Thursday, January 8, 2015

அறிவியல் போர்வையில் உளரும் ஆன்மீகப் புளுகர்கள்



 
கற்பனைக்கு வடிவம் தந்து
கருவியை உற்பத்தி செய்தால்
அதற்குப் பெயர் அறிவியல்.
கற்பனைதான் அறிவியல்
என்று சாதித்தால்
அதற்கு என்ன பெயர்?

அனைத்தும் அறிந்தவர்
அனைத்தையும் படைத்தவர்
ஆற்றல் மிக்க முன்னோர்
என்று கதைப்போரே,
ஏட்டில் உள்ளதாக
நீங்கள் சொல்லும் எதுவுமே
எங்கும் ஏன் காணவில்லை?

படைத்தவரே அழித்தாரா?
படைக்காமல் அழிந்தாரா?
அதற்கொரு கற்பனைக்கதை
என்று படைப்பீர் நீங்கள்?

அறிவியல் கதைவுகளில்
புனைவு இருக்கலாம்.
புனைவுக் கதைகளையே
அறிவியல் ஆக்காதீர்.

நாங்கள் ஒன்றும்
கேணையர்கள் அல்ல,
கேழ்வரகில் நெய்
வடியும் கதைகளை நம்ப.

அண்டப் புளுகர்கள்,
ஆகாயப் புளுகர்கள்
மட்டுமல்ல அவர்கள்.
ஆட்சியில்அமர்ந்து கொண்டு
அறிவியல் போர்வையில் உளரும்
ஆன்மீகப் புளுகர்கள்.

Wednesday, January 7, 2015

நாலு புள்ளைங்கள வளர்க்க துட்டு மோடி மவராசா தருவாரா?





இவங்க ஆட்டம் தாங்கவே முடியலையே. வேற எல்லா வேலையையும் ஏறக்கட்டிட்டு இவங்க பண்ற அராஜகத்தை மட்டுமே எழுதினாலும் நேரம் போதாது போலிருக்கே.

முஸ்லீம் எல்லாம் நாலு கல்யாணம் செஞ்சு நாற்பது புள்ளைங்கள பெத்துக்கிறாங்களாம். அதனால ஹிந்து ஜனத்தொகையை உசத்த ஒவ்வொரு பெண்ணும் நாலு குழந்தைகளை பெத்துக்கனுமாம்.

இதைச் சொன்னவரு சாக்சி மகராசு னு ஒரு நாடாளுமன்ற உறுப்பினராம். யப்பா, உங்க பிரதமர முதல்ல ஒரு பிள்ளையாவது பெத்துக்க சொல்லுன்னு ஒருத்தரு எழுதியிருந்தாரு. அந்த கதையெல்லாம் நமக்கு வாணாம்.

நாலு புள்ளை பெத்துக்கிட்டா பிரசவ செலவு, ஸ்கூல்ல எல்.கே.ஜி தொடங்கி பன்னண்டாவது வரைக்கும் கான்வெண்டுங்க அடிக்கிற கொள்ளை, புத்தக மூட்டை, ஆட்டோ இல்லை பஸ் செலவு, நடுவுல உடம்பு சரியில்லைனா டாக்டர் செலவு, காலேஜ் பீசு, கேபிடேஷன் பீசு, ஹாஸ்டல் பீசு, மண்டை மண்டையா புக்கு வாங்கிற காசு, படிச்சு முடிச்சப்பறம் வேலை, வேலை வாங்க லஞ்சம், அதுக்கப்பறமா கல்யாண செலவு, இதுவே பொட்டப் புள்ளையா இருந்தா வரதட்சணை, நகை நட்டு சீரு, டூ வீலரு, அதுக்கப்பறமா தலை தீபாவளி, தலைப் பொங்கல், சீரு, அதுக்கு பிரசவ செலவு.

இது எல்லாத்துக்கும் துட்டு அந்த சாக்சி மகராசா கொடுப்பாரா?
அவருகிட்ட துட்டு இல்லைனா அருண் ஜெட்லி கிட்ட வாங்கிக் கொடுப்பாரா? இல்லை மோடி மவராசா கொடுப்பாரா?

துட்டு கொடுப்போம்னு சொன்னா மட்டும் பத்தாது ஸ்டாம்ப் பேப்பர்ல எழுதிக் கொடுக்கனும். மாசாமாசம் ஜீரோ பாலன்சுல ஆரம்பிச்ச ஜன் தன் அக்கவுண்டல பணம் போடனும்.

இதெல்லாம் செய்றேனு ஒத்துக்கிட்டா நாலு புள்ளைங்கள பெத்துக்கலாமானு யோசியுங்க.

இவிய்ங்க ரஜனியை பாராட்டறங்களா? ஓட்டறங்களா?





மேலே உள்ள படத்தை பார்த்தீங்களா?

இவிய்ங்க ரஜனியை பாராட்டறங்களா? ஓட்டறங்களா?
நமக்கு ஒன்னும் புரியலையே!
ஒரு வேளை நக்கல்தானோ?

சொல்லுங்கண்ணே சொல்லுங்க

Tuesday, January 6, 2015

அடுத்து ரூபாய் நோட்டுல கோட்சே படம்தானே?




கோட்சேவிற்கு சிலை வைக்கச் சொல்லி விட்டார்கள்.
பிறகு கோயில் கட்ட வேண்டும் என்றும் சொன்னார்கள்.
இப்போது கோட்சேவால் கொல்லப்பட்ட மகாத்மா காந்தி படத்தை ரூபாய் நோட்டிலிருந்தும் எடுக்கச் சொல்லி விட்டார்கள்.

அடுத்து எங்கே வருவார்கள் என்று யூகிக்க முடிகிறதா?

கோட்சேவின் படத்தை ரூபாய் நோட்டில் அச்சிடுங்கள் என்று சொல்வார்கள்.

அது தவறு என்று அவர்கள் கூட்டத்திலேயே ஒருவர் சொல்வார்.
இதிலென்ன தவறு என்று இன்னொருவர் கேட்பார்.

இப்படி விவாதம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் சத்தம் இல்லாமல் இந்தியா வருகிற ஒபாமாவிற்கு இந்தியாவை விருந்து கொடுத்து விடுவார்கள்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

பேசாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பே கோட்சே படத்தைப் போட்டு அவர்களே ரூபாய் நோட்டை அச்சிட்டு அவர்களுக்குள் புழக்கத்திற்கு விடலாம். அம்பானி, அதானி ஆகியோரிடம் கொடுத்தால் அவர்கள் வாங்கிக் கொள்ள மாட்டார்களா என்ன?

அவர்கள் உதவிக்கு ஒரு மாதிரி நோட்டு உள்ளது. நோட்டின் எண்ணை மறக்காமல் கவனியுங்கள்.


முதல் திருநங்கை மேயரா?





மது கின்னார் என்ற திருநங்கை பாஜக வேட்பாளரை 4500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சத்திஸ்கர் மாநிலம் ராய்கர் மாநாகராட்சியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதுதான் இன்றைய தலைப்புச் செய்தி.

உண்மையிலேயே இரண்டு அம்சங்களில் மகிழ்ச்சி தரும் செய்தி இது.

பாஜகவை தோற்கடித்தது என்பது முதல் நல்ல விஷயம்.

இரண்டாவது ஒரு திருநங்கைக்கு அந்த மாநகர மக்கள் கொடுத்துள்ள அங்கீகாரம். பிச்சையெடுப்பதும் பாலியல் தொழிலும்தான் அவர்களுக்கு விதிக்கப்பட்டது என்பதை மாற்ற பலரும் முயலும் போது இச்செய்தி திருநங்கைகளுக்கும் அவர்களுக்காக பாடுபடுபவர்களுக்கும் உற்சாகம் அளிக்கிற செய்தி.

மது கின்னாருக்கு வாழ்த்துக்கள். அவரை தேர்ந்தெடுத்த மக்களுக்கு பாராட்டுக்கள். அவரது செயல்பாடுகள் சிறப்பாக அமைய வேண்டும். அப்போதுதான் திருநங்கைகளுக்கு அரசியல் களத்தின் வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

ஆனால் இவர்தான் முதல் திருந்ங்கை மேயரா?

எனது நினைவுகள் சரியாக இருக்குமானால் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தோர் மற்றும் போபால் மாநகர மேயராக திருங்கைகள் பல வருடங்கள் முன்பே வெற்றி பெற்றுள்ளனர்.

வேண்டுமானால் இப்பtடி  சொல்லலாம்.

திருநங்கைகள் மூன்றாவது பாலினம் என்று அதிகார்வபூர்வமாக அறிவிக்கப் பட்ட பிறகு  வெற்றி பெற்ற முதல் திருநங்கை என்று சொல்வது வேண்டுமானால்  சரியாக இருக்கலாம்..