Friday, November 29, 2024

பைத்தியக்காரனுங்க – வேறென்ன சொல்ல

 


ஒரு சங்கியின் பதிவையும் அதற்கு இன்னொரு சங்கியின் பின்னூட்டத்தையும் பார்த்தேன்.


 

மத வெறி தலைக்கேறிய முட்டாள் பைத்தியங்க:ள் என்பதைத் தவிர வேறென்ன சொல்வது!

Thursday, November 28, 2024

ஜட்ஜ் வீட்டம்மாவிற்கு சாய்பாபா தெரியுமா?

 


சங்கிகளின் கூட்டங்களில் கலந்து கொள்ளும் உயர் நீதிமன்ற  நீதிபதி அவர்களின் மனைவி நடிகை கஸ்தூரி அவர்களுக்கு ஆட்டிசம் பாதிப்பு  உள்ள குழந்தை இருப்பதால் அவர்களை கருணையோடு பார்த்து ஜாமீன் தர வேண்டும் என்று பரிந்துரை கொடுத்துள்ளார். அவர் ஏதோ மாற்றுத் திறனாளி அமைப்பின் அகில இந்திய துணைத்தலைவராம்.

 


நடிகை கஸ்தூரி மீது எனக்கு எப்போதும் கருணையெல்லாம் வராது. அவரது ஆணவம் ஒரு காரணம். திராவிடர்களை ஆபாசமாக, கொச்சையாக கூற சங்கிகள் பயன்படுத்தும் ஒரு கேவலமான வார்த்தையை உருவாக்கியவர் அவர்தான். சிறப்புக் குழந்தையின் தாய் என்று கஸ்தூரிக்கு கருணை காட்டச் சொல்கிற நீதியரசரின் மனைவிக்கு சாய்பாபாவை தெரியுமா?

 சமீபத்தில் மறைந்த பேராசிரியர் சாய்பாபா.



 மோடியை கொலை செய்ய திட்டமிட்டதாக சொல்லப்பட்ட பீமா கோரேகன் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர்களில் அவரும் ஒருவர். பிறந்தது முதல் போலியோவால் பாதிக்கப்பட்டவர்.சக்கர நாற்காலியில் இயங்கிக் கொண்டிருந்தவர். ஏராளமான உடல் உபாதைகள் கொண்டவர். ஆள் தூக்கிச் சட்டமான UAPA சட்டத்தின் படி கைது செய்யப்பட்டாஎ. அவருக்கான மாத்திரைகளை அளிக்ககூட உச்ச  நீதிமன்றத்தில் வழக்கு போட வேண்டியிருந்தது. பல வருடங்கள் சிறையில் சித்திரவதை அனுபவித்த அவர் இறுதியில் அவர் இறந்தே போய் விட்டார்.

 மாற்றுத்திறனாளியான சாய்பாபாவிற்கு கருணை காண்பிக்கும் படி நீதியரசரின் மனைவி எப்போதாவது அறிக்கை   வெளியிட்டுள்ளாரா?  குறைந்தபட்சம் கடிதமாவது எழுதியிருப்பாரா>

 கஸ்தூரி மீது மட்டும் என்ன கருணை?

 சிறப்புக்குழந்தையின் தாய் என்பதெல்லாம்  சும்மா சொல்லப்படும் ஒரு சாக்கு.

 சங்கி என்பதுதான் ஒரே காரணம்.

சூர்யா - நீங்கள் வொர்த்தில்லை சங்கிகளே!

 


சூர்யாவும்  ஜோதிகாவும் நேற்று திருப்பதி கோயிலுக்கு போய் விட்டார்களாம். எட்டு மணிக்கு பாடத்துவங்கும் வெள்ளியங்கிரி போல சங்கிகளும் ஆரம்பித்து விட்டார்கள்.

கங்குவா தோல்வியால் அடிபட்டதால் புத்தி வந்து சனாதனத்திடம் அடிபணிந்து விட்டார்கள் என்றும்  கோயிலுக்கு செலவழிக்காதே என்று சொன்னதற்கு ஜோதிகா மன்னிப்பு கேட்காவிட்டால் கங்குவா போல எல்லா படங்களையும் தோல்வியடைய வைப்போம் என்று பீற்றல் பெருமித மிரட்டல் வேறு.

ஒரு பொய்யை திரும்ப திரும்பச் சொல்லி அதை உண்மையாக முயலும் சங்கிகளின் உத்தி இது.

ஜோதிகா சொன்னது என்ன? அந்த காணொளியை நான் முழுமையாக பார்த்தேன்.

“தஞ்சை பெரிய கோயிலுக்குச் சென்றிருந்தேன். அது மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டிருந்தது. மறுநாள் அதே தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பு. மிகவும் மோசமான முறையில் புதர் மண்டிப் போய் பாம்புகள் உலாவும் இடமாக அது இருந்தது. கோயிலை பராமரிப்பதில் காண்பிக்கும் அதே அக்கறையை மருத்துவமனையை பராமரிப்பதிலும் காண்பிக்க வேண்டும்.”

இதில் என்ன தவறு உள்ளது?

கோயிலுக்கு போகாதே என்று சொன்னாரா அல்லது கோயிலுக்கு பணம் கொடுக்காதே என்று சொன்னாரா?

ஆனால் சங்கிகள் சொல்லாத ஒன்றை சொன்னதாக மீண்டும் மீண்டும் பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். மோடியை நல்லவர், வல்லவர் என்று சொல்லும் கூட்டத்திடம் நேர்மையை எதிர்பார்க்க முடியுமா என்ன? அவர்கள் சொல்வது பொய்,பொய்யைத் தவிர வேறில்லை.

நாங்கள் கோயிலுக்கு போக மாட்டோம் என்றோ அல்லது கடவுள் நம்பிக்கை கிடையாது என்றோ எப்போதுமே சொல்லாதவர்கள் கோயிலுக்கு சென்றதை ஏளனம் செய்வது வன்மம் இன்றி வேறில்லை.

நிற்க

கங்குவா சங்கிகளால்தான் தோற்றதா?

படம் வெளிவருவதற்கு முன்பு ஓவர் ஹைப்பை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கொடுத்திருந்தார். வாயை பிளந்து பார்ப்பீர்கள் என்று சூர்யா சொன்னார். எனக்கு சிரிப்புதான் வந்தது.

ஏனென்றால் அஜித்தின் சில மொக்கைப் படங்களையும் ரஜினிகாந்தின் மோசமான மொக்கைப்படமான அண்ணாத்தை யும் இயக்கிய சிறுத்தை சிவா இப்படத்தின் இயக்குனர் என்பதுதான் காரணம்.

அஜித், ரஜினி போல சூர்யாவையும் வச்சு செய்திட்டார் சிவா.

கொடுத்த பில்ட் அப் போல படம் இல்லாததால் கங்குவா தோற்றது.

சரியில்லாத படம் என்பதால் மட்டுமே தோல்வியே தவிர சங்கிகள் காரணமல்ல, அதே போல பாமக வகையறாக்களும் காரணமில்லை. அப்படி அவர்களால் ஒரு படத்தை தோல்வியடையச் செய்ய முடியுமென்றால் வெற்றி பெறச் செய்யவும் முடியுமல்லவா? ஏன் சங்கி, பாமக கருத்தியலை கொண்டு வெளிவந்த மோகன்.ஜி யின் அனைத்து படங்களும் மரண அடி வாங்கியது?

ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய இடத்தில் சங்கிகளோ பாமகவோ இல்லை.

அந்த அளவுக்கு அவர்கள் வொர்த் இல்லை.



பிகு : எட்டு மணிக்கு வெள்ளைச்சாமிதானே பேசுவாரு, இதென்ன வெள்ளியங்கிரி என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். “வைதேகி காத்திருந்தாள்”  வெள்ளைச்சாமி விஜயகாந்த் பாடலை மக்கள் ரசிப்பார்கள். ஆனால் “பூவே உனக்காக” வெள்ளியங்கிரி மீசை முருகேஷ் பாட வாய் திறந்தால் மக்கள் தெறித்து ஓடுவார்கள். அவர் பாடல் போலத்தான் சங்கிகளின் பதிவுகளையும் சகிக்க முடியாது.

Wednesday, November 27, 2024

ஸ்டான் சுவாமி – இறந்தும் துரத்தும் அதிகாரம்

 


ஸ்டான் சுவாமி – 84 வயதில் சிறைக்கு அனுப்பப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளான மனித உரிமை செயற்பாட்டாளர். மோடியை கொலை செய்ய சதி செய்ததாக போலிக் குற்றச்சாட்டிற்கு உள்ளான மனித உரிமை செயற்பாட்டாளர்களில் ஒருவர். அந்த பீமா கோராகன் வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. வழக்கு நடந்தால் பொய்கள் அம்பலமாகி அசிங்கமாகி விடும் என்பதால் இந்த தாமதம். தண்ணீர் குடிப்பதற்கு ஒரு சிப்பர் கொடுப்பதற்குக் கூட உச்ச நீதிமன்றம் வரை வழக்கு போட வேண்டியிருந்தது. சிறைத்தண்டனையின் கொடுமைகள் அவர் உயிரைக் குடித்தது.

 சேலம் அருகே தனியார் நிலத்தில் அவருக்கு நினைவுத்தூண் வைப்பதற்கு தமிழ்நாடு அரசு மறுத்துள்ளது. தாசில்தார், எஸ்.பி, கலெக்டர் ஆகிய அனைவரும் அதற்கு தடை போட்டுள்ளனர். அவருக்கு நக்ஸ்லைட்டுகளுடனும் மாவோயிஸ்டுகளுடனும் தொடர்பு இருந்தது என்று மத்தியரசு சொன்ன அதே பொய்யைச் சொல்லித்தான் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 


ஸ்டான் சுவாமி இறந்தவுடன் அவரது அஸ்தி தமிழகம் முழுதும் கொண்டு வரப்பட்டு அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அஸ்திக் கலசத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய போது “ஸ்டான் சாமி பழங்குடி இன மக்களின் உரிமைகளுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த உயர்ந்த மனிதர்” என்று பாராட்டி பேசியது மட்டுமல்லாமல் மத்தியரசையும் கண்டித்துள்ளார்.

 அந்த உயர்ந்த மனிதருக்கு நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டதை முதல்வர் அறிவாரா? தன்னால் புகழப்பட்ட ஒருவரது நினைவுச்சின்னம் அமைக்க மறுப்பதற்கு அவர் கண்டித்த மத்தியரசு சொன்ன காரணத்தைத்தான் முதல்வருக்கு கீழேயுள்ள அதிகாரிகள் சொல்லியுள்ளனர்  என்பதையும் முதல் அறிவாரா?

 விளிம்பு நிலை மக்களுக்காக பாடுபட்ட ஒருவரை அவர் இறந்த பின்பும் அவதூறு செய்கிறது அதிகார வர்க்கம். இப்படிப்பட்ட அதிகாரிகளாலும் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்ற சில  அமைச்சர்களாலும் அவருக்குத்தான் கெட்ட பெயர்.   இதை உணர்ந்து களையெடுக்காவிட்டால் இழப்பு   அவருக்குத்தான்.

 

ஆட்டுக்காரன் - கொம்பனில்லை, கைப்புள்ளை

 


வா ஆட்டுக்காரா, நானும்தான் வெயிட்டிங்

 ஒரு சங்கியின் பதிவு கீழே உள்ளது.

 


ஆட்டுக்காரன் இல்லாமல்  சங்கிகள் மட்டுமல்ல, நானும் கஷ்டப்பட்டேன்.

 ஆமாம்.

 வலைப்பக்கம் எழுத தொடர்ந்து விஷயதானம் செய்யும் அமுதசுரபிதான் ஆட்டுக்காரன். வெட்டி பந்தா, வெட்டி உதார், சின்னப்புள்ளதனமா சொல்லும் பொய்கள், வாங்கும் பல்புகள் என ஆட்டுக்காரன் இருந்தால் பொழுது போக்கிற்கு பஞ்சமே இருக்காது.  அவர் வந்து விட்டால் கண்டெண்டுக்கு கவலையே கிடையாது. ஒரு நாளைக்கு மூன்று பதிவுகள் எழுதும் அளவிற்கு விஷயம் கிடைக்கும்.

 ஆகவே வெல்கம் பேக் ஆட்டுக்காரன்.

 உங்க ஆளுங்க கிட்ட சொல்லி வையுங்க. உங்களை என்னமோ பெரிய கொம்பன் என்றெல்லாம் பில்ட் அப் கொடுக்கறாங்க. கொம்பன் யானையை அழிவு சக்தியாகத்தான் விவசாயிகள் பார்க்கிறார்கள். உங்க கட்சி அழிவு சக்திதான். அதில் ஒன்றும் சந்தேகமில்லை. ஆனால் உங்களுக்கு கொம்பன் அடைமொழியெல்லாம் ரொம்பவே ஓவர்.

 ஏனென்றால் நீங்கள் வெறும் “கைப்புள்ள”தான்.

Tuesday, November 26, 2024

இந்தியா “மதச்சார்பற்ற, சோஷலிச” க்குடியரசுதான்.

 


நேற்று உச்ச நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை அளித்துள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பிலிருந்து “மதச்சார்பற்ற, சோஷலிச” என்பதை அகற்ற வேண்டும் என்று சுனா சாமி தொடுத்த  வழக்கில் “அதெல்லாம் முடியாது போடா” என்று உச்ச நீதிமன்றம் சொல்லி விட்டது.

அனைத்து மதங்களையும் சமமாக கருத வேண்டும் என்பதால் மதச்சார்பு என்பது பொருத்தமானதே என்று விளக்கமளித்து விட்டார்கள்.

சோஷலிசம் என்றால் அது இடதுசாரி பொருளாதரமோ இல்லை வலதுசாரி பொருளாதாரமோ  கிடையாது. மக்கள் நல அரசு என்று பொருள்.

அதனால் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பில் “மதச்சார்பற்ற, சோஷலிஸ”  என்ற வார்த்தைகள் தொடரும்     என்று சொன்ன நீதிபதிகள் நாற்பத்தி ஐந்துவ் வருடங்களுக்கு பிறகு வழக்கு தொடுப்பதே உள் நோக்கம் கொண்டது என சுனாசாமியையும் கண்டித்துள்ளனர்.

அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என்ற வெறியை மனதுக்குள் வைத்துக் கொண்டு, அரசியலமைப்பு தினம் எனும் நாடகம் நடத்தும் மோடி வகையறாக்களுக்கு சரியான சவுக்கடிதான் இந்த தீர்ப்பு.

கடவுள் அருள் யாருக்கு மோடி?

 


மஹாராஷ்டிர அரசியல் களம் சுவாரஸ்யமாகியுள்ளது.  அதிக இடங்களை வென்றுள்ளதால் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்தான் அடுத்த முதலமைச்சராக வேண்டும் என்று பாஜக சொல்கிறது (ஆர்.எஸ்.எஸ் சொல்கிறதா என்று தெரியவில்லை. சொல்லும் என்றே தோன்றுகிறது). அமலாக்கப்பிரிவின் கடாட்சம் வேண்டும் என்பதால் அஜித் பவார், பட்னாவிஸ் பக்கம் சென்று விட்டார்.

சிவசேனாவை உடைத்து முதல்வரான ஷிண்டேதான் முதல்வராக வேண்டும் என்று அவரது ஆட்கள் சொல்லத்தொடங்கி விட்டார்கள். பீகாரில் நிதீஷ்குமாருக்கு எம்.எல்.ஏ க்கள் குறைவு, அவர் முதல்வராக உள்ளாரே என்று தொடங்கி நல்லவரு, வல்லவரு, இதர இதர இதர வழிபாடுகளுக்கு குறைச்சலே இல்லை.

யார் முதல்வராவார்?

மூன்று பேரும் கிரிமினல்கள், சந்தர்ப்பவாதிகள், அதிகாரத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்கள்.

ஷிண்டேவின் ஆதரவாளர்கள் அவருக்காக மஹாராஷ்டிராவில் உள்ள எல்லா கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்து கொண்டிருக்கிறார்களாம்.

கடவுள் அருள் யாருக்கு மோடி?

உங்கள் கடவுளைச் சொல்கிறேன், நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவந்த் தான். 

Monday, November 25, 2024

சம்பல் – அடுத்த அயோத்தி அராஜகம்

 


அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த கூட்டம், அடுத்து வாரணாசி ஞானவாபி மசூதியையும் மதுராவில் உள்ள மசூதியையும் குறி வைத்தது. ஞானவாபி மசூதிக்குள் இருக்கும் வாட்டர் ஃபவுண்டனை சிவலிங்கம் என்றது. ஆய்வு செய்ய வேண்டும் என்று வழக்கு போட்டது. ஓய்வுக்கு பிந்தைய பதவிக்கான பேரத்தில் ஒரு மாவட்ட நீதிபதி ஓய்வு பெறும் நாளன்று சங்கிகளுக்கு ஆதரவான தீர்ப்பு ஒன்றை அளித்து அடுத்த பதவியை தட்டிக் கொண்டார்.

வாரணாசி. மதுரா வோடு சங்கிகளின்வெறி அடங்கிடவில்லை. இதோ அடுத்த சர்ச்சைக்கு அடி போட்டு விட்டனர்.

மொட்டைச்சாமியாரின் உத்திர பிரதேச மாநிலத்தில் சம்பல் என்ற ஊரில் உள்ள ஐநூறு வருட பழைய மசூதி மீது குறி வைத்துள்ளார்கள், தொடர்ந்து வழிபாடு நடந்து கொண்டிருக்கும் மசூதி அது. வழக்கம் போல கோயில் உள்ள இடத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளது என்று பிரச்சினையை ஆரம்பித்தார்கள்.

வாரணாசி பிரச்சினையில் கேஸ் போட்ட அதே சங்கி இங்கேயும் வழக்கு தொடுக்க ஓய்வை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு நீதிபதி, அடுத்த பணிக்கான நுழைவுத்தேர்வாக தீர்ப்பை எழுதினார். ஆய்வு செய்ய அனுமதி வழங்கினார்.

தீர்ப்பின் பின்னணியில் மொட்டைச்சாமியார் அரசு ஆய்வுக் குழுவை சம்பல் மசூதிக்கு உள்ளே அனுப்ப, அந்த ஊர் மக்கள் அதை எதிர்க்க போலீஸ் தடியடி, துப்பாக்கிச் சூடு  என்று செல்ல மூன்று இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். சம்பால் கலவர பூமியாகி விட்டது. கலவர நகரமாகி விட்டது.

 மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு மிகப் பெரிய அடியை கொடுத்த மாநிலம் உ.பி தான். அடுத்த சட்டப் பெரவைத் தேர்தல்  நெருங்குவதால்       இழந்த செல்வாக்கை மீட்க ஏதாவது   செய்ய வேண்டிய கட்டாயம் மொட்டைச் சாமியாருக்கு உள்ளது. மகாராஷ்டிரா வெற்றிக்கு மொட்டைச்சாமியார் எல்லா இடத்திலும் “இந்துக்கள் பிரிந்தால் வீழ்வோம்” என்ற உசுப்பேற்றும் முழக்கமும் ஒரு காரணம் என்று சங்கிகள் பேசிக் கொள்கிறார்கள்.

 அதனால் சம்பல் பிரச்சினையை கையிலெடுத்து மத உணர்வுகளை தூண்டும் தன் வழக்கமான கீழ்த்தர உத்தியை துவக்கியுள்ளது பாஜக. அதற்கு மூன்று இஸ்லாமிய வாலிபர்கள் களப்பலியாகி உள்ளனர். தேர்தலுக்கு முன்பு இன்னும் எத்தனை பேர் கொல்லப்படுவார்களோ?

Sunday, November 24, 2024

மறை கழண்ட மத்யமர் சங்கிகள்

 


இந்த மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் உள்ள சங்கிகளோடு வாரம் ஒரு மல்லு கட்டுவதே வழக்கமாகி விட்டது.

நேற்று ஒரு பைத்தியக்கார சங்கி போட்ட பதிவு கீழே உள்ளது.

முட்டாள்தனமான இந்த பதிவைப் பார்த்து கடுப்பாகி சூடாக ஒரு பின்னூட்டம் போட்டேன். அதன் தொடர்ச்சியாய் இன்னொரு பின்னூட்டமும் கூட.


முதல் பின்னூட்டம் போட்ட போது முதல் கேட்டகரி சங்கி மாடரேட்டரிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை. இரண்டாவது பதிவில் அவரை இணைத்ததும் சங்கி டென்ஷன் ஆகி விட்டது.


என்ன செஞ்சாரு அவரு?






அஇத்தோடு நிறுத்தவில்லை. மீண்டும் இடை நீக்கம்


இந்த குழுவில் உள்ள சங்கிகள் அனைவருமே மறை கழண்ட மனநிலை பாதிக்கப்பட்டவர்களகவே உள்ளனர். அதில் பிரதானமானவர் முதல் கேட்டகரி சங்கியான மாடரேட்டர்.

இந்த பைத்தியக்கார கும்பலில் இனியும் தொடர்ந்து நேரத்தை விரயம் செய்வதா? இல்லை வெறும் பார்வையாளர்களாக இருந்து அயோக்கிய சங்கிகளின் பொய்/விஷப் பிரச்சாரத்தை கண்டறிந்து அம்பலப்படுத்துவதா?

முடிவெடுக்கும் நேரம் நெருங்கி விட்டது.

நான் வேலூர் எம்.பி. Meta AI காமெடி

 


முகநூலைப் பார்த்தால் ஒரே Meta AI யிடம் தங்களைப் பற்றி கேள்வி கேட்டு அது சொல்லும் பதிலை பதிவு செய்வதுதான்.

ஆசை யாரை விட்டது!

நானும் முயற்சி செய்தேன்.

அது சொன்ன பதிலை பாருங்கள்

இதில் மிகப் பெரிய காமெடி என்னவென்றால் 2009 மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் அதிமுக வெற்றி பெறவே இல்லை. திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் வேட்பாளராக நின்ற எம்.அப்துல்ரஹ்மான் வெற்றி பெற்றார். 

பெயர், கட்சி என்று எதுவுமே சரியில்லை. இந்த நுண்ணறிவை முழுமையாக எதற்கும் நம்ப வேண்டாம் என்றுதான் சொல்ல விழைகிறேன்.

Meta இத்தேர்தல் குறித்த சில நினைவுகளை கிளறி விட்டது.

2009 மக்களவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கைக்கு நுண் பார்வையாளராக சென்றிருந்தேன். நான் அமர்ந்திருந்த மேஜையில் மொத்தம் 18 சுற்றுகளில் முதல் சுற்றில் மட்டும்தான் அதிமுக வேட்பாளர் எல்.கே.எம்.பி வாசு முன்னிலை பெற்றிருந்தார். மற்ற அனைத்து சுற்றுக்களிலும் முஸ்லீம் லீக் வேட்பாளர்தான் முன்னிலை பெற்றார்.

சில மோசடிப்பேர்வழிகள் தேர்தலை பயன்படுத்தி அவரிடமிருந்து லம்பாக ஒரு தொகையை ஆட்டையப் போட்டிருந்தார்கள் என்பதை பின்னர் அறிந்து கொண்டேன். பாவம் அவர்!

பிகு: Meta AI ஐ ஏன் நம்ப வேண்டாம் என்பதற்கு இன்னொரு உதாரணமும் சொல்கிறேன். வாட்ஸப்பில் அறிமுகமான போது அதை கேட்ட கேள்விக்கு அப்போது சொன்ன பதிலும் அதே கேள்விக்கு இப்போது சொன்ன பதிலும் கீழே






Saturday, November 23, 2024

சங்கின்னுதான் தெரியுமே சீமான்

 


தமிழ்நாட்டின் மிகப் பெரிய பொய்யன் யார் என்பதில் ஆட்டுக்காரனோடு துவந்த யுத்தம் நடத்தி வரும் சீமான், தான் சங்கி என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.


பொய் பேசுவதில், பிரிவினையை தூண்டுவதில், மக்களை ஏமாற்றி காசு பறிப்பதில் சங்கிகளின் குணாம்சத்திற்கும் சீமானுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. நேரடி பாஜக சங்கியாக இல்லாமல் தமிழ் தேச வேடம் போட்ட சங்கியாக உள்ளார். அவ்வளவுதான். இப்போது அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அவ்வளவுதான். 

சங்கிகளில் அயோக்கிய சங்கி, அடி முட்டாள் சங்கி என்று இரண்டு வகை உண்டு என்று எப்போதும் நான் எழுதுவேன்.

சீமான் எந்த கேட்டகரி?

"எங்களையெல்லாம் சங்கி என்று சொல்பவர்கள்தான் உண்மையான சங்கி" என்று சொல்வதன் மூலம் தான் அடிமுட்டாள் சங்கியும் கூட என்று சீமான் நிரூபித்துள்ளாஎ. 

அவரின் நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு . . .

 


மகாராஷ்டிராவில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வேளையில் நேற்று அண்ணல் அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார்.

"இரண்டு கூட்டணிகளில் எது வெல்கிறதோ, எதற்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பு உள்ளதோ, அந்த கூட்டணிக்கே என் ஆதரவு"

சுயநலம் காரணமாக ஒரு முடிவெடுத்து விட்டு பின்பு அதற்கு ஆயிரம் கொள்கை விளக்கம் கொடுக்கும் சந்தர்ப்பவாதிகள் சூழ் அரசியல் உலகில் ஜெயிக்கறவங்களுக்கு என் ஆதரவு என்று வெளிப்படையாக சொன்ன பிரகாஷ் அம்பேத்கருக்கு என் வாழ்த்துக்கள். 


Friday, November 22, 2024

மோடிக்கு இந்த மரியாதை போதுமா நாமூ?

 


மோடி நூறு மணி நேரம் வேலை பார்க்கிறாரா?

உழைப்புச் சுரண்டலை வெட்கமில்லாமல் உபதேசிக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி மோடியை வேறு துணைக்கு இழுக்கிறார்.

மோடி ஒரு வாரத்திற்கு நூறு மணி நேரம் உழைக்கிறாராம். அது போல ஒவ்வொருவரும் நூறு மணி நேரம் உழைப்பதுதான் மோடிக்கு செய்யும் மரியாதையாம்.

அப்படி என்ன மோடி நூறு மணி நேரம் உழைத்து கிழித்து விட்டார்?

தேர்தல் வந்து விட்டால் மட்டும் மோடி ரொம்பவே பிஸியாகி விடுவார். பறந்து பறந்து பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு பொய்யையும் மத வெறி விஷத்தையும் கலந்து கலந்து அடிச்சு விடுவார். அதை அவர் பிரதமராக வேலை பார்ப்பது என்று சொல்ல முடியாது.

அடுத்து வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டே இருப்பார். அந்த நாட்டு தலைவர்களோடு விதம் விதமான உடைகளில் போட்டோ செஷன் நடத்திக் கொண்டிருப்பார். அவற்றை எல்லாம் வேலை என்றா சொல்வீர்கள்!

மோடி உடை மாற்றுவதை  ஒரு நாளில் நான்கு முறை செய்வார். அதெல்லாம் வேலை என்ற கணக்கில் வருமா என்ன?

ட்விட்டரைப் பார்த்தால் ஒரு நாளைக்கு இருபது பதிவுகளாவது போட்டிருப்பார்.  அதெல்லாம் அவர் அட்மின் போடுவது. மோடி செய்யும்  வேலை என்றா சொல்ல முடியுமா?

பிரதமரின் வேலை என்பது பிரதமர் அலுவலகம் சென்று கோப்புக்களை பார்ப்பது, நாடாளுமன்றம் சென்று விவாதங்களில் கலந்து கொண்டு உரிய விளக்கம்  அளிப்பது.

இவையெல்லாம் எதுவும் செய்யாத மோடி நூறு மணி நேரம் உழைக்கிறார் என்று நாராயணமூர்த்தி சொன்னால் அதை ஏற்று அவருக்கு மரியாதை செலுத்த வேண்டுமா?

அப்படியே ஏதாவது சொற்ப நேரம் வேலை பார்த்தால் அதுவும் அதானி, அம்பானிக்கு எதையாவது தாரை வார்ப்பதற்காகத்தான் இருக்கும்.

அதனால் மோடியை ஒரு போதும் மதிக்க முடியாது. மரியாதை கொடுக்க முடியாது.  திட்ட வேண்டுமென்றால் திட்டலாம்.

இந்தியாவின்

 தண்டப் பிரதமர்,

ஃபிராடு பிரதமர்,

புரோக்கர் பிரதமர்.

வேஸ்டு பிரதமர்,

மத வெறி பிரதமர்,

 பொய் சொல்லி பிரதமர்,

கொலைகார பிரதமர்.

என்ன நாராயணமூர்த்தி மோடிக்கு இந்த மரியாதை போதுமா?  

 

Thursday, November 21, 2024

பின் என்ன எழவுக்கய்யா நாராயணமூர்த்தி?

 


கடுமையாகத் திட்ட வேண்டுமென்றுதான் தோன்றுகிறது. கோடிகளில் புரளும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி உபதேசித்துள்ளதை படிக்கையில் அவரை கடுமையாகத் திட்ட வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.


 
வாரத்திற்கு நூறு மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்ற அவர் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால்

 வாரம் ஏழு நாளும் உழைப்பதென்றால் ஏழு நாளும் ஒரு நாளைக்கு  14 மணி நேரம் உழைக்க வேண்டும்.

 வாரத்திற்கு ஆறு நாட்கள் உழைப்பதென்றால் ஆறு  நாளும் ஒரு நாளைக்கு  பதினாறரை  மணி  நேரம் உழைக்க வேண்டும்.

 வாரத்திற்கு ஐந்து நாட்கள் உழைப்பதென்றால் ஐந்து நாளும் ஒரு நாளைக்கு  இருபது  மணி  நேரம் உழைக்க வேண்டும்.

 எட்டு மணி நேர உழைப்பு, எட்டு மணி நேர ஓய்வு, மற்றும் இதர பணிகள், எட்டு மணி நேர உறக்கம், என்று தொழிலாளர்கள் தடியடி வாங்கி, தோட்டாக்களால் துளைத்தெடுக்கப்பட்டு, தூக்கில் தொங்கி இடைத்த உரிமைகளை பறிக்க வேண்டும் என்பதுதான் நாராயணமூர்த்தியின் நாற்றமடிக்கும் லாப வெறி.

 இப்போதே பல பணியிடங்களில் பணி நேரம் என்பது கிட்டத்தட்ட பத்து மணி நேரம் என்றாகி விட்டது. அதை இன்னும் அதிகரிப்பது என்ன நியாயம்?

 சரி, அப்படி நேரம் பார்க்காமல் உழைத்தால் அந்த உழைப்பின் பலன் முழுமையாக அந்த உழைப்பாளிகளுக்கா  செல்லப் போகிறது? நாராயணமூர்த்தி போன்ற முதலாளிகளுக்கு செல்லப் போகிறது!  அப்படி அவர்களின் லாபம் அதிகரிக்க தொழிலாளி ஏன் ஓய்வையும் உறக்கத்தையும் துறக்க வேண்டும்?

 சரி, முதலாளி அதிக சம்பளம் தருவதாகவே வைத்துக் கொள்வோம், பதினாறரை மணி நேரமும் இருபது மணி நேரமும் பார்த்தால் அந்த சம்பளத்தை வைத்து என்ன வாழ்க்கை வாழ முடியும்? குடும்பத்தோடு எவ்வளவு நேரத்தை செலவழிக்க முடியும்? குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க முடியுமா?

 இதையெல்லாம் நாம் கேட்போம் என்று தெரிந்துதான் அவர் “உழைப்பு – வாழ்க்கை சம நிலை”   (Work Life Balance) என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்கிறார். அதாவது ஒரு உழைப்பாளி தன் குடும்பத்தை, குழந்தைகளை, வாழ்க்கையை புறந்தள்ளி, உழைப்பு உழைப்பு என்று முதலாளிக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

 அப்படி வாழ்க்கையை அனுபவிக்க முடியாத ஆளுங்களுக்கு என்ன எழவுக்கய்யா பணம் வேண்டும் நாராயணமூர்த்தி? அப்படி கோடி கோடியா சேர்த்து வச்சி என்ன கிழிக்கற?

 பிகு: மோடி வாரத்துக்கு 100 மணி நேரம் உழைப்பது பற்றி எதுவும் எழுதவில்லையே என்று கேட்கிறீர்கள் அல்லவா? அது தனி பதிவுக்கான கண்டென்ட்.  வரும், கண்டிப்பாக வரும்.

அதானியும் மோடியும் என்ன பேசினார்கள்?

 


                                          

இப்படி ஒரு உரையாடல் நடந்திருக்குமல்லவா!

மோடி : என்ன ஜி இப்படியாயிடுச்சு?

அதானி: இப்ப என்ன ஆயிடுச்சு?

மோடி: அதான் ஜி, அமெரிக்காவில கைது வாரண்டெல்லாம் கொடுத்திருக்காங்க!

அதானி : அரெஸ்ட் வாரண்ட் போட்டுட்டா அரெஸ்ட் செஞ்சிடுவாங்களா? அப்படி அவங்க இந்தியா வந்துட்டு திரும்பி போயிட முடியுமா? திரும்பிப் போக நீதான் விட்டுடுவியா? அப்புறம் எதுக்கு உன்னை பிரதமரா வச்சுருக்கேன்!

மோடி : அதெல்லாம் பார்த்துக்கலாம்ஜி. அப்படி யாராவது வந்தா அமித்து அவங்களை ஏரோர்ட்டிலயே தூக்கிடுவான். அவங்களுக்கு திஹார் வாசனை காட்டிடலாம்.

அதானி : திஹார்ல தள்ளிடுவியா! என்ன காரணம் சொல்லுவே!

மோடி :இந்தியாவின் முக்கிய பிரமுகர்களை கொலை செய்யும் திட்டத்தோட வந்தாங்கன்னு சொன்னா மக்கள் நம்பிடுவாங்க.

அதானி : உன் ப்ரென்ட் ட்ரம்பு கோச்சுக்க மாட்டாரா?

மோடி : அவந்தான் இன்னும் பொறுப்பெடுத்துக்கலயே! அவனும் என்னை மாதிரிதான். நீதி, நேர்மை, நியாயம்னு பேசற அதிகாரிங்களை அவனுக்கும் பிடிக்காது.

சரி ஜி! நீங்க எதுக்கு அமெரிக்காவுல தொழில் செய்ய ப்ளான் செய்யறீங்க! நீ சொல்றதை செய்ய்தான் நான் ஒத்தன் இங்கே இருக்கேனே!

அதானி : இனிமே இந்தியாவில என்னய்யா இருக்கு? எல்லாத்தையும்தான் ஏற்கனவே  கொடுத்துட்டியே!

மோடி : நீங்க எல்லாத்தையும் கரெக்டா செய்வீங்களே! எப்படி பிரச்சினையாச்சு?

அதானி : நானும் உலகம் முழுக்க தொழில் செய்யறேன். பாகிஸ்தானில கூட தொழில் நடக்குது.

 மோடி : ஆமாம் ஜி.

 அதானி : நீதானய்யா பாகிஸ்தானுல விருந்து சாப்பிட போயிட்டு ஒப்பந்தத்தை தட்டிக்கிட்டு வந்தே!

 மோடி : உங்க தொழிலுக்கு சிக்கல் வரக்கூடாதுன்னுதான் பாகிஸ்தானுக்கு எதிரா நான் எதுவும் செய்யறதே இல்லை.

 அதானி : இல்லைன்னா மட்டும் கிழிச்சிடுவியா! என் கிட்டயே 56 இஞ்ச் சீன் போடறியே! சீனா ன்னு சொன்னாலே உன் காலெல்லாம் நடுங்கும்.  

 மோடி : அதை விடுங்கஜி! விஷயத்துக்கு வாங்க!

 அதானி: உலகம் முழுக்க துட்டு கொடுத்துத்தான் தொழில் செய்யறேன். அமெரிக்காவிலயும்தான். இந்த டீலில்தான் ஏதோ மிஸ்ஸாயிடுச்சு.  விடு பாத்துக்கலாம்.

 மோடி: ஜி இப்ப நான் என்ன செய்யனும்னு உத்தரவு போடுங்க! பிடேன் கிட்ட பேசவா இல்லை ட்ரம்பு கிட்ட பேசவா? அமெரிக்காவோட புதுசா ஒரு ஆயுத டீல் போட்டா முடிஞ்சுது மேட்டர்.

 அதானி: அதெல்லாம் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு  வந்த பின்னாடி பாத்துக்கலாம். இப்போ லோக்கல்லதான் கொஞ்சம் வேலை இருக்கு.

 மோடி: சொல்லுங்கஜி

 அதானி: பெரிய சேனல் எல்லாத்தையும் அடக்கியாச்சு. எவனும் வாயே திறக்க மாட்டான். இந்த ஃபேஸ்புக்கு, ட்விட்டரு, இன்ஸ்டா அதிலதான் சில பேரு கத்திக்கிட்டு இருக்காங்க. உங்க ஐ.டி விங் ஆளுங்களை கூப்பிட்டு அதானி மீதான நடவடிக்கை இந்தியா மீதான தாக்குதல், அதானி நல்லவரு, வல்லவரு, அப்டின்னு மானே,தேனே, பொன் மானே எல்லாம் சேர்த்து எழுதச் சொல்லு. வழக்கமா கொடுக்கறதை விட கூட போட்டு கொடுத்திடறேன்.

 மோடி : அவ்வளவுதானேஜி! நம்ம பசங்க தூள் கிளப்பிடுவாங்க! அது மட்டும் இல்லை, வேற ஏதாவது சில்லறை பிரச்சினையை பெருசாக்கி இதை மறக்கடிச்சுடுவாங்க! ஏ.ஆர்.ரகுமான் வேற டைவர்ஸாம். இது போதாதா நம்மாளுங்களுக்கு!

 அதானி : கரெக்டா செய்ய சொல்லுங்க, எல்லாம் கரெக்டா வந்து சேரும்.

 மோடி : ஆனாலும் ஒரு வருத்தம் ஜி.

 அதானி : என்னய்யா வருத்தம்?

 மோடி : உங்க கம்பெனி பங்கு  விலையெல்லாம் குறையுதாமே! உங்க சொத்து மதிப்பு குறைஞ்சிடுமே!

 அதானி : அதைப் பத்தி கவலைப்படாதே! ஜங்க விக்கற பங்கையெல்லாம் நாந்தான் வாங்கிக்கிட்டு இருக்கேன். கொஞ்ச நாள் போச்சுன்னா டிவிடெண்ட் கொடுப்பேன், மறுபடியும் வாங்க ஆரம்பிப்பாங்க, அப்போ ஒன்னுக்கு நூறா வித்து லாபம் பாத்துடுவேன்.

 மோடி : சூப்பர்ஜி

 அதானி : இதெல்லாம் தொழில்ல சகஜமப்பா . . .

Wednesday, November 20, 2024

எல்.ஐ.சி – இந்தி – முரண்பாடுகள்

 


நேற்று முன் தினம் முழுதும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துக் கொண்ட விஷயம் எல்.ஐ.சி இணைய தளம் தொடர்பானதுதான். ஊழியர் பணி விதிகளுக்கு கட்டுப்பட்டவன் என்ற முறையில் அது பற்றி நான் எதுவும் எழுதப் போவதில்லை.

 ஆனால் இந்த சர்ச்சையில் நான் கவனித்த ஒரு முரண்பாட்டை சுட்டிக் காட்டவே இந்த பதிவு,

 முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி விமர்சனத்தை முன் வைத்த அனைவருமே எல்.ஐ.சி பொதுத்துறை நிறுவனமாகவே தொடர வேண்டும் என்று குரல் கொடுத்தவர்கள். ஊழியர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக நின்றவர்கள். பங்கு விற்பனைக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் சமூக வலைத்தளம் உள்ளிட்ட  மக்கள் மன்றங்களில் பேசியவர்கள், எழுதியவர்கள். இன்சூரன்ஸ் பிரிமியம் மீது ஜி.எஸ்.டி கூடாது என்றவர்கள்.

 இவர்களோடு மல்லு கட்டியவர்கள் யார் என்று பார்த்தால் அவர்கள் “பொதுத்துறை நிறுவனங்கள் இறப்பதற்காகவே பிறந்தவை” என்று சொன்ன மோடியின் ஆதரவாளர்கள். எல்.ஐ.சி யின் பங்கு விற்பனையை வாயில் உமிழ்நீர் வடிய ஆதரித்தவர்கள், இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கு ஜி.எஸ்.டி வசூலிப்பது அநியாயமானது என்று ஊழியர்கள் குரல் கொடுத்த போது செவிகளை இறுக்கமாய் மூடிக் கொண்டவர்கள்.

 ஆக அவர்களின் கரிசனம் எல்.ஐ.சி யின் மீதல்ல, இந்தியின் மீது . . .

 

நல்லா இருக்குடா மார்க்கு உன் சமூகத் தரம்

 


இப்படித்தான் வெறுப்பை விதைக்கிறார்கள்  என்பது சில நாட்கள் முன்பு எழுதிய பதிவு. மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் நடந்த ஒரு விஷப் பிரச்சாரம் குறித்த பதிவு. அந்த நச்சுத்தனமான பதிவை அகற்ற வேண்டும் என்று முகநூலிடம் ரிப்போர்ட்டும் செய்திருந்தேன்.

அதற்கு ஒரு பதில் வந்துள்ளது.


பொய்ப் பிரச்சாரம் செய்து மத வெறியைத் தூண்டும் அந்த நச்சுப் பதிவு முகநூலின் சமூகத்தரத்திற்கு எதிரானது கிடையாதாம். அதனால் அந்த பதிவை நீக்க மாட்டார்களாம்.

அடப்பாவி மார்க்கு!

நீட் தேர்வு வேண்டாம் என்றால்,

அமெரிக்க இந்தியர்களின் வேலை வாய்ப்புக்களுக்கு ட்ரம்பால் ஆபத்து என்றால்

வினீஷ் போகத்தை பாராட்டினால்

சமூகத் தரத்திற்கு எதிரானது என்று சொல்லி பதிவை நீக்குகிறது முகநூல். ஆனால் சங்கிகளின் அயோக்கியத்தனத்திற்கு சாமரம் வீசுகிறது.

அப்படியென்றால் சங்கிகளின் கீழ்த்தரம்தான் முகநூலின் சமூகத்தரம்!

என்ன மார்க்கு சரியா?

Tuesday, November 19, 2024

யாகூப் மன்சூரியையும் பழி வாங்குவாரா மொட்டைச்சாமியார்?

 


கீழேயுள்ள படத்தில் உள்ளவர் யாகூப் மன்சூரி. ஜான்சி மருத்துவமனையில் நடைபெற்ற தீ விபத்தில் பதினாறு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியவர் இவர். ஆனால் இவரது இரட்டைக் குழந்தைகள் இருவரும் இறந்து விட்டனர் என்பதுதான் கொடுமை.

 


16 குழந்தைகளை பாராட்டியவரை பாராட்டத்தானே செய்வார்கள், ஏன் பழி வாங்குவார்கள் என்று நீங்கள் கேட்டால் உங்களை மொட்டைச்சாமியார் பற்றி எதுவும் தெரியாத அப்பாவி என்றுதான் சொல்ல வேண்டும்.

 ஏனென்றால் அந்த ஜந்துவின் வரலாறு அப்படி.

 கோரக்பூர் மருத்துவமனையில் நடந்த துயர சம்பவம் நினைவில் உள்ளதா?

 இல்லையென்றால் கீழேயுள்ள இணைப்பின் மூலம் அறிந்து கொள்ளவம்.

 உபி அரசு ஆக்ஸிஜன்  சப்ளைக்கான பணத்தை கொடுக்காததால் அந்த நிறுவனம் ஆக்சிஜன் சப்ளைய நிறுத்தி விட்டது. அந்த கொடிய நாள் இரவு நோய்த் தொற்று அதிகமாகி நூற்றுக் கணக்கான குழந்தைகளுக்கு ஆக்ஸிஜன் தேவைப்பட ஊர் முழுதும் அலைந்து திரிந்து தன் சொந்தச் செலவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கி பல குழந்தைகளை பாதுகாத்தவர் டாக்டர் கஃபீல் கான்.

 மக்கள் அவரை நாயகராகக் கருத அதில் பொறாமையடைந்த உபி முதல்வர் மொட்டைச்சாமியார், அவரையே பொய்க்கதை கட்டி பொறுப்பாக்கி முதலில் இடை நீக்கம் செய்து சிறையில் அடைத்து பின் பணியிலிருந்தே நீக்கினார்.

 அரசின் தவறை மறைப்பது மட்டுமல்ல, மருத்துவர் இஸ்லாமியர் என்பதும் முக்கியமான காரணம்.

 கீழேயுள்ள இணைப்பின் மூலம் கூடுதல் விபரங்களை நீங்கள் அறியலாம். 

 கொடூர வில்லனால் சீரழிந்த நல்லவர் - கோரக்பூர் மருத்துவமனையின் துயர சம்பவம்

இப்போது சொல்லுங்கள் . . .

 பதினாறு குழந்தைகளை காப்பாற்றிய கடவுளாக கருதப்படுகிற யாகூப் மன்சூரி இஸ்லாமியராக உள்ளதை மொட்டைச்சாமியாரால் எப்படி தாங்க முடியும்! போதாக்குறைக்கு அவர் அரசை கண்டிக்க வேறு செய்துள்ளார்!

 மொட்டைச்சாமியார் யாகூப் மன்சூரியை என்ன செய்வார் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது. அவர் கேரக்டர் அப்படி.

 பாஜக ஆட்சியில் இருக்கும்வரை நல்லவர்ககளுக்கு காலம்  இல்லை!

Monday, November 18, 2024

உபியில் தொடரும் குழந்தை மரணங்கள்

 


மேலே உள்ளது உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு.

கோரக்பூர் மருத்துவமனை துயரத்தினை தொடர்ந்து இங்கேயும் மிகப் பெரிய மோசமான நிகழ்வு நடந்தது. 

கடந்த வெள்ளிக்கிழமையன்று அங்கே நடத்த தீ விபத்தில் புதிதாய் பிறந்த 11 குழந்தைகள் உட்பட 16 குழந்தைகள் இறந்து விட்டது. கிட்டத்தட்ட நாற்பது குழந்தைகள் தப்பித்து விட்டது. )இதில் ஒரு துயரக்கதை ஒன்றுண்டு. அது பற்றி தனியாக)

மருத்துவமனையின் பராமரிப்புப் பணிகள் நடந்து பல ஆண்டுகளாகி விட்டது விபத்துக்கு முக்கியக்காரணம். தீவிர சிகிச்சைப் பிரிவில் 16 குழந்தைகளுக்கு மட்டுமேயான வசதி உண்டு. ஆனால் அது போல நான்கு மடங்கு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் என்பதால் ஒரே இன்குபேட்டரில்  மூன்று, நான்கு குழந்தைகள் இருக்குமாம்.

உத்திரப் பிரதேசத்தில் பல்வேறு மருத்துவமனைகளை இதே மோசமான தரத்தில் வைத்துள்ளதுதான் மொட்டைச்சாமியாரின் சாதனை.

இத்தனை குழந்தைகள் இறந்த பின்பு அவர் அங்கே போனாரா?

ஜார்கண்டிலும் மகாராஷ்டிராவிலும் தேர்தல் பிரச்சாரம் செய்வதை விடவா இதெல்லாம் முக்கியம்!


படையப்பா நீலாம்பரியும் நிர்மலா சீத்தாராமனும்

 


படையப்பா நீலாம்பரி போல ஆணவம் மிக்கவர் நிர்மலா சீத்தாராமன் என்று இந்த பதிவில் எழுதப் போகிறேன் என்று நினைக்காதீர்கள். இது நீலாம்பரி, படையப்பாவிற்கு செய்த சம்பவம் போல நிர்மலா அம்மையாருக்கு நடந்தது என்பதை சொல்லத்தான்.

 சிருங்கேரி சங்கராச்சாரியார் ஆர்.எஸ்.எஸ்.ரெவிக்கு  உட்கார நாற்காலி கொடுத்ததை வைத்து ஒரு சங்கி சின்னப்பையன் சனாதனம் சமத்துவத்தை போதிக்கிறது என்று உளறியதை வைத்து நேற்று ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

 அதை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டிருக்கும் போது கண்ணில் பட்ட படங்கள் கீழே.

 



எப்படி நீலாம்பரி படையப்பாவிற்கு உட்கார நாற்காலி தரவில்லையோ அது போல காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதியும் நிர்மலா அம்மையாருக்கும் நாற்காலி தரவில்லை.

 

ஆம்.

 இதுதான் சனாதனம்.

 பெண்களை சமமாக நடத்தாது, அவர்கள்  இரண்டாந்தரப் பிரஜைகள்தான்.

இனியும் அந்த சின்னப்பையன் சனாதனம் சமத்துவத்தை போதிக்கிறது என உளற மாட்டான் என்று ம்புகிறேன்.

 பிகு: நிர்மலா மேடம், நெசமாவே அது நீங்கதானா?

 வழக்கமாக உங்களிடம் தென்படும் சிடுசிடுப்பு, ஆணவமான உடல் மொழி எதையுமே காணோமே! இப்படி பவ்யமா நிக்கறீங்களே!