Wednesday, November 13, 2019

அவர்களும் ரௌடிக்கட்சி என்பதால் . . .



கோவாவில் பாஜக பெரும்பான்மை பெறவில்லை. ஆனாலும் அவர்கள்தான் அரசு அனுப்பினார்கள். காரணம் குதிரை பேரம்.

பெரும்பான்மை இல்லாத காரணத்தால் கர்னாடகாவில் யெட்டீ பதவி விலகினார். குமாரசாமி முதல்வர். அந்த ஆட்சியைக் கவிழ்த்து யெட்டீ மீண்டும் முதல்வரானார்.

பீகாரில் நிதீஷ், லாலு, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. லாலுவையும் காங்கிரஸையும் துரத்தி விட்டு நிதீஷோடு ஒட்டிக் கொண்டு ஆட்சியில் இணைந்தது பாஜக.

மணிப்பூர், அருணாசலப்பிரதேசம் ஆகிய இடங்களிலும் குதிரை பேரம் நடத்தித்தான் பாஜக ஆட்சிக்கு வந்தது.

சமீபத்தில் ஹரியானாவில் கூட பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனாலும் சௌதாலா கட்சியை இணைத்துக் கொண்டு அரசு அமைத்தது.

அப்படி இருந்தும் மகாராஷ்டிராவில் அதனால் ஏன் ஆட்சியமைக்க முடியவில்லை.

ஒரே ஒரு காரணம்தான். . .

சிவசேனாவும் பாஜக போலவே ஒரு ரௌடிக் கட்சிதான். அவர்களோடு மோதும் தைரியம் பாஜகவிற்கு இல்லை.

ஆனாலும் அவர்கள் ஆட்சியமைக்கும் ஆசையை கைவிட மாட்டார்கள்.

சரத் பவார் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் கட்சி எம்.எல்.ஏ க்களை இழுக்க முயற்சிப்பார்கள்.

அதற்கு அவகாசம் வேண்டுமென்பதற்காகவே ஆளுனர் ஆட்சி . . .

No comments:

Post a Comment