Thursday, January 16, 2020

இத்தனை நாள் ஏண்டா சொல்லலை?



தமிழ்நாடு பாஜக தன் ட்விட்டர் பக்கத்தில் அளந்து விட்டிருக்கிற கட்டுக்கதை கீழே உள்ளது.



எந்த வித மத அடையாளமும் இல்லாத மக்களின் திருவிழா பொங்கல் என்று பேசுவது இந்த கயவர்களுக்கு பொறுக்கவில்லை.

உடனடியாக புதிதாக ஒரு கட்டுக்கதை ஒன்றை கண்டு பிடித்து விட்டார்கள். இப்போதுதான் துக்ளக் படித்தார்கள் போல. ..

இந்த கயவர்களுக்கு சில கேள்விகள்.

இந்த கட்டுக்கதையை ஏண்டா இத்தனை நாளா சொல்லலை?  இப்போதான் ரூம் போட்டு யோசிச்சீங்களா?

சிவனோட சண்டை போட்டா, அதுக்கு எதுக்குடா நந்தியோட அம்சத்தோட சண்டை போடனும்? சிவனுக்குன்னு எந்த அடையாளமோ அம்சமோ கிடையாதா?

சிவன் அர்ஜூனன் சண்டைன்னா ஏண்டா மற்ற மாநிலத்தில ஜல்லிக்கட்டு நடக்கலை?

இவ்வளவு புனிதமான பண்டிகைன்னா அதை தடுக்க ஏண்டா ஆர்.எஸ்.எஸ் ஆளு பீடா ராதா ராஜன் முயற்சி எடுத்தாங்க?

பிகு: வெங்காய நாயுடு கழட்டிப்போட்ட காவி உடையை மீண்டும் வலுக்கட்டாயமாக திருவள்ளுவருக்கு அணிவித்த இந்த கயவர்களுக்கு மரியாதை அவசியம் இல்லை என்பதால்தான் "டா" பயன்படுத்தியுள்ளேன்.


1 comment:

  1. அயோக்கியப் பசங்க

    ReplyDelete