Friday, April 13, 2012

வேலூரில் ஒரு இனிய உதயம்

மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் வேலைவாய்ப்பு நுழைவுத்தேர்வுகளை தலித், ஏழை மாணவர்கள் வெற்றிகரமாக சந்திக்க உதவுகின்ற 

டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் துவக்க விழா

நாள் : 14.04.2012, சனிக்கிழமை மாலை 5.00 மணி
இடம் : சரோஜ் இல்லம், எல்.ஐ.சி ஊழியர் சங்க அலுவலகம்,
கிரவுன் தியேட்டர் பின்புறம், வேலூர் -4.

தலைமை
தோழர் எஸ்.ராமன்,
பொதுச்செயலாளர், AIIEA, வேலூர் கோட்டம்

வரவேற்புரை
தோழர் வி.குபேந்திரன்,

மாவட்ட அமைப்பாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
மையத்தை துவக்கி வைத்து சிறப்புரை
தோழர் கே.சுவாமிநாதன்,
பொதுச்செயலாளர், SZIEF, மாநிலச் செயலாளர், TNUEF

வாழ்த்துரை
தோழர் கே.கணேஷ்    ,                     தோழர் ஜி.லதா
அமைப்பாளர்,                         மாநில துணைத்தலைவர்
டாக்டர் அம்பேத்கார்                                          TNUEF
கல்வி மையம், கோவை

                         தோழர் ஏ.நாராயணன்
                         மாவட்டச்செயலாளர், CPI(M)     
 
            தோழர் பி.சக்திவேல்        தோழர் தா.வெங்கடேசன் 
             மாவட்டச்செயலாளர்        மாவட்ட செயற்குழு
                  AIKS                                           CPI (M)   
 
        தோழர் எம்.சண்முகம்        தோழர் என்.காசிநாதன்
         மாநிலச்செயலாளர்          மாவட்டச்செயலாளர்
                     UBIEU (BEFI)                               CITU 

         தோழர் எம்.சிலுப்பன்,       தோழர் சி.சரவணன்
         மாவட்டத்தலைவர்          மாவட்டச்செயலாளர்
                           TNGEA                                   TNPTF
                 
                 மற்றும் கல்வியாளர்கள், பேராசிரியர்கள்

நன்றியுரை
தோழர் சி.ஞானசேகரன்,
மாவட்டச்செயலாளர், BSNLEU

அனைவரும் பங்கேற்பீர், வெற்றி பெறச் செய்வீர் . . .

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, 
வேலூர் மாவட்டம்
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், 
வேலூர் கோட்டம்
வகுப்புக்களில் பங்கேற்க தொடர்பு கொள்வீர்
9442315088, 9443358950, 9443813046,
9442878299, 9442539919, 9994548951

Thursday, April 12, 2012

உதிர்ந்த சிவப்பு ரோஜா




மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்,
எளிமையின் வடிவம்,
தியாகத்தின் உருவம்,
உழைப்பின் அடையாளம்,
தீண்டாமை ஒழிப்பு முன்னணி
என்ற அமைப்பின் அடித்தளம்,

தோழர் என். வி அவர்களுக்கு 
இதய அஞ்சலி

அவர் மண்ணிலிருந்து மறைந்தாலும்
அவரின் தியாகமும் உழைப்பும்
அவர் புகழை என்றென்றும் 
மணம் வீசச்செய்யும்
 

Monday, April 9, 2012

வாழ்த்துக்கள் தோழர்!

மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக
தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள 
தோழர் பிரகாஷ் காரத் அவர்களுக்கு
வாழ்த்துக்கள்.
 


காரிருள் சூழ்ந்த 
பாரதத்தின் துயரை
போக்கிட
போரிடுவோம்
உங்கள் தலைமையிலே,

கோழிக்கோட்டு
முழக்கம்
ஒலிக்கும் நாடெங்கும்,
புதியதொரு 
உதயம் கண்டிடவே! 

 

 

அழகே கொல்லுதே! மனதை அள்ளுதே!!

அழகு சொட்டும்
அண்டார்டிகா
பனிப் பாறைகள்.




























Sunday, April 8, 2012

கண்ணை நம்பாதே

நம் கண்களை ஏமாற்றும்
படங்கள்



















 

நீர்மூழ்கிக் கப்பலில் மூழ்கிப்போன பாதுகாப்பு அமைச்சர்




ராணுவத்திற்கான தளவாடங்கள் வாங்குவதில் நடைபெறும் ஊழல்கள் இப்போது மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நேரு காலம் தொடங்கி ஊழலின் கறை படிந்துள்ளது ஒரு தேசிய அவமானம். இது பற்றி பேசுவது நாட்டின் பாதுகாப்புக்கே குந்தகம் விளைவிக்கும் என்ற உபதேசம் வேறு அவ்வப்போது செய்யப்படும். ஆனால் தேசத்தின் பாதுகாப்பிற்கே ஊறு விளைவிப்பது, ராணுவத் தளவாடங்களை வாங்குவதில் நடைபெறும் ஊழல்கள்தான். ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்திற்கென பெருந்தொகை பட்ஜெட்டில் ஒதுக்கப்படும். அதில் பெரும் பகுதி தளவாடங்கள் வாங்கத்தான் பயன்படுகின்றது. அதிலே ஊழலுக்காக ஒதுக்கப்படும் தொகை எவ்வளவு என்பதைத்தான் எந்த நிதியமைச்சரும் சொல்வதில்லை.

நம் எல்லோருக்கும் உடனடியாய் நினைவில் வருவது போபோர்ஸ் பீரங்கி ஊழல். அது பற்றியே தனியாகவே ஒரு தொடர் எழுத வேண்டும். அதை வேறொரு சந்தர்ப்பத்தில் விவாதிப்போம். இந்த மாதம் நீர் முழுகிக் கப்பல் ஊழல் பற்றி பார்ப்போம்.

இந்திரா காந்தியின் கொடூர மரணம் ஏற்படுத்திய அனுதாபம் ராஜீவ் காந்தியை பிரதமர் நாற்காலியில் அமர வைத்தது. திருவாளர் பரிசுத்தம் என்பது போன்ற தோற்றத்தை அவர் உருவாக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். கரீபி ஹடோ அதாவது வறுமையை ஒழிப்போம் என்று அவர் அம்மா முழங்கினால் இவர் கூடவே பிகாரி ஹடோ அதாவது வேலையின்மையை ஒழிப்போம் என்று சேர்த்து முழங்கினார்.

ஆனால் ஓராண்டிற்குள்ளேயே இவரும் பெரு முதலாளிகளின் கைப்பாவைதான்  என்பது அம்பலமானது. காரணம் நிதியமைச்சராக இருந்த வி.பி.சிங். அவர் பெரு முதலாளிகள் செய்து வந்த மோசடிகளை, வருமான வரி ஏய்ப்புக்களை சோதனை செய்யத் தொடங்கினார். அமுலாக்கப் பிரிவு என்று ஒன்று இருப்பதே அப்போதுதான் மக்களுக்கு தெரிய வந்தது.

இதனால் முதலாளிகள் அளித்த நிர்ப்பந்தம் காரணமாக ராஜீவ் காந்தி, நிதித்துறையை தன் வசமே வைத்துக் கொண்டு வி.பி.சிங்கை பாதுகாப்பு அமைச்சராக்கினார். பாகிஸ்தானுடன் உள்ள உறவு பதட்டமாக இருப்பதால் பாதுகாப்புத்துறையை கவனிக்க திறமையான ஒருவர் தேவை என காரணமும் சொன்னார். ஆனால் பாதுகாப்புத்துறையிலும் வி.பி.சிங்கால் பிரச்சினை வரும் என்பதை ராஜீவ் காந்தி எதிர்பார்க்கவில்லை.
1981 ல் இந்தியா ஜெர்மன் நிறுவனமான ஹெச்.டி.டபிள்யு விடமிருந்து நான்கு நீர்மூழ்கி போர்க்கப்பல்களை வாங்கியிருந்தது. இப்போது மீண்டும் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க திட்ட,மிட்டது. கப்பல்களின் விலையில் தள்ளுபடி வேண்டும் என பாதுகாப்பு அமைச்சகம்  ஹெச்.டி.டபிள்யு விடம் கேட்டது. ஏற்கனவே நடந்த விற்பனையில் ஏழு சதவிகித கமிஷன் இடைத் தரகர்களுக்கு அளித்துள்ளதால், இப்போதும் தர வேண்டியிருப்பதால் தள்ளுபடி தர சாத்தியமில்லை என அந்நிறுவனம் மறுத்து விட்டது.

நானூற்றி இருபது கோடி ரூபாய் விற்பனைக்கு முப்பது கோடி ரூபாய் கமிஷன் பெறப்பட்டுள்ளது என்று  ஜெர்மனிக்கான இந்தியத் தூதர் வி.பி.சிங்கிற்கு தகவல் தெரிவிக்க அவர் விசாரணைக்கு உத்தரவிடுகின்றார். இந்த விசாரணை ராஜீவ் காந்திக்கு எரிச்சலூட்டுகின்றது. நான்கு நீர் மூழ்கிக்கப்பல்கள் வாங்கும் போது பிரதமர் இந்திரா காந்தியின் வசமே பாதுகாப்புத் துறையும் இருந்தது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி.

அமைச்சரவைக் கூட்டத்திலேயே பிரச்சினை வெடிக்கிறது. “ஹெச்.டி.டபிள்யு நிறுவனம் எத்தனையோ நாடுகளோடு வணிகம் செய்கின்றது. எத்தனையோ தலைவர்களுக்கு லஞ்சம் கொடுத்திருக்கும். அவற்றை எல்லாம் வெளியே சொன்னால் அதனால் வணிகம் செய்ய முடியுமா? என்று கம்பெனிக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குகின்றார். அங்கேயே பதவியை ராஜினாமா செய்கின்றார் வி.பி.சிங். அவர் பதவி விலகிய சில நாட்களிலேயே அவரை காங்கிரஸ் கட்சியிலிருந்தும் நீக்கப்படுகின்றார்.

இந்த பேரத்தின் இடைத்தரகராக ஹிந்துஜா சகோதரர்கள் இருந்தார்கள் என்று சொல்லப்பட்டாலும் அது நிரூபிக்கப்படவில்லை. வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ, இவ்வழக்கு குறித்து விசாரிக்க ஜெர்மன் மற்றும் ஸ்விஸ் அரசுகள் ஒத்துழைக்கவில்லை என்று கூறி பதினைந்து வருடங்கள் கழித்து வழக்கை மூடி விட்டது.

வி.பி.சிங் பதவி விலகிய சில நாட்களிலேயே போபோர்ஸ் ஊழல் வெடித்து விட்டதால் அது வெளிச்சத்தைக் கைப்பற்றிக் கொண்டது.  ஹெச்.டி.டபிள்யு நிறுவனம் இன்னமும் பல நாடுகளுக்கு நீர்முழுகிக் கப்பல்களை விற்றுக் கொண்டுதான் இருக்கிறது, இந்தியா உட்பட.

(எங்கள் சங்க மாத இதழ் சங்கச்சுடரில் வெளிவரும்
ஊழல்களின் ஊர்வலம் தொடருக்காக எழுதியது)

Friday, April 6, 2012

இறக்கும் போதும் இலட்சியத்தை மறவாது . . . .





ஒஞ்சியம் போராட்டம் கேரளக் குழந்தைகளுக்கு கதை, கதையாகச் சொல்லப்பட்டதாகும். உணவுப் பற்றாக்குறையை எதிர்த்தும் மற்றும் மக்களுக்கு நிலத்திற்காகவும் 1948 ஆம் ஆண்டில் கடுமையான போராட்டம் நடைபெற்றது. 

மண்டோட்டி கண்ணனின் தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராடி வந்தனர். இதற்கு எதிராக கடுமையான அடக்குமுறையை அரசு கட்டவிழ்த்து விடுகிறது.
ஏப்ரல் 30, 1948 அன்று எட்டு தோழர்கள் காவல்துறையின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகிறார்கள். 

மண்டோட்டி கண்ணன் சரணடைந்தால் பலிகளைத் தடுக்கலாம் என்று கூறியதால், இவர் சரணடைகிறார். ஆனால் சிறைக்குள் வைத்து கண்ணன் கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகிறார். மண்டை பிளக்கிறது. சிறையில் ரத்தம் ஓடுகிறது. மார்ச் 4, 1949 அன்று இந்தத் தாக்குதல்கள் நடக்கிறது. இறந்துவிட்டார் என்று நினைத்து அவரை விட்டு நகர்கிறார்கள் தடியர்கள். காலையில் பார்த்தபோது அவர் உயிரோடு இருந்தது மட்டுமல்லாமல், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையிலும் தனது ரத்தத்தால் சிறைச் சுவரில் சுத்தியல், அரிவாளை வரைந்திருக்கிறார்.

இந்தக் காட்சி கோழிக்கோடு நகரில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கட்சி
அகில இந்திய மாநாட்டை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள
   கண்காட்சியில் இடம் பெற்றிருக்கிறது. பார்த்தவுடன் பலரின் கண்களில் குபுக் என்று கண்ணீர் வருவதைப் பார்க்க முடிந்தது. ஆனால், அந்த இடத்தை விட்டு நகரும்போது உறுதியான நடையுடன் திரும்புகிறார்கள்.


நன்றி -  தீக்கதிர்