Friday, April 13, 2012

.ஓடிப் போன அமெரிக்க இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தியாவிற்கு அல்வா 430 கோடி ரூபாய்

இந்தியாவில் இன்சூரன்ஸ் தொழில் செய்து வந்த நியூயார்க்
இன்சூரன்ஸ் கம்பெனி, தன்னுடைய பங்குகளை விற்று விட்டு
மூட்டை முடிச்சுக்களோடு அமெரிக்கா கிளம்புகின்றது.

இந்தியாவின் மாக்ஸ் நிறுவனத்தோடு அமெரிக்காவின் 
நியூயார்க் இன்சூரன்ஸ் நிறுவனம் கூட்டணி சேர்ந்து 
மேக்ஸ் நியூயார்க்  இன்சூரன்ஸ்  என்ற பெயரில் இந்தியாவில்
ஆயுள் இன்சூரன்ஸ் கம்பெனி நடத்திக் கொண்டிருந்தார்கள்.


இப்போது நியூயார்க் இன்சூரன்ஸ் கம்பெனி, மாக்ஸ் நியூயார்க்
இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உள்ள தனது  பங்குகளை 
மிட்சி சுமிடோமோ என்ற ஜப்பான் நிறுவனத்திடம் விற்று
விட்டு ஓடவுள்ளது.

இதிலே நியூயார்க் இன்சூரன்ஸ் தன் கைவசமுள்ள 26 %
பங்குகளில் 16.63 % ஐ மிட்சி சுமிடோவிற்கு விற்கும்.
9.37 % பங்குகளை மாக்ஸ் இந்தியாவிற்கு விற்கும்.
அந்த 9.37 % பங்குகளை மாக்ஸ் இந்தியா மிட்சி 
சுமிடோவிற்கு விற்கும். இந்த தலை சுற்றல் வேலைகள்
இந்திய அரசை ஏய்ப்பதற்கு.


தன் கைவசம் உள்ள பங்குகளை விற்பதால் கிடைக்கும்
பணத்திற்கு நியூயார்க் நிறுவனம் இந்திய அரசிற்கு
வரி கட்ட வேண்டும். ஆனால் அப்படி எதுவும் கட்ட வேண்டிய
அவசியம் இல்லை என்று நியூயார்க் இன்சூரன்ஸ் நிறுவனம்
சொல்லி விட்டது.


காரணம் என்ன தெரியுமா ?


அமெரிக்க நிறுவனமாக, நியூயார்க்கை தலைமையிடமாக
கொண்டிருந்தாலும், நியூயார்க் இன்சூரன்ஸ் கம்பெனி
மொரீஷியஸ் நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்திய மொரீஷியஸ் உடன்பாட்டின்படி
வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று
சொல்லியுள்ளது.


இதனால் இந்தியாவிற்கு ஏற்படவுள்ள இழப்பு எவ்வளவு
தெரியுமா?


அதிகமில்லை ஜென்டில்மேன்,


வெறும் 430 கோடி ரூபாய்தான்.


என்ன செய்யப் போகின்றார் பிரணாப் முகர்ஜி?


இந்தியாவை உய்விக்க வந்த அவதார புருஷன்
அன்னா ஹசாரே இது பற்றியெல்லாம் பேசுவாரா?





7 comments:

  1. சொல்வதற்கு ஒன்றுமில்லை. நடுவன் அரசில், இதை சார்ந்த பொறுப்பான துறைகளில் உள்ள புத்திசாலிகளுக்கு இதை முன்கூட்டியே அறிந்து தக்க நடவடிக்கை எடுக்காமல் இப்போது தும்பவிட்டு வாலை பிடிக்க முயன்று ஒன்னும் நடக்க போவதில்லை.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. இதுக்கு எதுக்குடா அண்ணா ஹசாரே வரணும் முட்டாப்பயலே..எல்லாத்துக்கும் அவரு வரணும்னா நீயெல்லாம் எதுக்கு உசுரோட இருக்க?

    ReplyDelete
  3. அண்ணே, அதிபுத்திசாலி அன்னா, இந்த மாதிரி அயோக்கியத்தனத்தைக் கேட்கக்கூட உங்க அன்னா ஹசாரே வாய் திறக்க மாட்டாரா? இதை விட வேற என்ன பெரிய வேலை அவருக்கு? இந்தியா சாகாம
    இருக்க, நாங்க தொழிற்சங்கங்களும் இடதுசாரிகளும்
    போராடிக்கிட்டு இருப்போம். இவரு உண்ணாவிரத
    சீன் போடுவாரு, அதுவும் முதலாளிகள் குடுக்கிற துட்டை வைச்சுகிட்டு. இந்த மாதிரி மோசடி பேர்வழிகளை இன்னும் தலையில் தூக்கிட்டு ஆடற நீங்கல்லாம் நல்லா வாழுங்க! யோக்கியமான பேர்வழியா இருந்தா,லஞ்சம் கொடுக்கிற, ஊழலை தூண்டுகிற முதலாளிகளை சிறையில போடனும்னு அன்னா ஹசாரே சொல்லச் சொல்லுங்க, அதுக்கப்பறம் பேசுங்க, அன்னா ஹசாரே ஹிட்லராகிறார் என முன்பு ஒரு பதிவு போட்டேன். அவரது கைத்தடிகளும் சகிப்புத்தன்மை இல்லாத
    ஆட்கள்தான் போல !

    ReplyDelete
  4. //இதுக்கு எதுக்குடா அண்ணா ஹசாரே வரணும் முட்டாப்பயலே..எல்லாத்துக்கும் அவரு வரணும்னா நீயெல்லாம் எதுக்கு உசுரோட இருக்க? //

    கட்டுரையாளர் அவர்களே, அன்ன சிறு மீன்களைதான் பிடிப்பார், திமிங்களை விட்டுவிடுவார் என்பது உங்களுக்கு தெரியாதா?

    ReplyDelete
  5. திராவிடன்April 27, 2012 at 8:27 PM

    நாங்க அடிச்ச 1,73,000 கோடியை விட்டுட்டு - இதுக்காக கவலைப்படலாமா?

    ReplyDelete
  6. பிரணாப் முகர்ஜிக்கி என்ன கெட்டு விட்டது? அவர் வீட்டுப் பணமா இது?

    ReplyDelete
  7. அருமையான கேள்வி பதில் மக்கள்தான் சொல்ல வேண்டும். முகர்ஜி சொல்ல மாட்டார்

    ReplyDelete