Thursday, January 3, 2019

தூரம் அதிகம், பக்கம் குறைவு . . . புத்தகப் பட்டியல்




2018 ல் எனது புத்தக வாசிப்பு தொடர்பான பட்டியல் கீழே. கடந்த வருடம் நான் பயணம் செய்த தூரம் என்பது 37,520 கிலோ மீட்டர். முந்தைய ஆண்டைக் காட்டிலும் கிட்டத்தட்ட இரண்டாயிரம் கிலோ மீட்டர் அதிகம்தான். ஆனாலும் கூட படித்த நூல்களின் எண்ணிக்கை என்பது 2017 ல் 17885 பக்கங்கள், 2018 ல் அது 15,189 ஆக குறைந்து விட்டது. இந்த ஆண்டு அதை சரி செய்ய வேண்டும்.

பயணத்திற்கும் பக்கத்திற்குமான தொடர்பு என்னவென்றால் நான் நூல்களை படிப்பதே பயணங்களின் போது மட்டும்தான். வீட்டில் படிப்பது ஹிந்து, தீக்கதிர் மற்றும் வார, மாத  இதழ்கள் மட்டுமே.

டிசம்பர் மாதம் படித்த நூல்களை ஜனவரி முதல் நாளன்றுதான் பதிவு செய்தேன். அவ்வப்போது பதிவு செய்திருந்தால் இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்து சதமடித்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.

கடந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய சில நூல்கள் இன்னும் பாக்கி உள்ளது. நீண்ட நாட்களாக வாசிக்காமல் இருந்த “காவல் கோட்டம்” நூலை இப்போதுதான் தொடங்கியுள்ளேன். முன்னூறு பக்கங்கள் கடந்துள்ளது. தொடராகப் படித்து மெய் சிலிர்த்துப் போன, முன்பதிவு செய்துள்ள “வேள்பாரி” கைக்கு வந்து பரம்பில் மூழ்கும் முன்பாக இதனை நிறைவு செய்திட வேண்டும்.

எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பிதாமகர் தோழர் சந்திரசேகர் போஸ் அவர்களின் தன் வரலாறு நூல் வேறு அடுத்து தயாராக உள்ளது. எங்கள் தோழர் ச.சுப்பாராவ் மொழிபெயர்த்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாறு நூலும் கூட.

இந்த வருடம் சென்னை புத்தக விழாவிற்குச் செல்லும் முன்பு இந்த மூன்று நூல்களையாவது முடித்து விட வேண்டும்.

பிகு: பதிவு செய்யும் பழக்கத்திற்கு தூண்டுகோளாக இருந்த மதுரைத் தோழரும் எழுத்தாளருமான தோழர் ச.சுப்பாராவ் அவர்களுக்கு இந்த ஆண்டும் நன்றிகளை உரித்தாக்குகிறேன்


எண்
பெயர்
ஆசிரியர்
தன்மை
பக்கம்
1
தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்
எஸ்.ராமகிருஷ்ணன்
சிறுகதைகள்
158
2
காட்சிகளுக்கு அப்பால்
எஸ்.ராமகிருஷ்ணன்
திரைப்படங்கள்
80
3
பலூன்
ஞானி
நாடகம்
96
4
கபாடபுரம்
நா.பார்த்தசாரதி
நாவல் புனைவு
210
5
மாயக்குதிரை
தமிழ்நதி
சிறுகதைகள்
168
6
மிளிர் கல்
இரா.முருகவேள்
நாவல் புனைவு
270
7
சொற்களைத் தேடும்
.சுப்பாராவ்
கட்டுரைகள்
96

இடையறாத பயணம்



8
சிவந்த கைகள்
சுஜாதா
நாவல் புனைவு
136
9
மூன்று நாள் சொர்க்கம்
சுஜாதா
நாவல் புனைவு
104
10
6961
சுஜாதா
நாவல் புனைவு
72
11
ஓரிரவு ஒரு ரயிலில்
சுஜாதா
நாவல் புனைவு
46
12
குறத்தியம்மன்
மீனா கந்தசாமி
நாவல் புனைவு
234


தமிழில் பிரேம்


13
ரத்தினக்கல்
சத்யஜித்ரே
நாவல் புனைவு
48


தமிழில் வீ.பா.கணேசன்


14
வேதபுரத்தார்க்கு
கி.ராஜநாராயணன்
வாழ்க்கை வரலாறு
184
15
பக்கத்தில் வந்த அப்பா
.தமிழ்ச்செல்வன்
சிறுகதைகள்
160
16
பத்துக் கிலோ ஞானம்
இரா.எட்வின்
கட்டுரைகள்
92
17
வெட்டாட்டம்
ஷான்
நாவல் புனைவு
266
18
ஊழல் உளவு அரசியல்
சவுக்கு சங்கர்
அனுபவம்
223
19
எட்டு கதைகள்
ராஜேந்திரசோழன்
சிறுகதைகள்
96
20
வைகை நதி நாகரீகம்
சு.வெங்கடேசன்
கீழடி
151
29
உழைப்போரின் உரிமைக் குரலாய்
கே.பி.ஜானகியம்மாள்
சட்டமன்ற உரைகள்
47
30
பெண்களும் சமூக நீதியும்
பேரா.சோ.மோகனா
பெண்ணியம்
32
31
மீரட் சதிவழக்கு
முசாபர் அகமது
வரலாறு
24
32
சேரமான் காதலி
கண்ணதாசன்
நாவல் புனைவு
680
33
பிரியங்கா நளினி சந்திப்பு
பா.ஏகலைவன்
ராஜீவ் கொலை
610
34
செம்புலம்
இரா.முருகவேள்
நாவல் புனைவு
320
35
கீழைத்தீ
பாட்டாளி
நாவல் புனைவு
352
36
வாங்க சினிமாவைப் பற்றி
கே.பாக்யராஜ்
சினிமா பற்றி
142
37
போய் வருகிறேன்
கண்ணதாசன்
கட்டுரைகள்
240
38
நினைவுகளில் என் இனிய தோழர் .கே.நாயனார்
பி.ஸ்ரீரேகா - தமிழில் மு.சுப்பிரமணி
வாழ்க்கை வரலாறு
64
39
தோழர்கள்
மு.இராமசுவாமி
நாடகம்
80
40
முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே
நா.முத்துநிலவன்
கல்வி
166
41
ஏழரைப்பங்காளி வகையறா
எஸ் . அர்ஷியா
நாவல் புனைவு
372
42
கர்ப்ப நிலம்
குணா. கவியழகன்
நாவல் புனைவு
336
43
அரசு ஊழியர் இயக்க வரலாற்றில் M.R.அப்பன்
நெ.இல.சீதரன்
தொழிற்சங்கம்
560
44
ஆயுத எழுத்து
சாத்திரி
நாவல் புனைவு
375
45
நிறங்களின் உலகம்
தேனி சீருடையான்
நாவல் புனைவு
303
46
எழுதலை நகரம்
எஸ்.ராமகிருஷ்ணன்
சிறார் நாவல்
174
47
மூக்குத்தி காசி
புலியூர் முருகேசன்
நாவல் புனைவு
176
48
வழக்கு எண் 1215/2015
வீ.பா.கணேசன்
கருத்துரிமை வழக்கு
160
49
இன்குலாப் ஜிந்தாபாத்
அறந்தை நாராயணன்
வரலாறு
170
50
வியட்னாம் காந்தி
வெ.ஜீவானந்தம்
வாழ்க்கை வரலாறு
110
51
காந்தள் நாட்கள்
இன்குலாப்
கவிதைகள்
142
52
ஜிகாதி
ஹெ.ஜி.ரசூல்
கட்டுரைகள்
120
53
இந்திய சுதந்திரப் போரும் கப்பற்படை எழுச்சியும்
பி.ஆர்.பரமேஸ்வரன்

63
54
அப்போதும் கடல்
எஸ்.ராமகிருஷ்ணன்
சிறுகதைகள்
174
55
தப்பாட்டம்
சோலை சுந்தரப் பெருமாள்
நாவல் புனைவு
315
56
கல்லறை ரகசியம்
சத்யஜித்ரே
நாவல் புனைவு
135


தமிழில் வீ.பா.கணேசன்


57
சாமிகளின் பிறப்பும் இறப்பும்
.தமிழ்ச்செல்வன்
கட்டுரைகள்
64
58
ராஜீவ் காந்தி சாலை
வினாயக முருகன்
நாவல் புனைவு
328
59
ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள்
ராகுல சாங்கிருத்தியான்
வரலாறு
210
60
கார்ப்பரேட்டும் வேலை பறிப்பும்
எஸ்.கண்ணன்
வேலை பறிப்பு பற்றி
32
61
கலை ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகள்
எஸ்..பெருமாள்
கட்டுரைகள்
88
62
ஆட்டனத்தி ஆதிமந்தி
கண்ணதாசன்
புனைவு
78
63
இடது பக்கம் செல்லவும்
மதுக்கூர் ராமலிங்கம்
அரசியல்
16
64
முதுகளத்தூர் படுகொலை
கா..மணிக்குமார் தமிழில் .சுப்பாராவ்
அரசியல்
176
65
அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புக்கள்
.தமிழ்ச்செல்வன்
கட்டுரைகள்
256
66
வர்க்கப்போரின் வரலாற்று நாயகர்கள்
கோவை கனகராஜ்
போராட்டம்
125
67
.லெனின் தங்கப்பா
தொகுப்பு
வாழ்க்கை வரலாறு
110
68
சங்கராச்சாரியார்கள் மீது கொலை வழக்கு
கி.வீரமணி
கொலை வழக்கு
254
69
தாத்தா பாட்டி சொன்ன கதைகள்
கழனியூரான்
சிறுகதைகள்
96
70
காரல் மார்க்ஸ்
வெ.சாமிநாதசர்மா
வாழ்க்கை வரலாறு
163
71
ஒரு கம்யூனிஸ்டாக ்இருப்பதன் நன்மைகள்
என்.ராமகிருஷ்ணன்
அரசியல்
32
72
திராவிட இயக்கத்தின்
பேரா. .அன்பழகன்
அரசியல்
24
73
புட்டபர்த்தி சாய்பாபா?
கி.வீரமணி
சர்ச்சை
32
74
காம்ரேட் அம்மா
கல்பனா கருணாகரன்
வாழ்க்கை வரலாறு
64
75
குடியாத்தம்
முல்லைவாசன்
ஊர் வரலாறு
64
76
ஏலகிரி
நா.சீனிவாசன்
ஊர் வரலாறு
64
77
உப பாணடவம்
எஸ்.ராமகிருஷ்ணன்
மகாபாரதம்
384
78
எது கருப்புப்பணம்
மருதையன்
செல்லா நோட்டு
32
79
வைக்கம் போராட்டம்
கு.வெ.கி.ஆசான்
வரலாறு
26
80
மனசே டென்ஷன் ப்ளீஸ்
நளினி
உளவியல்
32
81
சாம்பல் நிற தேவதை
ஜி.முருகன்
சிறுகதைகள்
118
82
பெரியார் ஒரு சகாப்தம்
அறிஞர் அண்ணா
வாழ்க்கை வரலாறு
32
83
திருப்பத்தூர்
நா.சுப்புலட்சுமி
ஊர் வரலாறு
64
84
திருக்குறளும் அண்ணாவும்
அறிவுச்சுடர்
வாழ்க்கை வரலாறு
168
85
தை எழுச்சி
தொகுப்பு ;செ.சண்முகசுந்தரம், யமுனா ராஜேந்திரன், இரா.தமிழ்க்கனல்
ஜல்லிக்கட்டு போராட்டம்
442
86
நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ்
.சுப்பாராவ்
வாழ்க்கை வரலாறு
80
87
மோட்சம்
பிரேம்சந்த்
சிறுகதைகள்
64


தமிழில் .வீரமணி


88
காவிரி - நேற்று, இன்று, நாளை
பெ.மணியரசன்
காவிரி பிரச்சினை
208
89
தாண்டவபுரம்
சோலை சுந்தரப் பெருமாள்
நாவல் புனைவு
726
90
திருவள்ளுவர் திடுக்கிடுவார்
நாமக்கல் ராமலிங்கம்
திருக்குறள் பற்றி
80
91
ஊர் சுற்றிப் புராணம்
ராகுல சாங்கிருத்தியான்
பயணம்
150
92
இந்துவிற்கு ஒரு கடிதம்
லியோ டால்ஸ்டாய்
கடிதங்கள்
64
93
நான் ஏன் பதவி விலகினேன்
நா.ஜெயராமன்
அண்ணல் அம்பேத்கர் நாடாளுமன்ற உரைகள்
115
94
மரப்பசு
தி.ஜானகிராமன்
நாவல் புனைவு
324
95
அரை நூற்றாண்டுக் கொடுங்கனவு
செ.சண்முகசுந்தரம்
வெண்மணி பற்றி
192
96
பெண்டிரும் உண்டுகொல்?
கோவை மீ,உமாமகேஸ்வரி
கவிதைகள்
80
97
தெரிவு செய்யப்பட்ட சொற்கள்
கௌரி லங்கேஷ்
கட்டுரைகள்
64
98
மார்க்சியம் என்றால் என்ன?
சு.பொ.அகத்தியலிங்கம்
மார்க்சிய அறிமுகம்
136




15189


மரணத்தின் வரலாறு மறந்த காவி பிராந்தன்கள்


காவி பிராந்தன்களும்  சாகசப் போராளிகளும் உணரட்டும்



பிந்துவும் கனகதுர்காவும் சபரிமலைக்குச் சென்று வழிபட்டு வந்த பின்னணியில் சில விஷயங்களை உரக்கப் பேசிட வேண்டும்.

வனிதா மதில் பற்றியும் கூட.

கேரளத்தின் மார்க்சிஸ்ட் அரசு ஒரு கையாலாகாத அரசு என்று இத்தனை நாள் தூற்றி வந்த பல முக நூல் புரட்சியாளர்கள், தனி நகர் சாகச முயற்சிகளையே புரட்சி என்று பீற்றிக் கொண்டிருந்தவர்களால் லட்சக் கணக்கான பெண்களை திரட்டி பெண் சுவர் அமைத்ததை என்னமோ ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. 

அதே போல வனிதா மதிலுக்கு இஸ்லாமியப் பெண்களை ஏன் ஈடுபடுத்தினர் என்ற முதலைக் கண்ணீர் வடிப்பதையும் பார்க்க முடிகிறது.

சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு செல்வதை பெண்களே விரும்பவில்லை என்ற கட்டுக்கதை தகர்க்கப்பட்டதை காவிக் கயவர்களால் இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சபரிமலை விஷயத்தில் “பெண்களை கோயிலுக்கு அழைத்துச் செல்ல திரட்டுவது தன்னுடைய வேலை இல்லை” என்பதில் கேரள அரசும் மார்க்சிஸ்ட் கட்சியும் தெளிவாக இருந்தது.

அதே நேரம் கோயிலுக்குச் செல்ல விரும்பும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது மட்டுமே அரசின் வேலை என்ற அளவில் மட்டுமே பிரச்சினையைக் கையாண்டது. பராசக்தி வசனம் போல சபரிமலை கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறி விட்ட பின்னணியில் பெரும் கலவரம் வெடிக்கவோ, ரத்த ஆறு ஓடவோ அவர்கள் அனுமதிக்கவில்லை.

அதே நேரம் சபரிமலை விஷயத்தை முன்வைத்து கேரள மாநில சிந்தனையோட்டத்தை பின்னிழுத்துச் செல்லவோ, பிற்போக்குக் கருத்துக்களை பரப்பவோ, பெண்களை இழிவுபடுத்தவோ அனுமதிக்க முடியாது என்ற அடிப்படையில்தான்

வனிதா மதிலுக்கு திட்டமிடப்பட்டது.

நாங்கள் அசுத்தமானவர்கள் அல்ல
கேரளத்தை பைத்தியக்கார நாடாக மாற்ற அனுமதிக்க மாட்டோம்

என்ற முழக்கங்களோடு பத்து லட்சம் பெண்களை திரட்ட முடிவு செய்யப்பட்டது.

இம்முழக்கங்களின் நியாயத்தை உணர்ந்ததால்தான் அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் எடுத்த முன்முயற்சிக்கு கிட்டத்தட்ட 176 அமைப்புக்கள் ஆதரவளித்தனர். அதிலே இஸ்லாமியப் பெண் அமைப்புக்களும் அடக்கம்.

ஐம்பது லட்சம் பெண்களில் ஏழை செல்வந்தர் பாகுபாடு கிடையாது, படித்தவர் -படிக்காதவர் பாகுபாடு கிடையாது, அலுவலக வேலை செய்பவர் - கூலி வேலை செய்பவர் பாகுபாடு கிடையாது, ஜாதிய வேறுபாடுகளும் கிடையாது, மத வேறுபாடுகளும் கிடையாது. கேரளத்தை மீண்டும் பைத்தியக்கார நாடாக பின்னோக்கி இழுத்துச் செல்லாதே, பெண்களை அசுத்தமானவள் என்று சொல்லாதே ஆகியவைதான் வனிதா மதிலின் முழக்கம். இதிலே இஸ்லாமியப் பெண்கள் கலந்து கொண்டது மட்டும் தெரிந்தால் அது பார்வைக் கோளாறு. சபரிமலைப் பிரச்சினையே பார்வைக் கோளாறின் விளைவுதான். குடிகாரனும் பாலியல் குற்றவாளியும் செல்வதனால் கறைபடாத புனிதம் பெண்கள் சென்றால் ஏற்படும் என்ற பார்வைக் கோளாறு

இதர பகுதி பெண்களைப் பற்றி மௌனமாக இருந்து விட்டு இஸ்லாமியப் பெண்களைப் பற்றி மட்டும் குறிப்பிடுவது விஷமத்தனமானது, விஷமானது.

சங்கிகளும் சரி மற்ற புரட்சி பேசுபவர்களும் சரி ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.

வனிதா மதிலுக்காக முப்பது லட்சம் பெண்களை திரட்டும் வல்லமை படைத்தவர்கள் முயன்றிருந்தால் அதிலே பத்தில் ஒரு பகுதி பெண்களோடு சபரிமலை நோக்கி முன்னேறியிருக்க முடியாதா?

மூன்று லட்சம் பெண்கள் அல்ல முப்பதாயிரம் பெண்கள் சேன்றிருந்தாலே காவிக்கயவர்கள் நடுங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்திருப்பார்கள்.

பிணராயி விஜயன் மோடியைப் போலவோ அல்லது மொட்டைச் சாமியார் போலவோ பொறுப்பற்ற முதல்வர் அல்ல. மதத்தின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சி மார்க்சிஸ்ட் கட்சியும் அல்ல.

இப்போது தலைப்பிற்கு வருகிறேன்.

கதறும் சங்கிகள் "பிணராயி விஜயன் பிணமாவார்' என்று சாபம் இடத் தொடங்கியுள்ளனர். 

அவர்கள் ஒரு வரலாற்றுத் தகவலை நினைவு படுத்திக் கொள்ளட்டும்.

வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட தந்தை பெரியார் இறந்து போக வேண்டும் என்று திருவிதாங்கூர் மகாராஜா "சத்ரு சம்ஹார ஹோமம்" நடத்துகிறார். இதிலென்ன பரிதாபம் என்னவென்றால் ஹோமம் நடந்த சில நாட்களில் திருவிதாங்கூர் மகாராஜா இறந்து போக, அதற்கடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பெரியாரின் வாழ்க்கைப் பயணம் தொடர்ந்தது.

ஒவ்வொரு முறை கலைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட போதும் அவர் கதை முடிந்தது என்று அதிமுக தொண்டர்கள் பேசி மகிழ்ந்தார்கள். ஆனால் அவரது இறுதி நாள் வரும் முன்பே அவர்களின் தலைவிதான் இறந்து போனார், அவரது மரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது.

அடுத்தவரின் மரணத்திற்காக ஆசைப்படுபவர்களையே மரணம் ஆசையோடு தழுவிக் கொள்கிறது என்ற வரலாற்றை காவிப் பிராந்தன்கள் நினைவில் கொள்ளட்டும்.




Wednesday, January 2, 2019

அவன் காமாச்சார்யா . . .


மொட்டைச் சாமியாரின் ஆளுகையில் உள்ள உத்திரப் பிரதேச மாநிலத்தில் நேற்று நடந்த சம்பவம் இது.

அயோத்தியில் உள்ள ஒரு கோயிலின் தலைமைப் பூசாரி, கோயிலுக்குள் நிகழ்த்திய பாலியல் வன் கொடுமைச் சம்பவம் இது.

அது எந்த கோயில் என்ற விபரத்தை உபி காவல்துறையும் சொல்லவில்லை. ஊடகங்களும் வெளியிடவில்லை.

அந்த கோயிலின் தலைமைப் பூசாரியின் பெயர் கிருஷ்ண காந்தாச்சார்யா. வாரணாசியிலிருந்து வந்த ஒரு பெண், ஆன்மீகப் பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்க,  கோயிலிலேயே தங்கச் சொல்லி இருக்கிறான்.

அந்தப் பெண்ணை வெளியே செல்ல விடாமல் பூட்டி வைத்து பல முறை பாலியல் வன் கொடுமை நிகழ்த்தியுள்ளான். கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விடக் கூடாது என்று அந்தப் பெண்ணை பாதுகாக்க எந்த குணசேகரனும் வராதது அப்பெண்ணின் துரதிர்ஷ்டம்.

கிடைத்த ஒரு  வாய்ப்பில் அப்பெண் தப்பித்து காவல்துறையில் புகார் கொடுக்க, அந்த தலைமைப் பூசாரி காந்தாச்சார்யா கைது செய்யப்பட்டுள்ளான்.

மோடியின் தொகுதியைச் சேர்ந்த பெண்ணிற்கு இறுதியில் நியாயம் கிடைக்குமா 

அல்லது மொட்டைச் சாமியார் தன் சாமியார் இனத்தைச் சேர்ந்த அயோக்கியனை தப்பிக்க விடுவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

பிந்து ,கனகதுர்கா - உயிர் கொடுத்த வரலாறு . . .




புத்தாண்டின் இரண்டாவது நல்ல செய்தி இது.

நேற்று வனிதா மதிலில் முப்பது லட்சம் பெண்கள் பங்கேற்று முதல் நல்ல செய்தியைத் தந்தார்கள் என்றால்

இன்று பிந்துவும் கனகதுர்காவும் சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் வழிபட்டு உச்ச நீதிமன்றம் தந்த தீர்ப்பிற்கு உயிர் கொடுத்துள்ளார்கள். அதன் மூலம் அவர்களும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்கள்.

சபரிமலைக் கோயிலில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று இதுநாள் வரை கதறிக் கொண்டிருந்தவர்கள் அடிப்படையில் பெண்களை அசுத்தவமானவர்கள் என்று சொல்லி அவர்களை மட்டும் இழிவு படுத்தவில்லை, கூடவே சபரிமலை ஐய்யப்பனையும் சேர்த்தே இழிவு படுத்திக் கொண்டிருந்தார்கள்.

நான்கு நாட்கள் முன்பாக 29.12.2018 அன்று திருச்சி ஸ்டேஷனில் அதிகாலை வந்திறங்கி புதுக்கோட்டை செல்லும் வழியில் ஸ்டேஷனுக்கு அருகாமையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே வந்த “மலைக்கு மாலை போட்டிருந்த ஐய்யப்ப பக்தர்” ஒருவர் முந்தைய நாளின் போதை இறங்காமல் சிகரெட் ஒன்றை பற்ற வைத்து டீ போடச் சொன்னார்.

என் கையில் இருந்த கண்ணாடி டம்ப்ளரைப் பார்த்து விட்டு, “க்ளாஸ் வேண்டாம், பேப்பர் கப்பில் கொடு என்று சொல்லி விரதத்தின் புனிதத்தை காப்பாற்றிக் கொண்டார்.

இது போன்ற ஆசாமிகள் பலரையும் அனுமதிக்கிற சபரிமலையின் ஆச்சாரம் பிந்துவும் கனகதுர்காவும் நுழைந்ததால் பாதிக்கப்பட்டு விட்டதாம். நடை சாத்தி தோஷம் கழிக்கிறார்கள்.

“பைத்தியக்காரர்களின் நாடு” என்று விவேகானந்தர் அன்று சொன்னதை இன்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் “புதிய காவிப் பிராந்தன்கள் “.

வெளியே ஆயிரங்கள், உள்ளே லட்சங்கள் . ஊஊஊடக . . .

நேற்று கேரளாவில் நடைபெற்ற பெண் சுவர் பற்றி செய்தி வெளியிட்ட  ஹிந்து நாளிதழ்



முதல் பக்கச் செய்தியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர் என்றும்



பின்பு உள் பக்கம் ஒன்றில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றனர் என்றும் 

செய்தி வெளியிட்டுள்ளது.

முதல் பக்க செய்தியை படிப்பவர்கள் பலரும் உள்பக்க செய்தியை படிப்பதில்லை என்பது யதார்த்தம்.

முப்பது லட்சம் பெண்கள் பங்கேற்ற எண்ணிக்கையை முதல் பக்கத்தில் ஆயிரக்கணக்கில் என்று குறைத்துக் காண்பிக்கிற ஊடக தர்மத்தை இடதுசாரிகளுக்கு மட்டும் கடைபிடிக்கிறார்கள். 

Tuesday, January 1, 2019

ஆஹாவென்று அங்கே எழுந்த பெண் சுவர் . . .

கிட்டத்தட்ட முப்பது லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கேரளாவில் காசர்கோடு தொடங்கி திருவனந்தபுரம் வரை 620 கிலோ மீட்டர் தூரத்திற்கு 

கேரளத்தை பைத்தியக்கார நாடாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் என்ற முழக்கத்தோடு

சபரிமலையின் பெயரால் நாகரீக சமுதாயத்தை பின்னிழுக்க நடைபெறும் முயற்சிகளை முறியடிக்க,

எங்களை இழிவுபடுத்த காவிகளை அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதியோடு திரண்டுள்ளனர்.

காலி நாற்காலி புகழ் பாஜக விற்கு முப்பது லட்சம் பெண்கள் அணி திரண்டது  நிச்சயம் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். அதனால்தான் காசர்கோடில் கலவரத்தை தூண்ட முயன்றது. 

புத்தாண்டின் முதல் நாளன்று அலையலையாய் திரண்ட அனைத்து மகளிருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

செவ்வணக்கம் தோழர்களே !!!!






























இசையோடு இனிமையாய் இந்தாண்டு . . .

புத்தாண்டின் முதல் பதிவை இசையோடு இனிமையாய் தொடங்குகிறேன்.

முப்பத்தி ஆறு வருடங்களாக புத்தாண்டு கொண்டாட்டத்தோடு இணைந்திருக்கிற ராஜாவின் பாடல் 'இளமை இதோ இதோ"

என் மகனின் வயலின் இசையில்





அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்