Thursday, June 23, 2016

மந்திரி போலவே மேயரையும் தூக்கி அடிக்க . . .




மாநகராட்சி மேயரை நேரடியாக தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்க வழி செய்யும் மசோதாவை ஜெ அரசு கொண்டு வந்துள்ளது.

முன்பு இதே போன்ற சட்டத்தை கொண்டு வந்த திமுக இப்போது எதிர்ப்பது வெறும் அரசியல். அவ்வளவுதான்.

இதன் பாதக சாதகம் பற்றி நான் எதுவும் எழுதப் போவதில்லை.

இந்த மசோதா கொண்டு வரப்பட்டதன் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றிய என்னுடைய தியரியைத்தான் எழுதுகிறேன்.

சென்னையில் தோல்வி பயம், மற்ற ஊர்களில் சிரமம் என்பதெல்லாம் அல்ல பிரச்சினை. ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் ஐந்தாண்டுகளில் இருபத்தி ஐந்து முறைகளுக்கு மேல் மந்திரிகள் மாற்றப்பட்டார்கள். நேற்று மந்திரி, இன்று எந்திரி என்பதுதான் நிலைமை. சபாநாயகரைக் கூட மாற்றிய பெருமை ஜெயலலிதாவிற்கே உண்டு.

நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதால் அவரால் அவ்வளவு சுலபமாக மேயர்களை மாற்ற முடியவில்லை. மாற்றினால் அடுத்த மேயரை தேர்தல் மூலமாகத்தான் கொண்டு வர முடியும்.  மந்திரிகள் உள்ளே, வெளியே ஆட்டம் போல நினைத்த போதெல்லாம் மேயர்களை மாற்றிக் கொண்டிருக்க முடியாது. 

ஆகவே வந்தாச்சு மசோதா.

இனி மேயர்களின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் கிடையாது. அமைச்சர்கள் போல அற்பாயுசு பதவிக்காலம்தான், 

 

1 comment:

  1. பார்ப்போம் என்னதான் செய்கிறார்கள் என்று ?

    ReplyDelete