Saturday, July 7, 2012

கர்னாடகா உள்ளே- வெளியே ஆட்டம் சூடு பிடிக்குது

 Sadananda Gowda may step down as Karnataka Chief Minister, Jagadish Shettar likely to take over: Sources

காங்கிரஸ் கட்சிக்கு எவ்விதத்திலும் நிகரற்ற கட்சி
தாங்கள்தான் என்பதை ஊழல், மக்கள் விரோத 
பொருளாதாரக் கொள்கைகள், உட்கட்சி மோதல்கள்
ஆகியவற்றில் நிரூபித்து விட்ட பாஜக முதல்வர்
உள்ளே- வெளியே ஆட்டத்திலும் நிரூபித்து விட்டது.

கர்னாடகாவில் சதானந்த  கவுடா வெளியேறி
ஜகதீஷ்  ஷெட்டர் முதல்வராகும் நேரம் வந்து விட்டது.

யெடியூரப்பாவின் ஒரு விசுவாசி போய் அடுத்த
விசுவாசி வந்தாகி விட்டது.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மட்டுமல்ல
பாஜக ஆளும் மாநிலங்களிலும் எந்த முதல்வரும்
ஐந்தாண்டு காலம் பதவியில் இருக்க முடியாது
என்ற நிலை உருவாகி விட்டது.

இனி வித்தியாசமான கட்சி என்று சொல்லிக்
கொள்ள பாஜக விற்கு என்ன பெருமை 
மிஞ்சியுள்ளது?

பாஜக போல சட்டசபையில் ஆபாசப்படம் 
பார்த்தது, அடுத்தவன் மனைவியை தன்
மனைவி என்று சொல்லி வெளி நாட்டுக்கு
கூட்டிச் சென்றது போன்ற அசிங்கமான
வழக்குகளில் சிக்கிய சாதனை இன்னமும்
அக்கட்சிக்கு மட்டுமே உள்ளது!
 

Friday, July 6, 2012

ஆடிட்டர்கள் கோபித்துக் கொள்ள வேண்டாம்.

எனக்கு வந்த மின்னஞ்சல் இது.

ஆடிட்டர்கள் உலகம் இப்படி 
இருப்பதைத்தான்  விரும்புவார்கள்
என்ற தலைப்போடு வந்தது.

செம நக்கல்.
அதிலும் அந்த கடைசி படத்தை
காணத் தவறாதீர்கள்.

ஆடிட்டர் ஒருவரால் பாதிக்கப்பட்ட
ஒரு மனிதர் இப்படி 
பழி வாங்கியுள்ளார் போலும்!








 

Thursday, July 5, 2012

இந்த சுகமே தனிதான்

ஆனந்த விகடனின் இணைப்பிதழான 
என் விகடன் ( புதுவை மண்டலம் )
இன்று எனது வலைப்பக்கம் பற்றி
வெளியிட்டுள்ளது.

நம் எழுத்தை அச்சில் பார்க்கிற போது
கிடைக்கிற மகிழ்ச்சியும் சுகமும்
தனிதான்.

பலரை சென்றடையும் ஒரு ஊடகத்தில்
வெளிவருகின்ற போது கொஞ்சம்
பெருமையாகத்தான் உள்ளது.

ஆனந்த விகடன் இதழிற்கு நன்றி.

இதோ விகடனில் வெளி வந்த
பக்கங்கள்.

எனது வலைப்பக்கத்திற்கு முதலில்
அறிமுகம் கொடுத்த 
தோழர் ஜா.மாதவராஜ் அவர்களுக்கும்
நன்றி.


Wednesday, July 4, 2012

காட்டாட்சியின் காவல்துறை அராஜகம்




மேற்கு வங்கம் எத்திசை வழி நோக்கி சென்று கொண்டிருக்கின்றது, ஜனநாயக, தொழிற்சங்க உரிமைகள் எவ்வாறு நசுக்கப் படுகின்றது, பொய்யும் பித்தலாட்டமும் எப்படி தலை விரித்தாடுகின்றது என்பதன் அடையாளமாக கீழே தரப்பட்டுள்ள எங்களது சங்க சுற்றறிக்கையைப் படியுங்கள்.

அன்றாடம் அலுவலகம் வந்து கொண்டிருக்கும் ஊழியர்கள் தலை மறைவாக உள்ளதாக பொய் சொல்லி அரஸ்ட் வாரண்ட் வாங்கியுள்ள அவல நிலைமையைப் பாருங்கள். பேயரசு ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்தானே நடைமுறையில் இருக்கும்!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காப்பீட்டுக்  கழக  ஊழியர்  சங்கம்
வேலூர் கோட்டம், பதிவு எண் 640/என்.ஏ.டி
சுற்றறிக்கை எண் 28 /2012                           04.07.2012                         
அனைத்து  உறுப்பினர்களுக்கும்,
அன்பார்ந்த தோழர்களே,

கொல்கத்தா மாநகர இன்சூரன்ஸ் ஊழியர்கள் மீது
மேற்கு வங்க அரசு தொடுத்துள்ள பொய் வழக்குகளை கண்டிக்கிறோம்.

மம்தா பானர்ஜி தலைமையில் மேற்கு வங்கத்தில் நடைபெறும் காட்டாட்சியில் நமது பொது இன்சூரன்ஸ் தோழர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய் வழக்குகளைப் பற்றிய அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க சுற்றறிக்கையின் தமிழாக்கத்தை கீழே தந்துள்ளோம். தொழிற்சங்க உரிமைகள் மீதும் ஜனநாயக உரிமைகள் மீதும் மேற்கு வங்க அரசு எப்படி கடுமையான தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றது என்பதற்கு இச்சம்பவம் ஒரு சான்று.
வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள
ஒம் ( எஸ்.ராமன்)
பொதுச்செயலாளர்

28.02.2012  அன்று நடைபெற்ற நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் தேசம் முழுதும் உள்ள உழைக்கும் மக்கள் பங்கேற்றனர். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அறைகூவல்படி  நாடெங்கிலும் உள்ள இன்சூரன்ஸ் ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் மகத்தான முறையில் பங்கேற்றனர். கொல்கத்தாவில் எல்.ஐ.சி மற்றும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தினர்.

வேலை நிறுத்த நாளன்று, கொல்கத்தாவில் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனியின்  அலுவலகங்கள் அமைந்திருக்கிற ரூபி கட்டிடத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய செயற்குழு உறுப்பினரான தோழர் பிரதீப் பஸக், மேற்கு வங்க மாநில பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவரான தோழர் தனஞ்சய் பானர்ஜி ஆகியோர் தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்தனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட  ஊழியர்கள் மற்றவர்களை வேலைநிறுத்ததில் பங்கேற்குமாறு அமைதியான முறையில் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே வந்த காவல்துறை நமது தோழர்களோடு கடுமையான விவாதத்தில் ஈடுபட்டது. இறுதியில் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
2
இந்த நிகழ்வு நடைபெற்றது 28.02.2012 அன்று. சிறிதும் எதிர்பாராத நிகழ்ச்சியாக 27.06.2012 அன்று நமது தோழர்கள் இருவர் மீது மீது காவல்துறை  அரஸ்ட் வாரண்ட் பெற்றிருப்பதாக நமது தோழர்களுக்கு தெரிய வந்தது. பல்வேறு பொய்யான குற்றங்களை சுமத்தி, அவர்கள் தலைமறைவாக இருப்பதாக பொய்யாக ஜோடித்து  அவர்களுக்கு எதிராக அரஸ்ட் வாரண்ட்  பெற்றுள்ளது.

தோழர் பிரதீப் பஸக் ஒரு பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் அவரது வீடு நன்கு அறிமுகமானது. தோழர் தனஞ்சய் பானர்ஜி பணியில் இருக்கும் ஒரு தோழர். அலுவலகப் பணியையும் தொழிற்சங்கப் பணியையும் அன்றாடம் செய்து கொண்டிருப்பவர். இந்த இரு தோழர்களும் காவல்துறை எந்த விசாரணைக்கு அழைத்தாலும் வருவதற்கு தயாராகவே உள்ள தோழர்கள். அவர்களிடம் எந்த விசாரணையும் நடத்த சிறிதும் முயற்சிக்காத காவல்துறை, அவர்கள் தலைமறைவாக உள்ளனர் என்பது உள்ளிட்டு பொய்யான குற்றங்களை சுமத்தியுள்ளது.

வேலை நிறுத்தத்திற்கு  எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிப்படையாகவே விடுத்த மிரட்டலை மீறி, வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஊழியர்களை மிரட்டுவதற்காகவும் அவர்கள் மத்தியில் அச்ச உணர்வை உருவாக்கவுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகின்றது.

மேற்கு வங்கத்தில் இன்றைய சூழலில் இப்படித்தான்  தொழிற்சங்க உரிமைகள் நசுக்கப்படுகின்றன. இந்த தோழர்களை பாதுகாக்க அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

தோழர்கள் இருவருக்கும் பிணை விண்ணப்பிக்கப்பட்டு ஜாமீன் பெறப்பட்டுள்ளது. அவர்கள் மீதான வழக்கினை முறியடிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இவ்விரு தோழர்களும், எவ்வித அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் உறுதியாக உள்ளனர். எவ்வித மிரட்டலையும் சந்திக்கும் உறுதியோடு கொல்கத்தா தோழர்கள் உள்ளனர்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தொழிற்சங்க உரிமைகள் மீதான இத்தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறது. சிரமமான இன்றைய சூழலில் மேற்கு வங்க மாநிலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து தோழர்களுக்கும் துணையாக நிற்கும்.  
தோழமையுள்ள
ஒப்பம் ... கே.வேணுகோபால்
பொதுச்செயலாளர்

Tuesday, July 3, 2012

திருவண்ணாமலை கொலைக்கு போலீஸ்தான் காரணம்.ஜெ வெட்கப்படுவாரா?

நேற்று திருவண்ணாமலையில் ராஜ் மோகன் சந்திரா என்ற
மனித உரிமை ஆர்வலர், காலை ஆறு மணிக்கு தேசிய
நெடுஞ்சாலையில் துடிக்க துடிக்க படுகொலை செய்யப்
பட்டுள்ளார்.

நில ஆக்கிரமிப்பு செய்யும் ஆளும் கட்சி கவுன்ஸிலர்
வெங்கடேசன் என்பவரின் அடாவடியைத் தட்டிக் கேட்டதால்
உயிரை இழந்துள்ளார்.

இதே வெங்கடேசன் என்பவர் கடந்த மாதம் மார்க்சிஸ்ட் 
கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் வீரபத்திரன் மீது
கொலை வெறித் தாக்குதல் நடத்தியவன்.

ஆளும் கட்சி என்பதால் ஜெ வின் காவல்துறை அவனுக்கு
பாதுகாப்பு அளித்தது. எந்த நடவடிக்கையும் எடுக்காததால்
அவன் உல்லாசமாக இருந்தான். இன்று அடுத்த உயிரையும்
எடுத்து விட்டான்.

இன்று ராஜ் மோகன் சந்திரா கொல்லப்பட்டதற்கு அலட்சிய
போலீஸ்தான் காரணம். காவல்துறை கண்காணிப்பாளர்
உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதற்கு ஜெ வெட்கப்படுவாரா?  

Monday, July 2, 2012

ஆட்சியரா ? அமைச்சரா ? அதை செஞ்சது யாருங்க?

வேலூர் நகரத்தில் இரண்டு நாட்கள் முன்பாக 
இரண்டு சுவரொட்டிகள் நகரின் பெரும்பாலான
பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன.

ஒன்று வேலூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை
மாவட்ட கண்காணிப்பாளரை பாராட்டியிருந்தது.

இரண்டாவது சுவரொட்டி அதே விஷயத்திற்காக
சுகாதாரத்துறை  அமைச்சர் திரு விஜயை
பாராட்டி ஒட்டப்பட்டிருந்தது.

விஷயம் ஒன்றுதான்.

வேலூரிலிருந்து காட்பாடி செல்லும் ஒரு சாலை
ஒரு வழியாக மாற்றப்பட்டிருந்தது. அதனால்
மக்களுக்கு ஏராளமான அவஸ்தை.

அது மீண்டும் இப்போது இரு வழிப்பாதையாக
மாற்றப்பட்டு விட்டது.

அதற்காக மாவட்ட ஆட்சியரைப் பாராட்டி
ஒரு சுவரொட்டி, அமைச்சரைப் பாராட்டி
இன்னொரு சுவரொட்டி.

இந்த முடிவு அந்தப் பகுதி மக்களுக்கு மிகவும்
பலனளிக்கும் முடிவு. அதை அறுவடை செய்ய
அந்த பகுதி முன்னாள் கவுன்சிலர் ஆசைப்
பட்டதால் ஆட்சியரைப் பாராட்டி அவர்
சுவரொட்டி அடித்தார்.

அமைச்சருக்கு மட்டும் அறுவடை செய்யும்
ஆசை இல்லாமல் இருக்குமா? எனவே 
தோட்டப்பாளையம் பகுதி மக்கள் சார்பாக
அமைச்சரைப் பாராட்டி இன்னொரு சுவரொட்டி.

இந்த முடிவை உண்மையிலேயே எடுத்தது
யார்? குழம்பிக் கிடக்கும் வேலூர் மக்களுக்கு
அமைச்சரோ, ஆட்சியரோ யாராவது 
பதில் சொல்லுங்களேன்!

Sunday, July 1, 2012

அதிகம் அறியப் படாத, அழகு கொஞ்சும் ஒரு அற்புதப் பிரதேசம்



கீழே உள்ள புகைப்படங்களை பார்க்கவும். இயற்கையின் எழில் கொஞ்சும்  இந்த பகுதி, சீனாவின் கும்னிங்  மாநிலம். பல்வேறு கனிம வளங்கள் நிரம்பியதால் மண் பல்வேறு வண்ணங்கள் அடங்கியுள்ளதாக மாறியுள்ளது. அழகிற்கு மெருகூட்ட விவசாயிகள் அதற்கேற்றார்போல காய்கறிகளை பயிரிட்டுள்ளனர்.

இவ்வளவு அழகான பகுதி சீனாவிலேயே பிரபலமான ஒரு சுற்றுலாத் தளம் அல்ல என்பது  வியப்பளிக்கும் செய்தி.

உலகில் இது போல அறியப்படாத அற்புதங்கள் எத்தனை உள்ளனவோ?