Friday, June 14, 2019

செவ்வணக்கம் தோழர் முகில்




தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் வேலூர் மாவட்டத் தலைவராக பல்லாண்டுகள் செயல்பட்ட தோழர் முகில் இன்று காலமானார் என்பது துயரமான செய்தி.

அறிவொளி இயக்கத்திலும் அறிவியல் இயக்கத்திலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தோழர் முகில் நல்ல கவிஞர், பாடகர், நாட்டுப்புற பாடல்கள் ஆய்வாளர், வெண்மணி சம்பவம் குறித்து “ராமையாவின் குடிசை” என்ற நாடகத்தை எழுதியவர்.

எங்கள் சங்கத்தோடு மிகவும் நெருக்கமானவர். ராணிப்பேட்டையிலும் நெய்வேலியிலும் நடைபெற்ற எங்கள் கோட்டச்சங்க மாநாடுகளின் ஒரு பகுதியான மக்கள் ஒற்றுமை கலை விழாக்களில் உரை வீச்சு நிகழ்த்தியவர்.

எட்டு வருடங்களுக்கு முன்பாக 30.01.2011 ம் வருடம் ஐந்தாவது தமிழ் மாநில மகளிர் மாநாட்டை வேலூரில் நடத்தும் பொறுப்பு எங்களுக்கு அளிக்கப்பட்ட போது ஒரு மகளிர் சேர்ந்திசைக்குழுவை உருவாக்கினோம்.. அந்த குழுவிற்கு தொடர்ச்சியாக பயிற்சி அளித்து அந்நிகழ்வில் மூன்று பாடல்களை சிறப்பாக பாடவைத்து பாராட்டுக்களை பெற வைத்தவர் தோழர் முகில் அவர்களே.

அதன் பிறகும் சேலத்தில் மாநில மகளிர் கலை விழா நடந்த போதும் எங்கள் தோழர்களுக்கு பயிற்சி அளித்தார்.

ராணிப்பேட்டை பி.ஹெச்.இ.எல் நிறுவனத்தில் துணைப் பொது மேலாளராக பணியாற்றியவர் அவர். அதிகார வர்க்க மனோபாவத்தை ஒரு போதும் தன் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இறுதி நாள் வரை தோழமை உண்ர்வோடு வாழ்ந்த

தோழர் முகில் அவர்களுக்கு செவ்வணக்கம்.






மோடிக்கு நெருக்கம் - 150 கோடி ஊழல்


மற்ற மாநிலங்களை விட இங்கே அதிக ஊழல் நடக்கிறது. பல பிரமுர்கள் தரகர்களாகவே செயல்படுகின்றனர். பல ஊழல் ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளேன். 150 கோடி ரூபாய் ஊழல் ஒன்று கூட நடந்துள்ளது. இந்த பிரமுகர்கள் மோடிக்கு நெருக்கமானவர்கள்

இதெல்லாம் நானாக சொல்லவில்லை.

காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் சொன்னது.

யார் அந்த நெருக்கமானவர்கள் என்பதை மோடியிடம் சொன்னவர் பத்திரிக்கையாளர்களிடமும் சொல்லி இருக்கலாம்

Tuesday, June 11, 2019

நல்லதொரு தீர்ப்பு – நிலைத்திடுமா?




ஜம்மு காஷ்மீரில்  கொடியவர்கள் கோயில் வளாகத்தில்  ஆசிபாவுக்கு செய்த கொடுமையை நம்மால் மறக்க முடியுமா?

அந்த கொடுத்தவர்களில் இருவருக்கு ஆயுள் தண்டனையும் மற்ற  கயவர்களுக்கு ஐந்தாண்டு தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கது.

சங்கிகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் வாதாடிய வக்கீல் தீபிகா அவர்களுக்கும் இப்பிரச்சினைக்காக  குரல் கொடுத்த மார்க்சிஸ்ட் கடசியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர்  யூசுப் தாரிகாமி அவர்களுக்கும் பாராட்டுக்கள் .

கிரிமினல்கள் ஆடசியின் மேலே உள்ள நீதிமன்றங்கள் இத்தீர்ப்பை மாற்றல் இருக்க வேண்டும் என்ற கவலை மனதில் தோன்றாமல் இல்லை. 

நல்லது நிலைக்கட்டும்.
 

விரசமில்லா சிரிப்புக்காரர்




நேற்று மறைந்த நகைச்சுவைக் கலைஞர் கிரேசி மோகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

நாடகக் காலம் தொடங்கி சீரியல்கள், திரைப்படங்கள் என்று தமிழர்களை மனம் விட்டு சிரிக்கச் செய்தவர்.

சீரியல்களின் துவக்க காலத்தில் அவரும் அவரது தம்பி மாது பாலாஜியும் சீனுவும் அடித்த கூத்துக்களை யாரால் மறக்க முடியும்!

கமல ஹாசனின் சீரியஸ் படங்களை விட அவரது காமெடி படங்கள் வசூலை அள்ளிக் குவித்தது என்றால் அதற்கு கிரேசி மோகனின் நகைச்சுவை வசனங்கள் ஒரு முக்கியக் காரணம். அபூர்வ சகோதரர்கள் ஒரு சீரியஸான பழி வாங்குதல் படம்தான். ஆனாலும் அதில் நகைச்சுவைக்கு குறைவில்லை.

மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, வசூல் ராஜா என்று ஒரு பெரிய பட்டியலே போட முடியும்.

ஆரம்ப காலத்தில் மாற்றுத் திறனாளிகளை, அதிலும் குறிப்பாக செவித் திறனற்றவர்களை கிண்டலடிக்கிறார் என்று விமர்சனம் உண்டு. பிறகு அதை தவிர்த்து விட்டார்.

ஆனால் அவரது வசனங்களில் இரட்டை அர்த்தமோ, விரசமோ கிடையாது. அதற்காகவே அவரை பாராட்ட வேண்டும்.

கிரேசி மோகனுக்கு அஞ்சலியாக அவர் நம்மை சிரிக்க வைத்த


 


Monday, June 10, 2019

அர்பன் நக்சலுக்கு அஞ்சலி

தலை சிறந்த கலைஞரும்
சமரசமற்ற இலக்கியவாதியும்
மதவெறி எதிர்ப்புப் போராளியும்
ஞான பீட விருது பெற்றவருமான
திரு கிரீஷ் கர்னார்ட் அவர்களுக்கு
இதய அஞ்சலி

நியாயமா தமிழிசை?

ஊரான் வீட்டுப் பெண் சோபியா "பாசிஸ பாஜக ஒழிக " என்று முழக்கமிட்ட போது புகார் கொடுத்து லாக்அப்பில் அடைக்க வைத்த தமிழிசை அவர்களே, உங்கள் மகனும் அதையே செய்த போது பயணத்தை ரத்து செய்து கமுக்கமாக வீடு திரும்பியது நியாயமா?


Sunday, June 9, 2019

ஹெலிகாப்டருக்கே காற்றடிப்பவர்

அந்த தன்னம்பிக்கையை பாராட்டாமல் இருக்க முடியாது