Monday, January 13, 2020

சூப்பர் சு.வெ . . .



இந்த காணொளியை பார்க்க பார்க்க பரவசமாக இருக்கிறது. 

பபாசியின் நடவடிக்கையைக் கண்டித்து பபாசி மேடையில் முழங்கி தான் உரை நிகழ்த்த வேண்டிய பொருளில் பேசப் போவதில்லை என்று அறிவித்து கீழிறங்கினார் தமுஎகச வின் மாநிலத் தலைவரும் மதுரை மக்களவை உறுப்பினரும் சாகித்ய அகாடமி உறுப்பினருமான தோழர் சு.வெங்கடேசன், 

அந்த உரையின் சாராம்சம் 

பபாசிக்கு என தனித்த மாண்புகள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக வரலாறு இருக்கிறது. 

மத்திய அரசை விமர்சித்தாக காவல்துறை cv கூறலாம்,அரசு கூறலாம்.
ஆனால் பபாசி கூற கூடாது. 

விமர்சிப்பது தவறென்றால் இந்த கண்காட்சியில் காந்தியை பற்றிய புத்தகங்கள் இருக்கக் கூடாது. அண்ணல் அம்பேத்கர் பற்றிய புத்தகங்கள் இருக்கக் கூடாது. அண்ணாவின் நூல்கள் விற்கக்கூடாது. 

வெங்காயத்தை எழுதக்கூடாது, உப்பைப் பற்றி பேசக்கூடாது. ஏன்.. துவங்கி வைத்து பேசிய முதல்வரின் அம்பேத்கர் பற்றிய கருத்தை தடுக்க வேண்டியவை. 

ஏன் .. கீழடி என்றாலே மத்திய அரசுக்கு எதிரான இயக்கம். 

எனவே பபாசியின் நடவடிக்கையை கண்டித்து எனக்களித்த கீழடி ஈரடி தலைப்பில் உரையாற்ற மறுத்து என் கண்டனத்தை தெரிவித்து அமர்கிறேன்

முழுமையாக பாருங்கள். வேள்பாரியின் வீரம் தெரியும். 




பிகு : ஆமாம். மேடையில் இருந்த ஒருவர் போன் பேசுவது போல அப்படியே நழுவிப் போனாரே, யார் அவர்? 

1 comment:

  1. What we have expected has come in reality.hats off to com.su.venkatesan

    ReplyDelete