Wednesday, November 22, 2017

ஒரு புலனாய்வுப் பூனையின் கேவலமான செயல்


 ராய்ப்பூர் ராமனின் சில்லரைச் சேட்டை






ஆர்எஸ்எஸ் அமைப்பினால் வளர்க்கப்பட்ட பாஜகவைச் சேர்ந்த கல்யாண்ராமன் என்பவர் மதுரை தீக்கதிர் அலுவலகத்திற்கு போன் செய்து தாம் ராய்ப்பூரிர் உள்ளஜிண்டால் கம்பெனியிலிருந்து பேசுவதாகக் கூறி ஆசிரியரின் அலைபேசி எண்ணை வாங்கியுள்ளார்.ஆசிரியரின் அலைபேசி எண்ணிற்கு அழைத்து நவ.17-ஆம்தேதி தீக்கதிர் ஏட்டில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங்கின்மருமகள் ஐஸ்வர்யா, அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது 1500 நோயாளிகளை வெளியேற்றி ஒரு தளத்தையே காலிசெய்து ஏழை-எளிய கர்ப்பிணிப் பெண்களை - படுக்கைக்கு இரண்டு மூன்று பேராக இருக்க வைத்ததாக வெளியாகியுள்ள செய்தி உண்மையல்ல என்று கூறினார். தம்மை ராய்ப்பூர் ராமன் என்றும் ராய்ப்பூர் அரசு மருத்துவமனையிலிருந்து பேசுவதாகவும் அங்கு இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும் கூறினார்.

இணையதளத்தில் வெளிவந்த செய்தியை அடிப்படையாகக்கொண்டு அந்த செய்தி வெளியிடப்பட்டதாக ஆசிரியர் கூறியுள்ளார். இது குறித்த செய்தி என்டிடிவி, டைம்ஸ்நவ் தொலைக்காட்சிகளில் விரிவாக ஒளிபரப்பப்பட்டதோடு அவர்களது இணையதளத்திலும் விரிவாகபடத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையும் தேசாபிமானி பத்திரிகையும் இந்த செய்தியை விரிவாக வெளியிட்டுள்ளன.சத்தீஸ்கர், அம்பேத்கர் அரசுமருத்துவமனையில் சில குழந்தைகள் இறந்தன. இதனால் ராமன் சிங் அரசிற்கு பெரும் கெட்டபெயர் ஏற்பட்டது. இதை சரி செய்ய தம்முடைய மருமகளையே அரசு மருத்துவமனையில் சேர்த்து தன்னுடைய ‘எளிமையை’ அவர் பறைசாற்ற முயன்றார். ஆனால், 1500 பேரை வார்டிலிருந்து வெளியேற்றி தவிக்கவிட்டதால் அதுவேஅவருக்கு எதிராகத் திரும்பிவிட்டது. அதைத் தான் தீக்கதிர் செய்தியாக வெளியிட்டிருந்தது. ராமன் சிங்கிற்கு வராத ஆத்திரம் கல்யாண்ராமனுக்கு வந்திருக்கிறது.ஏதோ பெரிய புலனாய்வுப் புலிபோல தன்னை நினைத்துக்கொண்டு தவறான பெயரில் உரையாடி அம்பலப்பட்டு நிற்கிறார். 

சத்தீஸ்கர் பாஜக அரசு இந்தச் செய்தியை இதுவரை மறுக்கவில்லை. ஆனால், ராய்ப்பூர் ஜி.எச்-சிலிருந்து பேசுவதாகக் கூறி, அப்படி நடக்கவேயில்லை என்றுகல்யாண்ராமன் தன்னை மறைத்துக்கொண்டு கூறியதால் செய்திகுறித்து சரிபார்ப்பதாக ஆசிரியர் கூறியுள்ளார். இதுதான் பத்திரிகைதர்மம். ஆனால், அடுத்தடுத்து கல்யாண்ராமன், தமிழ்நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாதம் மட்டும்தான் உள்ளது; ராய்ப்பூருக்கே நான் தான் அதாரிட்டி என்றும் கேரளமுதல்வர் பினராயி விஜயன் குறித்தும் கேரள அரசு குறித்தும் அவதூறான வகையில் பேசியுள்ளார்.ஆசிரியர் அளித்த பதிலையும்அவர் காதில் வாங்கத் தயாராக இல்லை. 

இந்த நிலையில் தன்னுடைய முகநூலில் (இவர் பல்வேறு பெயர்களில் போலியான ஐ.டி.மூலம் பல முகநூல் பக்கங்களை வைத்துள்ளார்) ஆசிரியரின் படத்தை வெளியிட்டு அவரது அலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு, திட்டித் தீர்க்குமாறு பதிவிட்டுள்ளார். மேலும் தீக்கதிரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இழிவுபடுத்தி எழுதியுள்ளார். இவரது முகநூல் பக்கம் முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக விஷம் கக்குவதாகவும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் பல பதிவுகள்உள்ளன. நேரடியாக வன்முறையைத் தூண்டுவதாக உள்ளன. இவரது பதிவைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ், பாஜகவைச் சேர்ந்தபலர் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் அலைபேசியில் அழைத்து ஆபாசமான வார்த்தைகளால் ஆசிரியரை திட்டியதோடு கொலைமிரட்டல் விடுக்கும் வகையில் பேசிவருகின்றனர்.இதுகுறித்து மதுரை மாநகரகாவல் ஆணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அழைப்புவந்த அலைபேசி எண்களும் காவல்துறையிடம் தரப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநில முதல்வர் குறித்து வெளியான செய்தி முற்றிலும் உண்மையானது என்பது ஊடகங்களால் தெளிவாக மெய்ப்பிக்கப் பட்டுள்ளது. திருவாளர் கல்யாண்ராமன் ஜெயலலிதா ஆட்சியின்போது அவதூறு புகாரின் பேரில் கைது செய்யப்பட்டவர். பலரையும் அவதூறாகப் பேசி விஷம் கக்குவதையே தொழிலாகக் கொண்டவர். இவரைப் போன்ற சில்லரைகளின் சேட்டைக்கு தீக்கதிர் ஒருபோதும் அஞ்சாது. நியாயத்தின் பக்கம் நின்று தொடர்ந்து தனது பணியைச் செய்யும்.

நன்றி - தீக்கதிர் 22.11.2017

2 comments:

  1. டி ராஜேந்தர் ஒரு கேவலமான ஈத்தரை பிறவி
    அதுக்கு சுய அறிவே கிடையாது

    ReplyDelete
    Replies
    1. இது பதிவுக்கு தொடர்பே இல்லாத பின்னூட்டம்?

      Delete