மோடி என்ன அவ்ளோ பிஸியா?
விராத்
கோலி சவால் விட்டால் உடற்பயிற்சி செய்து வீடியோ போட நேரம் இருக்கு.
பிரியங்கா
சோப்ரா, கௌதமி போன்ற திரைப்பட பிரபலங்களோடு பேசுவதற்கு நேரமிருக்கு.
வருடத்தின்
பெரும்பாலான நாட்களை வெளி நாட்டு பயணங்களிலேயே கழிக்க நேரமிருக்கு,
மாங்கி
பாத் பேச நேரமிருக்கு
போட்டோவுக்கு
போஸ் கொடுக்க நேரமிருக்கு,
புதுசு
புதுசா துணி வாங்க நேரமிருக்கு
நாடாளுமன்றத்துக்குத்தான்
வர நேரமில்லைன்னு பார்த்தா மோடியால ஒரு முதலமைச்சரை சந்திக்கவும் நேரமில்லையாம்.
ஆமாம்.
ரேஷன்
பொருட்கள் ஒதுக்கீட்டை குறைத்து கேரளாவை வஞ்சிப்பது தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம்
கேட்ட கேரள முதல்வர் தோழர் பிணராயி விஜயன் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டது.
மக்கள்
பிரச்சினைக்காக சந்திக்க வரும் ஒரு மாநில முதல்வரை பார்க்க மறுக்கும் ஒரு பிரதமரை இந்தியா
இதுவரை கண்டதுண்டா?
அப்படி
மாநில முதல்வரைக்கூட சந்திக்க முடியாமல், மோடி அப்படி என்ன கிழித்துக் கொண்டிருக்கிறார்?









