Tuesday, January 7, 2020

அர்ணாப் நெனச்சதும் நடந்ததும்



ஊடக வியாபாரி அர்ணாப் கோஸ்வாமி தனது ரிபப்ளிக் டிவியில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்துகிறார்.

அவரது நோக்கம் இடதுசாரிகளை இழிவு படுத்துவது. அதற்கேற்றார்போல கேள்விகளை முன்வைக்கிறார்.

அந்த கேள்விகளும் வாக்கு விபரங்களும் கீழே உள்ளது.



இங்கே இடதுசாரி குண்டர், காங்கிரஸ் குண்டர் என்று எழுதி ஜே.என்.யுவில் சிறுபான்மையாக உள்ள ஏ.பி.வி.பி என்றெல்லாம் எழுதினாலும் கலவரம் செய்தது அந்த ரௌடிகள்தான் என்று 86 % சொல்லி அர்ணாப்பை செருப்பால் அடித்துள்ளார்கள்.




அவர் நினைத்தது ஒன்றும் நடக்கவில்லை. 

அவரது தூண்டுதலுக்கு யாரும் இரையாகவில்லை. இடதுசாரிகள் மீதான, ஜே.என்.யு மீதான வன்மம் எடுபடவில்லை.

ரிபப்ளிக் டிவி வாசகர்கள் அர்ணாப்பை "போடா புடலங்காய் " என்று எச்.ராசா பாணியில் சொன்னதுதான் நடந்தது.

Monday, January 6, 2020

ரஹ்மான்-ஜீன்ஸ்-வயலின்


ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய இசையில் வெளியான ஜீன்ஸ் திரைப்படத்தின் 

"பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம்"

பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கைவண்ணத்தில்

தீயவர்களை திருப்பி அடிப்பது தவறில்லை



சங்கி குண்டர்கள், கொள்ளையர்கள் போல முகமுடி அணிந்து கொண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களையும் ஆசிரியர்களையும் தாக்கியுள்ளனர். எண்கவுண்டர் கிரிமினல் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறை வழக்கம் போல வேடிக்கை பார்த்துள்ளது.

அஹிம்சை போராட்டங்கள் இனி சரிப்பட்டு வரும் என்று தெரியவில்லை. "அடித்தால் திருப்பி அடி" என்ற தோழர் பி.சீனிவாசராவின் வழிகாட்டுதல்தான் இன்றைக்கு தேவை.

சங்கி குண்டர்களையும் அவர்களுக்கு எடுபிடியாக இருக்கும் காவல்துறையையும் திருப்பி அடிப்பதில் எந்த தவறும் இல்லை.

"உயர்த்திப் பிடித்தால் கொடியாகும், திருப்பிப் அடித்தால் தடியாகும்" என்ற முழக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய காலகட்டம் வந்து விட்டது.

அதற்கான நம்பிக்கையையும் தைரியத்தையும் தர வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. 


Sunday, January 5, 2020

அம்மையார் மீசையில் மண் ஒட்டலையாம் . . .



காலை பதிவின் தொடர்ச்சி இது.

கிரண் பேடி அம்மையார் கொடுத்துள்ள விளக்கத்தைப் பாருங்கள்.



நாசா பதிவு செய்தது என்ற தகவல் போலியாக இருக்கலாம். ஆனால் அந்த ஓசை மன நிம்மதி கொடுக்கிறது என்பதால் பகிர்ந்து கொண்டதாக சொல்கிறார்.

அம்மணி, இங்கே பித்தலாட்டமே "நாசாவே சொல்லி விட்டது" என்ற ரீதியில் பரப்பப்படுகிற கட்டுக்கதைகள்தானே. 

அப்படி ஒரு கட்டுக்கதையை பகிர்ந்து கொண்டு விட்டு அப்படிப்பட்ட பொய்யை பரப்பியதற்கான குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் "அதிர்வு, மன நிம்மதி" என்றெல்லாம் கதையளப்பது

"மீசையில் மண் ஒட்டவில்லை" கதைதான்.

பதவிக்கு ஏற்ற பண்பு இல்லையே உங்களிடம்!

சங்கிகளுக்கு ஏது பண்பு என்று கேட்கிறீர்களா?

அதுவும் சரிதான் . . . 

கிரண் பேடியும் மூடர்கூட கும்பல்தானா?




புதுவை துணை நிலை ஆளுனர் கிரண் பேடி அம்மையார் ஒரு சர்வாதிகாரி, ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்காத ஆணவப் பேர்வழி, சங்கிகளின் கட்டளைகளை நிறைவேற்றி செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பவர், மத வெறிக்கு துணை நிற்பவர், போலி ஊழல் எதிர்ப்பாளர் போன்ற பல விமர்சனங்கள் இருந்தாலும் கொஞ்சமாவது அறிவு உள்ளவர் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் சூரியனின் ஓசையை நாசா பதிவு செய்துள்ளது, அது ஓம் என்று ஒலிக்கிறது என்ற சங்கிகளின் கட்டுக்கதையை நம்பி பகிர்ந்து கொண்டதன் மூலம்

அவரும் சங்கி மூடர் கூட உறுப்பினர் என்பதை அம்பலப்படுத்திக் கொண்டு விட்டார்.

நல்லது.


Saturday, January 4, 2020

தினமலரே, களி ஒன்றும் கேவலமில்லை




எச்.ராசா போல ஆளும் கட்சியின் தயவில்
எஸ்.வி.சேகர் போல அண்ணியின் தயவில்

காவல்துறை நடவடிக்கைக்கு அஞ்சி ஓடி ஒளிந்து கொண்டு மன்னிப்பு கேட்டு விருந்து உண்பதை விட சிறையில் களி தின்பது ஒன்றும் கேவலமில்லை என்பது வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை என்று எந்த உணர்வும் இல்லாத கேவலமான சங்கிகளுக்கோ அவர்களைப் போலவோ கேவலமான தினமலர் பத்திரிக்கைக்கோ புரிவதற்கு வாய்ப்பில்லைதான்.

அதனால் இப்படி வக்கிரமான தலைப்புக்களை அவர்கள் கொடுப்பதிலும் எந்த வியப்புமில்லை.

எஸ்.வி.சேகர் சொன்னது போல பன்றியிடம் பசும்பாலை எதிர்பார்க்கக் கூடாதல்லவா? 

பாஜகவினர் தூக்கில் தொங்கலாம் . . .



பாஜக ஒரு கேடு கெட்ட கேவலமான கட்சி என்பது மீண்டும் மீண்டும் அம்பலமாகிறது.

குடியுரிமை மசோதாவிற்கு ஆதரவு திரட்ட அக்கட்சி ஒரு மிஸ்ட் கால் இயக்கம் நடத்துகிறது.


மக்களை அந்த எண்ணில் மிஸ்ட் கால் கொடுக்க வைக்க எப்படிப்பட்ட கீழ்த்தரமான உத்திகளை பயன்படுத்துகிறார்கள்.





பாலுணர்வை தூண்டுவதற்குக் கூட அவர்கள் தயங்கவில்லை.

இப்படிப்பட்ட கேவலமான பிழைப்பை விட பிச்சையெடுப்பதும் விபச்சாரமும் கௌரவமானது. 

இந்த வார்த்தையை தாங்க முடியாத பாஜகவினர் வேண்டுமானால் தூக்கில் தொங்கட்டும்.