நான் வேலூர் வந்த நாள் முதல் பார்க்கிற, ஏன் சற்று
வெறுப்போடு கூட கவனிக்கிற ஒரு விஷயம் இறப்பின்
போது நிகழ்கிற ஆரவாரங்கள்.
மரணம் என்பது ஒரு வருத்தமான விஷயம். அது யாராக
இருந்தாலும். அந்த மரணம் அதற்குரிய சோகத்துடன்
அனுசரிக்கப்படுகின்றதா என்ற கேள்வியை பல முறை
எழுப்பும்படி சம்பவங்கள் நடக்கின்றன.
இறுதிச்செலவுக்கு பணம் இருக்குமா, இல்லையா என்ற
நிலையில் கூட கண்டிப்பாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள்
வந்து விடும். நீங்கள் காலை வீட்டை விட்டு வெளியே
வந்தால் அன்று யார் இறந்து போயுள்ளார்கள் என்பதை
கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் சொல்லி விடும்.
இப்போது புதிய வரவு கண்ணீர் அஞ்சலி ப்ளெக்ஸ்
போர்டுகள். இதுவும் இப்போது கட்டாயமாகி விட்டது.
இறந்தவருக்கு அஞ்சலி செலுத்த மாலையோடு
வருவது என்பது மரபு. மாலையோடு ஆரவாரத்தோடு,
ஆட்டம் பாட்டத்தோடு, சிலம்பு சுற்றிக் கொண்டு வருவது
பட்டாசு வெடித்துக் கொண்டு வருவது, ஏதோ அந்த
மரணத்தைக் கொண்டாடுவது போலவே தோன்றுகிறது.
இறுதி ஊர்வலத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகளுக்கு
ஏதோ உள் நோக்கம் உள்ளது போலவே இருக்கிறது.
சாலையில் வரும் வாகனங்களைக் கொஞ்சம் கூட
சட்டை செய்யாமல் அவர்களையும் இறந்தவருக்கு
துணையாக அனுப்பும் திட்டமோ என்று தோன்றுகிறது.
இறந்து போனவரை அமைதியாக அடக்கமோ
தகனம் செய்யலாமே! இத்தனை ஆரவாரம் தேவையா?
வேலூரில் மட்டும்தான் இந்த நிலையா அல்லது
எல்லா ஊர்களிலும் இப்படித்தானா?

எல்லா ஊர்களிலும் இப்படித்தான் Alagar Thondamanpatti Madurai
ReplyDelete