Thursday, April 19, 2012

நான் மிகவும் பெருமையாய் உணர்ந்த தருணம்.



தமிழ்வீதி வலைப்பக்கத்தில் வெளியான தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களின் நேர்காணலின் ஒரு கேள்விக்கான பதில். கடைசி பத்தியை படிக்கையில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க உறுப்பினர் என்ற முறையில் மிகவும் பெருமையாக உணர்ந்தேன். நன்றி தோழர் தமிழ்ச்செல்வன். இந்த வார்த்தைகள் மிகவும் உற்சாகம் அளிக்கிறது. வேகமும் கூட


இனிய உதயம் ஏப்ரல் 2012 இதழில் வெளியான  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் நேர்காணலிலிருந்து 

9.ஒரு படைப்பாளி என்பதையும் தாண்டி தொழிற்சங்க இயக்க அனுபவம் உள்ளவர் நீங்கள். இன்றைய தொழிற்சங்கங்களின் நிலையைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

இன்றைய தொழில் நிலைமை என்னவாக இருக்கிறது என்பதைப் பொறுத்து தொழிற்சங்க நிலையும் இருக்கும்.இன்று நிரந்தரத் தொழிலாளிகள் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாகக் குறைந்து விட்ட்து.எல்லாம் தற்காலிக ஊழியர்,காண்ட்ராக்ட் ஊழியர்,அவுட்சோர்சிங் முறை என்று வந்துவிட்டது.ஆகவே பழையபாணியிலேயே தொழிர்சங்க இயக்கத்தை நட்த்திச் செல்ல முடியாது என்கிர புதிய நிலை உருவாகியுள்ளது.பன்னாட்டுக் கம்பெனிகளுக்குள் இந்திய தொழிற்சங்க மற்றும் தொழிற்தகராறு சட்டமெல்லாம் செல்லாது என்று நாம் தேர்ந்தெடுத்த அரசுகளே அடிமைச் சாசனம் எழுதிக்கொடுத்துள்ளன.அதை மீறி அக்கெம்பெனிகளுக்குள் சி..டி.யு சங்கம் துவக்கப்பட்ட்தும், போராட்டங்கள் நடைபெற்றதும் தோழர் .சவுந்திரராசன் கைவிலங்கு பூட்டிக் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட்தும் சமீபத்திய வரலாறு.பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு எதிராக தமிழ்நாடு சிஐடியு நட்த்திவரும் போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் உடையவை.சமூக ஆய்வாளர்கள்கூட அதை இன்னும் சரியாக கவனிக்கவில்லை என்பது வருத்தம் தருகிறது.திருப்பூரில் காண்ட்ராக்ட் தொழிலாளிகள் ஒரு மில்லை முற்றுகையிட்டு உடைத்து நொறுக்கியது அதை விடச் சமீபத்திய செய்தி. போலீஸ் அனுமதிபெற்ற உண்ணாவிரதம்,தர்ணா போன்ற வடிவங்களும் தொடர்கின்றன.அவை போதாது என்கிற யதார்த்த நிலையும் வளர்ந்து வருகிறது.ஆள் நடமாட்டமிலாத சந்து பொந்துகளில்தான் ஆர்ப்பாட்டங்கள் நட்த்த போலீஸ் அனுமதி தருகிறது.இது காலப்போக்கில் காவல்துறையை போடா என்று சொல்லிவிட்டு தொழிலாளி வர்க்கம் தெருவில் இறங்கும் சூழ்நிலையை உருவாக்கும் என நம்புகிறேன்.

மிக அதிகமான தொழிலாளர் இயக்கங்கள் தேவைப்படுகிற இக்காலத்தில் தொழிலாளிகள் அந்த அளவுக்கு சங்க நடவடிக்கைகளில் ஈடுபடாத மனநிலைக்குத் தயாரிக்கப்பட்டு வருவது ஆபத்து.பண்பாட்டுத் தளத்தில் தொழிலாளி தனக்கே எதிராகத் தயாரிக்கப்படுகிறான்.அதை தொழிலாளர் இயக்கம் போதிய அளவில் கவனத்தில் கொள்ளவில்லை என்கிற வருத்தம் எனக்கிருக்கிறது.

 மத்தியதர வர்க்க தொழிற்சங்க இயக்கங்களில் ஒரு முன்னுதாரணமான இயக்கமாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் திகழ்கிறது. ஒரு சமூகப் பார்வையோடு தன் ஊழியர்களை அது வளர்க்கப் போராடுகிறது.

1 comment:

  1. \\\\\மத்தியதர வர்க்க தொழிற்சங்க இயக்கங்களில் ஒரு முன்னுதாரணமான இயக்கமாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் திகழ்கிறது. ஒரு சமூகப் பார்வையோடு தன் ஊழியர்களை அது வளர்க்கப் போராடுகிறது.\\\\\\

    ReplyDelete