Thursday, July 4, 2024

மனிதனை கடவுளாக்கினால் ?????

 


உபி யின் பாலியல் குற்றங்களின் தலைநகர் பேரழிவு நகராகி விட்டது.

ஹாத்ராஸ் சம்பவத்தைத்தான் சொல்கிறேன்.

மயக்கும் பேச்சு, சில மேஜிக்குகள் தெரிந்தவர்களை கடவுளாகக் கருதி வழிபட்டால் இப்படிப்பட்ட பேரழிவுகள்தான் நிகழும்.

மனிதர்கள் தங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை சிந்திக்காமல் இவர்களின் தேடுவதை என்றைக்கு நிறுத்துகிறார்களோ, அன்றைக்குத்தான் உருப்படுவார்கள் 

Wednesday, July 3, 2024

நீயும் பெயில்தான் மோடி . . .

 


தான் ஒரு அறிவில்லாத முட்டாள் என்று மோடி நேற்று நிரூபித்துக் கொண்டார். 543 க்கு 99 வாங்கி பாஸ் செய்ததாக ஒரு குழந்தை கொண்டாடுவதாக சொன்னார்.

273 மார்க் வாங்காவிட்டால் அனைவரும் பெயில்தான். அப்படிப்பார்த்தால் மோடியும் பெயில்தான். கூட்டணிக் கட்சிகள் வாங்கிய மார்க்குகளை கடன் வாங்கி பாஸானதாக காண்பிக்கிறார்.

தானே பெயிலான பின்பு அடுத்தவரை பெயில் என்று எகத்தாளம் பேசுவது முட்டாள்தனமா, அயோக்கியத்தனமா?

மோடியென்றால் இரண்டும்தானே என்று சொல்கிறீர்கள்.

ஆமாம்.

அதுவும் சரிதான் . . .

Tuesday, July 2, 2024

மோடியின் (ஆபாச ) ஆட்டம் இனிதான் . . .

 


நேற்று மக்களவை களை கட்டியது. ராகுல் காந்தி தொடங்கி தோழர் சு.வெ, ஆ.ராசா, மொஹுவா மொய்த்ரா என அனைவரும் அபூர்வப் பிறவியை பின்னி எடுத்து விட்டார்கள்.

இந்தியாவிலேயே மோடிக்கு பிடிக்கவே பிடிக்காத இடம், வாரத்துக்கு இரண்டு நாட்கள் அதுவும் பத்து நிமிடங்கள் மட்டுமே இருக்கிற இடம், அங்கே கிட்டத்தட்ட ஒரு நாள் முழுதும் உட்கார வைத்து விட்டார்கள்.

சிவந்த மண் படத்தில் "பட்டத்து ராணி' பாடலின் போது தன்னை கொலை செய்யத்தான் நிகழ்ச்சியே நடக்கிறது என்று தெரிந்து கொண்ட  திவான் நம்பியாரின் முகம் எப்படி இறுக்கமாக இருந்ததோ அது போலத்தான் ராகுல் பேசும் போது மோடியின் முகம் இருந்தது.


இதற்கெல்லாம் மோடியின் எதிர்வினை எப்படி இருக்கும்?

நாகரீகமாக பதில் அளிக்க அவர் என்ன நேருவா இல்லை சீத்தாராம் யெச்சூரியா?

கேடு கெட்ட, கேவலமான அரசியல்வாதிதானே!

ஏற்கனவே இந்துக்களை அவமதித்து விட்டார் என்று திசை திருப்ப முயற்சி செய்தார். இந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் வன்முறையை தூண்டுகிறார்கள் என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை நிரூபிப்பதாகத்தான் சில்லறை சங்கிகளின் பதிவுகள் அமைந்துள்ளது.

மோடியின் பதில் எப்படி இருக்கும்?

கீழேயுள்ள படம் நினைவில் உள்ளதா?



 மக்களவையில் மோடி வெளிப்படுத்திய ஆபாச உடல் மொழியின் ஒரு பகுதி.

இப்போது இன்னும் அசிங்கமாக, கேவலமாக, தரக்குறைவாக, ஆபாசமாக, பொய் மூட்டைகளோடு விஷத்தைக் கக்குவார்.

ஆமாம்!

பரமாத்மா எதுக்கு இந்த மாதிரி பாவாத்மாக்களை படைச்சு அனுப்பி இந்தியாவை சீரழிக்குது?

Monday, July 1, 2024

இன்று 74 வது பிறந்த நாள்

 



இன்று எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பிறந்த நாள்.

240 தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் சில கம்பெனிகளில் தைரியம் கொண்ட ஊழியர்கள் உருவாக்கிய சங்கங்களின் பிரதிநிதிகள் அன்றைய பம்பாயில் ஒன்று கூடி ஒரு அகில இந்திய அமைப்பின் அவசியத்தை உணர்ந்து உருவாக்கிய அமைப்புதான் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம். அந்த நாள் 01.07.1951.

சங்கம் வந்த பின்புதான் எல்.ஐ.சி வந்தது. எல்.ஐ.சி இன்று வரை பாதுகாப்பாய் இருப்பதும் சங்கத்தால்தான்.பெருமைகளை எழுத பக்கங்கள் போதாது என்பதால் அந்த முயற்சியில் ஈடுபடவில்லை. 

போராட்டத்தீயில் புடம் போட்ட பொன்னாய் ஒளி வீசித் திகழும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் உறுப்பினர் என்பதுதான் எனக்கான மிகப் பெரிய பெருமிதம்.

அனைவருக்கும் சங்கத்தின் உதய தின வாழ்த்துக்கள். 

Sunday, June 30, 2024

வெட்கமே கிடையாதா பாண்டே?

 


ஊடகச்சங்கி ரங்கராஜ் பாண்டே தன் சாண்க்யா, ட்விட்டர் பக்கத்தில் புளகாங்கிதத்தோடு போட்ட பதிவு கீழே . . 


அரசு எழுதித்தருவதை படிப்பதுதான் ஜனாதிபதியின் வேலை. இது தெரிந்தும் என்னமோ ஜனாதிபதியே ஜிந்திச்சு பேசின மாதிரி பீற்றிக் கொள்ள உனக்கு வெட்கமில்லையா பாண்டே?

நீயெல்லாம் ஒரு ஊடகக்காரன்!

அவசர நிலைக்காலம் – அருகதையில்லை

 


பாஜக அவசர நிலைக் காலத்தை இப்போது கையிலெடுத்து ஆடி வருகிறது. சபாநாயகர் தொடங்கி ஜனாதிபதி வரை மக்களவையில் அதைப் பற்றி பேசுகிறார்கள். ஐ.டி விங் தயாரித்துக் கொடுத்த பதிவை பெரிய சங்கிகள் தொடங்கி சில்லறை சங்கிகள் வரை ட்விட்டரிலும் முக நூலிலும் பகிர்ந்து கொள்கிறார்கள். அவசர நிலைக் காலத்தை  விமர்சனம் செய்து தங்களை ஜனநாயகக் காவலர்களாக காண்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள் சங்கிகள்.

 அவசர நிலைக் காலம் இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலம்தான். இதை எந்த தயக்கமும் இன்றி உரக்கச் சொல்வேன். முதலாளிகளுக்கு உதவ சொத்துரிமையை மட்டும் விட்டு விட்டு அனைத்து அடிப்படை உரிமைகளையும் முடக்கியது இந்திய அரசு.

 எதிர்க்கட்சித் தலைவர்கள் தாக்கப்பட்டனர். சிறைக்கு அனுப்பப்பட்டனர். பத்திரிக்கைகளுக்கு சென்சார் கொண்டு வரப்பட்டு முடக்கப்பட்டனர். சஞ்சய் காந்தி அடித்த கூத்துக்கள் தனி.

 இனியொரு முறை இப்படி ஒரு காலம் வரக்கூடாது என்பதால் அவசர நிலைக்காலம் பற்றி நினைவுபடுத்திக் கொண்டிருப்பது அவசியம்/

 இதைப் பற்றியெல்லாம் பேச சங்கிகளுக்கு அருகதை இருக்கிறதா?

 யாருக்கு அருகதை உண்டு என்பதை முதலில் பார்ப்போம்.

 அவசரநிலைக் காலத்தை அன்று எதிர்த்த அரசியல் கட்சிகள் எவை?

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,

ஸ்தாபன காங்கிரஸ்,

திமுக

 இவை மட்டும்தான் எதிர்த்தன.

 ஜெயபிரகாஷ் நாராயணனும் கிருபளானியும் மொரார்ஜி தேசாயும்  மற்ற மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் சிறை சென்றார்களே தவிர பாஜகவின் முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் இல்லை. மோடி எல்லாம் அப்போது யாரென்று தெரியாத தம்மாத்தூண்டு சில்லறை சங்கி.

 இன்றைக்கு பாஜகவில் இருக்கும் சுப்ரமணிய சாமியைத் தவிர பாஜக ஆட்கள் யாரும் எமர்ஜென்சிக்கு எதிராக வாய் திறக்கவில்லை. பாஜகவின் குருபீடமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அன்றைய சர்சங்சாலக் பாலாசாஹிப் தேவரஸ், இந்திரா அம்மையாருக்கு வாழ்த்துக் கடிதம் எழுதி இருபது அம்சத் திட்டத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்வேன் என்று உறுதியளித்தார்.

 


அவசர நிலைக்காலத்தை அன்று எதிர்க்காமல் அதற்கு சலாம் போட்ட சங்கிக் கூட்டத்திற்கு இப்போது அதனை விமர்சிக்கும் அருகதை கிடையாது.

 கடந்த பத்தாண்டுகளாக மோடியின் ஆட்சி என்ன ஜனநாயகத்தை பாதுகாத்த ஆட்சியா என்ன?

 அறிவிக்கப்படாத அவசர நிலைக் காலம்தானே அது!

 இப்போது  மட்டும் என்ன வாழ்கிறது?

 ஒத்தி வைப்பு தீர்மானத்திற்கு நோட்டீஸ் கொடுத்தால் எம்.பி க்களின் மின்னஞ்சல் முடக்கப்படுகிறது.

 பேசிக்கொண்டிருக்கும் போதே மைக் அணைக்கப்படுகிறது.

 இந்த அற்பர்கள் ஜனநாயகம் பற்றி பேசலாமா?

 

Saturday, June 29, 2024

மோடி கைய வச்சா?

 இரண்டு நாள் முன்பு போட்ட அதே படத்தை மீண்டும் பயன்படுத்தியதற்கு மன்னிக்கவும்.

 


மோடி துவக்கி வைக்கும் எந்த ஒரு திட்டமும் உருப்படாது என்பதை விமான நிலைய சம்பவங்கள் உணர்த்தி விட்டது. 

 


தேர்தலுக்காக அவசரம் அவசரமாக அரைகுறையாக எங்கெல்லாம் திறப்புவிழா நடந்ததோ, அவை அனைத்தையும் ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

 

பிகு: பண்ணையாரும் பத்மினியும் படத்தில் “பீடை” என்று ஒரு பாத்திரம் வரும். அவர் எதை தொட்டாலும் அது உடனே உடைந்து போகும். ஆளுக்கு அடி படும், இந்த மாதிரி நிறைய . . .வட இந்தியாவில் தெய்வக்குழந்தைக்கு இதனால்தான் “பீடை மகான்” என்று பெயர் வைத்தார்களோ என்னமோ?