Monday, February 3, 2025

சிகண்டி - மோடி - டுபாக்கூர்- முடியல

 


நேற்று மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு சிகண்டி சங்கியுடன் நடத்திய உரையாடல் கீழே . . .

மோடியைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லவும் என்று அந்த சிகண்டி கேட்டதற்கு அளித்த பதிலில் தொடங்கியது உரையாடல்.





இது செம காமெடி

 


கீழேயுள்ள பதிவை படியுங்கள்.

நீங்களும் என்னை மாதிரி சிரிப்பீர்கள்.



Sunday, February 2, 2025

உணர்ச்சிகளை தூண்டுவதே காவிக்கயவர்கள்தானே!

 


விமான நிலையத்திற்காக பரந்தூரில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை தொடர்பாக “அரசியலுக்காக மக்களின் உணர்ச்சிகளை தூண்டுபவர்களை மக்கள் நம்பக்கூடாது” என்று தவெக விஜய்க்கு ஆட்டுக்காரன் அறிவுரை சொல்லியுள்ளான.


 
அடப்பாவி ஆட்டுக்காரா! இப்படி சொல்ல உனக்கு வெட்கமே கிடையாதா?

 உன் பாஜக கட்சி, அதன் குரு பீடம் ஆர்.எஸ்.எஸ் ம் அரசியல் நடத்துவதே மக்களிடம் மத உணர்வை, மத வெறியைத் தூண்டித்தானே! உங்கள் அரசியலுக்காக எத்தனை பொய்களை பேசுகிறீர்கள்! மாற்று மதத்தவர்களை எப்படியெல்லாம் எதிரிகளாக நிறுத்துகிறீர்கள்?

 இப்படிப்பட்ட கீழ்த்தரமான அரசியல் செய்யும் காவிக்கயவர்களுக்கு அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்யும் அருகதை இருக்கிறதா?

 நீ சொல்வதை வைத்து பார்க்கும் போது மக்கள் உன்னைத்தான், உன் கட்சியைத்தான், பெரும் டுபாக்கூர் மோடியைத்தான்  நம்பக்கூடாது என்பதை நீயே சொல்லி விட்டாய்.

பிகு: எழுதி ஒரு வாரமாச்சு . . .

12 லட்சம் என்று ஏமாற்றாதீர்

 


பொதுவாகவே பட்ஜெட் என்பது  ஒரு ஏமாற்று வேலைதான். அதனால்தான் பட்ஜெட் தயாரிப்பின் முதல் சடங்காக "அல்வா தயாரிப்பது" என்று வைத்துள்ளார்கள். 

இந்த வருடம் 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி இல்லை என்ற மோசடியான தோற்றம் தரப்பட்டுள்ளது.

நாம் வாங்கும் ஊதியத்தில் 12 லட்சம் ரூபாய் வரை வரி கிடையாதோ, அதற்கு மேல் வாங்கும் தொகைக்குத்தான் வரியோ என்று அப்பாவித்தனமாக நினைத்தவர்கள் சிலர்.

ஆனால் நிர்மலா சீத்தாராமன் ஒன்று அவ்வளவு நல்லவர் கிடையாது.

12 லட்சம் ரூபாய் ஊதியம் வாங்குபவர்களுக்குத்தான் வரி கிடையாது. ஸ்டாண்டர்ட் டிடெக்சன் என்று அளிக்கப்படும் 75,000 யும் சேர்த்து அதற்கு மேல் ஊதியம் வாங்கினால் கண்டிப்பாக வரி உண்டு.

அதனால் வேண்டுமானால் ஒன்று செய்யலாம். 

அரசிடமோ நிர்வாகத்திடமோ சொல்லி மாத ஊதியத்தை ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் உயர்த்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளலாம்.

ஊதிய உயர்வு கொடுக்கத்தான் நிர்வாகத்திற்கு பிடிக்காது. அதனால் இந்த கோரிக்கை மகிழ்ச்சியோடு ஏற்கப்படும்.

அதனால் வருமான வரி பிடித்தத்தை தவிர்த்து விட்டதாக மகிழ்ச்சி அடைகிறீர்களா?

அப்படியெல்லாம் அவசரப்பட்டு மகிழ்ச்சியடையாதீர்கள்.

முன்னமே சொன்னது போல நிர்மலா அம்மையார் ஒன்றும் அவ்வளவு நல்லவரில்லை.

ஜி.எஸ்.டி யை ஏற்றி அந்த பணத்தை பறித்து விடுவார்.

உங்காளுங்களே சொல்றாங்க ஆட்டுத்தாடி ரெவி

 போன வாரம் காட்பாடி ரயில் நிலையத்தில் எடுத்த புகைப்படம் கீழே உள்ளது.

 


மகாத்மா காந்தியால் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று உளறிய ஆட்டுத்தாடி அறிவு கெட்ட ஆரெஸெஸ் ரெவிக்கு இரண்டாவது வரி சமர்ப்பணம்.

 

உங்க மோடி தலைமையிலான ரயில்வே அமைச்சகத்தின் சார்பிலேயே காந்திதான் அன்னை இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார் என்று சொல்லியிருக்காங்க.

 

நீ இப்போ என்ன செய்வே? அஸ்வின் வைஷ்ணவை மாத்த சொல்லுவியா? இல்லை நாக்கை பிடுங்கிக்கிட்டு செத்துடுவியா?

Saturday, February 1, 2025

இணையற்ற செயல் வீரரை இழந்தோம்

 


டி.டி என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுகிற எங்கள்  வேலூர் கோட்டச்சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர் தோழர் டி.தேவராஜ் அவர்களின் மறைவுச்செய்தி இன்றைய நாளை துயரமாக்கியது. 

1993 ல் எல்.ஐ.சி யில் பணியில் சேர்ந்த தோழர் அவர். எளிய குடும்பப் பின்னணியைச் சேர்ந்த தோழர் சங்கத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது அலுவலக வாசலில் அமர்ந்து அலுவலகம் வருபவர்களை "இன்று வேலை நிறுத்தம்" என்று சொல்லி திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார். வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத ஒருவர் அவரை நக்கலாக "நீ என்ன வாட்ச்மேனா"  என்று கேட்க, "ஆமாம். எல்.ஐ.சி யை பொதுத்துறையாய் பாதுகாக்கும் வாட்ச்மேன்" என்று தோழர் தேவராஜ் சூடாக திருப்பி பதியளிக்க கேள்வி கேட்டவர் உள்ளே ஓடிவிட்டார்.



கோட்ட அலுவலகக் கிளையின் உதவி செயலாளர், செயலாளர்  என்று பணியாற்றிய தோழர் தேவராஜ், 2011 ல் சிதம்பரத்தில் நடைபெற்ற கோட்ட மாநாட்டில் கோட்ட துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் தேவராஜ் கடந்த 2024 ம் வருடம் வரை அந்த பொறுப்பில் செயல்பட்டார்.

தோழர் தேவராஜ் சிறந்த செயல் வீரர். அவரிடம் கொடுக்கப்படும் பணி எதுவானாலும்  செம்மையாக செய்து முடிப்பார். பயணங்களில் உடன் இருப்பார். கொரோனா காலம் வரை தவறாமல் ஒவ்வொரு வருடமும் வெண்மணி பயணத்தில் கலந்து கொண்டவர். இடதுசாரி சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர். இளம் வயதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கப் பொறுப்பிலும் இருந்துள்ளார். 

2022 ல் தென் மண்டல மாநாட்டை வேலூரில் நடத்திய போது விளம்பரக் குழு அமைப்பாளராக அவர் ஆற்றிய பணி மனதில் நிலைத்துள்ளது. காவல் நிலையத்துக்கு அனுமதிகளுக்காக சளைக்காமல் சென்று வந்தார். பேரவைக் கூட்டங்களில் பேச எப்போதுமே தன்னை தயார்ப்படுத்திக் கொள்வார்.

வெளிப்படையாகும் பேசும் குணம் கொண்டவர், கடின உழைப்பாளி. இரண்டாண்டுகளுக்கு முன்பு அவரை கேன்ஸர் எனும் கொடிய நோய் தாக்கியது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்ல தயாராகும் வேளையில் அவரது மன உறுதியை பாதிக்கக்கூடிய விதத்தில் ஒரு ஜென்மம் பேசிய பேச்சு அவரது செவிகளையும் எட்டியது. ஆனால் அது அவரது மன வலிமையை அதிகரித்தது. நான் மீண்டு வருவேன் என்ற மன உறுதியோடு சிகிச்சைக்கு சென்றார்.

மூன்று நான்கு மாதங்களிலேயே மீண்டு மீண்டும் அலுவலகம் வந்தார். அவரது பணிகளை வழக்கம் போல செய்யத் தொடங்கினார். 2023 ல் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கோட்ட மாநாட்டில் இரண்டு நாட்களும் முழுமையாக கலந்து கொண்டார். இனி அவர் எப்போதும் போல செயல்படுவார் என்று நம்பிய போது நோய் மீண்டும் அவரை தாக்கி மருந்துகளின் பக்க விளைவுகள் அவரை மிகவும் படுத்த இந்த முறை அவரை நோய் வென்று விட்டது.

உங்கள் பணிகளால், சங்கத்தின் மீதான உங்கள் பற்றுதலால், உங்கள் இனிய அணுகுமுறையால் எப்போதும் எங்களோடு இருப்பீர்கள்.

செவ்வணக்கம் தோழர் டி.டி 

வித்தை காட்டறியா ஆட்டுக்காரா?

 


வெட்டி உதார் வேண்டாம் ஆட்டுக்காரா

 

ஆட்டுக்காரனின் லேட்டஸ்ட் வஜனம் கீழே . . .

 


அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரனின் தொலைபேசி பதிவு விபரங்கள் இருந்தால் அதனை உடனே வெளியிட்டு சம்பந்தப்பட்டவர்களை அம்பலப்படுத்த வேண்டியதுதானே!

 பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடப் போவதாக சொல்லிக் கொண்டே இருக்கும் மோ(ச)டி மஸ்தான் கடைசி வரை இரண்டு பெட்டிகளையும் திறக்கவே மாட்டான்.

 அது போலத்தான் ஆட்டுக்காரனும். ஒரு போதும் அந்த தகவல்களை வெளியிட மாட்டான். எதுக்குடா இந்த வெட்டி உதார்.

ஆமாம், இந்த வீடியோ, ஆடியோ க்களை எல்லாம் உங்கள் கட்சிக்காரர்களை மிரட்டத்தானே எடுத்து வைத்திருப்பாய் ஆட்டுக்காரா? அப்போ ஞானசேகரன் பாஜககாரனா?