மாற்றம் என்ற முழக்கத்தை நம்பி அமெரிக்க மக்கள் மட்டுமல்ல,
பாவம் மேற்கு வங்க மக்களும் கூட ஏமாந்து போனார்கள்.
அமெரிக்க மக்களுக்காவது வேறு வழியில்லை, இருக்கிற
இரண்டு கொள்ளிகளில் எது நல்ல கொள்ளி என்று பார்க்க
வேண்டும்.
ஆனால் மேற்கு வங்க மக்களுக்கோ " அரசனை நம்பி நல்ல
புருஷனை கைவிட்ட " கதைதான்.
மம்தா தீதிக்கு ஆதரவாக பேசிய நாளிதழ்கள், அறிவு ஜீவிகள்,
எல்லோருமே இன்று தங்கள் தவறுக்காக நொந்து போய்
நிற்கின்றனர்.
சகிப்புத்தன்மையும் முதிர்ச்சியும் இல்லாதவர் என்பதன்
அடையாளமாகத்தான் அவர் தொடர்ந்து பல அராஜகங்களை
நிகழ்த்தி வருகின்றார். பட்டியலிட முடியாத அளவிற்கு
அது நீண்டு கொண்டே போகின்றது.
மீண்டும் அங்கே பாசிஸ ஆட்சி நடக்கிறது. முன்பு சித்தார்த்த
சங்கர் ரேவின் ஆட்சியினை வீழ்த்திய மேற்கு வங்க மக்கள்
நாளை மம்தாவையும் வீழ்த்துவார்கள்.
சித்தார்த்த சங்கர் ரே யின் அரைபாசிச ஆட்சியில் நடந்த கொடுமைகள் இலங்கையில் நடந்ததை விட மோசமானது.எந்த மனித உரிமைக்காரனும் குரல் எழுப்பவில்லை! ஏனென்றால் அது கம்யூனிஸ்டுகளுக்கு எதிரானது.அப்பொது தீரமிக்ககலைஞர்களும் எழுத்தாளர்களும் எழுந்தனர்.உத் பல் தத் என்ற நாடகக்கலைஞன் "துர் சொப்ன நகரே" என்ரநடகத்தைப்போட்டான். எப்படி தொழிர்சங்கதலைவர்களும் கம்யூனிஸ்டுகளும் நரவேயட்டையாடப்பட்டனர் என்பதை சித்தரிக்கும் அற்புதமான நாடகம். அந்த நடகத்தை பார்க்கவிடாமல் காங்கிரஸ் கட்சியின் மானவர் இயக்கம் என்ற பெயரில் சத்ர பரீஷத் குண்டர்கள் நாடகம் பார்க்க வந்த மக்களை அடித்து விரட்டுவார்கள்.ஓரு கையால் அடியைத்தாங்கிக்கொண்டு மறு கையால் டிக்கட் வாங்கிக் கொண்டு மக்கள் அரங்கத்திற்குள் செல்வார்கள்.சத்ர பரீஷத்தின் அன்றய தலைவர்கள் தான் இன்றய பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி,சுப்ரதோ முகர்ஜி, மமதா பானர்ஜி ஆகியோர்.மீண்டுமெழுவோம்---காஸ்யபன்.
ReplyDelete