னை ஐ.ஐ.டி யில்ஃபாத்திமா லத்தீஃப் என்ற பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அப்பட்டமான இஸ்லாமிய வெறுப்பில் அப்பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய சுதர்சன் பத்மநாபன் என்ற பொறுக்கிப் பேராசியர் கைது செய்யப்பட வேண்டும்.

இப்படிப்பட்டப் போக்கு சமீப காலங்களில் அதிகரிக்க என்ன காரணம் என்று ஆராய வேண்டும்.

வெறுப்புணர்வையும் பகைமையையும் வளர்த்தெடுப்பதே இன்றைய ஆட்சியாளர்களின் தலையாய பணியாக இருக்கும் போது உச்ச நீதிமன்றம் உட்பட அனைத்து அதிகார மையங்களும் அதற்கு ஏற்றார் போல இசைந்தாடுகிற போது சுதர்சன் பத்மநாபன் போன்றவர்களின் ஆட்டம் அதிகமாகத்தான் இருக்கும்.




ஐஐடி மெட்ராஸில் இஸ்லாமிய வெறுப்பினால் நிறுவன படுகொலை செய்யப்பட்ட ஃபாத்திமா லத்தீஃப் தாயார் ஊடகங்களிடம் பேசிய மலையாள பேட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பு.

"எங்களுக்கு பெண் பிள்ளையை கல்விக்கூடத்திற்கு வெளியூருக்கு அனுப்புவதற்கு பயமாக இருந்தது. நாட்டில் நிலவிவரும் மதவெறுப்பின் காரணமாக எனது மகளை முக்காடு(சால்)அணிவதற்கு கூட வேண்டாமென மறுத்துவிட்டோம். எங்கே முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம். நாங்கள் என்ன செய்ய பெயர் ஃபாத்திமா லத்தீஃப் ஆகிவிட்டதே. எல்லா பிள்ளைகளைப் போல சாதாரணமாக உடை அணிந்துகொள் என்று வலியுறுத்தினோம். ஏனெனில் நாட்டில் நிலவும் சூழல் அப்படிப்பட்டது.

முதலில் அவளுக்கு பனாரஸில் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது. ஆனால் வட மாநிலங்களில் நிலவும் கும்பல் படுகொலையை நினைத்து நாங்கள் அஞ்சினோம். வேண்டாம் மகளே என நான் மறுத்தேன். அம்மா நான் விமானத்தில் அல்லவா போகப் போகிறேன் ஏன் கவலை என்றாள். வேண்டாம் மகளே.., விமானத்தில் போனாலும் சாலையிலும் நாம் நடக்க வேண்டியிருக்கும். சாலைகளில் சர்வசாதரணமாக கும்பல் படுகொலை(Mob Lynching) நடக்கும் தேசமிது வேண்டாம் மகளே என நான் பலவந்தமாக மறுத்தேன். அதன்பின் தான் மெட்ராஸ் ஐஐடி யில் படிக்க அனுப்பினோம்.

ஐஐடி யில் என் மகளுக்கு தொல்லைகள் தரப்பட்டிருக்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இன்டெர்னல் மதிப்பெண்ணை குறித்து பேராசிரியரிடத்தில் எனது மகள் விவாவதம் செய்தது அவருக்கு பிடிக்கவில்லை. நவீன கால பிள்ளைகளைப் போன்று நண்பர்களோடு ஊர் சுற்றுவது போன்ற எந்த செயலிலும் எனது மகள் பங்கெடுத்தது இல்லை. படிப்பில் நல்ல ஆர்வத்தோடு இருந்தவள். வேண்டுமெனில் ஐஐடி வளாகத்தில் விசாரித்து கொள்ளலாம். எனது மகளுக்கு தெரிந்த விடயமெல்லாம் வகுப்பறை, விடுதி, நூலகம், மற்றும் உணவகம் மட்டும்தான். இதைத்தவிர வேறெங்கும் அவள் சென்றதில்லை.

பேராசியர் சுதர்சன் பத்மநாபனின் தொல்லைகள் தாங்காமல் தான் அவள் இறந்துபோயிருக்கிறாள். அவளுக்கு முஸ்லிம் நண்பர்களும் ஐஐடி யில் குறைவானவர்களே. இந்தியாவின் சூழல் மாறிவருகிற காரணத்தினால் தமிழ்நாடெனில் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பித்தான் நாங்கள் ஐஐடி மெட்ராஸில் படிக்க அனுப்பினோம்.

சுதர்சன் பத்மனாபன்தான் எனது மகளை இல்லாமல் ஆக்கியது. முதலமைச்சரை சந்தித்தோம். இனியொரு ஃபாத்திமா சாகமாட்டாள் அதற்கான எல்லா நடவடிக்கைகளும் தாங்கள் எடுப்பதாக அவர் உத்தரவாதம் அளித்தார்.


அடுத்த செமஸ்டருக்கு படிப்பதற்கான புத்தகங்களை இப்பொழுது ஆன்லைனில் ஆர்டர் செய்து எனக்கு தகவல் தந்தாள். மூன்றாவது செமஸ்டரில் இருக்கும் இருக்கும் பொருளாதார கணிதம் கொஞ்சம் கடினமானது எனவே நான் இப்பொழுதிருந்தே டியூசன் செல்ல வேண்டுமென திட்டமிடும் ஒரு பெண் பிள்ளை இப்படி சாவதற்கு விருப்பபடுமா..?

சுடிதார் பேண்டின் கயிறினை கட்டத்தெரியாத பெண் எனது மகள். காரணம் அது அவளை இறுக்கி வலியை உண்டாக்கும் எனச்சொல்வாள். 18வயதான பின்னும் அவளுக்கு அதனை இறுக்கமாக கட்டத்தெரியாத காரணத்தால் அவளுக்கு லெங்கின்சும், ஜீன்சும் வாங்கி கொடுத்தோம். அவள் தூக்குக் கயிறை நெரிப்பதை எப்படி எதிர்கொண்டாள் என்று தெரியவில்லையே..? அவளா இப்படி செய்து கொண்டாள்..?

ஐஐடியில் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு தொல்லைகள் தரப்படுகின்றன. கடந்து வருடம் 5நபர்கள் தொல்லை தாங்காமல் விலகி சென்றுவிட்டனர். நாங்கள் உயர் நீதிமன்றமானாலும், உச்சநீதிமன்றமானாலும் சென்று என் மகளுக்கு நீதியை பெற்றே தீருவோம். இல்லையேல் நாங்கள் வாழ்வதற்கு அர்த்தமே இல்லை.

இனியொரு ஃபாத்திமாவை நாங்கள் இழக்க தயாரில்லை..

Wednesday, November 13, 2019

அவர்களும் ரௌடிக்கட்சி என்பதால் . . .



கோவாவில் பாஜக பெரும்பான்மை பெறவில்லை. ஆனாலும் அவர்கள்தான் அரசு அனுப்பினார்கள். காரணம் குதிரை பேரம்.

பெரும்பான்மை இல்லாத காரணத்தால் கர்னாடகாவில் யெட்டீ பதவி விலகினார். குமாரசாமி முதல்வர். அந்த ஆட்சியைக் கவிழ்த்து யெட்டீ மீண்டும் முதல்வரானார்.

பீகாரில் நிதீஷ், லாலு, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. லாலுவையும் காங்கிரஸையும் துரத்தி விட்டு நிதீஷோடு ஒட்டிக் கொண்டு ஆட்சியில் இணைந்தது பாஜக.

மணிப்பூர், அருணாசலப்பிரதேசம் ஆகிய இடங்களிலும் குதிரை பேரம் நடத்தித்தான் பாஜக ஆட்சிக்கு வந்தது.

சமீபத்தில் ஹரியானாவில் கூட பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனாலும் சௌதாலா கட்சியை இணைத்துக் கொண்டு அரசு அமைத்தது.

அப்படி இருந்தும் மகாராஷ்டிராவில் அதனால் ஏன் ஆட்சியமைக்க முடியவில்லை.

ஒரே ஒரு காரணம்தான். . .

சிவசேனாவும் பாஜக போலவே ஒரு ரௌடிக் கட்சிதான். அவர்களோடு மோதும் தைரியம் பாஜகவிற்கு இல்லை.

ஆனாலும் அவர்கள் ஆட்சியமைக்கும் ஆசையை கைவிட மாட்டார்கள்.

சரத் பவார் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் கட்சி எம்.எல்.ஏ க்களை இழுக்க முயற்சிப்பார்கள்.

அதற்கு அவகாசம் வேண்டுமென்பதற்காகவே ஆளுனர் ஆட்சி . . .

சீ.சீ.சாமியார் ப்ளான் என்னவோ?


அனைத்து அரசுப் பள்ளிகளையும் தனியார்மயமாக்க வேண்டும் என்று திருவாளர் சீ.சீ.ரவிசங்கர் சாமியார் திருவாய் மலர்ந்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்கள்தான் நக்ஸலைட்டுகளாக மாறுகிறார்களாம். தனியார் பள்ளி மாணவர்கள் அடக்க ஒடுக்கமான ஒழுக்கமானவர்களாம்.

எத்தனை மாணவர்களை ஆராய்ச்சி செய்து சீ.சீ.சாமியார் இதனை கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை.

ஆனால் இப்படி சொல்வதன் பின்னணியில் ஏதோ மர்மம் உள்ளது. என்னமோ திட்டம் இருக்கு.

ஏற்கனவே இந்த கேடு கெட்ட அரசு கொண்டு  வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை கோடிக்கணக்கான ஏழை மாணவர்களின் கல்வியை பறிக்கப் போகிறது.

இந்த போலி சொல்வது போல அரசுப்பள்ளிகளை தனியார்மயமாக்கி விட்டால் ஏழைகளுக்கு கல்வி இல்லை என்ற நிலை வந்து மனுதர்மம் நிலை நாட்டப்படும்.

அது மட்டுமல்ல

அரசுப்பள்ளிகளின் நிலம், கட்டிடம், மைதானங்கள் இவற்றையெல்லாமும் ஆட்டையைப் போட்டு விடலாம் அல்லவா!

ஆமாம்

யுமுனையையே முடக்கிய கிரிமினல் அல்லவா இவன்!
அதற்கு ராணுவத்தை கூலிப்படையாக அனுப்பிய கிரிமினல் அரசல்லவா இது?