Thursday, January 9, 2025

செகாவின் நாய்க்கதையும் பொன்.மாணிக்கவேலும்

 


ஆண்டன் செகாவ் எழுதிய ஒரு கதையை ஒரு கலை இரவில் தோழர் பாரதி கிருஷ்ணகுமார் பேசிக் கேட்டிருக்கிறேன்.

நள்ளிரவு நேரத்தில் பூட்டிய வீட்டிற்குள் நுழைய ஒரு திருடன் வருகிறான். வீட்டிற்குள் ஒரு நாய் இருப்பதைப் பார்த்து தயங்கி அங்கேயே நிற்கிறான். அவனைப் பார்த்தபடியே நாயும் நிற்கிறது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் திருடனும் நிற்கிறான். நாய் அவனை பார்த்தபடியே நிற்கிறதே தவிர அவனிடத்தில் வரவோ இல்லை குரைக்கவோ இல்லை. ஒரு கட்டத்தில் திருடன் தன்னிடமிருந்த பிஸ்கட்டை நாய்க்கு போட அப்போது நாய் அவனை கடித்து துரத்தி விடுகிறது.

ஒரு மணி நேரம் என்னை ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்த்து விட்டு நான் பிஸ்கட்டை போட்டவுடன் ஏன் கடித்தாய் என்று திருடன் நாயிடம் கேட்கிறான்.

நீ சும்மா இருந்த நேரம் உன்னை இந்த வீட்டின் விருந்தாளியாகவோ அல்லது வழி மாறிப் போன வழிப்போக்கனாகவோ இருக்கலாம் என்று நினைத்து நானும் சும்மா இருந்தேன். நீ எப்போது பிஸ்கட்டை போட்டாயோ, அப்போதுதான்  நீ திருடன் என்று புரிந்து கொண்டேன் என்று நாய் சொன்னது.

பொன்.மாணிக்கவேல் ஒரு கிறுக்கு அதிகாரி என்றுதான் இத்தனை நாள் நினைத்திருந்தேன். 





எப்போது அவர் அண்ணாமலை முழு மெஜாரிட்டியுடன் முதல்வராக வேண்டும் என்று சொன்னாரோ, அவரும் ஆட்டுக்காரன் மாதிரி ஒரு டுபாக்கூர் போலீஸ் அதிகாரி என்று புரிந்து கொண்டேன். சி.பி.ஐ வழக்கிலிருந்து தப்பிக்க செய்யும் ஏற்பாடு என்றும் புரிந்தது.

 

No comments:

Post a Comment