2015 வருடம் முதல் வாசிப்புக் கணக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன். கடந்த வருட வாசிப்புப் பட்டியல் கீழே உள்ளது.
59 நூல்கள், 10391 பக்கங்கள்.
கடந்த மூன்று வருடங்களில் வாசித்த பக்கங்கள் 8000 ஐ தாண்டவில்லை. அதனை ஒப்பிடுகையில் இந்த வருடம் முன்னேற்றம்தான்.
2016 ம் வருடம்தான் இதுவரை வாசிப்பின் உச்சமாக 116 நூல்கள், 18,845 பக்கங்கள் என்று அமைந்திருந்தது. அந்த அளவை மீண்டும் எப்போது தொடுவேன் என்று தெரியவில்லை. இவ்வருடம் ஜூலையில் பணி நிறைவு செய்வதால் இந்த ஆண்டு கூட சாத்தியப்படலாம். எதிர்காலம் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்களை யாரறிவார்?
அப்புறம் பொறாமை என்று தலைப்பில் உள்ளது என்று கேட்கிறீர்கள் அல்லவா?
வாசிப்பை பதிவு செய்து வெளியிடும் பழக்கம் எங்கள் மதுரை கோட்டத் தோழரும் எழுத்தாளரும், பொழிபெயர்ப்பாளரும் நேற்று முன்தினம் பணியிலிருந்து ஓய்வு பெற்றவருமான தோழர் ச.சுப்பாராவ் அவர்களிடமிருந்துதான் வந்தது.
அவர் கடந்த ஆண்டு வாசித்த நூல்கள் 104, பக்கங்கள் 22,142.
பிகு: மேலே படத்தில் உள்ள நூல்கள் பட்டியலில் இருக்காது. ஆமாம். த,மு,எ,க,ச, காட்பாடி கிளை மூன்று நாட்கள் நடத்திய புத்தகக் கண்காட்சியில் 31.12.2024 அன்று வாங்கியவை அவை. அவற்றுடன்தான் இந்த வருட வாசிப்பு தொடங்கியுள்ளது.