Saturday, January 19, 2019

பதற வைத்த பத்தாண்டு சவால்

பத்தாண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தோம், இப்போது எப்படி உள்ளோம் என்று இரு வேறு காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை முக நூலில் பலரும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

மிக முக்கியமான ஒரு சமூகப் பிரச்சினை குறித்து ஒரு தோழர் பகிர்ந்து கொண்டிருந்த ஒரு பதிவு மிகவும் பதற வைத்தது.

பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்பது வெறும் முழக்கமாக நின்றிடக் கூடாது. ஒவ்வொரு ஆணின் மனதிலும் உருவாக வேண்டிய உணர்வு.




குரு மகராஜ் - மோடி ட்வீட்டினாரா?




மோடியால் பாசம் ஒழுக குரு மகராஜ் என்று அழைக்கப்பட்ட ராம் ரஹீம் சிங் என்ற போலிச்சாமியார் ஏற்கனவே பாலியல் வன் கொடுமை வழக்கில் இருபது வருட சிறைத் தண்டனை பெற்று ஜெயிலில் உள்ளார். 

இப்போது கொலை வழக்கில் சாமியாருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

சாமியாருக்கு முன்பு நன்றி சொன்ன மோடி அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது குறித்து ஏதாவது ட்வீட்டியுள்ளாரா? அல்லது மங்கி பாத்திலாவது பேசியுள்ளாரா?

விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.


அவர்களின் புகைப்படம் இல்லாவிட்டாலும் கூட . . .




அஞ்சான், நாகூரான், ஞானசேகரன்

இவர்களைப் பார்த்ததில்லை. இவர்கள் மரணம் பற்றியும் அவர்கள் மரணித்த நாளில் அறிந்ததில்லை. இத்தனைக்கும் இவர்கள் வாழ்ந்த அதே மாவட்டத்தில்தான் இவர்கள் உயிரை காவல்துறை தோட்டாக்கள் குடித்த காலத்தில்தான் பள்ளி மாணவனாய் பனிரெண்டாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்திருக்கிறேன்.

தஞ்சை மாவட்டம் திருமெய்ஞானம் என்ற கிராமத்தில் நடைபெற்ற ஒரு மிகப் பெரிய கொடூரம் பற்றி அதே தஞ்சை மாவட்டத்தில் இருந்த  திருக்காட்டுப்பள்ளி என்ற ஊரில் ஒரு பேசு பொருளாகக் கூட மாறவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி ஒரு வேளை அங்கே தட்டி கட்டி வைத்திருக்கலாம். ஆர்ப்பாட்ட,ம் நடத்தியிருக்கலாம். மக்களின் கோரிக்கைகளுக்காக நடத்துகின்ற போராட்டங்களை எப்படி மக்கள் மௌனமாக இப்போதும் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்களோ, அது போல  நானும் ஒரு வேளை அன்று அதை மௌனமாகக் கடந்து போயிருக்கலாம்.

“ஒரு வீடு ஒரு உலகம்”, “கோயில் புறா” ஆகிய இரு படங்களின் படப்பிடிப்புக்கள் பெரிய நட்சத்திரங்கள் கூட இல்லாமலேயே உருவாக்கிய பரபரப்பு கூட விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் நிரம்பிய அந்த ஊரில் மூன்று விவசாயத் தொழிலாளர்கள் மீது நிகழ்ந்த அரசு பயங்கரவாதம் பற்றி எந்த பரபரப்பும் இல்லை.

அந்த கொடூர நிகழ்வு பற்றி, நெஞ்சை பதற வைத்த அந்த சம்பவம் பற்றி எல்.ஐ.சி நிறுவனத்தில் இணைந்த பின்பே சங்கத்தின் மூலமாகவே அறிந்து கொண்டேன்.

நடந்தது என்ன?

சமீபத்தில் கடந்து போனதே ஜனவரி 8,9 இரண்டு நாட்கள் அகில இந்திய வேலை நிறுத்தம் அது போன்றதொரு அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு 19 ஜனவரி 1982 ம் நாள் அன்று மத்தியத் தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்திருந்தன.

உலக வங்கியிடமும் பன்னாட்டு நிதி நிறுவனத்திடமும் கடன் வாங்கிய இந்திய அரசு, அந்த கடனுக்காக அந்த அமைப்புக்கள் விதித்திருந்த நிபந்தனைகளை நிறைவேற்றத் தொடங்கி இருந்த காலம். இன்று போலவே அப்போதும் அந்த நிபந்தனைகள் என்பது  உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்காகத்தான் அமைந்திருந்தது. வேலையின்மை அதிகரிப்பு, விலை வாசி உயர்வு, ஆலைகள் மூடல் ஆகியவை போனஸ் தாக்குதல்கள்.

இதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைகின்றன. தலைநகர் டெல்லியை உலுக்கிய பேரணி நடைபெறுகின்றது.  19 ஜனவரி 1982 ம் நாள் ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்தம் மேற்கொள்வது என்ற அறைகூவல் விடப்படுகிறது.

இந்த வேலை நிறுத்தத்தை எப்படியாவது முறியடிப்பது என்று அன்று இந்திரா அம்மையார் பிரதமராக இருந்த மத்தியரசு முடிவு செய்கிறது. காங்கிரஸ் கட்சி தலைமையிலிருந்த மாநில அரசுகளும் காங்கிரஸோடு இணக்கமாக இருந்த எம்.ஜி.ஆர் போன்றவர்களை முதல்வர்களாகக் கொண்ட வேறு சில அரசுகளும் மத்தியரசோடு ஒத்துழைத்தது.

வேலை நிறுத்தத்திற்கு முன்பாகவே முன்னெச்செரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான தொழிற்சங்க முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்படுகின்றனர். வேலை நிறுத்த ஆர்ப்பாட்டங்களில் காவல்துறை குண்டாந்தடிகள் ஆவேச தாக்குதல் நடத்துகிறது.

தஞ்சை மாவட்டம் திருமெய்ஞானம் என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் களமிறங்குகின்றனர். ஆர்ப்பாட்டத்தை அனுமதிக்க மறுத்து காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்துகிறது.

“தொழிலாளிகளின் நண்பன்” என்று வர்ணிக்கப்பட்ட, விவசாயி, மீனவ நண்பன், ரிக்சாக்காரன், படகோட்டி  போன்ற படங்களில் விளிம்பு நிலை தொழிலாளிகளின் காவலனாக திரையில் காட்சியளித்த பொன் மனச் செம்மலின் காவல்துறை, அஞ்சான் நாகூரான், ஞானசேகரன் எனும் மூன்று விவசாயக் கூலித் தொழிலாளர்களை கொன்று தன் வெறியை அவர்களின் குருதியில் தணித்துக் கொண்டது.

தியாகிகளின் மூவரின் புகைப்படங்கள் கிடைக்குமா என்று நேற்று முதலே இணையத்தில் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. அவர்களின் முகம் அறியாவிட்டாலும் கூட தமிழக உழைப்பாளி வர்க்கம் அவர்களை மறக்கவில்லை. அவர்களின் தியாகத்தை மறக்கவில்லை. 

சி.ஐ.டி.யு அமைப்பு 19 ஜனவரியை ஒவ்வொரு வருடமும் தியாகிகள் தினமாக அனுசரிக்கிறது.

தொழிலாளர்களுக்காக உயிர் நீத்த மகத்தான தியாகிகள் தோழர்கள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோருக்கு செவ்வணக்கம்.


Friday, January 18, 2019

இவங்களுக்கு தகுதியில்லையாம்! பாவிகளா!!!

நேற்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியான செய்தி. இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கு துணை நிற்கிற ஹெலிகாப்டரை பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட்டட் உருவாக்கி உள்ளது. ரபேல் நிறுவனத்தின் போர் விமானத்தை இந்தியாவில் உருவாக்க இவர்களுக்கு தகுதி கிடையாது, மாறாக பொம்மை ப்ளேன் கூட தயாரிக்காத அம்பானிக்குத்தான் உள்ளது என்று சொல்கிறார் நீட் நிர்மலா அம்மையார். 

படுபாவிகள்!!! உருப்படுவார்களா ????



எச்ஏஎல் நிறுவனத்தின் போர் ஹெலிகாப்டர் ஏவுகணை தாக்குதல் நடத்தும் சோதனை வெற்றி

பெங்களூரு, ஜன.17-பெங்களூரு இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் (எச்ஏஎல்) நிறுவனம் தயாரித்துள்ள இலகு ரக ஹெலி காப்டர், போர்க்கள சோதனையில் வெற்றி கண்டுள்ளது. உலக அளவில் தனித்திறன் வாய்ந்த இந்த ஹெலிகாப்டர்இந்திய ராணுவத்தில் விரைவில் இணைகிறது.பெங்களூரில் செயல்படும் இந்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல், புதிய இலகு ரக ஹெலி காப்டரை தயாரித்து உள்ளது. 

இந்த புதிய ஹெலிகாப்டரின் தாக்குதல் திறன், போர்க்களத்தில் அதன் செய லாற்றல் ஆகியவற்றை பரிசோதித்து பார்க்கும் நிகழ்வு ஒடிசா மாநிலத்தின் சந்திப்பூரில் நடைபெற்றது. விண்ணில் பறந்தபடியே, விண்ணில் நகரும் மற்றொரு இலக்கை நோக்கி ராக்கெட்டை ஏவும் சோதனை நடைபெற்றது. விமானப்படையின் அதிகாரிகளான சுபாஷ் பி ஜான், ரஞ்சித் சித்தலே, எச்ஏஎல் நிறுவனஎன்ஜினீயர் ராஜீவ் துபே ஆகியோர் ஹெலிகாப்டரில் பறந்தபடியே பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது விண்ணில் நகரும் இலக்கு துல்லியமாக தாக்கி அழிக்கப்பட்டது.

இதன் மூலம் இலகு ரக ஹெலிகாப்டரின் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளதாக எச்.ஏ.எல் நிறுவன தலைவர் ஆர்.மாதவன் கூறியுள்ளார்.இந்த புதிய இலகு ரக ஹெலிகாப்டர்தான் நாட்டிலேயே முதல் முறையாக விண்ணில் பறந்தபடி விண்ணில் உள்ள இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது. 20 மி.மீட்டர் விட்டம் கொண்ட குண்டுகளை சுடும் துப்பாக்கியையும், 70 மி.மீட்டர் விட்டம் கொண்ட ராக்கெட்களையும் ஹெலிகாப்டர் கொண்டுள்ளது. 

இமயமலையில் உள்ள 20, 000 அடி உயரம் கொண்ட சியாச்சின் பனிமலைப் பரப்பிலும் பறந்து தாக்கும் திறன் இலகு ரக ஹெலிகாப்டருக்கு உள்ளது. இந்த அளவுக்கு திறன் கொண்ட தாக்குதல் ஹெலிகாப்டர் உலகில் எந்த நாட்டிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.விமானியின் கண்ணுக்கு முன்னால் உள்ள திரையிலேயே எதிரி இலக்கை காட்டும் நவீன தொழில் நுட்பம், அகச்சிவப்பு கதிர் மூலம் இரவிலும் இலக்கை காட்டும் தொழில் நுட்பம் ஆகியவையும் ஹெலிகாப்டரில் இடம் பெற்றுள்ளன.இதன் மூலம் இலக்கு எங்கிருந்தாலும் தேடி அழிக்க முடிவதோடு, இலக்கு இருக்கும் இடத்தை நோக்கி ஹெலிகாப்டரை திருப்பாமல் தாக்கும் வல்லமையும் கொண்டுள்ளது. 

மேலும் மிக குறைந்த உயரத்திலும் பறந்து தாக்கும் திறனுடன், துல்லிய தாக்குதல் வல்லமையும் கொண்டுள்ள ஹெலிகாப்டரை வாங்க ராணுவமும், விமானப்படையும் முன்பதிவு செய்துள் ளன.இதன் படி விமானப்படைக்கு 10 ஹெலிகாப்டர்களும், ராணுவத்திற்கு 5 ஹெலிகாப்டர்களும் முதற்கட்டமாக வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பேட்ட – என்னத்தை எழுத?




முதல் பாதி பார்க்கும் போது நன்றாக உள்ளது மாதிரித்தான் இருந்தது. ரஜனிகாந்த் ஹாஸ்டல் வார்டனாக மாணவர்களோடு பழகும் சீன்கள் எல்லாம் ஓ.கே தான்.

ஆனால் இரண்டாவது பாதிதான் மிகவும் சோதனையாக அமைந்து விட்டது.  ஃப்ளாஷ் பேக்கோ அல்லது உத்தர பிரதேச காட்சிகளோ மனதில் நிற்கவில்லை. எப்போது படம் முடியும் என்ற அளவிற்கு பொறுமையை சோதித்து விட்டது.

மணல் கொள்ளை, ஆணவக் கொலை, காவிகளின் அராஜகம், திருநங்கைகள் பற்றி எல்லாம் பேசப்பட்டுள்ளதாக பல தோழர்கள் பரவசப்பட்டு எழுதி இருந்தார்கள். அந்த காட்சிகள் எதுவுமே கொஞ்சம் கூட ஆழமில்லாதவை. படத்தில் என்ன வசனம் பேசியிருந்தாலும் அதை நிஜத்தில் ரஜனி கடைபிடிக்கப் போவதில்லை.

ரஜனிகாந்தை மட்டுமே முன்னிறுத்துவதற்காக பாவம் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, மகேந்திரன், சசிகுமார் ஆகியோர் வீணடிக்கப்பட்டுள்ளனர்.  இதிலே ரொம்பவும் பாவம் சிம்ரனும் த்ரிஷாவும். ஒரு நிமிடம் மட்டுமே வரும் சின்னி ஜெயந்த் நான்கு யூட்யூப் சேனல்களில் பேட்டி கொடுத்ததாக என் மகன் சொன்னான்.

கபாலியையும் காலாவையும் கடுமையாக விமர்சித்தவர்கள் இந்த படத்தை உயர்த்திப் பிடிப்பதும் கூட  ஒரு வித அரசியலாகத்தான் தெரிகிறது. “நிலம் எங்கள் உரிமை” என்ற கருத்தையும் காவிக்கு எதிராக சிவப்பும் நீலமும் கறுப்பும் ஒன்றிணைய வேண்டும் என்பதையும் மிகவும் அழுத்தமாகச் சொன்ன காலாவை விட பேட்ட ஒன்றும் அவ்வளவு உசத்தியாக தோன்றவில்லை.

ஒளிப்பதிவு, பின்னணி இசை போன்ற விஷயங்கள் நன்றாக இருந்தது.

என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒருவருக்கு ஐம்பது வயதிருக்கும். முன் சீட்டில் உட்கார்ந்திருந்தவர் நாற்பது வயதைக் கடந்திருந்தார். ஆனாலும் அவர்களின் அலப்பறை ஓவராகவே இருந்தது.  ஆக ரசிகர்கள் எப்போதுமே ரசிகர்களாக வயது வித்தியாசமில்லாமல் இருக்கிறார்கள். இதுதான் நடிகர்களுக்கு நாற்காலிக் கனவுகளைத் தருகிறது.

ஒரு ஸ்மால் டவுட்:

ரஜனி வில்லனை அவ்வப்போது சுள்ளான் என்று அழைத்து அசிங்கப் படுத்துகிறார். தனுஷ் நடித்த ஒரு படத்தின் பெயர் சுள்ளான் என்றும் ஆரம்ப காலத்தில் அவரை கிசுகிசுக்களில் சுள்ளான் என்றும் குறிப்பிடுவார்கள். வில்லனை சுள்ளான் என்று அழைப்பதன் மூலம் தன் மருமகனுக்கு ஏதாவது செய்தி சொல்கிறாரா ரஜனி?



ஸ்டெரிலைட் எதிர்ப்பு வடிவம் - சிறப்பு

ஸ்டெரிலைட் ஆலைக்கு எதிரான கோலம். முக நூலில் பார்த்தது. கோலத்தின் மூலமாக தங்கள் கோபத்தஒ வெளிப்படுத்திய அந்த பெண்களுக்கு பாராட்டும் வாழ்த்தும்


Thursday, January 17, 2019

பார்த்திபன் விடாத பழக்கம், பாஜகவும் கூட


டாட்டா பிர்லா என்ற படத்தில் ப்ரேக் பிடிக்காத காரை கதாநாயகி ஓட்ட, அதிலே பார்த்திபனும் கவுண்டமணியும் பயணிப்பார்கள்.

கார் ஒரு சவ ஊர்வலத்தின் மீது மோத அந்த சடலம் காருக்குள் வந்து விழும். அந்த சடலத்தின் மீது ஒட்டப்பட்டிருந்த நெற்றிக் காசை பார்த்திபன் எடுக்க "நீ இந்த பழக்கத்தை விடவே மாட்டியாப்பா"  என்று கவுண்டமணி கேட்பார். 

துபாயில் ராகுல் காந்தியை ஒரு சிறுமி கேள்வி கேட்டு நடுங்க வைத்ததாகவும் பதில் சொல்ல முடியாத நிலையில் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாகவும் ஒரு டுபாக்கூர் கதையை காவிகள் கட்டவிழ்த்து விட்டு அந்த பொய் அம்பலமாகி அசிங்கப் பட்டு நின்றதைப் பார்க்கையில் எனக்கு அந்த காட்சிதான் நினைவுக்கு வந்தது. 

"ஏண்டா, இந்த மோசடி செய்யறதை நிறுத்தவே மாட்டீங்களாடா?" 

என்ற கேள்வியும் கூட எழுந்தது.

மோடி வகையறாக்கள் அள்ளி விடும் கற்பனைக் கதைகளை இன்னும் நம்பி பரப்பி வருகின்றவர்கள் மீது அனுதாபமும் கூட.