கடந்த மாதம் இன்டிகோ விமானத்தில் ரெய்ப்பூர் சென்றேன். காலை 8 மணிக்கு விமானம். சீக்கிரமாக எழுந்து விமான நிலையம் சென்றேன். விமான நிலையத்துக்கு வெளியே இரண்டு இட்லி சாப்பிடலாம் என்று நினைத்தால் வாய்ப்பில்லாமல் போய் விட்டது.
செக்
இன் செய்து செக்யூரிட்டி சோதனை முடிந்த பின்னர் அங்கேயே ஏதாவது கடையில் ஏதாவது சாப்பிடலாம்
என்றால் ரெய்ப்பூரெல்லாம் வாங்க வாங்க என்று டவுன் பஸ் போல கூவ நேராக விமானத்திற்கு
சென்றாகி விட்டது. பசி வயிற்றைக் கிள்ள ஹோட்டல் சர்வரிடம் கேட்பது போல விமானப் பணிப்
பெண்களிடம் கேட்க, முந்திரிப் பருப்பு, போஹா, உப்புமா ஆகிய மூன்றும் இருப்பதாகச் சொல்ல,
உப்புமாவை தரச் சொன்னேன். ஒரு டப்பாவை திறந்து அதிலே சுடு நீரைக் கொட்டிக் கலந்து ஐந்து
நிமிடம் கழித்து சாப்பிடச் சொன்னார்கள். கடுகும் கொஞ்சமாக உப்பும் கலந்த வேக வைத்த
ரவா. அவ்வளவுதான். இதற்குப் பெயர் உப்புமா. தொட்டுக் கொண்டு சாப்பிட இணை உணவு எதுவும்
கிடையாது. அங்கங்கே கடிபட்ட சில முந்திரிப் பருப்புக்கள் மட்டுமே துணை.
அதன்
விலை ரூபாய் 200.
டப்பாவின்
மூடியைப் பார்த்தேன்.
அதிலே
அச்சிட்டிருந்தார்கள்
“உலகப்புகழ்
உப்புமா” என்று.
பிகு:
சென்னை திரும்புகையில் இந்த வறட்டு உப்புமாவை சாப்பிடுவதற்கு பதிலாக பசியோடு இருப்பது
மேல் என்று இருந்து விட்டேன்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஉடற்கேலி செய்யும் உம் கீழ்த்தரப் பதிவுகளுக்கு எப்போதும் அனுமதி கிடையாது. உம் நேரத்தையும் என் நேரத்தையும் விரயம் செய்யாதீர்
Delete