Friday, March 22, 2019

எவ்ளோ ஆன்டி இன்டியன்ஸ்!!!!













கீழே உள்ள செய்தியையும் காணொளியையும் கிட்டத்தட்ட பத்து பேர் வரை எனக்கு தனிப்பட்ட செய்தியாக அனுப்பியிருந்தார்கள். குழுக்களில் பகிர்ந்து கொண்டவர்களும் ஒன்று.

இவர்களுக்கெல்லாம் என்ன தைரியம் இருந்தால் இப்படி ஒரு செய்தியை பகிர்ந்து கொள்வார்கள்?

☝உலகத்தின் 8-வது அதிசயமாக கருதப்படும், எஞ்சினீரிங்க்

மார்வெல் – காரகோரம் ஹைவே ….

கீழே இருக்கும் வீடியோவை காண்பதற்கு முன்னால்,
இதைப்பற்றிய பிரமிக்க வைக்கும் சில விவரங்கள்….

பாகிஸ்தானிலிருந்து – சீனாவிற்கு செல்லும்,
1300 கிலோமீட்டர் தூர மலைப்பாதை “காரகோரம் ஹைவே”
( Karakoram Highway )… இந்த பெருஞ்சாலை பால்டிஸ்தானில்
உள்ள கில்கிட்டை (gilgit -ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள ஒரு பகுதி )பண்டைக்கால சில்க் ரோடுடன் இணைக்கிறது.

இதில் 806 கி.மீ. பாகிஸ்தான் எல்லைக்குள்ளும்,
மீதி தூரம் சீன எல்லைக்குள்ளும் அமைந்திருக்கிறது….

இந்தப்பாதையை அமைக்க 20 ஆண்டுகள் பிடித்திருக்கிறது.
பாகிஸ்தானுக்கும், சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட
உடன்பாட்டின்படி, இதன் பெரும்பாலான செலவு, சீனாவால்
ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த பாதையை உருவாக்கும் பணியில் –
நிலச்சரிவுகளாலும், மலையிலிருந்து
சறுக்கி விழ நேர்ந்ததாலும், பணியில் இருக்கும்போதே –
810 பாகிஸ்தானியர்களும், 200 சீனர்களும் தங்கள்
உயிரை இழந்திருக்கிறார்கள்.

காரகோரம் மலைச்சிகரங்களை கடக்கும்போது,
இந்த பாதை சுமார் 15,466 அடி அதாவது 4,714 மீட்டர்
உயரத்தில் செல்கிறது….

உலகத்தின் 26,000 அடி (எட்டாயிரம் மீட்டர்) உயரத்தில்
அமைந்திருக்கும் 5 சிகரங்களை இந்தப்பாதையில்
பயணிக்கும்போது பார்க்க முடியும்….
இதிலிருந்து நெருங்க முடியும்…
 உலகத்தின் மிக அதிசயமான, ஆபத்தான
பாதையில் பயணம் …!!!


மீண்டும் ஒரு முறை பாருங்கள். அப்போது தான் அதன் அருமையை உணர முடியும்…
 பலமுறை பார்த்தும்  பிரமிப்பு அடங்கவில்லை… எப்படித்தான் திட்டம் போட்டு, எப்படித்தான் கட்டினார்களோ…? அதுவும் அவ்வளவு உயரத்தில், செங்குத்தான சிகரங்களில்….!!!




எல்லாரும் ஆன்டி இன்டியன்ஸ் தானே ஹைகோர்ட் ராஜா?

பிகு: உண்மையிலேயே இது சூப்பரான வீடியோதான். பிரமிக்க வைக்கும் சாதனை. இந்த சாலையில் எல்லாம் பயணிக்க தைரியமான இரட்டை இதயம் வேண்டும்.

அன்புமணி சொன்னபடியே செஞ்சாச்சு.





கீழே உள்ள காணொளியில் தான் சொல்லும் செய்தியை உலகெங்கும்  உள்ள மக்களிடம் பரப்புங்கள் என்று சின்ன டாக்டர் சொல்லியிருக்காரு. அதன் படியே நானும் இதை பகிர்ந்து கொண்டு விட்டேன்.



சரிதானே அன்புமணி சார்?

தூங்குமூஞ்சியை துரத்தியடி


தூங்குமூஞ்சி காவக்காரரை துரத்தி அடிங்க



*யெச்சூரி சொன்ன குட்டிக்கதை*

_*(கோவையில் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சொன்னது)*_

*மோடி இப்போது தன்னை சௌக்கிதார் (காவலாளி) என்று சொல்லிக் கொள்கிறார். இவர் இதனை சொல்லுகிற போது எனக்கு தெலுங்கில் உள்ள கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு நிறுவனத்தின் முதலாளி ஒவ்வொரு நாளும் காலையில் தன்னுடைய நிறுவனத்திற்கு வரும்போது அவரின் சௌக்கிதார் (காவலாளி) இரவு கண்ட கனவு குறித்து முதலாளியிடம் சொல்லுவார். முதலாளியும் கதையை ரசித்து கேட்டு ரூ.200 அன்பளிப்பாக அளிப்பார். இதனால் தினமும் புதுப்புது கதைகளை சௌக்கிதாரும் சொல்லி வெகுமதியை பெற்று வந்தார்.

இதைப்போலவே ஒரு நாள் முதலாளி வந்தபோது நேற்று கண்ட கனவு குறித்த மிக நீண்ட கதையை  முதலாளியிடம் சொல்லி யுள்ளார். இதனை கடைசிவரை ரசித்துக் கேட்ட முதலாளி ஐயாயிரம் ரூபாயை சௌக்கிதாரிடம் கொடுத்து இன்றோடு உனக்கு இங்கு வேலை இல்லை; சென்று வா என்று சொல்லிவிட்டார்.*

*இதனை கேட்ட சௌக்கிதார் பேரதிர்ச்சியடைந்து வேலையை விட்டு அனுப்ப என்ன காரணம் என முதலாளியிடம் கேட்டார். அதற்குமுதலாளி உன்னை இந்நிறுவனத்தில் சௌக்கிதாராக நியமித்ததே கண் விழித்து இந்நிறுவனத்தின் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்பதுதான். ஆனால் நீ தினமும் தூங்கிக்கொண்டு கனவு காண்கிறாய். இப்படி இருக்கும் உன்னிடம் இந்நிறுவனத்தை பாதுகாக்கும் சௌக்கிதார் வேலையை எப்படி கொடுப்பது? ஆகவே வேலை யை விட்டு நீக்குகிறேன் என்றார்.

இப்படித்தான் இந்நாட்டை பாதுகாப்பாய் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு மோடி என்கிற சௌக்கிதாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இவர் உண்மையான பாதுகாவலனாக இல்லை.  இப்போது மோடி ஊர் ஊராய் சுற்றுகிறார். புதுப்புது கதைகளை சொல்லி வருகிறார். கதை சொல்லுகிறார் என்றால்கனவு காணுகிறார். தூங்கிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் அர்த்தம். நாட்டை பாதுகாக்க விழிப்போடு இல்லாத மோடி என்கிற இந்த சௌக் கிதாரை இந்நாட்டின் முதலாளிகளான மக்கள் விரட்டியடிக்க வேண்டும்.*

_*தீக்கதிர் 21/3/2019*_

அஞ்சுலயும் கொடுத்துருவோம் ராசா



யோவ் ராசா,

இதை இதை இதைத்தான் எதிர்ப்பார்த்திக்கிட்டு இருந்தாங்க தமிழ் நாட்டு மக்கள்.

இப்போ நீயே சொல்லிட்ட.

உன்னை எப்படி போட்டு தாக்கி நோட்டோவை விட கம்மியா வோட்டு வாங்க வைப்பாங்களோ, அது போல ஐந்து தொகுதியிலயும் நடக்கும்.

கவலை வேண்டாம் ராசா, படு தோல்வி உமதே

எப்படி இருந்த அத்வானி????




1984 தேர்தலில் வெறும் இரண்டே இடம் பெற்றிருந்த பாஜக வை ரத்த யாத்திரை நடத்தி கலவரங்களை நாடெங்கும் தூண்டி அடுத்த தேர்தலிலேயே 85 இடங்களை பெற வைத்த கலவர நாயகன்,

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமலாக்கக் கூடாது என்று மாணவர்களை தூண்டி விட்டு தீக்குள் தள்ள வைத்த

சுப்ரீம் கோர்டாவது ஹெச்.ராஜாவாவது என்று பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய திருப்பணிக்கு தலைமை தாங்கியவர்,

பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், எஸ்.ஏ.அசோகன், ஆர்.எஸ்.மனோகர் போன்ற அந்த கால வில்லன்கள் திரையில் நடத்திய வில்லத்தனத்தை நிஜத்திலேயே செய்து காட்டிய மனிதர்.

அவரது இன்றைய நிலையை உணர்த்துகிற இந்த புகைப்படத்தை பார்க்கையில் எனக்கே மிகவும் கஷ்டமாகி விட்டது.

புது தாதா தலையெடுத்த பின்பு பழைய தாதா ஒடுக்கப்படும் பரிதாபம் அத்வானிக்கும் நேர்ந்துள்ளது. 

பிரதமர் கனவில் ஒரு காலத்தில் இருந்தவருக்கு இப்போது எம்.பி சீட் கூட பறிபோயுள்ளது. 

படத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் போல நடக்காமல் இருந்தால் அது அவருடைய அதிர்ஷ்டம்

Thursday, March 21, 2019

சிக்கிக் கொண்ட டாக்டர் கிச்சா ????



டாக்டர் கிச்சா, வெளியேற்றம் வெறும் பேச்சா?

“பட்டியலினத்தை விட்டு நாங்கள் வெளியேறுகிறோம். பட்டியலினத்தில் இருப்பதால்தான் எங்கள் கௌரவம் கெடுகிறது,  எங்களுக்கு இட ஒதுக்கீடு அவசியமில்லை”

என்று இத்தனை நாள் முழங்கிய டாக்டர் கிச்சா இப்போது ஏன் தனித் தொகுதியான தென் காசி தொகுதியில் போட்டியிடுகிறார்?

பட்டியிலின மக்களுக்கான இட ஒதுக்கீடு வேண்டாமென்று வீரம் பேசியவர் ஏன் பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிடுவது ஏனோ?

தேர்தலில் தோற்பதற்கு முன்பே அரசியல் நாடகத்தில் தோற்றுப் போய் விட்டார் பாஜகவின் பிடியில் வசமாக சிக்கிக் கொண்ட டாக்டர் கிச்சா.

நீதிக்கு நிறமுண்டா?




கண்கள் கட்டப்பட்ட நீதி தேவதை
நிறங்களை அறிந்திடுமா?
கருணைப் பார்வை பெற
காவியுடை தரித்திட வேண்டுமோ?

சாட்சிகள் போதாதென்று
சமாளிப்பதற்கு மாற்றாக
எதுவுமே நடக்கவில்லையென
சாதித்து விடுங்களேன்.

எப்படியும் கிட்டப்போவதில்லை,
இவர்கள் காலத்தில் 
நீதி!!!!