Wednesday, August 24, 2022

ஆட்சியாளர்னா முட்டுதான் - மாலன்

 


முக நூலில் ஒருவர் இன்னொருவர் பற்றி எழுதுகிறார். சிலப்பதிகாரம் பற்றி அவர் எழுதிய நூல் பற்றி அவர் குறிப்பிடுகிறார்.

அங்கே அண்ணன் மாலன் வந்து “ லாக்கப் மரணம் ( Custodial Death) பற்றி குறிப்பிட்ட முதல் இலக்கியம் இதுதான் தெரியுமா?” என்று தன் மேதா விலாசத்தை காண்பித்தார்.

கோவலன் மரணம் என்ன லாக்கப் மரணமா?

லாக்கப் மரணம் என்பது கைது செய்யப்பட்டவரை நீதி மன்றத்துக்கு அனுப்பும் முன்னர் போலீஸ்காரர்களே அடித்துக் கொல்லும் இழிச் செயல்.

கோவலன் மரணம் அப்படிப்பட்ட மரணமா?

ராணியின் சிலம்பை திருடியது கோவலன் என்று அவசரப்பட்டு முடிவெடுத்து கொலை செய்ய உத்தரவிட்டது பாண்டிய மன்னன். மன்னன் செய்த தவறை கீழே உள்ளவர்கள் கணக்கிற்கு மடை மாற்றுவது எப்படி சரியாக இருக்கும்?

கோவலன் கொலை லாக்கப் மரணம் ( Custodial Death) என்ற வரையறைக்குள் வராது. அதை அரசு பயங்கரவாதம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று அவருக்கு பதில் சொன்னேன். எதிர்வினை ஏதும் இன்னும் அவரிடமிருந்து வரவில்லை.


 

மோடிக்குத்தான் முட்டு கொடுக்கிறார் மூமூமூத்த்த்த்த பத்திரிக்கையாளர் என்று நினைத்தால் ஆட்சியாளராக யார் இருந்தாலும் அவர்களுக்கு முட்டு கொடுப்பார் போல!!!!

No comments:

Post a Comment