Friday, February 22, 2013

மனுஷ்ய புத்திரன் சொல்வது சரிதான். வன்மம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.



முக நூலில் வரும் மோசமான தாக்குதல்கள் பற்றி எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் நியாயமானது. மிகவும் சரியானது. அவரது கருத்துக்கள்  இங்கே.




""பேஸ் புக் என்பது உண்மையில் ஒரு எழுத்தாளன் செயல்படக்கூடிய ஊடகம்தானா என்ற கேள்வி தொடர்ந்து எழுகிறது. என்னுடைய முக்கியமான சில நண்பர்கள் இதில் இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே இதில் தொடரவேண்டியிருக்கிறது.

இதில் எழுதுவதைவிட கடுமையான விமர்சனங்களையெல்லாம் அச்சு ஊடகங்களில் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக எழுதி வந்திருக்கிறேன். அதற்கான எதிர்வினைகளையும் பெற்றிருக்கிறேன். ஆனால் ஒரு போதும் இங்கே எழுதப்படுவது போன்ற ஆபாசமான வக்கிரமான வசைகளை எதிர்கொண்டதில்லை. அரசியல், சினிமா, சாதி, மதம் என எதன்மீதும் சிறு கேள்வி எழுப்பினாலும் அவ்வளவு வன்மமும் அருவருப்பும் மிகுந்த தாக்குதல்கள் மேற்கொள்ளபப்படுகின்றன. ஒரு கருத்தைச் சொல்கிற மனிதன் யார், அவனது இதற்கு முந்தைய செயல்பாடுகள் என்ன என்று எதுவும் தெரியாத லும்பன்களால் இந்த மீடியம் நிறைந்திருக்கிறது. இதில் போலிப் பெயர்களில் இருட்டிலிருந்து கல்லெறியும் கோழைகள் வேறு.

ரிசானா விவகாரத்தில் என்மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்களுக்கு நான் இஸ்லாமியர்களின் நியாயங்கள் குறித்து எவ்வளவு எழுதியிருக்கிறேன் என்று தெரியாது. விஸ்வரூபத்தை விமர்சித்ததற்காக என்னை கருவறுக்க விரும்பிகிறவர்களுக்கு நான் கமல் ஹாசனின் கலைச் சாதனைகள் பற்றி எவ்வளவு எழுதியிருக்கிறேன், பேசியிருக்கிறேன் என்று தெரியாது. வைகோவை அரசியல் சமரசங்களுக்காக அவரை லேசாக கிண்டல் செய்தால் என்னை பிய்த்து பிராண்டுகிறவர்களுக்கு நான் வைகோவைவின் சமூகப் போராட்டங்களைப் போற்றி உயிர்மையில் தலையங்கமே எழுதியிருப்பது பற்றி எதுவும் தெரியாது.

எதோ ஒரு வாக்கியத்தை படித்துவிட்டு இங்கே வந்து கல்லெறியும் பொறுக்கிகளைவிட ஒரு எழுத்தாளனாக என்னுடைய வேலைகள், பொறுப்புகள் மிகப்பெரியது. எரியும் பிரச்சினைகளுக்ககா இலட்சக்கணக்கான மக்ககளுடன் தினமும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு ஊடகவியலாளனை மனதை இந்தப் பொறுக்கிகள் அவ்வளவு எளிதில் சிதைத்துவிடலாம் என்று நினக்கிறார்கள். தங்கள் ஆபாச செயல்பாடுகளுக்கு கருத்துகள் என்று வேறு பெயர் சூட்டிக்கொள்கிறாகள். நான் ஒரு கொடூரமான, ஜ்கனநாயக விரோத அமைப்புக்கு எதிராக யுத்தம் செய்துகொண்டிருக்கிறேன். என்னைப் போன்றவர்கள் எந்த பின்புலமும் இன்றி தனியாக இந்தப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கான விலையை கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

ஒரு நாளைக்கு இருபது பேரையாவது பிளாக் செய்து வருகிறேன். இந்த இடத்தை சுத்தம் செய்வது அவ்வளவு சோர்வாக இருக்கிறது.

என்னுடைய எண்ணங்களோடு கொள்ரவமாக உரையாட முடியாதவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்..

‘’ ப்ளீஸ்..கெட் அவுட்..’’  ""




எனது அனுபவமும் இதேதான். முகநூல் மட்டுமல்ல, வலைப்பக்கத்திலும் இதே கதைதான்.

பின்னூட்டம் என்ற பெயரில் கருத்தின் மீது முரண்படுவது என்பது வேறு. கடித்து குதறுவது என்பது வேறு. ஆனால் உருப்படியாக எதையும் எழுத இயலாதவர்கள், எழுதினாலும் போணியாகாதவர்கள், தங்களின் அடையாளத்தை மறைத்துக் கொண்டு அனாமதேயங்களாக அபத்தமாக உளறுவது அதிகரித்தே வருகிறது.

அடுத்தவரை காயப்படுத்துவதில் இன்பம் காணும் சேடிஸ்டுகளுக்கு சூடு, சொரணை, மானம் என்று எதுவும் கிடையாது.

இவர்களது பின்னூட்டத்தை வெளியிட்டு அதற்கு பதிலளித்துக் கொண்டிருப்பதால் இன்னும் வேறு ஊக்கம் அடைந்து விடுகிறார்கள். எனவே இனி அபத்தமான எந்த ஒரு பின்னூட்டத்தையும் வெளியிடுவதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.

இந்த பக்கம் பிடிக்கவில்லையென்றால் இங்கே வர வேண்டாமே, எதற்கு அவர்கள் தங்களின் நேரத்தையும் விரயம் செய்து கொண்டு என்னுடைய நேரத்தையும் விரயம் செய்ய வேண்டும்?

Thursday, February 21, 2013

மாணவர்கள் யாரும் தயவு செய்து மகேந்திரசிங் தோனியை பின்பற்றாதீர்கள்



சமீபத்தில் படித்த ஒரு செய்தி.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்
தனது பட்டப்படிப்பு தேர்வுகளில்
மீண்டும் தோற்றுப் போய்விட்டார்.

இளங்கலை வணிகவியல் படிப்பில்
பாட்னா பல்கலைக்கழகம் இவருக்காக
பல விதிகளை தளர்த்தியும் கூட
தேற முடியவில்லையாம்.

படிக்காவிட்டால் என்ன அவர் சிறப்பாக
விளையாடவில்லையா? பணம்
சம்பாதிக்கவில்லையா என்று யாரும்
கேட்காதீர்கள். அவர் பத்து தலைமுறைக்குக்
கூட பணம் சேர்த்திருப்பார்.

தங்கள் ஆதர்ஸ் நாயகனைப் போலவே
உடை, மேனரிஸம், முடி அலங்காரம்,
பைக் என்று பின்பற்றும் கூட்டத்திற்குத்தான்
இந்தியாவில் பஞ்சமே இல்லையே!

அவர்கள் அத்தனை பேரும் கிரிக்கெட்
அணியில் சேர முடியுமா இல்லை
டி.வி விளம்ப்ரம்தான் கிடைக்குமா?

படிப்புதானே அவர்களுக்கு முக்கியம்....

அதனால்தான் சொல்கிறேன்.



மாணவர்கள்  யாரும் தயவு செய்து 
மகேந்திரசிங் தோனியை பின்பற்றாதீர்கள்

Tuesday, February 19, 2013

ராஜீவிற்கு தப்பாமல் பிறந்த ராகுல்

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி 
ஆகியோரிடம்  ஊறிப்போயிருந்த  ஆணவம்
ராகுல் காந்தியிடமும் அப்படியே உள்ளதை
அம்பலப்படுத்தும் கட்டுரை .

இதுதான் குடும்ப பாரம்பரியம் போலும்

தந்தை எப்படியோ, தனயன் அப்படி... அரசியல் விமர்சகர்
 
திரிபுரா சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்துவிட்டது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ‘இந்துஸ்தானி லிருந்து’ அகற்றப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ‘இடிமுழக்கம்’ செய்திருக் கிறார். உண்மையில், வரலாறு திரும்பிக் கொண்டிருக்கிறது. 1986இல் மேற்கு வங்க சட்டமன்றத்திற்குத் தேர்தல்கள் நடை பெற்றபோது, அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி ‘‘கல்கத்தா ஒரு இறந்து கொண்டிருக்கும் நகரம்’’ என்று இகழ்ச்சியாகக் குறிப்பிட்டதை அனைவரும் அறிவோம். ஆனால் அத்தேர்தலில் இடது முன்னணி பெரு வாரியாக வெற்றி பெற்றது மட்டு மல்ல, அதற்கு அடுத்து நடைபெற்ற நான்கு சட்டமன்றத் தேர்தல்களிலும் மூன்றில் இரு பங்குக்கும் மேலாக இடங்க ளைப் பெற்று தொடர்ந்து வெற்றி வாகை சூடிவந்தது.தந்தை எப்படியோ, தனயனும் அப்படி. ராகுல் காந்தி இவ்வாறு கூறியிருப்பதி லிருந்து வரலாறு மீண்டும் திரும்பி இருக் கிறது என்பதுதான் மெய்ப்பிக்கப்பட்டிருக் கிறது. சென்ற முறை மிகவும் துயரார்ந்த முறையில் இருந்ததைப் போலவே, தற்போது இரண்டாவது தடவையும் நகைக்கத்தக்க விதத்தில் இருக் கப்போவதை காத்திருந்து தெரிந்து கொள் வோம்.நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது இவ்வாறு அச்சுறுத்தல்கள் விடப்படுவதைக் கேட்டு இப்போது நமக்கு மிகவும் சலித்துவிட்டது. காங்கிரஸ் கட்சி மிகவும் செல்வாக்காக இருந்த காலங்களில், 1980இல் மத்தியில் மீண் டும் ஆட்சிக்கு வந்த சமயத்தில், இதே போன்றுதான் குரைத்தது. 


வங்கத்தைச் சேர்ந்த அக்கட்சியின் குறிப்பிடத்தக்க தலைவர் ஒருவர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை வங்காள விரிகுடாவில் தூக்கி எறிய வேண்டும் என்று அப்போது கூறினார். ஆனால் அடுத்த முப்பதாண்டு களில் என்ன நடந்தது என்பது வரலாறு. காங்கிரஸ் கட்சிதான் அங்கே நொண்டத் தொடங்கியது இன்னமும் தொடர்கிறது. இதுநாள்வரையிலும் அதனால் அங்கே எழுந்து நிற்க முடியவில்லை.பிரதமர் திரிபுராவில் பிரச்சாரம் செய் திட திட்டமிட்டிருந்தார். வடகிழக்கு மாநி லங்கள் அனைத்திலும் திரிபுராவில்தான் மிகவும் சிறந்த முறையில் நிர்வாகம் நடைபெற்று வருகிறது என்று திரிபுராவை அவர் அடிக்கடி பாராட்டி வந்ததை மக்கள் நன்கு அறிவார்கள். இந்நிலையில் தற்போதைய இடது முன்னணியைத் தோற்கடிக்க வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள் என்று கேட்க வேண்டும் என்று மக்கள் தயாராகி இருந்தார்கள். பல் வேறு துறைகளில் திரிபுரா மாநில அரசாங்கம் மிகச்சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதாக மத்திய அர சாங்கம் பாராட்டுவது என்பது வழக்க மாகிவிட்டது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முதலாவது மாநிலமாகப் பல்வேறு துறைகளில் திகழ்கிறது என்று அது அடிக்கடி கூறி வந்திருக்கிறது. 

மகாத் மாகாந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறு திச் சட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அளிப்பதில் நாட்டிலுள்ள அனைத்து மாநி லங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்க ளிலும் மொத்தம் உள்ள 100 நாட்களில் சராசரியாக 86 நாட்கள் வேலை அளித்து, திரிபுராதான் முதல் மாநிலமாகத் திகழ்கி றது. அதேபோன்று பழங்குடியினர் வனச் சட் டத்தின் கீழ் ஆதிவாசிகளுக்குப் பட்டா வழங்கியதிலும் அனைத்து மாநில ங்களிலும் திரிபுரா மாநிலம்தான் முதலா வதாகப் பட்டியலிடப்பட்டிருக்கிறது. சுமார் 95 விழுக்காட்டினர் அடையாளம் காண ப்பட்டு நிலத்திற்கும் வன உற்பத்திப் பொருள்களுக்கும் சட்ட உரிமை கொடுக்க ப்பட்டிருக்கிறது. இவ்வாறு பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. 


இவ்வாறு அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்து வரும் திரிபுரா அரசாங்கத்திற்கு வாக்களிக்காதீர்கள் என்று கோருவது நியாயமல்ல என்று உணர்ந்திருப்பார் போலும். அதனால்தானோ என்னவோ அவர் பிரச்சாரத்திற்கு வராது தவிர்த்து விட்ட hர்.அடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி வருவார் என்று திரிபுரா மக்களுக்குச் சொல்லப் பட்டிருந்தது. உண்மையில், அவரது பிரச்சார நிகழ்ச்சிநிரல் ஊடகங்களின் வாயிலாக மிகவும் விரிவாக விளம்பரப்படுத்தப் பட்டிருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி மிகவும் ஏமாற்றம் அடையும் அளவிற்கு, அவரது பயணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு விட்டது. இதற்கு அதிகாரப்பூர்வமாகக் காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. எனினும் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை அடுத்து, எல்லை மாநிலம் ஒன்றில் பயணம் செய்ய வேண்டாம் என்று பாதுகாப்புக் காரணங்களைக் கூறி அவர் அனுமதிக்கப்படவில்லை என்று ஒரு தகவல் சுற்றுக்கு விடப்பட்டுள்ளது. இதுவும் வேடிக்கையான ஒன்றுதான். அவரது பாதுகாப்பிற்குப் பொறுப்பு ஏற்றிருப்பது, சிறப்பு பாதுகாப்புக் குழு (ளுஞழு-ளுயீநஉயைட ஞசடிவநஉவiடிn ழுசடிரயீ) அல்லது கறுப்புக் கமாண்டோக்கள் என்னும் படைப்பிரிவாகும். இதே படைப்பிரிவினர் தான் ராகுல் காந்தி பாதுகாப்புக்கும் பொறுப்பேற்றிருக்கிறது. பாதுகாப்பு அளிப்பதற்கு ஒருவருக்குப் பொறுப்பைத் தட்டிக்கழித்துள்ள சமயத்தில், அதே பாதுகாப்புக் குழு வேறொருவருக்கு மட்டும் பாதுகாப்பு அளித்திருப்பது எப்படி? பிரதமரைப் போலவே, சோனியா காந்தியும் வரலாறு படைத்து வரும் இடது முன்னணியைத் தோற்கடியுங்கள் என்று கூறுவதற்குத் தயங்கித்தான் வரவில்லை என்பது தெளிவு.காங்கிரஸ் கட்சி, கடைசியாக நாட்டின் பாதுகாப்பையே தங்களால்தான் காப் பாற்ற முடிந்திருக்கிறது என்று கூறிக் கொண்டு அதன்மூலம் அரசியல் ஆதா யம் தேட முயன்றுள்ளது. அப்சல் குருவின் தூக்கு கடைசியில் காங்கிரஸ் பிரச்சாரத் திற்குத் துணை புரிந்தி ருக்கிறது. 


ஆயினும், திரிபுராவில், காங் கிரஸ் கட்சியானது ஐஎன்பிடி என்கிற திரி புரா பழங்குடியினர் தேசியக் கட்சி (ஐசூஞகூ-ஐனேபைநnடிரள சூயவiடியேடளைவ ஞயசவல டிக கூசiயீரசய) என்னும் கட்சியுடன் கூட்டணி அமைத் துக்கொண்டிருப்பதும், அக்கட்சியின் தலைவர் கடந்த காலங்களில் திரிபுராவை இனரீதியாகத் துண்டாடுவதற்காக, நூற் றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்த திரிபுரா தேசியத் தொண் டரணி (கூசூஏ-கூசiயீரசய சூயவiடியேட ஏடிடரவேநநசள) யின் கமாண்டர் என்பதும், அனைவரும் அறிவார்கள். இப்போது அவரும் இத் தேர்தலில் போட்டியிட்டுக் கொண்டிருக் கிறார். ஐஎன்பிடி கட்சியானது தடைசெய் யப்பட்டுள்ள தீவிரவாத திரிபுரா தேசிய விடுதலை முன்னணி (சூகுடுகூ) என்னும் அமைப்பின் அரசியல் பிரிவு என்பதும், அது முந்தைய காலங்களில் திரிபுரா மக் களை பழங்குடியினர் - பழங்குடியின ரல்லாதவர் என்று பிரித்து ஒற்றுமைக்கு வேட்டு வைத்து வன்முறை வெறியாட்டங் களில் ஈடுபட்டதும் திரிபுரா மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று. காங்கிரஸ் - ஐஎன்பிடி கூட்டணி என்பது ஒரு முரண் பாடு. அதனை காங்கிரஸ் கட்சி எவ்விதத் திலும் விலக்க முடியாது. இந்நிலையில் அதனால் எப்படி திரிபுரா மக்களை நம்பச் செய்திட முடியும்? அதனால்தான் காங் கிரஸ் கட்சியின் தலைவர் தன்னுடைய கட்சி 

வேட்பாளர்களுக்காக மாநிலத்திற்கு வந்து பிரச்சாரம் செய்திட முன்வராததில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. திரிபுரா வாக்காளர்கள் மத்தியில் மன தில் உள்ள இதுபோன்ற கேள்விகள் எதற் கும் பதில் கூறாமல் ராகுல் காந்தி மிகவும் எச்சரிக்கையுடன் தவிர்த்துவிட்டார். அவற்றிற்குப் பதிலாக, ஒரே பொய்யைத் திரும்பத்திரும்பச் சொல்லி உண்மை போன்று ஆக்கிடும் கோயபல்ஸ் பிர ச்சாரத்தில் இறங்கிவிட்டார். ‘மத்திய அரசு, திரிபுரா மாநிலத்திற்குத் தாராளமாக வாரி வழங்கியதாம், ஆனால் திரிபுரா மாநில அரசுதான் அவற்றைத் தங்கள் கட்சி நலனுக்காக துஷ்பிரயோகம் செய்து விட்டதாம்’ அளந்து விட்டிருக்கிறார். வட கிழக்கு மாநிலங்களிலேயே திரிபுரா மாநி லம் மட்டும்தான் வளர்ச்சிப் பணிகளுக் காகத் தனக்கு அளிக்கப்பட்ட நிதி ஒதுக் கீட்டை முழுமையாக, வளர்ச்சிப் பணி களுக்கு மட்டுமே பயன்படுத்தியுள்ளன என்று மத்திய அரசும், வடகிழக்கு மாநி லங்களின் வளர்ச்சித்துறையும் அநேக மாக அவருக்குக் கூறி அவரைத் தெளிவு படுத்தி இருக்காது என்றே கருதுகிறோம். பிரதமரே பலமுறை இதனை எதிரொலித் திருக்கிறார். எப்படிப்பார்த்தாலும், மத்திய அரசாங்கத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி என்பது எந்தத் தனிப்பட்டவருக்கும் சொந்தமானதல்ல, குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமானது அல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்கீழும், நிதிக் கமிஷனின் ஐந்தாண்டுகளுக்கான பரிந் துரைகளின் அடிப்படையிலும், மத்திய நிதி ஒதுக்கீடுகள் என்பவை அனைத்து மாநிலங்களுக்கும் மாற்றிக்கொடுக்கப்பட வேண்டியவைகளாகும். இது கட்டாயம். இதனை எந்த மத்திய அரசும் புறக்கணித் திடவோ, உதாசீனம் செய்திடவோ முடி யாது. 


ஆயினும் அரசியல்ரீதியாகத் தனக்கு எதிரானவை என்று கருதும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதியை காலத்தே ஒதுக்காமல் சண்டித்தனம் செய்வது என்பது வழக்கம்தான். மேற்கு வங்கமும், திரிபுராவும் கடந்த காலங் களில் அடிக்கடி இவற்றை எதிர்கொண் டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலை வர் தேர்தல் பிரச்சாரங்களுக்குச் செல் லும் மாநிலங்களில் எல்லாம் இதே பல்ல வியைத்தான் பாடி வந்திருக்கிறார். பீகார், உத்தரப் பிரதேசம், குஜராத் மாநிலங்களி லும் இதையேதான் அவர் கூறினார். 


அவ் வாறு அவர் தேர்தல் பிரச்சாரம் மேற் கொண்ட அனைத்து மாநிலங்களிலும் அவர் பரிதாபகரமான முறையில் தோல்வி அடைந்தார். திரிபுராவும் அதற்கு விதி விலக்காக இருக்கப்போவதில்லை. திரிபுரா மாநிலத்தில் திரிபுரா மக்க ளுக்கு காங்கிரஸ் கட்சி உறுதிமொழி களை வாரி இரைத்திருக்கிறது. இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், கிலோ ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்குவார்களாம். நாட் டில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக் கும் வறுமைக்கோட்டுக்குக் கீழ்/வறு மைக்கோட்டுக்கு மேல் என்று எவ்விதப் பாகுபாடும் இன்றி மாதந்தோறும் ஒரு கிலோ 2 ரூபாய் விலைக்கு 35 கிலோகிராம் தானியங்களை வழங்கக்கூடிய விதத்தில் அனைவருக்குமான உணவுப் பாதுகாப் பைக் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கையை மறுத்து வருவது இதே காங்கிரஸ் கட்சிதான். ஆயினும், திரி புராவில் அதிலும் பாதி விலைக்கு அவற்றை வழங்கும் என்று உறுதி அளிக்கிறது. இளைஞர்களுக்குப் புதிதாக வேலை வழங்குவோம் என்றும் அது உறுதிமொழி கூறியிருக்கிறது. மத்தியில் இக்கட்சி பின்பற்றிடும் பொருளாதாரக் கொள் கைகள் கடந்த பத்தாண்டுகளில் நாட் டையே மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளி இருக்கிறது, நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் என்பது 5 விழுக்காட்டிற்கும் கீழே இருப்பதாக அதிகாரப்பூர்வமாகவே இப்போது மதிப் பிடப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் வேலைவாய்ப்புகள் கடுமையாகச் சுருங் கிவிட்டன என்பது தெள்ளத் தெளிவாகி இருக்கிறது. இவ்வாறு பொருளாதார அரங்கிலும் படுதோல்வி அடைந்துள்ள இக்கட்சிதான், திரிபுரா மக்களுக்கு வானி லிருந்து நிலாவைக் கொண்டுவந்து தரு வோம் என்கிற முறையில் வாக்குறுதி களை வாரி வழங்கி வருகிறது. திரிபுரா இன்றைய நிலையில் எழுத் தறிவு பெற்றோர் எண்ணிக்கையில் நாட் டில் நான்காவது மாநிலமாகத் திகழ்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் அநேகமாக திரிபுரா மட்டும்தான் அதிக அளவில் படித் தோர் எண்ணிக்கை யையும், பயிற்சி பெற்ற இளைஞர் பட்டாளத்தையும் பெற் றிருக்கிறது. இந்த இளைஞர் பட்டாளம் தங்களுக்கு ஆதாயபூர்வமான வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக் கிறது. 


இதனை நிறைவேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன்தான் இடது முன் னணி தன்னுடைய தேர்தல் அறிக்கை யில் மாநிலத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்மையங்களை உருவாக்கத் திட் டமிட்டிருக்கிறது. இது இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை ஈடேற்றி, அவர்களுக் குச் சிறந்ததோர் எதிர்கால வாழ்க்கையை அளித்திடும் என்கிற நம்பிக்கையையும் அவர்களுக்குத் தந்திருக்கிறது. எனவேதான், திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இடது முன்னணி வெற்றி பெறுவது என் பதிலோ அது திரிபுராவில் தொடர்ந்து ஏழா வது முறையாகவும் ஆட்சி அமைக்கும் என்பதிலோ ஆச்சரியப்படுவதற்கு எது வுமே இல்லை.


‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’(தமிழில்: ச.வீரமணி)

 நன்றி - தீக்கதிர் 19.02.2013

Monday, February 18, 2013

நம்பிக்கையின் படுகொலை

 

2013. பிப்ரவரி 6. துனீசியாவின் இடதுசாரித் தலைவர், 48 வயதே நிரம்பிய சோக்ரி பெலெய்ட் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலையைக் கண்டித்து தெருக்களில் கலகங்கள் பரவின. 1980களில் புகழ்பெற்ற மாணவர் தலைவராக விளங்கியவர் பெலெய்ட். சுரங்கங்களின் நகரமான கா·சாவில் கோபமுற்ற தொழிலாளர்கள் ஆளுங்கட்சியான மறுமலர்ச்சிக்கட்சியின் அலுவலகத்தை தாக்கினார்கள். பெலெய்ட் இத் தொழிலாளர்களின் அன்புத்தலைவராக விளங்கினார். சிடி பவுசிட் எனுமிடத்தில் எதிர்ப்பாளர்களை கலைக்க காவல்துறை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசித் தாக்கியது. 

இந்த இடத்தில்தான் 2010ல் “அரேபிய வசந்தம்” எனப்படும் எழுச்சிகர இயக்கங்கள் தோன்றின.2011 தேர்தல்களில் பெலெய்ட் தலைமை தாங்கிய “ஜனநாயக தேசபக்த இயக்கம்” குறிப்பிடத்தக்க வெற்றி பெறவில்லை. எனினும் பெலெய்ட் பலரது நன்மதிப்பை பெற்ற மரியாதைக்குரிய தலைவராக விளங்கினார். எதேச்சதிகாரி பென் அலி 2011ல் ஆட்சி அதிகாரத்திலிருந்து துரத்தப்பட்ட பிறகு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் ஆட்சியையோ அல்லது பென் அலி விசுவாசிகளின் ஆட்சியையோ விரும்பாதவர்கள் பெலெய்டின் இடதுசாரி இயக்கத்தின் மீதுதான் நம்பிக்கை வைத்திருந்தனர். 2011 இயக்கத்தின் வீச்சை பெலெய்ட் முன்னெடுத்துச் செல்வார் என நம்பிக்கை பெற்றிருந்தனர். ஆனால் அந்த நம்பிக்கையின் மீது பேரிடி விழுந்துவிட்டது.


உழைக்கும் மக்களின் குரலை பிரதிபலித்த பெலெய்ட்பென் அலி அரசாங்கத்தின் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான மக்களின் கடும் கோபத்தின் அடிப்படையில்தான் 2010-11 இயக்கம் வலிமை பெற்றது. சுரங்கத் தொழிலாளர்கள், தெரு சுத்தம் செய்பவர்கள், சாலை வணிகர்கள், சட்ட எழுத்தர்க ள் என சாதாரண மக்கள் துனீசியாவின் தெருக்களை முடிவில்லாமல் ஆக்கிரமித்து இருந்தனர். 2011 ஜனவரியில் பென் அலி துனீசியாவை விட்டு ஓடியதைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை இந்த உழைக்கும் மக்கள் சக்தியால் நிரப்ப முடியவில்லை. ஏனெனில் பென் அலி இடதுசாரி சக்திகளை நாட்டை விட்டு துரத்துவதில் வெற்றி பெற்றுவிட்டார். மீதமிருந்த தலைவர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். எந்த ஒரு இடதுசாரி அமைப்பையும் தலையெடுக்க பென் அலி அனுமதித்ததே இல்லை.பென் அலி இசுலாமியவாதிகளையும் விட்டு வைக்கவில்லை. ஆனால் இசுலாமியவாதிகளுக்கு இரண்டு சாதகமான சூழல்கள் இருந்தன. ஒன்று மசூதிகள். மசூதிகள் மூலமாக அவர்கள் தமது அமைப்புகளின் வலைதளத்தை பாதுகாத்துக்கொண்டனர். 

இரண்டாவதாக, வளைகுடா அரபுநாடுகளிடமிருந்து அபரிமிதமான நிதி வந்து குவிந்தது. இந்த இரண்டு சாதகமான அம்சங்களையும் பயன்படுத்தி இசுலாமியவாதிகள் பென் அலிக்குப் பிறகு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் வெற்றி கண்டனர். இதனால் சாதாரண உழைக்கும் மக்கள் மேலும் மேலும் பெலெய்ட் போன்ற தலைவர்கள் மீது நம்பிக்கை கொள்வது அதிகரித்தது. நவீன துனீசியாவை உருவாக்கிட சிதறிக்கிடக்கும் இடதுசாரிகள் ஒரே மேடையின் கீழ் அணிதிரள்வார்கள் என நம்பினர். பெலெய்டின் மரணம் அவர்கள்து நம்பிக்கையை தகர்த்துவிட்டது. அந்த கோபம்தான் அவர்களை இசுலாமியவாதிகளின் அலுவலகங்களை தாக்கும் அளவிற்கு ஆவேசத்தை ஏற்படுத்தியது.துனீசியாவின் ஜனாதிபதி இந்த படுகொலையை கண்டித்தார். அமைதி காக்கும்படி மக்களை வேண்டிக்கொண்டார். இத்தகைய அணுகுமுறை மூலம் பெலெய்டின் படுகொலையில் அரசாங்கத்தின் கொடூரப் பங்கு உள்ளது எனும் குற்றச்சாட்டிலிருந்து அரசாங்கத்தை காத்திட முயன்றார். எனினும் அவரது முயற்சி வெற்றிபெறப்போவது இல்லை. மக்கள் முன்னணி எனும் பரந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக பெலெய்டின் ஜனநாயக தேசபக்தி இயக்கம் இருந்தது. இந்த மக்கள் முன்னணியில்தான் பழைய துனீசியா தொழிலாளர் கட்சியும் ஒரு அங்கத்தினராக செயல்படுகிறது. தொழிலாளர் கட்சியின் தலைவரான ஹம்மா ஹமாமி “பெலெய்டின் படுகொலை கூலிப்படைக் கொலையாளிகளால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது” எனவும் இந்த படுகொலையில் அரசாங்கத்தின் கை உள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளார். 


புதிய ஆட்சியாளர்கள் வன்முறையை ஆதரித்தது ஏன்?“புரட்சிப் பாதுகாப்புக் குழு” எனத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஒரு கும்பல் துனீசியாவில் புதிய ஆட்சியின் கீழ் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. இந்த வன்முறையையே தொழிலாளர் கட்சியின் ஹமாமி சுட்டிக்காட்டுகிறார். இந்தக் கும்பல் 2012 அக்டோபரில் லா·ப்டி நாக்ட் எனும் தலைவரைக் கொன்றது. இதே கும்பல்தான் துனீசியாவின் தொழிற்சங்க அலுவலகங்களை 2012 டிசம்பரில் தாக்கியது. மக்கள் ஒற்றுமையை வலியுறுத்திய சிதி அகமது போன்றோரின் நினைவிடங்களை சலா·பி எனும் இஸ்லாமிய பயங்கரவாதக் கும்பல் அழிக்க முயன்றது. இந்த வன்முறைகளை புதிய துனீசிய அரசாங்கம் கண்டுகொள்ளவே இல்லை. எனவே வன்முறைக் கும்பல்கள் தைரியமும் ஊக்கமும் பெற்றன. இவர்களது முக்கிய இலக்கு இடதுசாரிகள்தான்!

பெலெய்டின் மரணம் கேள்விப்பட்ட பொழுது என் மனதில் 1993ல் தென் ஆப்பிரிக்க பொதுவுடைமை இயக்கத்தின் புகழ் பெற்ற தலைவர் கிரிஸ் ஹனியின் மரணம் பற்றிய எண்ணங்கள் மேலொங்கின. 50 வயதே நிரம்பிய கிரிஸ் ஹனி முற்போக்கு சக்திகளின் பிரதிநிதியாக விளங்கினார். இனவெறியில் இருந்து விடுபட்ட தென்னாப்பிரிக்காவை முற்போக்கு திசையில் கொண்டு செல்ல கிரிஸ் ஹனியின் பங்கு தேவைப்பட்ட நேரம். அவரது படுகொலை அந்த முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டது. 


பெலெய்ட்டின் படுகொலை ஏன்?பெலெய்ட்டின் படுகொலையும் அப்படிப்பட்ட சூழலில்தான் நிகழ்ந்துள்ளது. 2011 துனீசியா எழுச்சியில் பங்கேற்ற லட்சக்கணக்கான உழைக்கும் மக்களின் குரலையும் கோரிக்கைகளையும் ஆட்சியில் உள்ள இஸ்லாமியவாதிகள் ஒடுக்க முயல்கின்றனர். கடந்த இரு மாதங்களாக துனீசியாவில் பரவலாக மக்களின் அதிருப்தி பரவி வந்தது. ஜனவரி 22-23ல் துனீசியா முழுவதும் நவீன தாராளமயக் கொள்கைகளை கண்டித்து ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இந்த நிகழ்வுப்போக்குகள் ஆளும் இஸ்லாமியவாதிகளுக்கு மட்டுமல்லாது பழைய ஆட்சியாளர்களையும் பீதி அடையச்செய்தது. கிரிஸ் ஹனியைப்போல பெலெய்டையும் ஒழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

தமிழில்: அ.அன்வர் உசேன்

 நன்றி தீக்கதிர் 18.02.2013

Sunday, February 17, 2013

முகநூல்காரர்களின் சிந்தனைக்கு.. ஏன் இந்த இயந்திரத்தனம்?

வாழ்க்கையும் வாழ்த்துக்களும் இயந்திரத்தனமாய் மாறிக்
கொண்டிருக்கிறது என்பதற்கான உதாரணம் இங்கே.

தோழர் அசோகன் முத்துசாமி இடதுசாரி சிந்தனையாளர்,
எழுத்தாளர், பல நூல்களை எழுதியுள்ளார். தமிழாக்கம்
செய்துள்ளார். அமெரிக்கப் பேரரசின் ரகசியங்கள் 
ஒரு சிறந்த படைப்பு.

வலைப்பக்கத்திலும் முகநூலிலும் தீவிரமாக இயங்கி
வந்த அந்த தோழர் சில மாதங்கள் முன்பாக 
காலமாகி விட்டார்.

அவரது முகநூல் சுவரிலேயே  பலரும் அஞ்சலி 
செலுத்தியிருந்தனர். அவரது முகநூல் கணக்கு
De Activate ஆகவில்லை. அந்த நிலையில் இன்று
அவர் பிறந்த நாள். வழக்கம்போல் முகநூல்
அறிவிப்பு வந்தது.

அவரது பக்கத்திற்கு போனால் ஏராளமானவர்கள்
பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
ஒருவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா
என்று கூட தெரியாமல் இயந்திரத்தனமாக
வாழ்த்துக்கள்.

என்றாவது ஒரு நாள் அவரது பக்கம் சென்றிருந்தால்
ஒரு வேளை தெரிந்திருக்கும். யாருக்கு வேண்டுமானாலும்
ப்ரண்ட் ரெக்வஸ்ட் கொடுப்பது, வந்தவற்றையெல்லாம்
ஏற்றுக் கொள்வது என்பதன் விளைவுதான் இது.

கொஞ்சம் இயந்திரத்தனத்தை விட்டு விலகி
வெளிவந்து உண்மையான நட்பை மட்டும்
வெளிப்படுத்துவோமே.


Saturday, February 16, 2013

குஷ்பு விஷயத்திற்காக குமுதம் ரிப்போர்ட்டர் மீது கோபம் வேண்டாம்...

கேவலமாக, தரக்குறைவாக, கண்ணியமில்லாமல்
பத்திரிக்கை தர்மத்திற்கு எதிராக, ஆபாசமாக
குமுதம் ரிப்போர்ட்டர் குஷ்பு விஷயத்தில் 
எழுதியுள்ளதாக யாரும் கோபப்பட வேண்டாம்.

சாக்கடை நாற்றமடிக்கிறது என்று கோபப்படுகிறோமா?

பன்றி எதையெதையோ தின்கிறது  என்று 
கோபப்படுகிறோமா?

குமுதம் ரிப்போர்ட்டரை  புலனாய்வு  பத்திரிக்கையாக
பார்த்தால் கோபம் வரும்.

மஞ்சள் பத்திரிக்கையாக பார்த்தால்?

 

Friday, February 15, 2013

அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை, முன்னும் பின்னும்



(வெளிவரவுள்ள பீப்பிள் டெமாக்ரசி ஏட்டில் இடம்பெற்றுள்ள கீழ்க்கண்ட தலையங்கம் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது தொடர்பான மார்க்சிட் கம்யூனிட் கட்சியின் நிலையை தெளிவுபடுத்துகிறது)









நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகமது அப்சல் குரு தூக்கிலிடப்பட்டுள்ள நிகழ்வு ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு இந்த கேள்விகளை வலுப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது. அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துவிடக்கூடாது என்பதற்காக விரைவாக அவர் தூக்கிலிடப்பட்டார் என்று உள்துறை அமைச்சர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இந்த வழக்கில் நீண்ட நெடிய நீதி மற்றும் சட்ட நடைமுறைகள் நடந்தேறியுள்ளன. அப்சல் குருவுக்கு 2002 டிசம்பரில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆகட் 2005ல் உச்ச நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், அப்சல் குருவின் மனைவி 2006 அக்டோபரில் கருணை மனுத் தாக்கல் செய்தார். 2013 பிப்ரவரி 3ம் தேதி ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட விதம் பரவலான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பாக கருணை மனு நிராகரிக்கப்பட்ட விவரம் தண்டனை விதிக்கப்பட்டவருக்கோ அவரது குடும்பத்தினருக்கோ உரிய காலத்தில் தெரிவிக்கப்படவில்லை. அப்சல் குருவை அவரது குடும்பத்தினர் கடைசி நேரத்தில் சந்திப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கருணை மனு நிராகரிக்கப்பட்டது மற்றும் தூக்கிலிடப்படும் தேதி குறித்த விவரம் அவரது குடும்பத்தினருக்கு விரைவு தபால் மூலம் அனுப்பப்பட்ட விதமும் இரக்கமற்ற தன்மையை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக உள்ளது.

இந்த தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட காலமும் ஏராளமான கேள்விகளை எழுப்புவதாக உள்ளது. பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வேறு சிலரும் உள்ளனர். தேவேந்தர் பால் சிங், புல்லார் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநில முதல்வர் பியாங்சிங் கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட மற் றொரு நபரான பல்வந்த் சிங்கிற்கும் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூவருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஜனாதிபதி அவர்களது கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். இதைத் தொடர்ந்து அம்மூவரும் நீதிமன்றத்தை அணுகிய நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தால் தூக்குதண்டனைக்கு தடையுத்தரவு பெற்றுள்ளனர்.

ஆனால் இதேபோன்று அன்றி அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டவுடனேயே அவர் தூக்கிலிடப்பட்டுள்ளார். மேற்கூறப்பட்ட வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதில் அரசியல் காரணங்களும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு தமிழக சட்ட மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பஞ்சாப் வழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு பஞ்சாபில் உள்ள அகாலிதள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ரஜோனைவை தூக்கிலிட எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபில் பந்த் நடைபெற்ற நிலையில், மத்திய அரசினால் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

அப்சல் குருவை தூக்கிலிடப்பட்டதற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் உள்ளன என் றும் தனித்த முறையில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றுமே காஷ்மீர் மக்கள் முடிவுக்கு வந்துள்ளனர். அப்சல் குருவை தூக்கிலிடவேண்டும் என்று பாஜக மற்றும் நரேந்திர மோடி எழுப்பிய குரலுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செவி சாய்த்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

நாட்டின் இதர பகுதியினர் நடத்தப்படுவதை விட தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக காஷ்மீரிகள் கருதுகின்றனர். காஷ்மீரில் நிலவும் பிரச்சனையை மேலும் தீவிரமாக்கவே இது உதவும். காஷ்மீரில் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் ரீதியான தீர்வுக்கு எந்தவிதமான திட்டவட்ட நடவடிக்கையையும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்னெடுக்காத நிலையில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட விதம் அந்நியமாகும் உணர்வில் மேலும் எண்ணெய் வார்ப்பதோடு பிரிவினைவாத உணர்வை தூண்டிவிடும்.

தூக்குதண்டனையை ஒழிக்கவேண்டும் என்பது வலுவான மற்றும் சமகால பொருத் தப்பாடுடைய ஒன்றாகும். இது தொடர்பான தனது நிலையை மறுபரிசீலனை செய்வது தொடர்பான விவாதத்தில் மார்க்சிட் கம்யூனிட் கட்சி தற்போது ஈடுபட்டுள்ளது.

இதனிடையே, பாஜக மற்றும் கார்ப்பரேட் ஊடகங்கள் இனவெறி அடிப்படையில் தங்களுக்கு வெற்றி கிடைத்துவிட்டதாக ஊதிப் பெரிதாக்கி செய்யப்படும் பிரச்சாரம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாஜகவைப் பொறுத்தவரை பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது அவர்களது பாரபட்சமான அரசியல் தளத்தையும் அவர்களது குறுகிய அரசியல் நலனை அடிப்படையாகக் கொண்டதுமாகும்.


நன்றி - தீக்கதிர் 14.02.2013