ஆசானின் அபத்தங்களை அம்பலப்படுத்தும் வரிக்கு வரி பதிலடி நாளை ரிலீஸ். அனாமதேயங்கள் காத்திருக்கவும்
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Thursday, November 24, 2016
Wednesday, November 23, 2016
கேட்க திகட்டாத பாடல்
நான் முதன் முதலில் கேட்ட கர்னாடக இசைக் கச்சேரி என்பது திரு பாலமுரளி கிருஷ்ணா அவர்களுடையதுதான். சிறு வயதில் கேட்ட அந்த கச்சேரி என்பதால் நினைவில் இல்லை.
கர்னாடக இசையில் ஆர்வம் வந்த பிறகு அவருடைய கச்சேரியைக் கேட்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை.திருவையாறு தியாகராஜர் உற்சவத்திற்கு நான் சென்ற வருடங்களில் அவர் வருவது நின்று போயிருந்தது. ஆனாலும் அவருடனான இசைத் தொடர்பு காசெட்டுக்கள் வாயிலாக இருந்து கொண்டுதான் இருந்தது.
கேட்கத் திகட்டாத அவரது குரல் தனித்துவமானது. கம்பீரமானது. அப்படியே ஆளை மயக்கும். ராக ஆலாபனையும் கற்பனாஸ்வரங்களும் நம்மை கட்டிப் போடும்.
மொழி புரியாவிட்டாலும் கூட பத்ராசலம் ராமதாஸர் கீர்த்தனைகளை அவர் பாடும் போது உருகி விடுவோம். உற்சவ சம்ப்ரதாய கிருதிகள் உற்சாகம் தரும்.
அவரது காசெட்டுக்களில் என்னிடம் இருந்தவை பெரும்பாலும் ஒரே ராகத்தில் அமைந்த கீர்த்தனைகள், பஞ்சரத்ன கீர்த்தனை, தவிர ஒரு காஸெட் முழுதும் ஒரு கீர்த்தனை அல்லது இரண்டு கீர்த்தனை என்பது போலத்தான் அமைந்திருக்கும். "நகுமோ" அதில் ஒன்று.
அவரது சமகாலத்திய இசை மேதைகளான பீம்சேன் ஜோஷி, ரவிசங்கர், பிஸ்மில்லாகான் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருது பாலமுரளிக்கு வழங்கப்படாதது ஒரு குறையே.
பாலமுரளி கிருஷ்ணா பற்றி இவ்வளவு பேசி விட்டு அவரது பாடல்களை கேட்காமல் எப்படி இந்த பதிவை நிறைவு செய்வது?
இப்பாடலைக் கேட்க ஒரு யுகம் கூட போதாது.
மௌனத்தில் விளையாடியது மனசாட்சியா ? அல்லது அவரின் குரலா?
ராஜாவின் இசையில் வந்த இப்பாடலில் அவரையும் பார்க்கலாம், மெல்லிசை மன்னரையும் கூட.
கேட்கத் திகட்டாத பாடலாக இருந்தாலும் எனக்கு பிடிக்காத பாட்டு இது.
சிவாஜி கதாநாயகன் என்பதால் வில்லனாக நடித்த நம்பியாருக்காக குரல் கொடுத்த பாலமுரளி கிருஷ்ணாவால் மிருதங்கத்தை சமாளிக்க முடியாமல் தோற்றுப் போவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்பாடலை பாட பாலமுரளி கிருஷ்ணா ஒப்புக் கொண்டிருக்கக்கூடாது. பாடலை பார்த்தால் இதில் உள்ள பல அபத்தங்கள் தெரியும். சின்ன பாடகருக்கு மிகப் பெரிய மிருதங்க மேதை வாசித்தாலும் இப்படி எல்லாம் எங்கும் உட்கார மாட்டார்கள். உட்கார்ந்ததும் கிடையாது.
இந்த மலையாளப்பாடலில் பாலமுரளியும் கே,ஜே.யேசுதாசும் இணைந்து பாடியிருப்பார்கள். மிகவும் அழகாக காட்சிகள் அமைந்திருக்கும், முந்தைய பாடலுக்கு முற்றிலும் முரணாக.
இப்படி ஒரு பாடலையும் கூட அவர் பாடியுள்ளார்.
பாலமுரளி கிருஷ்ணா பற்றி இவ்வளவு பேசி விட்டு அவரது பாடல்களை கேட்காமல் எப்படி இந்த பதிவை நிறைவு செய்வது?
இப்பாடலைக் கேட்க ஒரு யுகம் கூட போதாது.
மௌனத்தில் விளையாடியது மனசாட்சியா ? அல்லது அவரின் குரலா?
ராஜாவின் இசையில் வந்த இப்பாடலில் அவரையும் பார்க்கலாம், மெல்லிசை மன்னரையும் கூட.
கேட்கத் திகட்டாத பாடலாக இருந்தாலும் எனக்கு பிடிக்காத பாட்டு இது.
சிவாஜி கதாநாயகன் என்பதால் வில்லனாக நடித்த நம்பியாருக்காக குரல் கொடுத்த பாலமுரளி கிருஷ்ணாவால் மிருதங்கத்தை சமாளிக்க முடியாமல் தோற்றுப் போவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்பாடலை பாட பாலமுரளி கிருஷ்ணா ஒப்புக் கொண்டிருக்கக்கூடாது. பாடலை பார்த்தால் இதில் உள்ள பல அபத்தங்கள் தெரியும். சின்ன பாடகருக்கு மிகப் பெரிய மிருதங்க மேதை வாசித்தாலும் இப்படி எல்லாம் எங்கும் உட்கார மாட்டார்கள். உட்கார்ந்ததும் கிடையாது.
இந்த மலையாளப்பாடலில் பாலமுரளியும் கே,ஜே.யேசுதாசும் இணைந்து பாடியிருப்பார்கள். மிகவும் அழகாக காட்சிகள் அமைந்திருக்கும், முந்தைய பாடலுக்கு முற்றிலும் முரணாக.
இப்படி ஒரு பாடலையும் கூட அவர் பாடியுள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பாக தொலைபேசியை மாற்றும் வரை வருகிற ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிலும் பாலமுரளி கிருஷ்ணா "சின்னக் கண்ணன் அழைக்கிறான்" என என்னோடே இருந்திருக்கிறார்.
இன்று மீண்டும் சின்னக் கண்ணன் வந்து விட்டான்.
பின் குறிப்பு : காலத்தால் அழியாத ஒரு கலைஞனுக்கான அஞ்சலி இது. காவி அனாமதேயங்கள் தயவு செய்து இப்பதிவிலும் உங்கள் வக்கிரத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இன்று மீண்டும் சின்னக் கண்ணன் வந்து விட்டான்.
பின் குறிப்பு : காலத்தால் அழியாத ஒரு கலைஞனுக்கான அஞ்சலி இது. காவி அனாமதேயங்கள் தயவு செய்து இப்பதிவிலும் உங்கள் வக்கிரத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Tuesday, November 22, 2016
மீண்டும் ஒரு பேரிழப்பு
கணத்த இதயத்தோடு எழுதப்பட்ட சுற்றறிக்கையை இங்கே பகிர்ந்து
கொண்டிருக்கிறேன். உற்சாகமும் உறுதியும் வேகமும் நேசமும் உடைய அன்புத்தோழர் லிடியா
அவர்கள் எங்கள் கோட்டத்தின் மகளிர் துணைக்குழு அமைப்பாளர். மகளிர் தோழர்கள் சங்க
நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக உந்து சக்தி. முன்னுதாரணம். சிறப்பான குணாம்சங்கள்
கொண்ட அத்தோழரை இழந்து தவிக்கிறோம். ஒரு மாத காலத்திற்குள்ளாக இரண்டு அஞ்சலிக்
குறிப்புகள் எழுத நேர்ந்தது மிகப் பெரிய கொடுமை. நானே என்னை சபித்துக் கொள்கிறேன்.
தோழர் லிடியா அவர்களுக்கு வீர வணக்கம்
அன்புத்தோழர் சி.வி அவர்களின் மறைவினால் உண்டான கண்ணீர் காயும் முன்பே
இன்னொரு இடியாக நம் நெஞ்சங்களில் இறங்கியுள்ளது தோழர் ஃப்ளாரன்ஸ் லிடியா அவர்களின்
மறைவுச் செய்தி.
நம் வேலூர் கோட்டத்தின் மகளிர் துணைக்குழு அமைப்பாளரும் முன்னாள்
துணைத்தலைவருமான தோழர் லிடியா 20.11.2016 அன்று வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் காலமானார் என்பதை வருத்ததுடன்
தெரிவித்துக் கொள்கிறோம்.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முயற்சிகள் மூலம் 1989 ம் ஆண்டு
தேசிய தொழில் தீர்ப்பாணையம் (NIT) மூலம் எல்.ஐ.சி பணியில் இணைந்த தோழர் ஃப்ளாரன்ஸ் லிடியா, தன்னை சங்கத்தில்
முழுமையாக இணைத்துக் கொண்டது மட்டுமல்லாமல் முன்னணி செயல் வீரராகவும் திகழ்ந்தார்.
திருவண்ணாமலை கிளைச்சங்கத்தின் பொறுப்பாளராக திறம்பட செயல்பட்ட அவர் மகளிர்
தோழர்களை சங்க நடவடிக்கைகளில் திரட்டுவதிலும் மும்முரமாக ஈடுபட்டார். கோட்டத்தின்
மகளிர் துணைக்குழு அமைப்பாளராக பல மகளிர் தோழர்களுக்கு முன்னுதாரணமாக
செயல்பட்டார்.
வேலூர் கோட்டச்சங்கத்தின் பனிரெண்டாவது பொது மாநாட்டை 1999 ம் வருடம் திருவண்ணாமலையில்
நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு மாநாட்டு வரவேற்புக்குழுச் செயலாளராக
வெற்றிகரமாக மாநாட்டை நடத்தி முத்திரை பதித்தார். மாநாடு துவங்குவதற்கு இரு
தினங்கள் முன்பாக அவரது மகன் வேலூர் சி,,எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தன் குடும்பத்தினரை மகனை கவனிக்கச் சொல்லி விட்டு மாநாட்டை சிறப்பாக நடத்த
வேண்டும் என்பதற்காக திருவண்ணாமலை திரும்பினார் என்பது அவரது மகத்தான சங்க
உணர்விற்கு அடையாளம்.
பல்வேறு அகில இந்திய, தென் மண்டல மாநாடுகளில் பிரதிநிதியாக நமது
கோட்டத்தின் சார்பில் கலந்து கொண்டிருக்கிறார். தொலைதூரப் பயணங்களோ அல்லது பல
நாட்கள் குடும்பத்தை பிரிந்து இருக்க வேண்டுமோ என்பதோ அவரது இயக்க
நடவடிக்கைகளுக்கு என்றுமே தடையாக இருந்ததில்லை. கொல்கத்தாவிலும் மைசூரிலும்
நடைபெற்ற முதலாவது, இரண்டாவது அகில இந்திய மகளிர் மாநாடுகளில் கலந்து கொண்ட
பெருமையும் அவருக்கு உண்டு. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் அகில இந்திய மகளிர்
மாநாட்டில் தென் மண்டலக் கூட்டமைப்பின்
சார்பாக உரையாற்றும் வாய்ப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது, அவரது பணிகளுக்கான
அங்கீகாரம்.
எப்போதுமே உற்சாகமாக இருப்பது மட்டுமல்ல, உடனிருப்பவர்களுக்கும் அந்த
உற்சாகத்தை கடத்தும் மந்திரம் அறிந்தவர். அனைவரோடும் பரிவாக பழகுகிற அன்பு மிக்க
தோழர். எந்த ஊருக்கு பயணம் சென்றாலும் அங்கே கிடைக்கும் முக்கியமான பொருட்களை
தோழர்களுக்குத் தர வேண்டும் என்று ஏராளமாய் வாங்கி எடுத்துச் செல்வார். மகளிர்
மாநாட்டிலும், கோட்ட கலை விழாவிலும் நடனமாடி பாராட்டுக்கள் பெற்றவர்.
பாலிசிதாரர்களுக்கு உரிய சேவை கிடைத்திட வேண்டும் என்பதில் கவனமாக
இருப்பவர். சங்க நடவடிக்கைகளுக்கு மட்டுமல்ல, அற்புதமான பணிக் கலாச்சாரத்திற்கும்
சொந்தக்காரர். அலுவலகப் பணியில் சமரசம் கூடாது என்பதை அனைவருக்கும் வலியுறுத்தி
தானே ஒரு நல்லதொரு முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தோடு அவரது பணி முடிந்து விடவில்லை.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருவண்ணாமலை நகர, மாவட்ட பொறுப்பாளராக
முத்திரை பதித்தவர். பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக களத்திலே
பொங்கி எழுந்தவர். இடதுசாரி தத்துவங்களின் மீதான நம்பிக்கையால் முற்போக்கு
இயக்கங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டவர்.
குடும்பத்தினரையும் சங்க நடவடிக்கைகளில் இணைத்திட்டவர் அவர். அகில் இந்திய
இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின்
இயக்கங்களைப் பற்றியும் நடவடிக்கைகள் பற்றியும் அவர்களுக்குள்ள புரிதல்
நம்மை சிலிர்க்க வைக்கும். மகளிர் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்திய ஆன்லைன்
கையெழுத்து இயக்கத்தில் பதிவு செய்வதற்கு தன்னுடைய மகனை பயன்படுத்தினார்.
தனக்கிருக்கும் நட்பு வட்டத்தை சங்கத்தின் நலனுக்காக பயன்படுத்தும் திறனுடையவர்
என்பது சரோஜ் இல்லக் கட்டுமானப் பணிக்காக திருவண்ணாமலையில் நடைபெற்ற கங்கை அமரன்
இசை நிகழ்ச்சியில் வெளிப்பட்டது.
இரண்டு வருடங்களுக்கு முன்பாக அவரது உடல் நலன் பாதிக்கப்பட்டது. அறுவை
சிகிச்சை, கீமோதெரபி, மீண்டும் சிகிச்சை என்று தொடர்ச்சியாக பல நாட்கள்
மருத்துவமனையில் இருக்க நேரிட்ட போதும் அவரது உறுதி கொஞ்சமும் குறையவில்லை. நான்
முழுமையாக குணமாகி சங்கப்பணிகளில் எப்போதும் போல செயல்படுவேன் என்று சொல்லிக்
கொண்டிருப்பார்.
அது போலவே இந்தாண்டு தொடக்கத்தில் குணமாகி மீண்டு வந்தார்.
திருவண்ணாமலையிலும் விழுப்புரத்திலும் நடைபெற்ற மகளிர் துணைக்குழு கூட்டங்களின் போதும்
சரி, வேலூரிலும் புதுச்சேரியிலும் நடைபெற்ற பத்தொன்பதாவது மகளிர் மாநாட்டில்
பங்கேற்ற போதும் சரி, தோழர் லிடியா அவர்களின் உற்சாகமான செயல்பாட்டை நம்மால்
பார்க்க முடிந்தது. “எந்த ஒரு பிரச்சினைக்காகவும் நாம் துவண்டு போய் சோர்ந்திடக்
கூடாது. உறுதியோடு இருந்தால் எப்படிப்பட்ட நோயோ, பிரச்சினையோ நம்மை எதுவும்
செய்திட முடியாது. அந்த நம்பிக்கையை என்னைப் பார்த்துப் பெறலாம்” என்பதுதான்
அவர் அனைத்து நிகழ்வுகளின் போதும்
அழுத்தமாகச் சொன்ன செய்தி.
1994 ம் வருடம் புதுச்சேரியில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் பேசுகையில் “நான்
எல்.ஐ.சி பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் இறந்தாலும் கூட எனது உடலில் ஏ.ஐ.ஐ.இ.ஏ
வின் கொடி போர்த்தப்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்றார். பணி ஓய்வுக்கு
ஐந்து வருடங்கள் இருக்கும் போதே அவ்வாறு நிகழ்ந்தது பெருந்துயரம்.
தோழர் லிடியா அவர்கள் மறைந்தாலும் அவரது பணிகள் மூலம் என்றென்றும் நம்
நெஞ்சத்தில் வீற்றிருப்பார். காலம் அவரை நம்மிடமிருந்து பிரித்து விட்டாலும் அவரது
வாழ்க்கை, உற்சாகம், உறுதி நம்மை வழி நடத்தும்.
தோழர் ஃப்ளாரன்ஸ் லிடியா அவர்களுக்கும் நம் செவ்வணக்கம்
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்,
வேலூர் கோட்டம்
Monday, November 21, 2016
ஒரு "சேஞ்ச்" சிற்கு இதை பாருங்கள்
கடந்த எட்டாம் தேதி முதல் அனைத்து பதிவுகளுமே மோடியின் மூடத்தனமான நடவடிக்கைகளைப் பற்றியும் அதை ஆதரிக்கிற மூளையை அடகு வைத்த கூட்டத்தைப் பற்றியுமே அமைந்து விட்டதால் மாறுதலுக்காக இந்த பதிவு.
இந்த வீடியோவை பாருங்கள்.
இந்த அழகுக்குழந்தையின் நடனத்தில் உங்களை நிச்சயம் மறப்பீர்கள், மீண்டும், மீண்டும் பார்ப்பீர்கள், என்னைப் போலவே.
ஆசானின் வஞ்சகக் கட்டுரை தொடர்பாக எழுத வேண்டும். ஒரு முன்னணித் தோழரின் மறைவினால் உடலும் உள்ளமும் சோர்வாய் உள்ளது. அதனால்தான் மாறுதலுக்காக இப்பதிவு
Saturday, November 19, 2016
ஆ.வி நிறைவேற்றுமா இந்த ஆசையை?
ஏற்கனவே பல முறை இப்பிரச்சினை குறித்து எழுதியுள்ளேன். அதனையே ஆனந்த விகடன் இதழுக்கும் அனுப்பியுள்ளேன். அந்த மின்னஞ்சலை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
கடந்த வியாழன் இரவு பதினோரு மணிக்கு சென்னை சென்று திரும்புகையில் வீட்டு வாசலில் சூழ்ந்து கொண்டது தெரு நாய்கள் கூட்டம். எனது காரை ஓட்டி வந்த ஓட்டுனர் இரண்டு சக்கர வாகனம் வைத்திருந்தாலும் அதிலே போக முடியாத சூழ்நிலை. காரிலே வீட்டுக்குப் போய் விட்டு காலையில் கொண்டு வந்து விடுங்கள் என்று சொல்லி அனுப்பினேன்.
தெரு நாய்களின் மக்கட்தொகை அதிகரித்துக் கொண்டே இருப்பது பற்றியும் அதனுடைய பிரச்சினை பற்றியும் மேனகா காந்திக்கு கொஞ்சமாவது புரிதல் வேண்டும் என்றால் அவர் தன்னந்தனியாக இரவு நேரத்தில் நடந்து பார்க்க வேண்டும்.
ஆனால் இந்த ஆசை நிறைவேறாது என்ற யதார்த்தத்தையும் புரிந்தே வைத்துள்ளேன்.
கடந்த வியாழன் இரவு பதினோரு மணிக்கு சென்னை சென்று திரும்புகையில் வீட்டு வாசலில் சூழ்ந்து கொண்டது தெரு நாய்கள் கூட்டம். எனது காரை ஓட்டி வந்த ஓட்டுனர் இரண்டு சக்கர வாகனம் வைத்திருந்தாலும் அதிலே போக முடியாத சூழ்நிலை. காரிலே வீட்டுக்குப் போய் விட்டு காலையில் கொண்டு வந்து விடுங்கள் என்று சொல்லி அனுப்பினேன்.
தெரு நாய்களின் மக்கட்தொகை அதிகரித்துக் கொண்டே இருப்பது பற்றியும் அதனுடைய பிரச்சினை பற்றியும் மேனகா காந்திக்கு கொஞ்சமாவது புரிதல் வேண்டும் என்றால் அவர் தன்னந்தனியாக இரவு நேரத்தில் நடந்து பார்க்க வேண்டும்.
ஆனால் இந்த ஆசை நிறைவேறாது என்ற யதார்த்தத்தையும் புரிந்தே வைத்துள்ளேன்.
பெறுனர்,
ஆசிரியர்,
ஆனந்த விகடன்,
சென்னை.
அன்புடையீர்,
ஆசை
பகுதியை தொடர்ந்து படித்து வருகிறேன். எனக்கும் ஒரு ஆசை நீண்ட நாட்களாக
உண்டு. அதனை உங்களது முயற்சிகள் வாயிலாக நிறைவேற்ற வாய்ப்புள்ளதா என்று
எதிர்பார்ப்பிலேயே இக்கடிதத்தை அனுப்புகிறேன்.
தெரு
நாய்கள் மீது மத்தியமைச்சர் மேனகா காந்திக்கு உள்ள பரிவும் அதன் காரணமாக
அவர் எடுத்த நடவடிக்கைகளும் இன்று தெரு நாய்களின் அபரிமிதமான
பெருக்கத்திற்கு உதவியுள்ளது.
தெரு
நாய்கள் மீது அவருக்குள்ள பிடிப்பை தெரு நாய்கள் அறியுமா என்று எனக்கொரு
சந்தேகம். அது போல தெரு நாய்கள் மக்களை எப்படி அச்சுறுத்துகின்றன என்பது
திருமதி மேனகா காந்திக்கு தெரியுமா என்பதும் இன்னொரு சந்தேகம்.
ஆக
இந்த ஐயங்களை போக்கும் வண்ணம், திருமதி மேனகா காந்தி அவர்களை வேலூரில்
உள்ள சத்துவாச்சாரி பகுதியில் இரவு பத்து மணிக்கு மேல் நடந்து செல்லுமாறு
ஏற்பாடு செய்திட வேண்டும் என்பதே என் ஆசை.
இத்துடன்
உள்ள இணைப்பில் இருக்கிற முதல் படம் கடந்த வியாழன் இரவு சென்னை சென்று
இரவு பதினோரு மணிக்கு வீடு திரும்புகையில் என் வீட்டு வாசலில் எடுத்த படம்.
இரண்டாவது
படம் வேலூர் சத்துவாச்சாரியின் பிரதானமான வணிகப் பகுதியான ஆர்.டி.ஓ அலுவலக
சாலையில் இரவு எட்டு மணிக்கு தெரு நாய்கள் மாநாடு நடத்திக்
கொண்டிருந்தபோது எடுத்த படம்.
தெரு
நாய்கள் பற்றி திருமதி மேனகா காந்தி அவர்கள் ஒரு நேரடி அனுபவம் பெற
வேண்டும் என்ற எனது ஆசையை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள் என்று
நம்புகிறேன்.
பசுக்கள்
மீது பாசத்தை வெளிப்படுத்தி கோசாலைகளை ஏற்படுத்தும் இன்றைய மத்தியரசு
(ராஜஸ்தானில் அதன் அவலமான நிலையின் அனுபவத்தை படித்த போதிலும்) ஏன் தெரு
நாய் சாலா அல்லது அவர்களுக்கு பிரியமான மொழியில் பைரவசாலா கூட அமைக்கலாமே.
இதை நகைச்சுவையாக ஒதுக்கிட மாட்டீர்கள் என நம்புகிறேன்.
வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள
எஸ்.ராமன்,
56 இஞ்சரின் அடுத்த துல்லிய தாக்குதல் சுப்ரீம் கோர்ட் ??????
கண்ணீர் துடைத்து சாட்டையை கையிலெடுங்கள் என்று சில மாதங்கள்
முன்பாக எழுதி இருந்தேன்.
உச்ச நீதிமன்றம் இப்போது சாட்டையை கையில் எடுத்துள்ளது, உயர்நீதி மன்ற
நீதிபதிகள் நியமனத்திற்கு தாங்கள் பரிந்துரை செய்த பெயர்களை மோடி அரசு
நிராகரித்ததை கண்டித்து அவர்களையே நியமிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி
கூறியுள்ளார்.
தற்போதைய கொலேஜியம் முறை என்பது மாற்றப்பட வேண்டியது என்பதிலும் நீதிபதிகள்
நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதிலும் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும்
கிடையாது.
மோடி அரசு கொண்டு வந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு முரணானது என்று உச்ச
நீதிமன்றம் சொல்லி விட்டது.
அதற்குப் பிறகு மத்தியரசு என்ன செய்திருக்க வேண்டும்?
அனைத்து அரசியல் கட்சிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியோரோடு கலந்து
பேசி ஒரு புதிய முறையை உருவாக்கியிருக்க வேண்டும். மாறாக பிரச்சினையை அப்படியே
கிடப்பில் போட்டு விட்டார்கள். நீதிபதிகளை நியமித்தால் அரசியல் ஆதாயம் எதுவும்
கிடைக்காதல்லவா?
உச்ச நீதிமன்றம் அளித்த பரிந்துரைகளில் 34 பேரை ஏற்றுக் கொண்டுள்ளனர். 43 பேரை
நிராகரித்துள்ளனர்.
காரணம்
மோடிக்கே வெளிச்சம்!
இப்போது தாங்கள் அளித்த பரிந்துரைப்படி 43 பேரையும் நியமனம் செய்யுங்கள் என்று உச்ச
நீதிமன்றம் கண்டிப்பாக தெரிவித்துள்ளது. அரசுக்க வேறு வழியில்லை என்றும் சொல்கிறார்கள்.
மோடி அரசு என்ன செய்யப் போகிறது?
செல்லாத நோட்டுப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் சொல்வதெல்லாம் நிச்சயமாக
மோடிக்கு உவப்பாக இருக்காது.
உச்ச நீதிமன்றத்தின் மீதும் ஒரு துல்லிய தாக்குதல் நடத்தி அனைத்து
நீதிபதிகளையுமே பணி நீக்கம் செய்து விடுவாரோ?
பார்ப்போம்.
இந்திய அரசியல் மேலும் பரபரப்பாகப் போகிறது.
Subscribe to:
Posts (Atom)




