Tuesday, June 7, 2016

நல்லா கொடுக்கறாங்கய்யா "வரவேற்பு"





சோளிங்கர் வழியாக அரக்கோணம் நகருக்குச் சென்றால் நகருக்குள் நுழைவதற்கு முன்பாக “அரக்கோணம் நகராட்சி உங்களை வரவேற்கிறது”  என்ற அறிவிப்புப் பலகை உங்களை வரவேற்கும்.


நல்ல வரவேற்பு என்று அந்த பலகையை நம்பி வேகமாக சென்றால் உங்கள் கதி அதோகதி.

இதை விட மோசமாக ஒரு சாலை இருக்க முடியுமா என்று சவால் விடுக்கும் அங்கே உள்ள பள்ளங்கள். அங்கே ஒரு தண்டவாளமும் இருக்கும்.




அந்த மேடு பள்ளத்தில் உங்களுக்கோ, உங்கள் வாகனத்திற்கோ சேதமில்லாமல் தப்பித்தால் அடுத்த பத்து அடியில் அதே அனுபவத்தை மீண்டும் அச்சாலை தரும். அங்கேயும் ஒரு தண்டவாளப்பாதை செல்லும்.


தண்டவாளம் இருக்கிறதே, அப்படியென்றால் புகை வண்டி வருமா, ரயில்வே கேட் கிடையாதா? ரயில் விபத்துக்கான அபாயம் உள்ளதே என்றெல்லாம் கேள்விகள், அந்த தண்டவாளத்தைப் பார்த்தால் வரும்.

கவலை வேண்டாம் நண்பர்களே, அது ரயில் ஓடாத தண்டவாளம். வெள்ளைக்காரன் காலத்தில் போட்ட தண்டவாளமோ என்னமோ தெரியவில்லை, அவற்றை அகற்றாமல் நினைவுச்சின்னமாக ரயில்வே பராமரிக்கிறதா என்று தெரியவில்லை.

ரயில்வேதுறை அதை அகற்ற மறுப்பதால் அந்த சாலையை செப்பனிட மாநில அரசோ, நகராட்சியோ தயாராக இல்லை.

பல வருடங்களாக இச்சாலை அப்படியேதான் உள்ளது, அரக்கோணம் நகருக்கு அவப்பெயரை அளித்தபடி.


No comments:

Post a Comment